உயர்வு





(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவின் பிடியில் அழுந்திக் கண்ணீர்விட்டது வானம்.
கண்ணீர் பனித்துளிகளாய் விழுந்தபோது – வானத்தின் துன்பத்தை எண்ணி வருந்திய பசும்புல் கண்ணீர்த் துளிகளைத் தாங்கிக் கொண்டே வந்தது.
ஒவ்வொரு நாளும் புல் ஓங்கி வளர்ந்தது.
பரவி உயர்ந்து எங்கணும் பச்சைக் காடாய் நிறைந்தது பசும்புல்.
காலைக் குருவி பாடியது:-
‘ஏங்குவான் கண்ணீரைத்
தாங்குவான் உயர்வான்’
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.