சிறுகதைகளைத் தேடுவது, எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிப்பது, பழைய கதைகளைக் கண்டறிவது, கதைகளைப் பகிர்வது மற்றும் ஒலிவடிவில் கேட்பது போன்றவை தொடர்பாக வாசகர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

ஒரு கதை தவறான பிரிவில் இடம்பெற்றிருந்தால் என்ன செய்வது?
நீங்கள் படித்த கதை தவறான பிரிவில் இடம்பெற்றிருப்பதாகக் கருதினால், எங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள்.
உங்கள் கோரிக்கைகளை நாங்கள் பரிசீலிப்போம். கதை ஏன் வேறு பிரிவில் இடம்பெற வேண்டும் என்பதற்கான காரணங்களையும், பொருத்தமான பிரிவைப் பற்றிய விவரங்களையும் குறிப்பிட்டு அனுப்பினால், உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்க உதவியாக இருக்கும்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் யாரைத் தொடர்புகொள்வது?
- முதலில், இந்தக் கேள்வி – பதில் பகுதி மற்றும் இணையதளத்தின் பிற பகுதிகளை நன்கு படித்துப் பாருங்கள்.
- அதற்குப் பிறகும் ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
- எங்களுடைய மின்னஞ்சல் முகவரி: sirukathaigal@outlook.com
கதைகளை எப்படிப் பகிர்வது?
ஒவ்வொரு கதையின் தலைப்புப் பகுதியிலும் பகிர்வதற்கான (Share) வசதி உள்ளது. அதைப் பயன்படுத்தி Facebook, WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், மின்னஞ்சல் வழியாகவும் கதைகளை எளிதாகப் பகிரலாம்.
குறிப்பிட்ட எழுத்தாளரின் கதைகளை எப்படித் தேடுவது?
எங்கள் இணையதளத்தில் உள்ள ‘கதையாசிரியர்கள் – சிறுகதைகள்‘ பக்கத்திற்குச் செல்லுங்கள்.
அங்கு எழுத்தாளரின் பெயரைத் தேடித் தேர்ந்தெடுப்பதன் மூலம், அவர் எழுதியுள்ள கதைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் காணலாம்.
பழைய சிறுகதைகளை எப்படித் தேடுவது?
எங்கள் இணையதளத்தில் கதைகளை வெளியிட்ட தேதியின் அடிப்படையில் தேடுவதற்கான வசதிகள் உள்ளன.
- தேதிவாரியாகப் படிக்க – குறிப்பிட்ட தேதியில் வெளியான கதைகளைத் தேடலாம்.
- மாதவாரியாகப் படிக்க – குறிப்பிட்ட மாதத்தில் வெளியான கதைகளைத் தேடலாம்.
- தின/வார இதழ்கள் – குறிப்பிட்ட பத்திரிகை அல்லது இதழின் பெயரைத் தேர்ந்தெடுத்து, அதில் வெளியிடப்பட்ட கதைகளைத் தேடலாம்.
இந்த வசதிகளைப் பயன்படுத்தி பழைய கதைகளையும் எளிதாகக் கண்டறியலாம்.
சிறுகதைகளை ஒலிவடிவில் கேட்க முடியுமா?
ஆம். எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் பல கதைகள் YouTube வழியாக ஒலிவடிவிலும் வெளியிடப்படுகின்றன.
எங்கள் YouTube சேனலுக்குச் சென்று கதைகளைக் கேட்டு மகிழலாம். புதிய கதைகளின் ஒலிவடிவங்களைத் தொடர்ந்து அறிந்துகொள்ள எங்கள் சேனலைப் பின்தொடருங்கள்.
கதைகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் எப்படித் தெரிவிப்பது?
நீங்கள் படிக்கும் கதையில் எழுத்துப்பிழைகள், தகவல் பிழைகள் அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தால், எங்களுக்குத் தெரிவிக்கலாம்.
அதற்கான மின்னஞ்சலை அனுப்பும்போது, சம்பந்தப்பட்ட கதையின் இணையதள இணைப்பையும் (URL) தவறாமல் குறிப்பிடுங்கள்.
மேலும், இணையதளத்தின் செயல்பாடுகள், வசதிகள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பான உங்கள் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.
உங்கள் கருத்துகளும் ஆலோசனைகளும் சிறுகதைகள் இணையதளத்தை மேலும் சிறப்பாக உருவாக்க எங்களுக்கு உதவும்.
மின்னஞ்சல்: sirukathaigal@outlook.com