குறிப்பாகச் சொன்ன உபமானங்களை வெளிப்படுத்தியது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 183 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருநாள் இராயர் வேட்டைக்குப்போன இடத்திலே தமக்கு வெயிலினால் உண்டாகிய சிரமம் தீர ஒரு குளக்கரையில் உட்கார்ந்து இருக்கும்போது, வழிப்போக்கர்களாகிய மூன்று பெண்டுகளுக்குள்ளே ஒருத்தி “காலுங்கழியும் ஒன்றடி!” என்றும், மற்றொருத்தி “இறகும் இலையும் ஒன்றடி!” என்றும், பின்னொருத்தி “வாயுங் கனியும் ஒன்றடி!” என்றும் பேசிக்கொண்டு போனார்கள். 

அந்த மூன்றுபேர் சொன்னதுகளையும் இராயர் கேட்டு, அவைகளின் பொருளை நெடுநேரம் ஆலோசித்துத் தனக்குத் தோன்றாமையினாலே அரண்மனைக்குவந்த பின்பு சபையாரையெல்லாம் கேட்டுப் பார்த்தும் ஒருவரும் சொல்ல மாட்டாமையினாலே அப்பாச்சியை அழைப்பித்து அந்த வாக்கியங்களுக்குத் தாத்பர்யம் என்னவென்று கேட்டார். 

அவன் சற்றுநேரம் ஆலோசித்துப் பார்த்து, “அந்தப் பெண்டுகள் கண்ட ஓர் ஆலமரத்திலிருந்த கிளியைக் குறித்துப் பேசியதுகளாகும். காலும் கழியும் ஒன்றென்றது அக்கிளியின் காலையும் அம்மரத்தின் கிளையையும் சொல்லியதென்றும், இறகும் இலையும் ஒன்றென்றது அக்கிளியின் இறகையும் அம்மரத்தின் இலையையும் சொல்லியதென்றும், வாயுங் கனியும் ஒன்றென்றது அக்கிளியின் வாயையும் அம்மரத்தின் கனியையும் சொல்லியது” என்றும் அறிவிக்க இராயர் கேட்டுச்சரிதானென்றும் மிகவும் சந்தோஷமடைந்தார். 

– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

இராயர் அப்பாஜி கதைகள் பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை :  மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை.  இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *