தனக்குள்ளது உலகத்திற்குமுண்டு
கதையாசிரியர்: இராயர்-அப்பாஜி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 186
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தனக்குள்ளது உலகத்திற்குமுண்டு தனக்கில்லாதது உலகத்திற்குமில்லை என்றது
ஒருநாள் இராயர் தனக்கு கேஷளாகச் செய்துகொண்டிருக்கும் அம்பட்டனைப் பார்த்து “இந்தப் பட்டணத்தில் எல்லோரும் சவுக்கியமாய் இருக்கிறார்களா?” என்று கேட்க, அதற்கு அவன், “எவ்வளவு எளியவராய் இருக்கிறவர்களுக்குள்ளேயும் எலுமிச்சங்காயளவு பொன்னுக்குக் குறைச்சலுள்ளவர் ஒருவருமில்லை” என்றான்.
சமீபத்திலிருந்த அப்பாச்சியைப் பார்க்க, அப்பாச்சி சற்று நேரம் யோசித்துப் பார்த்து இராயருக்கு அம்பட்டன் மறவிலக்கால் கேஷளாகச் செய்யப்போனபோது தன்னுடைய ஊழியக்காரன் ஒருவனைவிட்டு அடப்பத்தைச் சோதித்து அதிலிருந்த எலுமிச்சங்காயளவு பொன்னை எடுத்து அம்பட்டன்போன பின்பு இராயருக்குக் காண்பித்து, அதனாலேதான் அவன் தனக்குள்ளது உலகத்திற்குமுண்டு; தனக்கில்லாதது உலகத்திற்கும் இல்லை என்று நினைத்து அப்படிச் சொன்னான் என்று தெரிவித்து அதைத் திரப்படுத்திவைத்து, இன்றே கேஷளாகத்துக்கு அவனை இப்போது கேட்டதுபோலே கேட்டால் அப்போது அவன் சொல்லுகிற சங்கதியும் தெரியலாம்” என்றான்.
இராயர் அப்படியே அவனை மறு கூட்டி வந்து கேட்ட பொழுது, “அப்படி மகாராசாக்களுக்குள்ளேயும் மெவடம்பமே யல்லாமல் எலுமிச்சங்காயளவு பொன் உடையவர் யாருமில்லை” என்றான்.
பின்பு இராயர் அப்பாச்சியைப் பார்த்து, உன்னைப் போலவும் விவேகமுள்ள மந்திரி எந்தத் தேசத்திலும் கிடைப்பது மிகவும் அரிதென்று மெச்சி அம்பட்டனுக்கு அவன்பொன்னைக் கொடுத்துவிட்டார்.
– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
![]() |
பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை : மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை. இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க... |
