சூடு





(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு. புற்றில் இருந்து வெளியே வந்த ஈசல் வெளிச்சத்தைத் தன் உடலில் தூக்கிப் பறந்த மின்மினியைப் பார்த்தது.
அதன் அழகைப் புற்றீசலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“மின்மினியைப்போல் வெளிச்சத்தைத் தூக்கிப் பறக்க என்னாலும் முடியும்…” என்று கூறிக்கொண்டே குடிசையில் எரிந்து கொண்டிருந்த குப்பி விளக்கின் வெளிச்சத்தைத் தூக்கப் போனது புற்றீசல்.
பாவம்.
ஒரு நொடியில் அது எரிந்து கருகிப் போனது.
குப்பி விளக்கு சொன்னது:-
‘பொறாமை எரிந்து போகும்
புற்றீசல் கரிந்து போகும்’
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.