உமிழ்ந்த வாய்க்கு முத்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 67 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உமிழ்ந்த வாய்க்கு முத்தம் உதைத்த காலுக்குத் தண்டைச் சதங்கையுமிட வேண்டுமென்றது 

ஒருநாள் இராயர் பெண்சாதி, அப்பாச்சி உத்தியோகத்திற்கு மற்றொருவனைக் கொண்டுவந்துவிட்டு இராயருக்குச் சிபாரிசு செய்தாள்.

இராயர், “அப்பாச்சி வல்லமை இவனுக்குண்டா?” என்று கேட்டார். அதற்கு அவள் “அதிகமாகவே இருக்குமென்று நினைக்கிறேன்” என்றாள். ஆனால் அறிக்கை செப்புவோமென்று சொல்லி அவனுக்குப் போகும்படியாக உத்தரவு கொடுத்தார்.

பின்பு ஒருநாள் இராத்திரி அந்தப்புரத்திலே இராயர் குழந்தை அவர் மார்பிலும் முகத்திலும் காறி உமிழ்ந்து, கால்களால் உதைத்து விளையாடிக் கொண்டிருந்தது.

சூரியோதயமான பின்பு இராயர் அப்பாச்சி உத்தியோகத்துக்கு வந்த மனிதனை அழைப்பித்து அவனைப் பார்த்து, “இராத்திரி ஒருவன் வந்து என் முகத்திலும் மார்பிலும் காறி உமிழ்ந்து, காலாலுதைத்தான். அவனுக்கு என்ன செய்யலாம்?” என்றார்.

அவன் உலகத்துக்கெல்லாம் தலைவனா யிருக்கிற உங்களை இப்படி அலட்சியம் செய்தவன் வாயிலே ஈயத்தை உருக்கி வார்த்துக் கால்களை வெட்டிவிடவேணும் என்றான்.

அவனை அப்புறம் போகச்சொல்லி, அப்பாச்சியை அழைப்பித்து முன் அவனைக் கேட்டபடி கேட்டார். 

அதற்கு அப்பாச்சி, “உதைத்த பாதம் எதுவோ அதுக்குப் பொன் சதங்கையும் தண்டையும் போட்டு உங்கள்மேலே உமிழ்ந்த வாய் எதுவோ அதை முத்தமிட்டுக் கொள்ளவேணும்” என்றான். 

அதன்பின்பு இராயர், “நீ சிபாரிசு செய்த மனுசனை அப்பாச்சியிலும் உயர்ந்தவன் என்று புகழ்ந்தாயே! இவ்விருவர் விவேகத்தையும் பார்த்தாயா” என்று கேட்டார். 

அதனை ஒரு பரீக்ஷையிலே தானே எப்படி நிச்சயிக்கலா மென்றாள். 

– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

இராயர் அப்பாஜி கதைகள் பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை :  மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை.  இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *