பாச்சாவின் மந்திரியை வென்றது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 127 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு முரட்டுத் துலுக்கச் சேவகன் மழைக்காக ஒரு வீட்டுத் திண்ணையில் ஒதுங்கி உட்கார்ந்தான். அவன் பக்கத்திலே ஒரு க்ஷயரோகி வந்து உட்கார்ந்தான். இரும்பினான். 

அந்ததுலுக்கன், அடா! இங்கே இரும்பாதே! என்றான். மறுபடியும் இரும்பினான். அந்த மூடன் கோபத்துடனே கத்தியை உருவிக்கொண்டு அந்த நோயாளியை ஒரே வெட்டாகத் துண்டித்தான். அதைக்கண்டு சமீபத்திலிருந்த எல்லோரும் கூடிப்பிடித்துக் கொண்டுபோய் இராயரிடத்திலே ஒப்புவித்தார்கள். 

இராயர் அவனை, “ஏன் வெட்டினாய்?” என்று கேட்டார். அவன், “இரும்பாதே” என்று சொன்னேன். என் பேச்சைத் தள்ளிக்கொண்டு இரும்பினான் அதனாலே வெட்டிப் போட்டேன் என்றான். 

இராயர் அந்த முரட்டுத்தனமான பேச்சைக் கேட்டுச் சிரித்து, அப்பாச்சியைப் பார்த்து, “இவனுக்கு என்ன தண்டனை விதிக்கலாம்?” என்று கேட்டார். 

இவனை ஒன்றும் செய்யாமல் காவலில் வைத்து நாள்தோறும் இரண்டு சேர் மாமிசமும், ஒருசேர் நெய்யும், அதற்குத்தக்க சாமான்களுமாகக் கொடுத்துச் சாப்பிட்டுக் கொழுப்பேறும்படி செய்துவந்தால் நல்ல தருணத்துக்கு உதவுவான்” என்று சொன்னான். 

அப்படிச் செய்துகொண்டு வருகிற காலத்தில் ஒருநாள் பாச்சாவானவன் தன்னுடைய மந்திரிகளை நோக்கி, “மதியூகி அப்பாச்சியினுடைய வல்லமையினாலே இராயன் நமக்குக் கீழ்ப்பட்ட பகுதி கட்டாமல் இருக்கிறான். அவனைச் செயிக்கிறதுக்கு யாருக்காவது வல்லமையுண்டாயிருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்க, அவர்களிலொருவன், “நான் செயித்து வருகிறேன்” என்று சொல்ல, அவனுடனே தன்னுடைய திறமையான சேனைகளைக் கூட்டி இராயரைச் செயித்துவரும்படி அனுப்பினான். அவன் இராயருடைய பட்டணத்துக்குச் சமீபத்தில் வந்திறங்கித் தான் வந்த சேதியைத் தூதர்களாலே இராயருக்குத் தெரிவித்தான். அப்போது இராயர் தம்மருகிலிருந்த அப்பாச்சியைப் பார்த்து, “இவன் ராட்சதனைப் போலும் மகாதுஷ்டனாயும் மிகுந்த உபாயக்காரனாயும் அதிக சேனைகளோடு கூடி வந்திருக்கிறானே! இனி இப்படிப்பட்ட விபரீதம் ஒருநாளுமில்லையே. இதற்கென்ன செய்யலாம்?” என்று கேட்டார். 

அதற்கு அப்பாச்சி முன்னாலே கொழுப்பேற வைத்திருந்த முரட்டுத் துலுக்கனை அழைப்பித்து, “நான் எவ்வளவு? இப்பஞ்சணையின் மேலே இப்படியாகத் தண்டெடுத்துக்கொண்டு வரலாமா? நான் பகுதிப் பணத்தைச் செலுத்திப் போடுகிறேன்” என்று இராயரைக் கொண்டு சமாதானக் கடுதாசி எழுதிவைத்து, அந்த முரடன் கையிலே கொடுத்துப் பாச்சாவின் மந்திரியிடத்துக்கு அனுப்பினான். 

அவன் அந்த சமாதானக் கடுதாசியைக் கையிலே பிடித்துக்கொண்டுபோய் மந்திரி கையிலே கொடுத்தான். அதை மந்திரி வாங்கிப் படித்துப் பார்த்து எவ்வளவு சௌரியமில்லாத இந்தப் பஞ்சையின் மேலே தண்டெடுத்து வந்தோமென்று இராயரை இகழ்ந்து காறிக் கிழே உமிழ்ந்தான். 

அந்த முரட்டுத் துலுக்கன் தன்னை நிந்தித்துக் காறி உமிழ்ந்தானென்று எண்ணிக்கொண்டு தன் கத்தியினாலே மந்திரியை இரண்டு துண்டாக வெட்டிப்போட்டான். அவன் பக்கத்திலே இருக்கிறவர்கள் அந்த முரடனை வெட்டிப் போட்டார்கள். மந்திரி இறந்து போகவே தண்டு முரிந்து போய்விட்டது. 

இராயர் அப்பாச்சி யுத்தியை மிகவும் புகழ்ந்து கொண்டாடினார். 

– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

இராயர் அப்பாஜி கதைகள் பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை :  மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை.  இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *