பிச்சைக்காரியிடம் பரிவு…?




ஆபீஸ் டைனிங் ஹாலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த திவாகருக்கு, சக ஊழியர்களின் அந்தக் கேலிப் பேச்சு தன்னைக் குறித்துத்தான் என்பது நன்றாகவே புரிந்தது.
‘காலேஜ் ஃபிகரை டாவடிக்கலாம்!… லெக்சரரை டாவடிக்கலாம்!… வேலைக்குப் போற பெண்ணை டாவடிக்கலாம்!…அட …க ல்யாணமான பொண்ணைக் கூட டாவடிக்கலாம்யா! …ஆனா… ஒரு பிச்சைக்காரியை… வ்வேய்!… வாந்தியே வருது!” இது ஸ்டோர் கீப்பர் வெங்கடேஷ்.
விருட்டென எழுந்த திவாகர் அவர்கள் அருகில் சென்று தன் பர்சை எடுத்துத் திறந்து அதிலிருந்த போட்டோவைக் காட்ட,
‘இது… அந்தப் பிச்சைக்காரி மாதிரி…”
‘நோ… இது என் தங்கச்சி… பஸ் ஆக்சிடெண்ட்டுல செத்துப் போயிட்டா! இந்தப் பிச்சைக்காரியும் அதே முகத்தோட இருக்கறதினாலதான் நான் தெனமும் அவளுக்கு பிச்சை போடறேன்… நீங்க நெனைக்கற மாதிரியெல்லாம் வேற எதுவும் இல்லை!”
டைனிங் ஹால் அமைதியானது.
![]() |
பெயர் - முகில் தினகரன் முகவரி - சைட் நெ-3ஃ சாந்தி நகர்ஆவாரம்பாளையம் ரோடுகணபதி அஞ்சல்கோயமுத்தூர் – 641 006. அலை பேசி எண் - 98941 25211 கல்வித் தகுதி - எம்.ஏ.(சமூகவியல்)எம்.காம்.பி.ஜி.டி.பி.எம். (மனித வள மேம்பாடு)டி.ஈ.எம். (ஏற்றுமதியியல்) வயது - 49 ஆண்டுகள் தொழில் - மத்திய அரசு சார்பு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரி சிறுகதைகள்இதுவரை எழுதியுள்ளவை - 600பிரசுரமானவை - 300 –க்கும் மேல்பிரசுரமான…மேலும் படிக்க... |