ஜன்னலோர இருக்கை
காலை வேளையில் மழையும் அதனோடு இதமான தென்றல் காற்றும் வீசியது. நான் ஒரு தனியார் பேருந்தில் நான்காவது இருக்கையிலே ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தேன.; மழைத்துளி மண்ணை மட்டுமல்ல எனது உள்ளத்தையும் நனைக்கத் தொடங்கியது. நான் ரசித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது ஒரு ஆண் குடையுடன் கையில் தொலைபேசியையும் வைத்துக்கொண்டு இருப்பதை அவதானித்துக்கு கொண்டிருக்கும் போது பின்னால் ஒரு குரல் தரணி என்று “இப்போ எல்லாம் வரவர ஜன்னலோரமாக இருந்து யாரையோ பார்த்துக் கொண்டிருப்பது போல இருக்குதே” என்று எனது தோழி பரணி கேட்டாள.

அவளிடம் நான் அப்படி ஒன்றும் இல்லை வா இங்கே வந்து அமரு என்றேன். பேருந்து செல்ல ஆரம்பமானது மனமோ மீண்டும் ஒருமுறை அவனை பார் என்றது நான் ஜன்னல் ஓரமாக இருந்து கொண்டு அவனைப் பார்த்தேன. அதே நேரம் அவனும் எனைப்பார்த்தான் மின்சாரம் பாய்வது போல் ஒரு உணர்வு என்னுள்ளே தோன்றியது
அதை எப்படி கூறுவது என்று எனக்கு தெரியவில்லை இருப்பினும் அவன் மீதான ஈர்ப்பு என்னை அறியாமலே வந்துவிட்டது. அவனைப் பார்த்தபடியே பேருந்து நகர நானும் வீட்டிற்கு சென்றுவிட்டேன. அம்மா என்னைப் பார்த்து “படிப்பெல்லாம் எப்படி போகுது” என்று கேட்டார; நானோ அம்மா இன்னும் இரண்டு வருசத்தில எல்லாம் முடிஞ்சிரும் என்றேன்.
அப்பா என்னைப் பார்த்து எனது மகள் ஒரு படிப்புக்காரப் பிள்ளைதான் என்றார். அதைக் கேட்டிருந்த எனது தங்கை “எப்போ பார்த்தாலும் அவர்களுடைய மகளைத்தான் பாசமாக கொஞ்சுவது பாசம் கட்டுவது” என்று முகத்தை சுருட்டிக்கொண்டு வீட்டிற்குள் சென்றாள்; அம்மா இவளுக்கு இதான் வேலை என்று சலித்துப்போய் சொன்னார. இரவு வேளையில் எல்லோரும் உண்ட பின்னர் நான் எனது அறைக்குள் தூங்குவதற்காக சென்றேன.
கட்டிலிலே சாய்ந்த போது அந்த ஆணின் எண்ணம் தோன்றியது. அவனது பார்வை என்னை உறங்கவிடவில்லை மீண்டும் அவனைப் பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டது மனம். மறுநாள் காலையில் பல்கலைக்கழகம் செல்லும் வழியில் அதே ஜன்னல் ஓரமாக இருந்தேன். அவன் நிற்பார் என பார்த்துக்கொண்டு சென்றேன். அப்பொழுது அவர் அங்கேதான் என்றான் அவர் அன்று தனியாக நிற்கவில்லை அவருடன் மூன்று நான்கு பேர் நின்றனர்.
நன்றாக பார்த்த பொழுது அவனும் ஒரு பல்கலைக்கழக மாணவன் என்பதை அவதானித்தேன். ஏனென்றால் எங்களுடைய பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்ற ட்ரெஸ்ஸினை அந்த ஆணும் அவனோடு இருந்த நண்பர்களும் அணிந்திருப்பதை அவதானித்துக் கொண்டிருந்த வேளையில் எனது தோழியும் பேருந்து ஏறிக்கொள்கின்றாள். நான் எதையும் காணாததைப் போன்று இருந்தேன. எனது தோழில் என்னிடம் “நீ வர வர இந்த ஜன்னல் ஓரத்தில் இருந்து கொண்டிருக்காய் என்ன விஷயம் என்று தான் தெரியல்ல” என்று கேலியாக கேட்டாள்.
நான் அவளிடம் ஒன்றும் இல்லை விளையாடாமல் நீங்க வந்து இரு என்று கூறினேன். நானும் பரணியம் கதைத்துக் கொண்டிருந்த பொழுது வெளியே நான் பார்த்திருந்த அவனும் அவனது நண்பர்களும் பேருந்து ஏற எனக்கு சற்று பயம் ஏற்பட்டுவிட்டது. என்ன இவர்கள் இந்த பேருந்தில் ஏறுகின்றார்கள் என்று மனம் பயம் அடைந்தாலும் சிந்தனையில் சிறிது மகிழ்ச்சியும் ஏற்பட்டது. பேருந்து ஏறியவர்கள் என்னிடம் வருவதைப் போன்று வந்து கொண்டிருந்தார்கள். நான் ஆச்சரியமாக என்ன நடக்குது இங்கே என்று பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவர்கள் பரணியோட கதைக்க ஆரம்பித்தனர்.
எனது தோழி பரணி இது என்ட ப்ரிண்ட்ஸ் என்றாள் நான் அவர்களைப் பார்த்து “ஹாய்” என்று கூறினேன். அவர்களும் என்னை பார்த்து ஹாய் என்று கூற “உங்களுடைய
பெயர் என்னவென்று அந்த ஆண் கேட்க “என்னுடைய பெயர் தரணி” என்று கூறினேன்.
அப்பொழுது அந்த ஆண் என்னுடைய பெயர் கமல் என்று கூறினான். நான் சற்று புன்னகையுடன் அவனைப் பார்த்து சிரித்தேன் அப்படியாக எல்லோரும் அமர்ந்தது கதைத்துக் கொண்டிருந்த பொழுது எங்களுடைய பல்கலைக்கழகம் வந்துவிட்டது. நாங்கள் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி பல்கலைக்கழகத்தினுள்ளே நுழைந்தோம் அப்பொழுது நானும் எனது தோழியும் எங்களுடைய வகுப்பு நடைபெறும் இடத்திற்கும் கமலும் கமலினுடைய நண்பர்களும் அவர்களுடைய வகுப்பு நடைபெறும் இடத்திற்கும் என பிரிந்து சென்றோம்.
எனது நண்பியிடம் உனக்கு எப்படி இவர்களை தெரியும் என்று கேட்க தரணி இவர்கள் பாடசாலையில் இருந்து என்னோடு படித்தவர்கள் என்று கூறினாள. ஆனால் நான் இவர்களை இங்கு பார்த்ததே இல்லையே என்று கேட்க அவர்கள் பரீட்சை விடுமுறைக்காக போய் இப்போதான் வந்தவங்க என்று கூறினாள் நானும் சரி என்று கூறிவிட்டு எங்களுடைய வகுப்பு நடைபெறும் இடத்திற்கு சென்றோம். அப்பொழுது எங்களுடைய ஆசிரியர் குழு வேலைப்பாட்டினைத் தந்திருந்தார.; எல்லா வேலைபாடுகளையும் முடித்துவிட்டு நானும் எனது நண்பியும் மதியநேர உணவினை உண்டு விட்டு வீடு செல்வதற்காக மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்தோம் கமலும் அவருடைய நண்பர்களும் வழமை போன்று பேருந்திலே ஏறி வீடு செல்வதற்காக வந்து கொண்டு இருந்தார்கள.;
நாங்கள் அனைவரும் அனைவரும் பேருந்திலே ஏறி அமர்ந்து சென்று கொண்டிருந்தோம் நான் வழமை போன்று என்னுடைய ஜன்னல் ஓரத்திலே அமர்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது கமல் என்னிடம் “ஏன் நீங்கள் தினமும் ஜன்னல் ஓரத்திலே அமர்ந்து கொண்டிருக்கின்றீர்கள்” என்று கேட்க, “இதில் இருக்கும் போதுதான் இயற்கை சூழலினை ரசித்துக் கொண்டு செல்லலாம்” என்று கூறினேன். அப்படி என்றால் உங்களுக்கு இயற்கை ரசிப்பது பிடிக்குமா? என்று கமல் கேட்க எனக்கு இயற்கை ரசிப்பது என்பது மிகவும் பிடித்த ஒன்று அதனால்த்தான் நான் தினமும் ஜன்னலோரம் இருந்து வருவேன் அதுமட்டுமின்றி ஜன்னலோரமிருந்து செல்லுகின்ற வேளையில் பல விடயங்களை அவதானித்து செல்லக்கூடியதாகவும் இருக்கும். அதனால்த் தான் கூடுதலாக நான் பேருந்தில் இருப்பது ஜன்னலோரத்தினருகே என்று கமலிடம் கூற கமல் என்னை பார்த்து சிரித்தார்.
இப்படியாக ஒருவரோடு ஒருவர் உரையாடியபடி வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். என்னுடைய தோழி கமல் இருந்த இருக்கைக்கு அருகே சென்று இருந்து கமலோடு உரையாடிக் கொண்டிருந்தாள். நான் அதை பெரிதாக எடுக்கவில்லை அவர் பாடசாலை நண்பர் என்று எனது தோழி கூறியதனாள.; நண்பர்களுக்கிடையே ஆயிரம் கதைப்பதற்கு இருக்கும் என்று எண்ணி நானும் அதை பெரிதாக பொருட்படுத்தாது பேருந்து செல்லும் வழியிலே பல்வேறு வகையான இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்தேன.;
“மயில் நடனம் ஆடுவதையும் நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதனையும் சிறுவர்கள் குழுக்களாகச் சேர்ந்து விளையாடுகின்ற காட்சிகள் என பல காட்சிகளை ஜன்னலோரம் இருந்து ரசித்தவளாக என்னுடைய வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன்” வீடு சென்றாலும் உணவு உண்ணும் போதும் தூங்கும் போதும் எழும்பும் போதும் ஏனோ தெரியவில்லை கமலினுடைய நினைவுகள் என்ன செய்வது என்று அறியாமல் மனதிற்குள் சிரித்துக் கொண்டிருந்தேன.;
ஒருவேளை நான் கமலினை காதலிக்கின்றேனோ என்று எண்ணம் என் மனதில் எழத் தொடங்கிவிட்டது இருப்பினும் நான் அதை பெரியதாக எடுக்காமல் மனதுக்குள்ளே பூட்டி வைத்தேன். ஒரு நாள் கமலிடம் என்னுடைய காதலனை வெளிப்படுத்த வேண்டும் என்று மனமானது அதிக ஆசை கொண்டிருந்தது இப்படியாக அன்று இரவானது கழிந்துவிட்டது. மறுநாள் காலையிலே புதிய ஆடை அணிந்து கொண்டும் அலங்கரித்துக் கொண்டும் பல்கலைக்கழகம் செல்வதற்காக பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்தேன்.
அப்பொழுது எனக்கு முன்பாகவே என்னுடைய தோழி அதேபோல் கமல் கமலினுடைய நண்பர்கள் அனைவரும் பேருந்து தரிப்பிடத்திலிருந்தனர். நானும் அவர்களோடு இணைந்து பல்கலைக்கழகம் செல்வதற்காக பேருந்தில் ஏறினேன். நான் வழமையான ஜன்னல் ஓரத்தின் அருகே அமர்ந்து கொண்டிருந்தேன். கமலும் என்னுடைய தோழியுடம் ஒரே இருக்கையில் அமர்ந்து
கொண்டு எதையோ தீவிரமாக கதைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது என்னுடைய தோழி அழுது கொண்டிருந்தாள். அதையும் அவதானித்துக் கொண்டிருந்தேன். ஏன் எதற்கு என்னுடைய தோழி அழுகின்றாள் என்று ஆயிரம் கேள்விகள் மனதிலே எழுத தொடங்கியது.
பல்கலைக்கழகம் வந்துவிட்டது பேருந்தில் இருந்து நாங்கள் அனைவரும் இறங்கி எங்களுடைய வகுப்பு நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது என்னுடைய தோழியிடம் ஏன் பேருந்து அழுது கொண்டிருந்தாய் என்ன விடயம் என்று கேட்டேன் என்னுடைய தோழி ஒரு விடயத்தை கூறினாள். என்னுடைய மனம் கண்ணாடி போல் உடைந்து சுக்குநூறாகியது “நானும் கமலும் ஒரு வருடமாக காதலித்துக் கொண்டிருக்கின்றோம் எங்களுடைய காதலை வீட்டில் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறுகின்றார்கள் அதனால்த்தான் அதை கமலிடம் சொல்லிக் கொண்டு அழுதேன் என்று கூறினாள”; சில நிமிடம் என்னுடைய இதயத்துடிப்பு நின்று விட்டதைப் போன்று உணர்ந்தேன் தோழி என்னிடம் இதைப் பற்றிய எதுவுமே கூறவில்லை என்று மனவேதனையும் அடைந்தேன் என்னுடைய ஒரு தலை காதலை நான் அவளிடம் கூறவில்லை மனதோரம் வேதனை சூழ அதை வெளிப்படுத்தாது அவளுக்கு ஆறுதல் கூறினேன்.
யார் எனக்கு ஆறுதல் கூறுவார் என்று மனதிற்குள்ளே எண்ணிக் கொண்டேன் என் மனமே எனக்கான ஆறுதல் என்பதை புரிந்து கொண்டேன் பெற்றோரிடம் வந்து பேசுகின்றேன் நீங்கள் இருவரும் பல்கலைக்கழகத்திலே படிக்கின்றீர்கள் தானே அதுமட்டுமின்றி பாடசாலையிலிருந்து உங்கள் இருவருக்குமான புரிதல் உள்ளது நான் உன்னுடைய பெற்றோரிடம் கதைக்கின்றேன் என்று எனது தோழியிடம் கூறினேன.; நீ எதற்கும் வந்து என்னுடைய பெற்றோரிடம் பேசிப் பார் என்று கூறினாள் நாங்கள் இருவரும் எங்களுடைய வகுப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம் இருவரின் மனதும் வேதனையடைந்தது வகுப்பை முடித்துவிட்டு நானும் எனது தோழியும் வீடு செய்வதற்காக பேருந்து தரிப்படத்திற்கு வந்தோம் அப்பொழுது கமலும் நண்பர்களும் அங்கு வந்து கொண்டு இருந்தனர். கமல் பரணியை அழைத்துச் சென்று அவளுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறிக் கொண்டிருந்தார்.
“இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த என் மனம் இதயத்திடம் எது உனக்கானது என்று எழுதப்பட்டிருக்கின்றது அதுவே உன்னை வந்து சேரும் தேடி செல்ல தேவையில்லை அதுவாகவே உன்னைத் தேடி வந்து சேரும் என்று மனமானது ஆறுதல் வார்த்தையை கூறியது.” பேருந்தில் ஏறி வழமையான இருக்கையில் அமர்ந்து கொண்டு இயற்கை ரசித்தபடி வந்துகொண்டிருந்தேன். இயற்கையானது பல விடயங்களை கற்றுத் தருகின்றது அதேபோன்றுதான் ஒரு சில நாட்களில் எனக்கு ஏற்பட்ட உணவும் இயற்கையினுடைய பிரதிபலிப்புத்தான் ஜன்னல் ஓரத்தில் இருந்து கொண்டு பல விடயங்களை ரசித்தபடி சென்று கொண்டிருந்தேன்.
ரசிப்பது மனிதனுடைய மனதிற்கு நிம்மதியை தருவதோடு மனிதனை மனிதனாக வாழ வைப்பதற்கு இயற்கை ஓர் சிறந்த இடத்தைத் தருகின்றது. எனவே ஜன்னலோர இருக்கையிலே பயணிக்கின்ற ஒவ்வொரு பயணியினுடைய சிந்தனையிலும் ஏதோ ஒரு விடயமானது புதைந்து கொண்டுதான் இருக்கின்றது பூமி எவ்வாறு சூரியனை சுற்றிக் கொண்டு வருகின்றதோ அதேபோன்றுதான் பேருந்திலே பயணிக்கின்ற மனிதர்களுடைய வாழ்க்கையும் ஒரு சுற்று வட்டமாக சுழன்று கொண்டிருக்கின்றது. “யதார்த்தத்தினை யாராலும் மாற்ற முடியாது.”
– குமாரசூரியர்.யர்சினி, கிழக்குப் பல்கலைக்கழகம், தமிழ்க் கற்கைகள் துறை, தமிழ் சிறப்புக் கற்கை, மூன்றாம் வருடம்.