எண்ணம் போல் வாழ்வு

நம்ம என்ன பண்றமோ அதற்கான பலன் தான் நமக்கு வந்து சேரும் அதனால் நல்லதே செய்வோம்
கங்கா என்ற ஒரு தொழிலதிபர் இருந்தான் அவனுக்கு திருமணம் ஆகி 3 ஆண் பிள்ளைகள் இருந்தனர். கங்காவுக்கு சமூக சேவை செய்வது மிகவும் பிடிக்கும் நிறைய சேவைகளை தன் ஊரில் செய்திருக்கிறான். கங்காவின் மகன்கள் பெயர் சோமு, காமு, ராமு இவர்கள் மூன்று பேரும் வெளியில் எங்கும் வேலைக்கு செல்லவில்லை. இவர்கள் தந்தையே ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்பதால் தந்தையுடன் வேலை செய்யலாம் என்று இருந்தார்கள்.
மூன்று பேருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்கள். கங்கா சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர் என்பதால் இந்த தீபாவளி பண்டிகைக்கு ஒரு மூன்று கஷ்டப்படும் குடும்பத்தை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மளிகை சாமான் வாங்கி தர வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுத்தார். தனது மூன்று மகன்களையும் அழைத்து ஒவ்வொருவரிடமும் ரூபாய் 5000 கொடுத்து மளிகை சாமான் வாங்கி வர சொன்னார் அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள்.
அப்பொழுது கங்காவின் வாலிப நண்பன் ஒருவன் அவன் சமூக சேவையை கேள்விப்பட்டு கங்காவை பார்க்க வந்தான். அவன் அயல் நாட்டில் மிகப்பெரிய ஒரு தொழில் அதிபர் அவர் வந்து கங்காவை பார்த்து, உன் சேவையை இந்த ஊர் மக்கள் அனைவரும் பேசிக் கொள்கிறார்களே என்று கேட்டார். உடனே அவர் கங்காவுக்கு பரிசாக அவன் சேவைக்கு தேவைப்படும் விதமாக தீபாவளி பட்டாசு மல்லிகை சாமான்கள் அனைத்தையும் கொடுத்தார். இது நான் உனக்கு கொடுக்கும் பரிசு இந்த முறை உன் பணத்தில் சேவை செய்ய வேண்டாம் நான் கொடுத்த இந்த பொருளை உன் மக்களுக்கு கொடு என்று சொல்லி அந்த அயல் நாட்டு தொழிலதிபர் சென்று விட்டார்.
இப்பொழுது கங்கா தேர்ந்தெடுத்த மூன்று குடும்பங்களுக்கும் தன் நண்பன் கொடுத்த பொருளை அவர்களுக்கு கொடுத்து விட்டான். அவருடைய மூன்று மகன்களும் சந்தைக்கு சென்றார்கள் சோமு நேர்மையாக 5 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கினான். காமு, ராமு ரூபாய் 3000 துக்கு மட்டுமே பொருட்களை வாங்கினார்கள் அதுவும், மட்டமான பொருட்களை வாங்கினார்கள்.
நமக்காகவா வாங்குகிறோம் யாரோ ஒருவருக்கு தானே என்று ரூபாய் 2000 தன்னுடைய செலவிற்கு எடுத்துக் கொண்டார்கள். இப்பொழுது மூன்று பேரும் தன் தந்தையிடம் வந்து நின்றார்கள்.
தந்தை கங்கா அவர்களைப் பார்த்து என்ன இவ்வளவு நேரம் என்று கேட்டு, என் சிறுவயது நண்பன் ஒருவன் அந்த மூன்று குடும்பத்திற்கான பொருட்களை வங்கி கொண்டு வந்தான், அதனால் இந்த பொருட்களை இந்த மாதத்திற்கு உங்கள் குடும்பங்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி சென்று விட்டார்.
இப்பொழுது காமுவும் ராமவும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் பிறகு இருவரும் நம்ம என்ன பண்றமோ அதற்கான பலன் தான் நமக்கு வந்து சேரும் என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டு சென்றனர்.
– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 4, 2026
பார்வையிட்டோர்: 53