உடைப்பண்பும் உளப்பண்பும்




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெள்ளிய ஆடைக்கும் வெள்ளை யுள்ளத்திற் கும் பேர்போன தலைவர் ஒருவர் இருந்தார். அவரை அழுக்கடைந்த ஆடையுடன் ஓர் அருங் கலைச் செல்வர் சென்று கண்டார்.
தலைவர் சற்று நேரம் புறக்கணிப்புக் காட்டி யும், பேசும்போது ஏற இறங்கப் பார்த்தும் கடுஞ் சொல் சொல்லியும் அவரைப் பலவகையில் சிறு மைப்படுத்தினார்.
ஆனால், அக்கலைஞருடைய பேச்சு முறையா லும் நடையாலும் தமது மேடைப் பலகை மீது அவர் அவிழ்த்து வைத்த நூற்கட்டுகளாலும் தலை வர் அவர் தகுதி அறிந்து, அவரை மிகவும் பாராட்டிப் பல வகையிலும் உதவ முன் வந்தார். விடை கொள்ளும்போதும் தலைவர் தாமே இறங்கி வந்து கலைஞரை வழியனுப்பினார்.
அப்போது கலைச் செல்வர், முதலில் தாம் அடைந்த துன்பத்தையும் பின்பு பிரியுங்கால் தாம் பெற்ற பேற்றையும் ஒப்பிட்டு, நகைச் சுவையுடன், “வரும்போது வாராதே என்று குறிப்பு மீறி வந் தேன்; ஆனால் போகும்போது போகாதே என்ற குறிப்பை மீறிப் போகும்படியான பேறு வாய்த் தது,” என்று இன்மொழி புகன்றார். தலைவர் புன் முறுவலுடன், “நான் யாரையும் உடைப் பண்பு கொண்டு மதித்துத்தான் வரவேற்பது வழக்கம் 90 ஆனால், பிரிவது உளப்பண்பை மதித்தேயாகும். இதுவே இரண்டினிடையிலும் உள்ள வேற்றுமை,” என்று பரிந்து நன்மொழி கூறினார்.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.