பாத்திமா பெற்ற பிள்ளை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2026
பார்வையிட்டோர்: 3,953 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பாத்திமா பீவி, மணியார்டர் வந்திருக்கிறது.” பரிசறுமான் குரல் சைக்கிள் மணியின் ரீங்காரத்தினூடே தெருவில் எழுந் ததும், இடியாப்ப மாவைப் பிசைந்துகொண் டிருந்த பாத்திமா இடி யாப்ப உரலை மாடத்தில் வைத்துவிட்டுக் குடிசைக்கு வெளியே தலையை நீட்டினாள்.

“என்ன நல்ல சேதி கொண்டாந்திருக்கீங்க?” – ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே அன்பு சுரந்த விழிகளால் தபால்காரரை மலங்க மலங்கப் பார்த்தாள் பாத்திமா.

“பத்தொன்பது ரூபாய் வந்திருக்கிறது.”

‘அல்லாவே!’ வானத்தை நோக்கி மானசிகமாக நன்றியை அருளாளனுக்குச் செலுத்திவிட்டு, “யாரப்பா அந்தப் புண்ணியவான் அனுப்பிச்சுது?” என்று உவகையுடன் கேட்டாள் கிழவி.

“மஜித் சாஹேப்”

“ஹா!” திகைத்துப் போனாள் பாத்திமா.

“கொள்ளை கொள்ளையாச் சம்பாதிக்குதில்லே? அதான் சுளை சுளையாக மவன் கிட்டேந்து வந்துட்டிருக்கு!” கலகலவென்று சிரித்த தபால்காரர் மணியார்டர் பாரத்தை முன் நீட்டினார். தன் பெரு விரல் ரேகை புரட்டிய பாரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பணத்தை ஆசையுடன் பெற்றுக்கொண்டபோது பாத்திமாவின் கால்கள் ஏதோ நடுங்கின. ரூபாய் நோட்டுகளை மாடத்தில் வைத்து லிட்டு, “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் ஒரு குறையும் உனக்கு வைக்கமாட்டான்! நீ நல்லா இருப்பே!” என்று உணர்ச்சி பொங்க மகனை வாழ்த்தியதும் பொலபொலவென்று சிதறியது விழிநீர். ஆனந்தப் பெருக்கினால் சென்று மறைந்த காலத் தின் சுவடுகளே அவளுக்குப் புலப்படாமல் போயின.

“போஸ்ட்!” வாசலில் மறுமுறை எழுந்த குரல் குடிசைக்குள் ஊடுருவிப் பாய்ந்து பாத்திமாவின் செவிகளை மோதியதும் அந்த முதியவளின் நெஞ்சம் திக்கென்றது.

“கடுதாசியா வந்திருக்கு?”

“ஆமாம்.”

“கொஞ்ச முன்னாடிதான் அந்த நாமக்காரத் தபால்காரர் வந்து பணம் கொடுத்துட்டுப் போனாரு.”

“இது இரண்டாவது பட்டுவாடா. இந்தாங்க கடுதாசி”. நிலைப்படியிடம் கடிதத்தை வைத்தார் தபால்காரர்.

“கடுதாசியைப் படிச்சுத்தான் சொல்லுங்களேன். நானோ நாலு எழுத்துப் படிக்காத டியாப்பக்காரி!” பக்கென்று சிரித்தாள் யாத்திமா.

“அதற்கென்ன?” கடுதாசியை எடுத்து வாசிக்கலானார் தபால்காரர்.

”அன்புள்ள அம்மாவுக்கு ஆதாப்.

என்னிடம் மிஞ்சியிருந்த பத்தொன்பது ரூபாயை உங்களுக்கு இன்றைக்கு மணியார்டர் செய்துவிட்டேன். அதைப் பெற்றுக்கொண்டு இந்த மூத்த மகன் நல்வாழ்வுக்கு ஆண்டவனிடம் வாழ்த்துங்கள். தற்சமயம் நான் இருக்கும் நிலையில் இனி ஆறேழு மாதங்கள் வரை யில் என்னிடமிருந்து கடிதமோ காசோ எதிர்பார்க்க வேண்டாம்.

தங்கன் அன்பு மகன்.
மஜீத்.”

மகளின் கடிதம் கூறிய செய்தியைச் செவிமடுத்த பாத்திமாவின் சப்த நாடிகளும் ஒடுங்கிவிட்டன. மதி மருண்டது.

தாயின் நெஞ்சம் தகித்தது. அப்படியே சோர்ந்து போய் விட்டாள். “பெற்ற வயிறும் உடன் பிறந்த தம்பிமார்களும் உயிரோ டிருப்பதை மறந்துவிட்டதா உள் பாழும் மனசு? பாத்திமாவின் மேனி ய தறியது. மனவேதனை மார்பில் வலியை உண்டாக்கியது. அடிவயிற்றில் எழுந்த காந்தலும் நெடுமூச்சும் அவள் உடலை உலுக்கின.

கடிதத்தை மடித்துத் தன் மடிச்சீலைப் பைக்குள் திணித்துக் கொண்டாள். துப்பட்டியை எடுத்து மேனியைப் போர்த்துக்கொண்டு குடிசைக் கதவைக் கூடத் தாழிடாமல் தன் குடும்பத்து உபகாரியும். உள்ளூர் மசூதியின் இமாமுமான சுலைமான் சாஹேபின் இருப்பிடத்தை நோக்கி நடக்கலானாள்.

தெய்விகம் இலங்கும் மசூதியின் மண்டபத்தில் திருக்குரானை ஓதிக்கொண்டு அமைதியில் மூழ்கிக் கிடந்த சுலைமான் சாஹேப் அந்தி நேர வேளையில் வாசற்படியிடம் வாடி வதங்கி நின்றிருந்த பாத்தி மாவைக் கண்டதும் திடுக்கிட்டார்.

”சாஹேப்! துயரத்தைத் தாளாமல் விம்மிய பாத்திமாவின் தோற்றம் சுலைமானைத் திக்குமுக்காடச் செய்தது.

“பொல்லாக் கடலுக்குக் கொண்ட கணவன் பலியான வேளை யில் பச்சிளஞ் சிறுசுகளோடு நடுத்தெருவில் நின்ற இந்த விதவைக்குக் கைகொடுத்துக் கரையேற்றிய புண்ணியவானைத் தேடி வந்திருக்கிறேன் நான். இந்தத் துர்ப்பாக்கியவதிக்கு வந்து சேர்ந்த மற்றொரு விபத் தைக் கேளுங்களேன், சாஹேப்! ஓவென்று பிலாக்கணமிட்டுக் கொண்டே இடுப்பில் இருந்த மடிச்சீலைப் பையைத் திறந்து அதில் இருந்த கடிதத்தை எடுத்து, அவர் முன் வைத்து விக்கி விக்கி அழலானாள் பாத்திமா:

நீர்மல்கி நின்ற நயனங்களை மடலின்மீது ஓட்டிய சுலைமான் மௌனம் சாதித்தார். மேலெழுந்த அவர் நெடுமூச்சின் ஓசையை மண்டபம் மெல்ல எதிரொலித்தது? “மூத்தவனின் போக்கு மறுபடி யும் விபரீதமாகப் போயிடுச்சே.

முகத்தை இரு கைகளால் பொத்திக்கொண்டு அங்கலாய்த்த பாத்திமா தொ டர்ந்தாள்…மஜீதுக்கு நேரான வழியைக் காட்டி இந்த ஏழையின் ஜீவனத்துக்கு அடிக்கல் போட்ட புண்ணியவனாச்சே நீங்கள்! நரகக் குழியில் என் மகன் மறுபடி வீழ்ந்துவிட்டானே! எந்தக் கேடு கெட்ட குட்டி போட்ட சொக்குப் பொடியில் மயங்கிவிட்டானோ? லொடலொடத்துப் போன இந்த வயசில் குடும்பச் கமையை தலையில் கட்டிவிட்டானே!” பாத்திமாவின் நைந்துபோன நெஞ்சி லிருந்த துயரத்தின் இடி முழக்கம் மண்டபத்தை அதிரவைத்தது.

“மனத்தைப் போட்டு அலட்டிக்காதீங்க, பாத்திமா பீவி!” தமாக ஆறுதல் அளித்த சுலைமான், “உங்களுடைய கஷ்டங்களைப் யகிர்ந்துகொள்ள இந்த மசூதி இமாமுக்குத் தடை போடமாட்டீர்கள் என்று நம்புகிறேன். பள்ளியில் படிக்கும் உங்கள் குழந்தைளின் கல்விப் பொறுப்பு என்னைச் சேரட்டும். தவிர, மாதமாதம் என்னால் இயன்ற வரை தங்களுக்குப் பணவுதவி புரிய முன்ந்திருக்கிறேன் நான். சரி தானே?” என்று இதமாகக் கூறி, அந்த அபலையை அனுப்பிய சுலைமான் குரானைக் கையிலெடுத்துக்கொண்டு உரக்க ஓதலானார்.

அக்கரையில் உள்ள எஜமானுக்கு உள்ளூரில் பணியாற்றி வந்த பறங்கிப்பேட்டை அப்துல் காதர் சாஹேப் உலகமறியாத பருவத்தி லிருந்த மைந்தர்களைத் தம் ‘பீவி’யிடம் ஒப்படைத்துவிட்டு, நடுக் கடலிலே இறுதிச் சலாம் வைத்த சோகக் கதையை அந்தக் கப்பலில்  அக்கரையிலிருந்து வந்துகொண்டிருந்த பறங்கிப்பேட்டைப் பாய்மார்கள் இன்றுகூட நாத்தழுதழுக்க விவரிப்பார்கள்.

குடும்ப ஜோதி திடீரென்று அணைந்தவுடன் பாத்திமா பீவி உன்மத்தம் பிடித்தவள்போல ஆகிவிட்டாள். ஜீவன நிழல் தந்த ஆலமரம் விழுந்தபின் அதன் விழுதுகள் தனக்கு வருங் காலத்தில் உறு துணையாக நிற்கும் என்ற திட நம்பிக்கையோடு பாத்திமா வருஷங்களை ஓட்டிக்கொண்டிருந்த காலத்தில், மூத்த மகனான மஜீத் சோ தாக் களின் சகவாசத்தினால் சென்றுகொண் டிருந்த போக்கு அந்த விதவை யைக் கலக்கக் கடலில் மூழ்கச் செய்தது.

பிறந்த நாள் முதல் விதவைக் கோலம் பூணும் வரையில் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்ந்த பாத்திமா பீவி அதே ஊரில் இடி யாப்பக் கடையைத் துவக்கித் தன் ஜீவன யாத்திரையை மேற் கொண்ட நிகழ்ச்சி பொல்லாத விதி புரிந்துவிட்ட கண்ணாமூச்சி ட்டம் என்றே கூறவேண்டும். அந்த ‘நாசுக்கான சமயத்தில்தான் உள்ளூர் மசூதியில் இமாமாகத் திருப்பணியாற்றி வந்த ஹாஜீ சுலைமான் சாஹேபின் உதவி அந்த அபலைக்கு வலுவில் கிட்டிய சுபச் செய்தி, அல்லாஹுத்தாலாவின் ஆசி என்றே முடிவு கட்டவேண்டும்.

காலாடிகளின் கும்பலுடன் ஊதாரியாகத் திரிந்த மஜீத்தை உதவியாளனாக அமர்த்திக் கொண்டார் சுலைமான். அந்தக் கட்டிளங் காளைக்குத் தேவையான சாயாவுக்கும் பீடி கட்டுகளுக்குமுள்ள செலவைத் தாமே மேற்கொண்டு அந்த அரபுக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு அடக்கினார். வருஷக் கடைசியில் வடக்கேயுள்ள கொழிற் சாலையில் நல்லதொரு வேலை வாங்கித் தந்து, அந்த ‘நவா’ பை ரெயிலி லும் ஏற்றி அனுப்பிவிட்டார் அந்தப் புண்ணியவான்.

நாகபுரியில் புது வாழ்வை ஆரம்பித்த மஜீத் தன் தாய்க்கு மாதமாதம் நாற்பது ரூபாய் அனுப்பிக்கொண் டிருந்த சீரிய செய’ லுக்குக் காரணம் இமாம் சுலைமான் போட்ட ‘ஜபர்தஸ்த்’ கட்ட ளையே ஆகும்.

ஒழுங்காகவந்துகொண் டிருந்த மாசப் பணம் திடீரென்று நின்றுவிடப் போகும் அவலச் செய்தி பாத்திமாவை நடைப்பிணமாக மாற்றி அவந்தரையில் ஆழ்த்திவிட்ட சம்பவத்தை முன்பே கூறினோம்.

ஆறு மா தங்கள் உதிர்ந்து விட்டன.

தபால்காரரின் சைக்கிள் மணியோசை குடிசைக்கு வெளியே எழுந்தபோது திகில் அடைந்த பாத்திமா கதவைத் திறந்து கழுத்தை வெளியே நீட்டி விழிகளை ஓட்டினாள்.

ஆறுமாத காலமாக உதாசீனமாக நடந்துவிட்ட மூத்த மகன் கருணை கூர்ந்து அனுப்பின ‘மாசப் பணம்’ அவள் கரங்களுக்காகக் காத்திருந்தது. பாத்திமாவின் உடல் காந்தியது. நிலை தடுமாறியது.

‘அரை வருஷம் அநாதைகளாகத் தவிக்கவிட்டுக் கவலையில் லாமல் காலம் தள்ளிய அந்தக் காதகன் அனுப்பின ‘பிச்சை’யை அவளைப் பெற்றவள் கையேந்தி வாங்கிக்கொள்வாள் என்றா நினைத்தான்? சைத்தான் தாயின் இதயம் ஓலமிட்டது. ரத்த நாளங்கள் துடித்தன.

“தபால்கார ஐயா! எவன் அந்தப் பணத்தை அனுப்பினானோ அதை அவனுக்கே திருப்பி அனுப்பிவிடுங்கள்.ஐயா”. வெறுப்புடன் கெஞ்சிய பாத்திமாவைக் கண்ட தபால்காரர் தத்தளித்துப் போனார்.

“உங்களுக்கு யார் மேலேயோ கோபம் வந்துடுச்சு, அம்மா நாளைக்கு வந்து போறேன்” என்று சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே அகன்றார் தபால்காரர்.

ஆலவாயை அழிக்கச் சிலம்பின் செல்வி புறப்பட்டதுபோலத் தன் நெஞ்சில் கொழுந்து விட்டெரிந்த ஆத்திரத்தையெல்லாம் கொட்டி விட இமாம் சாஹேபின் இல்லத்தை நோக்கி ஆவேசத்துடன் புறப் பட்டாள் பாத்திமா.

பெற்றவளின் நினைப்பு மகனுக்குத் திடீரென்று வந்துவிட்டது, சாஹேப். பணத்தை வாரி அனுப்பியிருக்கிறான்.” ஏளனமாகப் பேசிய பாத்திமா வறட்டுச் சிரிப்பை எழுப்பினாள்.

“ஓகோ, அப்படியா? ரொம்பச் சந்தோஷமான செய்தியை இன்று என் காதில் போட்டீங்க.” முறுவல் பூத்தார். சுலைமான்.

“பிச்சைச் காசை அனுப்பினவன் முகத்திலேயே வீசியெறியும் படி தபால்காரரிடம் சொல்லிவிட்டேன்.” பாத்திமாவின் அதரங்களில் வெறுப்புத் தாண்டவமாடியது.

“தாய்க்கு மகன் அன்புடன் அனுப்பிய காணிக்கைக்கு நேர்ந்த கதியா இது?” தாடியை உருவினார் சுலைமான்.

தாயையும் உடன் பிறந்த ஜீவன்களையும் மாசக் கணக்கில் பட்டினி போட்டு வதைத்த படுபாவி ஆச்சே அவன்!”

கோடையிடிபோல் கிளம்பின பாத்திமாவின் கர்ஜனையைத் தாளமுடியாத இமாம் சாஹேப் கவிழ்ந்த சிரத்துடன் மௌனம் சாதித்தார். அவர் நெற்றிக் கோடுகள் நெளிந்தாடின. இமைகள் படபடத்தன. குல்லாயை எடுத்து வழுக்கைத் தலையை மேல் துண்டி னால் தடவிக்கொண்டே. “பாத்திமா பீவி!” என்று கனிந்த குரலில் பேசலானார்.

“மனிதன் புரிந்த தவறுதல்களை நீங்கள் மன்னிப்பீர்க ளானால் அருளாளனும் அன்புடையோனுமாகிய அந்த அல்லாஹுத் தாலா உங்களுடைய தவறுதல்களை மன்னித்து விடுவான். இந்தப் பொன்னான வரிகள் தாம் இன்று விடியற்காலைஎன் பார்வையில் பட்டது.

குல்லாயை எடுத்துச் சிரத்தில் வைத்துக்கொண்டு பயபக்தியுடன் மாடத்தில் இருந்த திருக்குரானைக் கையில் எடுத்துக்கொண்டார்:

சற்றுமுன் சொன்னேனே அந்தப் பொன்னான மொழியைச் செயலில் காட்டும் தருணம் உங்களுக்கு வந்துவிட்டது. பாத்திமா

மலங்க மலங்க விழித்த பாத்திமா விரல்களைப் பிசைந்து கொண்டு நின்றாள்.

ஆழ்ந்த நெடுமூச்சுடன் தொடர்ந்தார் சுலைமான்; “ஆறு மாதங்களுக்கு முன்னால் நடந்த கதை, எந்தத் தினத்தன்று மகனிட மிருந்து வந்த கடிதம் உங்கள் இதயத்தில் ரணத்தை உண்டாக்கி யதோ அதே நாளன்று அவனிடமிருந்து எனக்கு வந்த கடிதம் இந்தக் கிழவனைத் துயரக்கடலில் மூழ்கடித்துவிட்டது. அந்தக் கடிதத்தில் தேங்கிக் கிடக்கும் கண்ணீரைத் தாயாகிய நீங்கள்தாம் துடைக்கப் போகிறீர்கள்”

திருக்குரானை விரித்து அதிலிருந்த லிகிதத்தை எடுத்துப் படிக்க லானார் இமாம் சாஹேப்

“அன்பு நிறைந்த இமாம் சாஹேப் அவர்களுக்கு மஜீத் எழுதிக் கொண்டது. அஸ்லாமு அலைக்கும்.

“கண்ணியமான குடும்பத்தில் மாணிக்கம் போன்ற தாயின் வயிற்றில் உதித்துப் பிறந்த ஊரிலே பண்பிழந்து மதியிழந்து மிகவும் கேடான வாழ்க்கையை மேற்கொண்ட இந்தப் பாதகனை மனிதனாக மாற்றி மான உணர்ச்சியுடன் வாழ்க்கை நடத்த வழிகாட்டிய செம்ம லாச்சே நீங்கள்! தங்கள் ஆசிகளைப் பெற்று நாகபுரிக்கு வந்த நான் புது வாழ்வு துவக்கிய காலத்தில் பாழும் விதி புரிந்துவிட்ட நாடகத் தினால் மீளாத துன்பச் சுழலில் சிக்கிக்கொண்டேன். நல்லொழுக்கத் துடன் உழைத்து ஊதியம் பெற்று வந்த நாட்களில் தொழிற்சாலையில் நடந்த ஸ்டிரைக்கில் நிரபராதிபான என்னைப் ‘பலாத்காரத்தைத் தூண்டிவிட்டவர்களின் ஜாபிதா’வில் சம்பந்தப்படுத்தி ஆறுமாதச் சிறைவாசத்தை அளித்துவிட்டது நீதி மன்றம். இந்த ஏழை அனுப்பும் ஆறுமாத வருவாயை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் என் தாய் என்ன என்ன அல்லல்கள் அநுபவிக்கப் போகிறாளோ? அந்த ஓர் எண்ணம் என் நெஞ்சைச் சல்லடையாகத் துளைக்கிறது. என்னிடம் மிஞ்சி நின்ற சில ரூபாய்களை என் அன்பு அன்னைக்கு இன்று தபாலில் அனுப்பி விட்டுத்தான் போலீஸ் வானில் ஏறி உட்கார்ந்தேன்.

“இந்தச் சோக விஷயம் என் அருமைத் தாயின் செவிகளுக்கு எட்டாதவாறு பார்த்துக் கொள்ளும்படி தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மஜீத்

கடிதத்தை மடித்துத் தம் பைக்குள் வைத்துவிட்டு இமைகளை றுக்க மூடிக்கொண்டு மெளனமாக நின்றார், மாம் சுலைமான் சாஹேப்.

சிறிது நேரம் கடந்தது, அமைதியில்

பாத்திமா ஸ்தம்பித்துவிட்டாள். படபடவென்று அடித்துக் கொண்டது நெஞ்சக் கூடு. கண்கள் இருண்டன, கால்கள் தடுமாறின. “என் அருமைச் செல்வமே! பெற்றெடுத்த பிள்ளையைப் புரிந்து கொள்ளாமல் போயிடுச்சே. இந்தப் பாழும் வயிறு!” நெஞ்சம் துண்டு களாகப் பிளந்துவிடும்படி ‘ஓ’ வெள்று பிலாக்கணமிட்ட தாய் பொல பொலவென்று விழிநீர் உகுத்தாள்.

– அக்டோபர், 1962, கலைமகள்.

– கலைமகள் பொன்விழாக் கதம்பம் (1932-1961), பொன்விழா வெளியீடு, முதல் பதிப்பு: ஏப்ரல் 1982, கலைமகள் காரியாலயம், சென்னை.

பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை http://www.sirukathaigal.com/tag/ஜமீலா/ சமர்ப்பணம் 'கலைமகளின் வளர்ப்புப் பிள்ளைகளில் ஒருவராகச் சிறுகதை உலகில் பிரவேசித்த நன்னாளன்று அன்பும் ஆசிகளும் சொரிந்து அடியேனை வாழ்த்திய, தமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வரும் கவிஞரும் எழுத்தாளரும் பேராசிரியருமான ஸ்ரீ கி.வா.ஜகந்நாதையர் அவர்களுக்கு, இந்தச் சிறுகதைத் தொகுதியைத் தாழ்ந்த வணக்கத்துடன் நான் சமர்ப்பிக்கின்றேன். ஜமீலா *** முகவுரை யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற அருமை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *