மஞ்சேரி எஸ்.ஈச்வரன்

 

இவர் இன்று மறக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளர் (1910-1966). .

‘சக்தி’யில் இவரைப் பற்றி வந்த ஒரு அறிமுகம்;

ஆங்கிலத்திலே உணர்ச்சிக் களஞ்சியமான அற்புதச் சிறு கதைகளும் கவிகளும் எழுதியுள்ள மஞ்சேரி எஸ்.ஈச்வரன் நமக்கென்று முதன் முதலாக வேறு துறையில் புனைந்துள்ள பேனாச் சித்திரம் இது. அவரது ஹாஸ்யத்திலே ஒரு சோகமிருப்பது கண்டு ஆச்சரியப் படாதீர்கள்; அவரது சோகத்திலே ஒரு ஹாஸ்யமு மிருக்கும். ஹாஸ்யத்தையும் சோகத்தையும் தலையும் பூவுமாய்ப் படைத்த பொற்காசு அவர்-வேதாந்தி.

மஞ்சேரி ஈச்வரனும் , தி.ஜ.ரங்கநாதனும் இரட்டையர்கள் என்பர். ஈச்வரனின் ஆங்கிலப் படைப்புகளைத் தமிழில் தி.ஜ.ர வும், தி.ஜ.ர வின் தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் ஈச்வரனும் மொழியாக்கம் செய்வார்கள் என்று பேசப்பட்டது.

சக்தி இதழில் 1940-இல் வந்த ஒரு ‘வாழ்க்கை விநோதம்’ என்ற கட்டுரை ‘சக்தி’யில் வந்த அவருடைய முதல் படைப்பு.