தீயவழியில் நன்மை தேடாமை




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒருவன் பொருளீட்டுதலையும், உயர்நிலை பெறுதலை யும் இன்னும் வெவ்வேறு வழிகளில் நன்மையடை தலையும் நாட்டு நீதிச்சட்டத்துக்கு உட்படாதபடி புல்லிய வழி களிற் பெறலாம். ஆனால் அவ்வழிகள் மக்கள் மனத துக்குத் துன்பம் செய்வனவாகவும் அடாதனவாக வும் ஆகின்றன. பிறர் தன்னிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கின்றவனும், தன்மரி யாதை யுடையவனும் பிறரிடம் தானும் அவ்விதமே நடந்துகொள்ளும் வழிகளை யறியாமல் இரான். அத்தகை யான் தீயவழிகளிற் பொருளீட்ட மனங் கொள்ளாதவ னாவான்.
தாதன்
பிராஞ்சிய நாட்டில் ஒருத்தி, ஒருவனைக் கல்விகற்கச் செய்து ஒரு செல்வனிடம் அலுவலில் அமரச செய்தாள். அங்கு அவன் உண்மையானவனாகவும், திறமைசாலியாகவும் நடந்துகொண் டான். அதன்பின, அச்செல்வன் அவனைத் தன் குடும்பவேலைகளை யெல்லாம் பார்க்கும்படி வைத்துக்கொண்டான். அப்போது அச் செல்வனுடைய கன்னித் தங்கையானவள் அவன் நற்குண நற் செய்கைகளைக் கண்டு அவனிடம் அன்புகொண்டாள். நாளேற வேற அவள் அன்பு காதலாக மாறியது. அவள் தன்னை மணஞ் செய்து கொள்ளுமாறு தூண்டினாள்.

தாதன் தன்னலத்தையே கருதி மறைவில் அவளை மணந் திருப்பானாயின், அவன் ஒரு பெருஞ் செல்வனாகலாம். ஆனால், அதற்கு அவனுடைய மனச்சான்று ஒப்பவில்லை; ஏனெனில், அத்திருமணத்தினால் அக்குடும்பத்துக்கு இழிவு ஏற்பட்டுவிடுமே என அச்சங்கொண்டான். நீள நினைந்து அச்செய்தியைச் சிறிதும் மறைக்காமல் உள்ளது உள்ளபடியே தன் தலைவரிடம் தெரிவித்து விட்டான்.
இவன் உண்மைநிலையையும், தன்னலம் நாடாத பெருங்குணத் தையும் கண்ட அப்பெருமகன் மிக மகிழ்ச்சிகொண்டான். பிறகு அப்பெருமகன் அவனைத் தன்னிலைமைக்குக் கொண்டுவர எண்ணி, அவனை ஒரு பெரிய அரசியல் அலுவலில் அமர்த்தி, அவன் மேன்மேல் உயர்நிலையடைய வேண்டியவைகளை யெல்லாம் செய்து வந்தான்.
தாதன் தன் திறமையினாலும், விடாமுயற்சியினாலும், உண்மைத் தன்மையினாலும் விரைவிலேயே அரசியலில் ஓர் உயர் நிலையை அடைந்துவிட்டான். அடையவே, அப்பெருமகன் யாவரும் பெருமகிழ்வடையத் தன் தங்கையாகிய அக் கன்னி கையை அவனுக்குக் கலியாணஞ் செய்துகொடுத்து மேலும் சிறப் பித்தான்.
க. உண்மையே உயர்நிலை தரும். – ஒரு பெரியார்
உ. ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்.
ங. அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார் குன்றுவ செய்த லிலர்.
ச. சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்து இரீஇ அற்று. – வள்ளுவர்
ரு. நன்மை கடைப்பிடி. – ஒளவையார்
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |