தயக்கமும் தாமதமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2026
பார்வையிட்டோர்: 85 
 
 

தயங்கி நிற்பதும் தாமதிப்பதும் உன் வெற்றியை தள்ளி வைக்கும்

ஒரு கல்லூரியில் நீண்ட காலமாக ஒரு ஆசிரியர் பணிபுரிந்து வந்தார். அது ஓர் MBA துரை. அந்த ஆசிரியர் பெயர் ஐயமாலா. அந்த ஆசிரியர் புதுமையாக வரும் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கும் / மாணவர்களுக்கு தான் கடந்து வந்த பாதையில் ஒரு 3 மாணவர்களை பற்றி எப்போதும் கூறுவது வழக்கம். இப்பொழுதும் முதல் ஆண்டு ஆரம்பமாக தொடங்கினது. கல்லூரியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது ஐயமாலாவை பேசும்படி அழைத்தார்கள். வழக்கம் போல் தன் உரையை தான் சந்தித்த மூன்று மாணவர்களை பற்றிச் சொல்ல தொடங்கினார்கள். நான் கடந்து வந்த பாதையில் மூன்று மாணவர்களை மறக்கவே முடியாது. நீங்கள் அனைவரும் இந்த படிப்பை முடித்துவிட்டு கண்டிப்பாக வணிக துரையாளராக அல்லது, தொழிலதிபராக தான் ஆவீர்கள்.

அதேபோன்று தான் நான் பார்த்த அந்த மூன்று பேரும் தொழிலதிபராக வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். ஒருவன் பெயர் சுரேஷ், இன்னொருவன் பெயர்: நேத்தாஜி மற்றொருவன் பெயர்: அபிஷேக்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இந்த படிப்பை முடித்துவிட்டு நாம் மேலே உயர்ந்து செல்வதற்கு இரண்டு விஷியங்கள் தடையாக இருக்கும் அதை நீங்கள் தவிர்க்க வேண்டும். அது என்னவென்றால்: தயக்கம், தாமதம். ஆம், சுரேஷ்-க்கு ஒரு தொழிலதிபராக வேண்டும் என்று கனவு இருந்தது. ஆனால் தன்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்களோ என்ற ஒரு தயக்கமும் இருந்தது. அவன் நிறைய கம்பனிகளில் தற்குறிப்பு (Resume) கொடுப்பான். அவர்கள் அவனை அழைக்கும் போது தன்னைவிட அறிவில் சிறந்தவர்கள் இருப்பார்களே என்று தயங்கி செல்லவே மாட்டான். ஆனால் அபிஷேக் தைரியமும், துணிவும் உடையவன். தன் படிப்பை முடித்துவிட்டு ஒரு கம்பனியில் 6 மாதங்கள் பனி புரிந்தான். பின்பு அவனே ஒரு சொந்த வியாபாரம் செய்ய தொடங்கினான்.இன்றைக்கு அவன் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு வேலை கொடுக்கிறான்.அதே தொகுதி (Batch) – யில் படித்த நேத்தாஜி ஒரு சோம்பேறி. ஆனால் அவன் நன்கு திறமை உடையவன். ஒரு பெரிய கம்பெனியில் வேலைவாய்ப்பு வந்தது. அங்கே அவர்கள் நேர்காணல்

வைத்தார்கள் அவர்கள் கேட்ட கேள்வி அனைத்திற்கும் சரியாக பதில் அளித்த நேத்தாஜியை பார்த்து: அலுவலகர் ஒரு கேள்வி கேட்டார்; உனக்கு எத்தனை மணிக்கு நேர்காணல் ஆனால் நீ இப்பொழுது வந்த நேரம் என்ன? என்று கேட்டார். அதற்கு நேத்தாஜி திரு திரு என முழித்தான். அலுவலகர் நேத்தாஜியை பார்த்து: சரியான நேரத்திற்கு வந்தவனை நேர்காணல் செய்து அவனுக்கு வேலையை கொடுத்து விட்டோம். நீ தாமதமாக வந்த காரணத்தினால் இந்த வேலை உனக்கு இல்லை என்று அனுப்பி விட்டார். பிறகு நேத்தாஜி ஒர் சிறிய கம்பெனியில் வேலை செய்து வந்தான் அவர்கள் மூவருக்கும் 30 வயது கடந்து திருமணமும் ஆனது.ஒரு நாள் அபிஷேக் எதிர்பார்க்காத விதமாக ஒரே இடத்தில் இருவரையும் சந்தித்தான். இருவரும் அபிஷேக்கின் வளர்ச்சியை பார்த்து வியந்தார்கள். அபிஷேக் அவர்களை நலம் விசாரித்து பேசினான். இருவரும் தங்கள் கஷ்டங்களை அபிஷேக்கிடம் சொன்னார்கள். உடனே அபிஷேக் தன் நண்பன் கம்பெனியை அறிமுகம் செய்து அங்கே போய் வேலை செய்யுங்கள் உங்கள் தொழிலில் சிறிது முன்னேற்றம் ஏற்படும் என்று சொன்னான். அவர்களும் கேட்டுவிட்டு அங்கே போய் சிறிது காலம் வேலை செய்தார்கள்.அவர்கள் படிப்படியாக உயர தொடங்கினார்கள், ஆனால் அவர்கள் வயதுக்கு அவர்கள் கடந்து வந்த உயரம் குறைவு. இப்பொழுது ஆசிரியர் ஜெயமாலா இதிலிருந்து உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் “தயங்கி நிற்பதும் தாமதிப்பதும் உன் வெற்றியை தள்ளி வைக்கும்” இவைகளை தள்ளி விட்டு முன்னேறிப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *