நண்பேன்டா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 19, 2025
பார்வையிட்டோர்: 3,173 
 
 

கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட சந்துரூ நீண்ட பயணத்தில் இருந்து விடை பெற கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை வியந்து பார்த்த படி பேருந்திலிருந்து கீழே இறங்கினார் சந்துரூ. வாட்சை பார்க்கிறார் மணி 10.

நண்பர் சங்கரின் எண்ணிற்கு போன் செய்தார்.

காலை 10.00 மணி : தாங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்.

என்னடா சென்னையில் நாம் இறங்கியது தெரிந்து நண்பர் சங்கர் தொலை தூரத்திற்கு சென்று விட்டாரா?

பசி வேறு வயித்தை கிள்ளுது, சங்கரையும் காணோம். ஓட்டலுக்கு சாப்பிட போற நேரத்துல அவன் வந்து நம்மை தேடுவானே!,

சென்னையில் ஓட்டலில் சாப்பிட்டால் 2 டிபன் ஒரு காபி சாப்பிட்டால் கூட தோராயமா 200 ரூபாய் ஆகும்னு சொல்லியிருக்கானே, அவன் வந்துட்டானா அவன் வீட்டில் சாப்பிட்டுக்கலாமே !! என்ன செய்யலாம்?

மறுபடியும் போன் போடாலமா? போட்டு தான் பார்ப்போம்.

ரிங்கே போக மாட்டேங்குதே ! ஏன்? சிக்னல் இல்லையோ?

சரி எதிரே இருக்கிற அந்த டீ கடையில் டீ மட்டுமாவது சாப்பிடலாம்

டீ கடைக்காரிடம் ஏம்பா ஒரு டீ போடு

ஸ்ட்ராங்கா? லைட்டா?

என்ன வித்தியாசம்?

ஸ்ட்ராங் டீ 20 ரூபா லைட் டீ 15 ரூபா

பாக்கெட்டில் இருப்பது 25ரூபாய் என்ன செய்யலாம் ? யோசிக்கிறார் சந்துரூ…….

சந்துரூ : ஸ்ட்ராங் டீ உடம்புக்கு ஆகாது லைட் டீ யே போடு

டீ கடைக்காரர்: கஞ்ச பயல் 5 ரூபாய்க்கு கணக்கு பார்க்கிறான்

சந்துரூ : ஏம்பா டீ க்கு Google pay பண்ணலாமா?

டீ கடைக்காரர்: என்னாது ? நீ குடிக்கர 15 ரூபாய் டீ க்கு Google pay பண்ரியா? டீ யை குடிச்சிட்டு Google pay பண்ணிட்டேன் சொல்லி டபாய்க்க பாக்கிரியா?

ஒழுங்கு மரியாதையா cash pay பண்ணிட்டு டீ குடி இல்ல இடத்தை காலி பண்ணு.

2

சந்துரூ : என்னப்பா கொஞ்சம் கூட மரியாதையே இல்லையே நான் BE படித்த ஒரு இன்ஜினியர் தெரியுமா?

டீ கடைக்காரர்: அப்படியா ? ஏளனமாக ஏற இறங்க பார்க்கிறார் , ஏன் என் மகன் கூட ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர் தான், நல்ல வேலை கிடைக்கல்லன்னு பொய் சொல்லிக்கினு 5 வருஷமா வெட்டியா ஊர் சுத்துறான் , தண்ட சோறு.

டீ கடைக்காரர்: கொஞ்சம் மரியாத கொடுத்தா தலைக்கு மேலே ஏறிப்பிங்கல்ல

இந்தாப்பா இன்ஜினியர் நீ கேட்ட லைட் டீ பிடி, எடு 15 ரூபாயை

என்னய்யா டீ இது, டீ கிளாஸ் அலம்பியது போல் உள்ளது? சூடு வேறு இல்லை,

டீ கடைக்காரர் : நீ தானே லைட் டீ கேட்டே!! லைட் டீ இப்படி தான் இருக்கும் !!! . 15 ரூபா எடு.

சந்துரூ : எனக்கு இந்த டீ வேணாம்.

டீ கடைக்காரர் : வேணாமா ?…. யோவ் டீ போட்டது போட்டடுதான் குடிச்சா குடி, இல்ல கீழே ஊத்து ஆனா 15 ரூபாய் எடுத்து வைச்சுட்டு போ.

என்னடா சென்னையிலே ஆரம்பமே அடாவடியா இருக்கே !!! இங்க ஏமாத்துக்காரங்க அதிகமா இருப்பாங்களோ?

இந்தாண்ணே 20 ரூபா மீதி 5 ரூபா கொடு

இடையில் பசி வேறு வயித்தை கில்லுது , மயக்கமா வருது , தண்ணி பேக்கட் வாங்கி குடிக்கிறான் சந்துரூ.

10 மணியிலிருந்து 4.30 மணி வரையிலும் தொடர்ந்து போன் செய்து வெறுப்படைந்து, பசி மயக்கத்தில் மீண்டும் 5.00 மணிக்கு போன் செய்தும் போன் கனைக்ட் ஆகாத நிலையில் மிகுந்த வெறுப்புடன் மீண்டும் 5.30 மணிக்கு நண்பருக்கு போன் செய்கிறார்.

அப்பாடா…. இப்போ தான் ரிங் சவுண்ட் கேட்குது, மயக்கம் தெளிவது போல் உள்ளது.

போனில் நண்பர் சங்கர் பேசுகிறார் , ஏன்டா நாளைக்கு சென்னையில ஒரு இன்டர்வியூ இருக்கு இன்னைக்கு வருவேன்னு போன வாரம் சொன்னே! இன்டர்வியூக்கு போற ஐடியா இல்லையா? இன்னைக்கு உனக்காக நான் ஆபீஸ் லீவ் போட்டுட்டு வீட்டிலே இருக்கேன் இப்ப மணி என்னாகுது உன் வாட்சை பார் 5.35 மணி ஆகுது , இப்ப போன் பண்ணற? உனக்காக லீவு போட்டுட்டு வீட்டிலேயே உட்கார்ந்திருக்கேன் பாரு ஒரு நாள் லீவு போட்டதால எனக்கு loss of pay 1600/- waste ( மனதிற்குள் எப்படியோ லீவு போடாமல் லீவு போட்டதாக கூறியதை சந்துரூவை நம்ப வைச்சுட்டோம் அவனும் நம்பி இருப்பான்) என்னை சொல்லணும் , இடை விடாது பேசி கொண்டே இருக்கிறான் சங்கர்

3

சந்துரூ: என்ன கொஞ்சம் பேச விடிறயா? நான் உன்னிடம் சென்னைக்கு வரேன் சொல்லி உன் அட்ரஸ் கேட்ட போது என்ன சொன்னே. ? நீ பஸ்ஸை விட்டு இறங்கிய உடன் எனக்கு கால் பண்ணு office க்கு லீவு போட்டுட்டு நானே பஸ் நிலையத்திற்கு வந்து pickup பண்ணிக்கிறேன் சொன்னியா இல்லையா?

சங்கர்: ஆமா சொன்னேன், நீ தான் எனக்கு போன் பண்ணவே இல்லையே

சந்துரூ: என்னது நான் உனக்கு போன் பண்ணலையா? காலையில் 10 மணிக்கு பஸ்ஸை விட்டு இறங்கிய உடனே கால் பண்ணேன் ஆனால் not reachable தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என வந்தது, 10.15 மணிக்கு phone out of service, 10.30மணிக்கு வாடிக்கையாளர் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை . 11 மணிக்கு தாங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்சமயம் switch off செய்யப்பட்டுள்ளது. 12 மணிக்கு தாங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது, 12.30 மணிக்கு தாங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் பிசியாக இருப்பதால் சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும் அல்லது லைனில் காத்திருக்கவும் என இது போல தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இப்படி காலையிலிருந்து சுமார் 30 தடவைகள் try பண்ணியிப்பேன் ஆனால். இப்போது தான் உன் லைன் connect ஆனது.

சந்துரூ : ஆமாம் 12.30 மணிக்கு போன் செய்யும் போது வாடிக்கையாளர் பிசியாக இருக்கிறார் என்று வந்ததே

Missed call என்று என் பெயர் வந்திருக்குமே !!

நீ எனக்கு கால் பண்ணியிருக்கலாமே!! அப்போ நீ ஏன் எனக்கு கால் பண்ணல

சங்கர் : நான் உன் பேரை சேவ் பண்ணலடா அதனால தான் கால் பண்ணியது நீ தான்னு தெரியலை ( சங்கர் மனதிற்குள் இதையும் அவன் நம்பனுமே)

மீண்டும் சந்துரூ: அப்படியா? அப்ப இப்ப மட்டும் எப்படி இந்த் கால் வந்தவுடன் சந்துரூ எங்கடா இருக்கேன்னு கேட்டே?

சந்துரூ : missed number க்காவது போன் பண்ணி யாருன்னு கேட்க வேண்டியது தானே?

சந்துரூ : இல்ல நீயாவது எனக்கு கால் பண்ணியிருக்கலாமே?

சங்கர்: ( மனதிற்குள் என்ன இவன் துருவி துருவி கேட்கிறான்) அத விடுடா , இப்பதான் பேசிட்டேன் இல்ல , அங்கேயே இரு நான் கிளம்பிட்டேன் 10 நிமிடத்தில் நான் அங்கே இருப்பேன்.

சங்கர் பஸ் ஸ்டேண்ட் வருகிறார்

சந்துரூ : சங்கர் அங்கு வந்தவுடன் சந்துரூ மிகுந்த கோபத்துடன் சங்கரை பார்த்து என்னடா 10 நிமிடத்தில் வரேன் சொன்னே , நீ சொல்லும் போது 5.40 இப்போ மணி 6.40, என்னாடா…..? நீ எல்லாம்

4

எனக்கு ஒரு நண்பன்ணு, உன்னை நம்பி சென்னை வந்தேன் பாரு என்னை சொல்லணும்

சங்கர்: அத விடுடா …இப்போ எனக்கு செம பசி ஓட்டலுக்கு போய் சாப்பிட்டு விட்டு பிறகு பேசலாம் .

சங்கர்: நாம இப்ப நல்ல ஓட்டலுக்கு போறோம் சாப்பிடறோம் மத்ததை அப்புறம் பேசிக்கலாம், மதியம் சாப்பிட்டது பசிக்குதுடா, வாடா

சந்துரூ: டேய் நான் நேற்று இரவு சாப்பிட்டவன் டா அப்புறம் இன்னைக்கு காலையில பஸ்ஸை விட்டு இறங்கிய உடன் 10 மணிக்கு அநியாயமான ஒரு டீ கடையில் லைட் டீ என்ற பேரல ஒரு டீ யை குடித்து விட்டு நீ பஸ் ஸ்டேண்ட் வந்தா என்னை தேட போறியேன்னு இந்த இடத்தை விட்டு நகராமல் கொலை பட்டினியா உட்கார்ந்திருக்கேன் நீ என்னடான்னா காலையில் காபி, டிபன், மதியம் லஞ்ச் சாப்பிட்டு விட்டு பசிக்குதுடா நல்ல ஓட்டலுக்கு போய் சாப்பிடாலாம்ன்னு சீக்கிரம் வாடான்னு கூப்பிடற, நீ எனக்கு நல்ல நண்பண்டா!!!!?

இருவரும் ஓட்டலில் சாப்பிட்டு முடித்தவுடன் சப்ளையர் பில்லுடன் வருவதைபில் பார்த்த சங்கர் சந்துரூவிடம் ஒரு நிமிஷம் டா கால் ஒன்று வருகிறது வெளியில் சென்று பேசி விட்டு வருகிறேன் என கூறிக்கொண்டே ஓட்டலுக்கு வெளியில் வந்து போனில் பேசுவது போல் பாவனை செய்துக்கொண்டு சந்துரூ பில்லுக்கு பணம் தருகிறாரா என ஓட்டலின் ஜன்னல் கண்ணாடி வழியாக பார்க்கிறார். சந்துரூ வெளியே சென்ற சங்கர் வருகிறரா என ஓட்டலின் நுழைவு கண்ணாடி கதவையே பார்க்கிறார் .

சங்கர் வெளியே சென்று அரை மணிநேரம் ஆகி விட்டது, சங்கர் வந்தபாடில்லை. அதற்குள் சப்ளையர் 4 முறை வந்து வந்து பில்லுக்கு பணம் கேட்டு கேட்டு செல்கிறர். உடன் வந்த நண்பர் வெளியே சென்றுள்ளார். அவர் வரட்டும் என கூறி சமாளித்த வந்த சந்துருவுக்கு கோபம் கோபமாக வருகிறது. 5வது முறையாக சப்ளையர் வந்த பணம் கேட்டவுடன் கோபமாக பில்லை சப்ளையரிமிருந்த வாங்கி கொண்டு கேஷ் கவுண்டரில் Google pay மூலம் பில் தொகை ரூ.525/- ஐ செட்டில் செய்கிறார். இதை பார்த்து கொண்டிருந்த சங்கர் மீண்டும் போனில் பேசுவது போல் பாவனை செய்து கொண்டே ஓட்டலின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவது போல வந்து எதிரில் வரும் சந்துரூவிடம் பில்லை கொடு பணம் நான் தருகிறேன் என கேட்கிறார். பில்லுக்கு பணம் கொடுத்து விட்டேன் என சந்துரூ கூற ஏண்டா என்ன அவசரம் நான் தர மாட்டேனா என சங்கர் கேட்க சந்துரூவின் கோபம் அதிகமானது , கோபத்தை அடக்கிக் கொண்டு , அதனால் என்ன பரவாயில்லை அடுத்த முறை நீயே கொடு என நக்கலாக சந்துரூ கூறுகிறார்.

சந்துரூவை தன் வீட்டிற்கு அழைத்து செல்ல பஸ் வருகிறதா என சங்கர் பார்க்கிறார். சந்துரூ இப்போ மணி 8.30 ஆகிறது இந்த பஸ் நமக்கு தேவையான நேரத்திற்கு வராது போல் உள்ளது. ஆட்டோவில் போகலாமா என கேட்க சரி போகலாம் என சந்துரூ கூற அங்கு வரும் ஆட்டோவை நிறுத்தி சங்கர் குரோம்பேட்டை போகவேண்டும் எவ்வளவு என்று கேட்க ஆட்டோகாரர் சார் மணி

5

இப்பவே எட்டரை ஆகிறது குரோம்பேட்டை போக ஒன்பதரை பத்து மணி ஆகும் திரும்பி வர சவாரி கிடைக்காது மீட்டருக்கு மேல் போட்டு கொடுங்க சார் என்றார். மறுப்பு ஏதும் கூறாமல் சரி தரேன் என்ற சங்கர், சந்துரூவிடம் ஆட்டோவில் ஏறுடா என கூற ஆட்டோவுக்கு எவ்வளவு ஆகும் என சந்துரூ சங்கரிடம் கேட்க எவ்வளவு ஆனால் என்ன? ஏறுடா, time ஆகுது என்றார் சங்கர்.

சரி சங்கர் தந்துவிடுவான் என எண்ணி சந்துரூ ஆட்டோவில் ஏறி அமர்ந்தான். கிளாம்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் என பல signalகளை கடந்து ஓரு வழியாக குரோம்பேட்டை மெயின் ரோடு வருவதற்கே 10 மணியானது. பின்னர் சந்து சந்தாக left, right straight என சங்கர் வழி கூறிக்கொண்டே வர ஓரு வழியாக வீடு வந்தது. மணி அப்போது 11.30. ஆட்டோ மீட்டர் ரூ.345/- என காட்டியது. ஆட்டோகாரர் ரூ400/- தரும் படி கேட்டார். சங்கர் மீட்டருக்கு மேல் ரூ.10/- மட்டுமே தருவதாக கூற ஆட்டோகாரர் மறுக்க சங்கருக்கும் ஆட்டோகாரருக்கும் வாய் வார்த்தை முற்றியது. கை கலப்பு நடக்காத குறை தான். சந்துருவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஆட்டோகாரரை சமாதானபடுத்தி, Google pay மூலம் ஆட்டோகாரர் Google pay number க்கு ரூ.400/- transfer செய்தான் சந்துரூ.

சங்கர் சந்துரூவிடம் ஏண்டா நான் அரை மணி நேரமாக அவன் கிட்ட பேசினே இருக்கேன் நீ அவன் கேட்ட பணத்தை கொடுத்தால் அவன் என்ன பத்தி என்ன நினைப்பான் பணத்தை அதிகம் வேஸ்ட் பண்ண கூடாது என உண்மையிலேயே நண்பனுக்கு நல்லது செய்வது போல் பாசாங்கு செய்தான்.

சந்துரூவுக்கு காலையில் 10 மணிக்கு பஸ்ஸை விட்டு இறங்கியதிலிருந்து இப்போது இரவு 11.30 மணி வரையிலும் நடந்தவைகளை எண்ணும் போது சங்கரை பற்றி ஒன்னு நன்றாக புரிந்தது. ஆனால் அதை வெளியில் காட்டாமல், பரவாயில்லைடா என்றான். (சங்கர் மனதிற்குள் தன்னை ஓரு அதி புத்திசாலி என்ற நினைப்புடன்) சரி சரி வாடா சந்துரூ என சந்துரூவை வேண்டா வெறுப்புடன் தன் வீட்டிற்குள் அழைத்து சென்றார் சங்கர்…

வேலூர் டி.சீனிவாசன் என் பெயர்: D. சீனிவாசன் வயது: 65 (02.1960) பணி: ஓய்வு பெற்ற்வர் Mobille No: 9382899982 தற்போதைய முகவரி: சென்னை  email ID : mvdsrinivasan@gmail.comமேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *