உலகத்தில் ஒரு சதாம் ஹுசைன்




(1992ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
(வரலாற்றுக் கவிதை நாடகம்)

இடம்:- ஜனாதிபதி மாளிகை, அதிமேதகு ஜனாதிபதி சதாம் ஹுசைன், அவர்கள் சுபஹ் தொழுது பின் துஆ…
சதாம்:- (இருகரம் நீட்டி) யா அல்லாஹ், உனக்காகவே பிறந்தேன் உனக்காகவே வளர்ந்தேன். உனக்காகவே பல நன்மைகளைச் செய்து வருகிறேன். ஈராக்கிய எனது நாட்டு மக்களையும் பொருள் பண்டங்களையும், பகைவர்களிடமிருந்து நீயே காப்பாத்து வாயாக. உலகயூத நாடெல்லாம். முஸ்லீம் நாடுகளைக்
கொத்தடிமையாக்க முயலுகின்றனர். இந்தக் கோர அறப்போராட்டங்களிலிருந்து எங்களைச் காப்பாத்துவாயாக.
காப்பாளர்:- (கனைத்தல்) ஊ… ஹ்க்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும் பாதுஷா அவர்களே!
அவசரச் செய்தி ஒன்று ஆலம்பனா!……
சதாம்:- வஅலைக்கு முஸ்ஸலாம், வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்தஹ். என்னதான் செய்தி அது காப்பாளரே?
கா பாளர்:- நமது பிரதம வெளிவிவகார தாரீக் அஸீஸ் அமைச்சர்
அவர்கள் நலமான செய்தி கொண்டு வந்தவராம்
ஆலம்பனா! உங்களை அவசரமாய் சந்தித்து
ஆலோசனை செய்யவேண்டி ஆவலுடாம்,
மாளிகையின் பூங்காவிலே அவர்களுடன்
மந்திரிமார் பிரதானிகளும் வந்துள்ளனரே!
சதாம்:- (பிரார்த்தனை) ‘…. நாரே தக்பீர். அல்லாஹுஅக்பர்…’
என்றென்றுந் தேவை யாஅல்லாஹ்…
எகூதிகளை யூதர்களை, இஸ்லாமியர்
வென்றெடுக்க நீ எமக்கு நல்லருள் தா!
வல்லவனே எங்களுக்கு வீரத்தைத் தா!
ஆ… காப்பாளரே, சுண்ணியமாம் பிரதமரையும்,
பிரதானிகளையும் உடன் வரச் சொல்லுங்கள்…
(காப்பாளர் சென்று அழைத்து வருதல்)
தாரீக்:- அஸ்லாமு அலைக்கும் ஆலம்பனா!
சதாம்:- வஅலைக்கு முஸ்ஸலாம்; நாரே தக்பீர்…
(எல்லோரும்) அல்லாஹு அக்பர்.
அல்லாஹ்வின் நல்லடியாளர்களே! தாரீக்
அஸீஸ், கண்மணியாம் பிரதமர் அவர்களே
விசேட சேதிகள் ஏாேனும் உள்ளனவா?
விளங்கிடக் கூறுங்கள்! போர்க்களம் போனீர்களா?
தாரீக்:- பாதுஷா, ஆலம்பனா; பாவிகளாம் யூதர்களும்
பலஸ்தீன மக்களையும் பல அகதிமுகாம்களிலே
விமானங்களில் பறந்துவந்து குண்டுவீசி
விபத்துக்களை… மரணக்குரல் முழங்குதாங்கே!,
அகதிமுகாம் பாடசாலைக் குழந்தைகளும்
அல்லாஹு அம்மா என்றலறி ஒடிச்சாகும்
அவல நிலைகள் என்னசொல்வேன் ஆலம்பனா,
யூதனெல்லாம் நம்முஸ்லீமகளை எரிக்கின்றனரே!
சதாம்:- (ஆத்திரமடைந்து) ஆ……!
நாரே தக்பீர்… அல்லாஹு அக்பர்……
யூதர்களே ஒழிந்து போங்கள்……
இஸ்ரேலிய யூதர்களின் கொடுமைகளை
இதற்கு மேலும் பார்த்துக் கொண்டே இருக்கலாமோ?
உடனே போர்நாம் தொடுக்க வேண்டும்.
உரம்மிகுந்த ஈராக்கிய நம் ராணுவங்களே……
தாரீக்:- மேலும் ஒரு மோசடிச் செய்தி ஆலம்பனா!
சதாம்:- (வெகுண்டார்)
மோசடிச் செய்தியா? எங்கே மோசடி?
மோசடியை யார் செய்தார்? விளங்கச் செப்புங்கள்?
தாரீக்:- நமது ஈராக் நாட்டிலிருந்து குவைத்தினூடாக
நஜ்ரான், சூடான், ஜோர்தான் பன் நாடுகட்கும்
குழாய்கள் மூலம்போகும் பெற்றோல் எரிபொருளை
குவைத்திலிருக்கும் கொடியயூர்கள் துளைவிட்டு
வயர்கள் மூலம் களவெடுத்து வருகின்றான்கள்…..
வரவு செலவு ஆராய்ந்தபோது மூவாயிரம் கோடிடாலர்
இந்தக்களவை யூதர்கள் நெடுங்காலமாச் செய்கின்றனராம்
இம்மோசடிகளைச் செய்வித்தவன் அல்சபாவாம்;
காம்:- ( கர்ச்சித்தல்)
நமது உடற்பிறப்புக்களான குவைத்திய மன்னன்சபாவா
நம்பலத்தை அறியாமலா இம்மோசடியைச் செய்வித்தவன்,
முன்னரும் ஆயிரம்கோடி நஷ்டவீடு தரவேண்டும்,
முழுவதும் தரஏலாமல் இழுபறிப் படுறான் மன்னன்சபா.
தரகர்களான யூதர்களை ஏவிவிட்டுக் களவெடுக்கும்படி
தரங்கெட்டுப் போனானா குவைத்திய மன்னன்சபா?
ஐக்கிய நாடுகள்சபையில் அல்சபாவுக் கெதிராய்
உடனே வழக்குப் போடுங்கோ, அமைச்சர்களே!
(தளபதி வருதல்)
இர்பான் :- பாதுஷா, ஆலம்பனா! ஆபத்து! ஆபத்து!!
பாவிகளாம் யூதர்கள் நமதுஎண்ணை களஞ்சியங்களுக்கு
ஏவுகணைகளை ஏவிவிட்டு எல்லாவற்றையும் எரியச்செய்து
எங்களையும் ஏவுகணைகளால் துரத்திக்கொண்டே வாறானுகள்,
சதாம்:- (கோபாவேசத்துடன்)
ஆய்ங்ம்… என்ன கொடுமையடா யூதன்களே!
உடனே ஓடுங்கள், போர்விமானங்களை ஏவிடுங்கள்.
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்;
(எல்லோரும் தக்பீர் முழங்கினர்)
நாசகார யூதன்களை விரட்டியடியுங்கள்!
அவன்கள் எந்தநாட்டு யூதனுகள்? காட்டுராமிண்டிகள்,
எந்தப் பக்கமிருந்து வந்துகொண்டு தாக்குறானுகள்?
இர்பான் தளபதி:-
குவைத்திய நாட்டு விமானங்களி லிருந்து பறந்து
குர்திஷ் பக்கமாவந்து குண்டுகள் வீசும்போழ்து
நாங்கள் சுட்டு விமானங்களை வீழ்த்தி இப்போ
நாலுயூதப் பயங்கர வாதிகளைப் பிடித்து வந்துள்ளோம்.
சதாம்:- (இடி மழக்கமாய்)
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்.
(எல்லோரு தக்பீர் முழங்கினர்)
உடனே குவைத்தை விரைந்து வளைத்துப் பிடியுங்கள்!
படைகளை அனுப்பிப் பகைவன் சபாவையும் பிடித்துவாங்கள்!
பயங்கர வாதிகள்யூதர்கள் யாவரையுந் தேடிப்பிடியுங்கள்!
அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சியாளரின் சதிநாசவேலை தானது..
அல்சபாவும் யூதர்களிகைப்பொம்மை யாகிவிட்டான்-
ஈராக்கிய நம்படைவீரர்களின் போர்வலிமையை உணராத மடையன்கள்-
அமெரிக்க அரசையும் ஏவல் நரிகளையும் நாமெல்லாந் துணிந்து
அடித்துத் துரத்தாமல் ஓயமாட்டோம். குவைத்தை
வளைத்துப் பிடிப்போம்; வி.ரந்து புறப்படுங்கள் வீரர்களே!
நாரே தக்பீர், (எல்லோரும்) அல்லாஹு அக்பர்.
2ம் காட்சி
இடம்:- (குவைத் நகரம்)
இர்பான் தளபதி. முகாமில், கோபாவேசம் :-
“அடேய்! யூதர்களே! எங்கள் ஈராக்கின்
எண்ணைக் களஞ்சியங்களை ஏவுகணைகளால் தாக்கியவர்
யாரடா? மடையன்களே? இக்கொடிய செயல்கள்
யாரடா உங்களைச் சதிநாசஞ் செய்யச்சொன்னவன்?
(சாட்டை அடி கொடுத்தல்)
யூதர்கள்:- (அழுது புலம்பல்)
ஆ….ங்…ங்ம்…அடியாதீங்கோ தளபதியாரே! உடம்பெல்லாம்
அறுபட்டு இரத்தங்கசியுதே! ஆய்… ஐய…கோ…
இர்பான்:- (ஆத்திரம்)
உண்மைகளை ஒழிக்காமல் ஒன்றும் விடாமல்
உள்ளபடி சொல்லாவிடில்… உங்களை கொஞ்சம்
கொஞ்சமாத் திருக்கைவால் சாட்டையினால்
கொல்லமாட்டோம். சித்திரைவதை தான்செய்வோம்.
யூதர்கள்:- (அழுது கெஞ்சுதல்)
ஆய்ங்ம்… அப்படிச் சித்திரவதை செய்யாதீங்கோ,
அல்சபா மன்னரின் ஆணைப்படி ஈராக்கின்
எண்ணை வளங்களை மாடிமனைகளை கோபுரங்கள்
எல்லாவற்றையும் அழிக்கும்படி பணிக்கப்பட்டோம்
இர்பான்:- (வெகுண்டார்)
“…ஆ… அப்படியா? அல்சபா மன்னர் மடையனா?
எகூதி யூதர் உங்களிடம் ஆணையிட்டானா?
அவனுமொரு குவைத்து நாட்டின் முஸ்லீமாடா?
அல்சப வை மன்னரென்று சொல்லலா மாடா?
உலகமுஸ்லீம் போற்றுகின்ற ஈராக்நாட்டின்
உலமாக்கள் அறிஞர்களையும் தேடிப்பிடித்துக் கொன்ற
முஸ்லீம்கள் சரிஅத் மாறாக் கொள்கையுடன் – தேனடா?
முழுவுலகும் புகழுகின்ற ஜனாதிபதி சதாம்ஹுசைனின்
நேர்மைமிக்க ஆட்சிக் கெதிராய் தீமை செய்யும்
நேர்மையற்ற மன்னன்சபா ஒருமுஸ்லீம் தலைவனடா?
யூதருங்களின் கிளப்களில் முஸ்லீம் குமர்களை
யூதர் நீங்கள் மதுவெறியில் கற்பைக் கெடுக்கவும்
குவைத்திய முஸ்லீம்கள் களியாட்டம் போடவும்
குடித்துக் கும்மாளம் போடவும் குருடனாய்ப் பார்த்திருந்த
அல்சபாலைத் தேடிப்பிடியுங்கடா. இழுத்து வாங்கடா.
அவனின் குடலைப் பிடுங்கி இந்தயூதன்களின் கழுத்தினிலே
மாலையாகப் போட்டெங்கும் முஸ்லீம்உலகத் துரோகிஎன்று
மத்தியக்கிழக் கெல்லாம் பழித்திடச் செய்வோம் ஒடுங்கடா!
அல்சபா மன்னனைத் தேடிஇப்போ பிடித்துவாங்கடா!
ஈராக்கிய ராணுவச்சிங்கங்களே விரைந்துடன் பறங்கடா!
(சிலராணுவம் போனபின், சிலராணுவம் யூதர்களை இழுத்துக் கொண்டு வருதல்)
கபுசிற ஜ்:-
ஆலம்பனா! தளபதியாரே! இந்தயூதர்கள் பலஸ்தீனத்தின்
ஆறேழு பெண்குமர்களை நிர்வாணத்துடன் வைத்து
கோலாகலம் பாடிஆடச் சொல்லிச் சாட்டையாலும்
குறைச் சிகரட் நெருப்பினாலும் மார்முலைகளில் சுட்டும்
அவமானப் படுத்திக் கொண்டு கற்பழித்தானுகள்…
அல்சபா மன்னனின் அலங்கார மாளிகையிலே…
இர்பா:- (ஆததிரப்பட்டார்)
‘ஆ…! அப்படியா? அந்த அயோக்கிய மன்னனை
அல்சபாவை ஏனடா நீங்கள் பிடித்திழுத்து வரவில்லை?
அபுசிறாஜ்:- (பயந்த குரலில்)
நங்கள் அல்சடாமன்னனின் அரண்மணை முழுவதிலும்
நாற்புறமும் வளைத்துத் துப்பாக்கிச் சப்தங்களை வெடித்தோம்
எங்ணுமே காணவில்லை, அந்தக் காமவெறியனும்
எங்கேயே ஓடி ஒழித்து விட்டான காட்டுமிராண்டி சபா
இர்பான்:- (எரிச்சலுடன்)
ஓடுங்கடா……! ஓடுங்கள்! குவைத்நாட்டின் கொடியோனை
யூசநாடுகளின் தரங்கெட்ட தரகன் அல்சபாவைத்
தேடுங்கடா! தேடிப்பிடித்து இழுத்திங்கே வாருங்கடா
தீனுல் இஸ்லாத்தில் இருந்துகொண்டு முஸ்லீம்களை
விரட்டி, ஏமாற்றி நாட்டுமக்களை மடையர்களாக்கி,
வருமானங்களை எல்லாம் அரசுடமையாக்கி, அல்சபா
ஆடம்பரமாக உண்டுருசித்து அழகுராணிகளை
அரண்மனக் கிளப்புகளில் கடத்திவரச்செய்து
களியாட்டம் போடும் மன்னராட்சியை இனிஒழியுங்கடா
குவைத் முஸ்லீம்களைத் தலைநிமிர்ந்து வாழச்செய்யுங்கடா
(மீண்டும் யூதக் கைதிகள் பக்கம் தளபதி)
அடேய் யூதர்களே அயோக்கிய ஏவல்நரிகளே!
அல்லாவை வெறியானக்கிய காஃபீர்களே!
பலஸ்தீனக் கன்னியர்களைக் கடத்தி வந்து
பாலியல் கிளப்நடாத்தும் படுபாவ யூதர்களே!
இஸ்ரவேலரின் சதிநாசப் பேயர்களே! காமலரக்கர்களே!
இனிமேலும் உங்கொடுமை சகிக்க மாட்டோமடா!
ஈராக்கின் வீரர்களாம் ராணுவங்கள் பலத்தினிலே
இஸ்லாமிய நாடுகளை ஒன்றுகூடச் செய்வோமடா!
நாரே தக்பீர்
(எல்லோரும்) அல்லாஹு அக்பர்.
3ம் காட்சி
இடம்:- பக்தாத் ராணுவ மத்தியமுகாம். ஜனாதிபதி, பிரதமர்.
எங்கணும், நாரே தக்பீர் முழங்கிக் கொண்டிருந்தன.
தாரீக்:- பாதுஷா! யுத்தப்பேரிரைச்சல்கள் ஈராக் முழுவதிலும்
பாரதூரமாகப் போர்வெடித்துக் கொண்டிருக்கின்றன.
சதாம்:- (ஆர்ப்பரித்தல்) .ஆ… பிரதமர் அவர்களே…….
நாங்கள் இப்பவே போர்க்களத்தைப் பார்வையிட வேண்டும்
நாசகார சக்திகளை ஒழிக்கவேண்டும்! அமெரிக்காவின்
ஜோர்ஜ்புஸ்ஸும், நேசநரிகளும் என்னைப் பிடித்தழிக்க
ஜோசியம் பார்த்து கங்கணம்கட்டிக் கொண்டிருக்கானுகள்
தாரீக்:- (பயந்த குரலில்)
……ஆபத்து ஆலம்பானா……
இப்படியான அகாலமரணப் போர்க்களங்களுக்கு நாம்
எங்ஙனம் போவது ஆலம்பனா? சதிகாரர் ஒருவேளை
அப்படி ஏதேனும், மாறுவேடத்தில் யூதர்கள்,
அணுகி, நமதுராணுவம்போல் உடையணிந்து வந்து……..
சதாம்:- (சீறிச் சினந்து கர்ச்சனை)
…ஆஹைய்ங்ம்……
“நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்……
நாயன் நம்பக்கம் இருக்கின்றான் பிரதமர் அவர்களே!
நீதியோடு துணை தருவான் வல்லநாயன், பயப்படாதீர்
நல்லபெரும் நாயனனல்லாஹ் தூயபெரும் இஸ்லாத் – துக்காய்
ஈராக்கிய நமதுமக்கள் போர்க்களத்தில் துணிவுடனே
நாரே தக்பீர் முழங்கிக்கொண்டு தியாகப்போர் செய்கின்றனரே
நமதுவீரப் புருசர்களுக்கு உற்சாகமூட்ட வேண்டாமோ?
நமதல்லாஹ் துணைதருவான் நடவுங்கள் போர்க்களமே
தாரீக்:- (சற்றுத் தயங்கிய குரலில்)
“கொஞ்சம் பொறுங்கோ ஆலம்பனா! நம்மைச்சுற்றி
கொடியவரின் விமானங்கள் நாற்புறமும் வருவதுபோல்.
சதாம்:- (எகிறிப் பேசல்)
“பயப்படாதீர் பிரதமரே! நமதுபடை எதிர்தரப்பில்
பக்தாதின் நகரமெல்லாம் பீரங்கிப் படைவிமானங்கள்
அமெரிக்காவின் பசாசுகளைச் சுட்டுப் பொசுக்கின்றனர்
எகூதிகளை ஓடஓடச் சுக்குநூறாய்த் துரத்துகின்றனர்.
தாரீக்:- (அவதானக் குரல்)
அதெல்லாம் சரிதான் ஆலம்பனா, உங்களையே
ஆளடையாளங் கண்டெவனும் குறிபார்த்தால்……
சதாம்:- (கர்ச்சிப்பான குரலில்) ……நாரே தக்பீர்
(எல்லோரும்) அல்லாஹு அக்பர்
அல்லாஹ் நல்லடியார்களை எப்போழ்தும் ஆபத்துவேளை
அருகிருந்து காத்தருள்வான்! என அண்ணல்நபி கூறினார்கள்!
அறிவிழந்த யூதர்களுக்கு அஞ்சிப்பயந்தே ஓடமாட்டோம்
அமெரிக்காவின் ஏகாதிபத்திய அடக்குமுறையை எதிர்த்துநிற்போம்
யூதருக்கு மத்திய கிழக்கினில் தனிநாடா?
இஸ்ரவேலை அமெரிக்காதான் தூண்டிவிட்டது.
இஸ்லாமிய நாடனைத்தும் அமெரிக்காவின் அடிமைகளா?
அரபுநாடுகளை இனிமேலும் தலைகுனிய விடமாட்டோம்
அமைச்சர்களே; வீரர்களே!? தளபதிகளே!!!
ஈராக்கின் முஸ்லீம்களே விழித்தெழுங்கள்!
நாரே தக்பீர் (எல்லோரும்) அல்லாஹு அக்பர்.
அமெரிக்காவின் எச்சில்நக்கும் அரபுநாடுகளும்
ஆறாயிரம் மைல்களுக் கப்பாலுள்ள வல்லரசுகட்கு
அடிபணிந்தார். ஈராக்கிய முஸ்லீம்கள் விரும்புவமோ?
அறிவுள்ள வீரர்களே சிந்தியுங்கள், செயல்படுவோம்!
நாரே தக்பீர் (எல்லோரும்) அல்லாஹு அக்பர்.
இர்பான்:- (தளபதி, வீராவேசத்துடன் வந்து கொண்டே)
ஈராக்கின் படைப்பலம்போல் உலகிலெங்கும் இல்லையடா!
எம்மை வெல்ல அமெரிக்காவின் ஏவல்படைகளாலும் முடியாதடா!
அல்லா ஹ்வின் துணைப்பலத்தால் யூதர்களை வெல்வோமடா!
அணுவுலைகள் ஏவுகணைகள் கண்டம்விட்டுக் கண்டம்பாயும்
கழுகுக்கணை குறிதவறாது எதிராளி விமானங்களை அழிப்போமடா
கசடர்களின் படைப்பலத்தைக்’ கணப்பொழுதில் வெல்வோமடா!
நாரே தக்பீர் (எல்லோரும்) அல்லாஹு அக்பர்.
4ம் காட்சி
இடம்:- ஜனாதிபதி மாளிகை, சதாம், அஸீஸ், தளபதிகள்
இர்பான்:- (வெற்றிக்குரல்)
ஒருநாளா ஒருவாரமா? ஒருமாதம் முடிவதற்குள்
அமெரிக்காவின் ஏவல்படை அனைத்தையுமே
ஓடஓட விரட்டித் துரத்தி விட்டோம்!
ஈராக்கிய முஸ்லீம்கட்கு வெற்றியடா!
ஈராக்குடன் சமாதானம்பேசி வல்லரசுகள் வாறாங்கடா!
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனியும்
ஈராக்கை அடிமையாக்கச் சதித்திட்டம் நடந்ததடா!
எம்மை வெல்ல வல்லரசுகளால் முடியாதடா!
நாரே தக்பீர்
(எல்லோரும்) அல்லாஹு அக்பர்.
அபுசிறாஜ் தளபதி:- (உரத்த குரலில்)
சதாம்ஹுசைன் எங்களுக்குத் துணிவைத் தந்தாரடா!
சர்வமுஸ்லீம் நாடுகட்கும் சதாம் ஒரு முன்னோடியடா!
உலகத்தில் ஒரு சதாம்ஹுசைன் வழிகாட்டியடா!
உலகமுஸ்லீம் நாட்டுக் கொலாம் விடிவெள்ளியடா!
தாரீக் அஸீஸ் :- (அமை தியான் குரலில்)
அன்புள்ள முஸ்லீம் உலக வீரர்களே!
அமைதியா யிருங்கள்! அரபுலகத் தலைவர்களுக்கு
நம்ஜனாதி தி சதாம்ஹுசைன் அவர்கள்
நன்நெறிகள் கூறுவார்கள் நாமெல்லாம் செவிமடுப்போம்
சதாம்- (நிதானக் குரலில்)
அன்புள்ள முஸ்லீம்களே! அரபுநாட்டுத் தலைவர்களே!
அறிவுள முஸ்லீம்மார்க்க உலகாயத் தொண்டர்களே,
இந்தியப் பிரதமர் இராஜிவ் காந்தியும்,
இரஷ்யா ஜனாதிபதி மிகாயில் கொர்பச்சேவும்
அமெரிக்கப் படைகளுடன் போர்நிறுத்தம் செய்யுமாறு
ஆலோசனை கூறினார்கள். ஜோர்தான் மன்னன்
ஹுசைன் பெரியாரும் யாசீர் அரபாத்தும் கலந்துபேசி
ஹக்கனல்லாவின் வீரபுருசர்களாம் தளபதிகளின்
கருத்துக்களையும், ஈராக்மக்களின் பசிபட்டணி,
கருமாரி நோய்மருந்து நிலை யுணர்ந்தும்
ஈமானை இழக்காமல், போர்நிறுத்தம் செய்தோம்!
எங்கள் சகோதர அரபுநாடுகளின் தலைவர்களே!
அமெரிக்க, பிரான்ஸ, பிரிட்டன் ஜெர்மனி போன்ற
வல்லரசுகளின் எச்சிலை, அற்ப சலுகைகளுக்காக
வல்லநாயன்மேல் விசுவாசம் கொண்ட முஸ்லீம்கள்
இனிமேலாவது வல்லரசுகளுக்குப் பயப்படாமல்
இன்று, ஈராச்கை வளைந்து பயமுறுத்தியதுபோல்,
நாளை எகிப்து, லிபியா, சவுதி, ஈரான், என்றெல்லாம்
நாசதாரிகள் அடிமைப்படுத்தப் போரிடவந்தால்,
ஈராக்கிய வீரர்கள்போல் எதிர்த்து நில்லுங்கள்.
இஸ்லாமிய நாடுகளை வல்லரசுகள் இனிமேலும்
அடுத்துக் கெடுக்கவும், கோள்மூட்டிப் போரிடவும்
அமெரிக்க, வல்லரசு’ யூதநாடுகள் சதித்திட்டம்…
பொருளாதாரத் தடை என்றெல்லாம்
பேய்க்காட்டி வருவார்கள், பயப்படாதீர்கள்.
அண்ணல்நபி ஸல் எகூதியர்க்கும் யூதருக்கும்
அல்லாவை விசுவாசிக்காத காரணத்தால் சபித்தல்லோ
மலைக் காடுகட்குள் விரட்டி ஒதுக்கினார்கள்
மமதைகொண்ட அமெரிக்க யூதருகள், இஸ்ரவேலரை
அரவணைத்து, இஸ்ரவேலை, தனிநாடாக்க முனைந்து
அரபுநாடுகள் அனைத்தையும் இஸ்ரவேலுடன் தினமும்
பகைவராக்கி, தந்திரோபாயம் செய்துதான்.
பலஸ்தீனியருக்குள் முஸ்லீம் உலகெல்லாம்: கோள்மூட்டி
வல்லரசுகள் அரபுநாடுகளை அடிமைப்படுத்திப் பயங்காட்டி
வயிறார உண்டு கொழுத்து வருகின்றனர்.
உண்மையை உணருங்கள்.
உலக முஸ்லீம் நாடுகளே ஒன்றுகூடி
உத்தம நபிஸல் வழிவழியே வாருங்கள்!
நாரே தக்பீர் (எல்லோரும்) அல்லாஹு அக்பர்.
வஸ்ஸலாம்
– சமாதானம் 1992.07.24.
![]() |
மன உறுதியோடு நில்லாமல் இலக்கியப் பணி செய்தவர் கலாபூஷணம் மருதூர் வாணர் - கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் -May 9th, 2019 மருதூர் வாணர் தனது எழுபதாவது வயதில் கடந்த 2009.05.08ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மருதமுனை பிரதான வீதியைக் கடக்க முற்படும் போது விபத்தில் உயிரிழந்தார். மருதூர் வாணர் இலங்கையின் இலக்கியப்பரப்பில் இலக்கியப் படைப்பாளிகளின் வரிசையில் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை புரிந்துள்ளார்.இலக்கியமே இவர் பேச்சிலும் நடைமுறைச் செயற்பாடுகளிலும் இருந்து வந்ததையாரும்…மேலும் படிக்க... |