ஓஹென்றியின் கிப்ட் ஆப் மேகி






(சிறுகதைப் பிழிவு)
ஜிம் என்னும் ஆடவனையும்
டெல்லா என்னும் மங்கையையும்
திருமணம் இணைத்து வைத்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகை தருணம்
கிறிஸ்துமஸ் தினத்தன்று கணவனுக்குப்
பரிசு தர நினைத்தாள் டெல்லா
கணவன் ஆசையாய்ப் பாதுகாத்து
வைத்திருக்கும் பட்டை இல்லா கைக் கடிகாரத்திற்குத் தன் அழகிய நீண்ட கூந்தலை விற்று பிளாட்டினப் பட்டையைத் தேடி விரும்பி வாங்கினாள் அவள்.
கணவன் இன்ப அதிர்ச்சி அடைவதை மனதில் கண்டு இல்லம் திரும்பினாள்.
ஆருயிர்க் காதலியின் அழகான கூந்தலை அலங்கரிக்கத் தன்னுடைய விலையுயர்ந்த கடிகாரத்தை விற்று தங்க கிளிப் வாங்கி வந்தான் ஜிம்.
மனைவி மனம் மகிழ்ந்து போவாள் என்றெண்ணி வீடு நோக்கி நடை போட்டான் அவன்.
இதுதான் இல்லறம்
ஒருவரை ஒருவர் விடாமல் சார்ந்து நிற்கும் நல்லறம்
ஓஹென்றி அவர்களின் சிறுகதையை என் வார்த்தைகளில் சொல்ல முயன்றேன்.
–
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |