நடப்பு
கதையாசிரியர்: காசி ஆனந்தன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 15, 2025
பார்வையிட்டோர்: 354
(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சேவல் கூவியது.
‘நான் எழும்போது இந்தச் சேவல் எத்தனை பெரிய அன்போடு என்னை வாழ்த்துகிறது…’ என்று கதிரவன் பூரித்துப் போனான்.
மாலை வந்தது.
கதிரவன் மேற்குத் திசையின் மூலையில் கவிழ்ந்தான்.
சாயும் போது
‘நான் விழுகிறேனே… என்னைத் தாங்க யாருமே வரமாட்டார்களா’ என்று ஏங்கினான்.
சேவலை அவன் எதிர்பார்த்தான்.
வரவில்லை.
விழுந்துகொண்டே கதிரவன் சொன்னான்:-
‘எழும்போது தாங்க வருகிறவனெல்லாம்
விழும்போது தாங்க வருவதில்லை’
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.