கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2024
பார்வையிட்டோர்: 1,100 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உடலின் ஒவ்வோ ருறுப்பும் கேடடையாது தன்தன் தொழிலை எளிதிற் செய்யத்தக்க நன்னிலைமையிலிருப்பதே உடல்நலமாகும். விளக்கமாகச் சொல்லின், வயிறும் குடர்களும் ரங்கொண்டு உணவைச் செவ்வையாகச் செரிப்பிக்கச் செய்யவேண்டும்; நெஞ்சப்பையும் நாடி நாளங்களும் நன்னிலையிலிருந்து செந்நீர் நன்குஓடச் செய்து வரவேண்டும்; மூச்சுப்பை சிறிதும் பழுதின்றி யிருந்து செந்நீர்க்கு ஏற்ற, காற்றைக் கொடுத்துதவவேண்டும்; தலை மூளை நன்னிலையோடிருந்து மனத்தின் தொழில்களை யெல்லாம் மாறுபாடின்றி நடத்துவிக்கவேண்டும்; உடலுக் குள்ளிருந்து ஓய்வில்லாமல் எந்நேரமும் வெளியேறிவரும் வியர்வைநீரை வெளிப்படுத்த உடலின் தோல் துப்புரவாக இருக்கவேண்டும். நாம் இவ்வாறான உடலைப் பெற்றிருப் போமானால், நமக்கு உடலிலும் மனத்திலும் எவ்வித வலியும் மெலிவுந் தோன்றாது; நாம் அன்றாடம் நம் கடன்களை விருப்பத்தோடும் மகிழ்ச்சியோடும் செய்ய வல்லவர்களாவோம். இந்நிலைமையே சிறந்த வரமும் வாய்ப்புமாகும்; இதன் மாறுபாடே உடல் வாட்டத்தை யும் மனக்கோட்டத்தையும் உண்டாக்கும். 

உடற்கேட்டுக்கு முதன்மையான காரணங்களில் இரண்டொன்றையும் அவற்றின் தீப்பயன்களையும் இங்குக் காண்பாம். மீதூணும் துப்புரவற்ற உண்பொருள்களும் வயிற்றுக்குக் கேடுண்டாக்கும்; எண்ணமேல் எண்ணமுங் கவலையும், மூளையையும் நெஞ்சப்பையையும் செந்நீரையும் பழுதுபடுத்தும்; வெதுவெதுப்பா யிருக்கும்போது குளிர் காற்று மேலே வீசுவது மயிர்க்கால்கள் அடைபட்டுப் போய் வியர்வையை மேல்வரவொட்டாமல் அடக்கும். நம்முடைய இத்தகைய தவறுகளால் உடலில் உண்டாகும் மாறுபாடுகள், நோயுறச்செய்து, ஒருவேளை சாக்காட்டை யுங்கூடக் காட்டிவிடும். ஆகையால் உடல்நல விதிகளைத் தவறாமற் கையாளவேண்டியது நமது முதன்மையான கடமை. இதுவே நம் உடலின் வலிமையையும் நலத்தையும் பேணுவதாகும். 

நோய்களின் மூலங்கள் வெவ்வேறு வகை; அவை முதன்மையாகத் தன்னாலும், தன் மூதாதைகளாலும், அக்கம் பக்கத்தாராலும் உண்டாகின்றன. தன் தாய் தந்தை யர், பாட்டன், பூட்டன்மார்கள் பெருநோய்கொண்டிருந்தி ருப்பார்கள். அது கால்வழி கால்வழியாய் அக்குடும்பத் தாரில் எவரையேனும் பற்றிக்கொள்ளும்; இதுவேயன்றி ஓரிடத்திலுள்ள ஒருவரிடமிருந்து அங்குள்ள இன்னொருவ ரைப் பற்றிக்கொள்ளும் தொற்றுநோய்களும் உண்டு. ஒரு வன் முன்னறிவில்லாமல் ஏற்றுக்கொள்கின்ற நோய்கள் பலப்பல. ஆகையால் ஒருவன் உடல்நல விதிகளைத் தவ றாமல் கையாண்டுவருவதோடு, மனத்தூய்மையும் பெற்றி ருப்பானாயின் அவனை எந்நோய்களும் அணுகா; அணுகி னும் விரைவில் நீங்கிப்போகும். 

நமக்காகவும் நம் மக்கட்காகவும் நாம் கையாள வேண்டிய முதன்மையான உடல்நல விதிகளை இங்கெடுத்துக்காட்டுவாம். 

க. ஈரம் காட்டும் இடத்தில் இல்லம் கட்டாதே.

உ. இல்லத்தின் இடமெல்லாம் துப்புரவாக இருக்க வேண்டும். 

ங. இல்லம் எங்கும் இரவும் பகலும் மெல்லிய காற் றோட்டம் இருந்துகொண்டிருக்க வேண்டும். 

௪. இல்லத்தார் நாடோறும் குளித்து முழுக வேண்டும். 

ரு. ஒவ்வொருவரும் துப்புரவும் அளவுங்கொண்ட உணவைக் குறைவறக் கொள்ளவேண்டும். 

சு. ஒரேவகை யுணவைத் தொடர்ந்து கொள்ளக் கூடாது. 

எ. வெறியுண்டாக்கும் குடிநீர்களை வெறுத்துத் தள்ளவேண்டும். 

அ. வெளிக்காற்றில் கூடியவரை சிலநேரம் உலவிவர வேண்டும். 

கூ. ஒருநாளில் இருபது நாழிகைக்குக் குறையாமல் உடலினாலேயோ மனத்தினாலேயோ வேலை செய்யவேண்டும். 

க0. வேடிக்கை விளையாட்டுக்களிலும் சிலநேரம் கழிக்கவேண்டும். 

கக. ஈரம்படவும் குளிர் காற்றிலும் ஒரு வினாடிப் போதும் குந்தியிருக்கவே கூடாது. 

கஉ. எவனுக்கும் இரவில் பதினைந்து நாழிகைநேரத் துக்குக் குறையாமல் நல்ல தூக்கம் வேண்டும். 

க௩. மனத்தின்கண் வருத்தமும் கவலையும் புக வொட்டக் கூடாது. 

இவ்விதிகளையும் இவைபோன்றவைகளையும் மக்கள் கையாண்டுவரின் உலகின் கண் நோய்கள் தலைகாட்ட மாட்டா. 

  1. தமக்கையும் தங்கையும் 

ஆங்கில நாட்டில் தமக்கையுந் தங்கையுமாய் இரண்டு பெண்டிர் இருந்தனர். தமக்கை படித்தவள், அவள் பள்ளிக்கூட ஆசிரியை. தங்கையோ நல்லவளாயினும் பொதுவறிவு இல்லாதவள். தமக்கை ஒரு று நகரில் வாழ்ந்துவந்தாள்; தங்கையோ ஒரு குடியானவ னுக்கு வாழ்க்கைப்பட்டு, ஒரு சிற்றூரில் குடித்தனம் செய்துவந்தாள். இவள் வீட்டைச் சுற்றிச் சதுப்புநிலம் ; மழைகாலத்தில் வீடெல்லாம் சில்லென்று போய்விடும். 

ஒருநாள் தமக்கை தங்கை வீட்டுக்கு அவளைப் பார்க்க வந்தாள் வந்தவள் தங்கையின் குடும்ப நலங்கேட்க அவள் “அக்கா! இவ்வீடு எங்கட்கு வாய்ப்பாக இல்லை; நாங்கள் இவ்வீட்டுக்கு வந்ததுமுதல் வத்தியர் வராத நாள் இல்லை; என் கணவருக்குக் கைகால் பிடிப்பு; எனக்கோ எப்போதும் நீர்க்கோவை; பிள்ளைகளெல் லாரும் மழைக் காலத்தில் தொண்டை நோயினால் வருந்துகின் றனர். சென்ற மழை நாளில் எல்லோருக்கும் காய்ச்சல்; அப்போதுதான் இரண்டு பிள்ளைகளும் ஒரு வேலைக்காரனும் இறந்துபோய்விட்டார்கள். அஃது உனக்குத் தெரியுமே! தமக்காய்! என்ன தீவினையோ! நாங்கள் இப்பாடுபட்டுக்கொண் டிருக்கின்றோம்!” என்று அழுதுகொண்டே சொன்னாள். 

அதனைக்கேட்ட தமக்கை, என் அருமைத் தங்காய்! நீ வாய்ப்பற்றவளன்று; முன்னறிவில்லாதவள். உனக்கு வரும் இக்கட்டுக்களெல்லாம் நீங்கள் குடித்தனம் பண்ணும் இடத்தினா லேயே உண்டாகின்றன. இவ்வில்லம் இல்லாத நோய்களை யெல்லாங் கொடுக்கும். நீங்கள் இவ்வீட்டில் இருக்கும்வரையில் இந்நிலைமை மாறுபடாது,” என்றாள். 

அதனைக் கேட்டுத் தங்கை, “அக்கா! அப்படியா நினைக்கின் றாய்! ஆனால் இவ்விடத்தை விட்டு நாளைக்கே போய்விடுகின்றேன். எங்கே போனாலும் வருகிற துன்பங்கள் வந்துதானே தீரும்! ஒரு வேளை அவைகள் மிகுந்தாலும் மிகுமே!” என்றாள். 

அப்போது தமக்கை சொல்லுகின்றாள்: “தங்காய் நீ சொல்லு வது சரியே; துன்பங்கள் எங்கும் உண்டு. ஆனால் இக்கட்டுக்கள் விடாது நேரிட்டுக்கொண்டிருந்தால் அவைகளை நீக்க வழி தேடிக்கொள்ள வேண்டுமல்லவா? அவ்வாறு செய்யின் அவை குறையுமே தவிரப் பெருகமாட்டா. நாம் உலகவாழ்க்கையைச் செவ்வனே ன நடத்தற்குரிய சில விதிகள் இயற்கையிலேயே ஏற்பட் டிருக்கின்றன. அதுபோலவே நாம் நமது உடல் நலம் பேணு வதற்கென்றும் சிலமுறைகள் உண்டு. நீங்கள் இந்த இடத்தில் குடித்தனம் பண்ணிக் கொண்டிருப்பதனால் அவ்விதிகளுக்கு மாறாக நடக்கின்றீர்கள். இஃதே உங்கள் துன்பங்களுக்கெல்லாம் காரணம், இஃது உங்கள் தவறேயன்றித் தீவினைப் பயனாகாது’ 

தமக்கை இவ்வாறு பேசித் தங்கைக்கு உடல்நல விதிகளை யெல்லாம் உளத்தில் ஊன்ற எடுத்துக்காட்டினாள். 

தமக்கை அறிவுறுத்தியது தங்கை மனத்தில் நன்றாகப் பற்றிக் கொள்ள அவள் தமக்கை சொற்படியே வேறொரு தூய்மையான இடந்தேடிக் குடித்தனஞ் செய்துவந்தாள். சில நாட்களிற் கணவன் கைகால் பிடிப்புத் தணிந்துபோய்விட்ட து. பிள்ளைக ளெல்லோரும் நோய்ச் சள்ளையற்றுத் துள்ளிக்குதித்து விளையாடி மகிழ்ச்சியோடிருந்தனர். தாயின் விடா நீர்க்கோவையும் அவளைத் தொடாதொழிந்தது. இவ்வாறு அக்குடும்பமெல்லாம் நோயென்ப தற்றுச் சிறந்த உடல்நலம் பெற்றுச் சீருற்றது. 

  1. செரியாமல் துன்புற்ற பெருமகன் 

திருவிற் குறையாப் பெருமகனெருவ னிருந்தான். அவன் எங்கே போனாலும் வண்டியிலேயே போவான்; விரும்பிய உண் பொருள்களையெல்லாம் ஒன்றுவிடாமல் தின்பான். இவ்வாறிருக் கச் சிலநாட்களில் அவனுக்கு உணவு செரியாமல் உடல்நலக் கேடுற்றது. அவன் ஒருநாள் ஒரு மருத்துவரை யழைத்துத் தன்னுடைய நோயை மருந்தளித்துத் தீர்க்க வருந்திக் கேட்டுக் கொண்டான். 

அம் மருத்துவர் நோய்மூலமும் அளவுமறிந்து, அதனைத் தீர்க்கும் வழியையும் நாடித் தெரிந்துகொண்டு, அவனைப் பார்த்து, ‘”ஐயா! அப்படியே செய்யலாம், ஆனால் இப்போது நாமிருவரும் வண்டியிலேறிச் சிறிது தூரம் போய்வரலாம்; யானே வண்டியைச் செலுத்துகின்றேன்,” என் 

என்றான். அதற்கு அச்செல்வன் ஒத்துக் கொண்டான். இருவரும் வண்டியிலேறி அரைக்காவதம் சென் தும், மருத்துவர் சட்டெனச் சவுக்கைத் தவறினாற்போற் கீழே போட்டுவிட்டுப் பெருமகனை நோக்கி, “ஐயா! தயைகூர்ந்து சற்றுக் கீழே யிரங்கிச் சவுக்கை யெடுத்துக் கொடுப்பீரா?” என்றார். உடனே அச்செல்வன் அதனையெடுத்துவரக் கீழே இறங்கியதும், வைத்தியர் வண்டியை வந்தவழி திருப்பி ஓட்டிக்கொண்டே புன் சிரிப்புடன் திரும்பிப்பார்த்து நோயாளியை நோக்கி, “தாங்கள் சிறிது நடந்து வீடுவந்து சேர்ந்துவிடுங்கள்,” என்று சொல்லிச் கொண்டே குதிரையை விரைந்தோடச்செய்து வீடுசென்றார். செல்வனும் நடந்து வீடுவந்து சேர்ந்தான். 

அச்செல்வனுக்கு அதுவே நோய்தீர்க்கும் முதலுதவியா யிருந்தது அன்று பசியெடுத்து உணவு கொண்டான். பிறகு மருத்துவர் அன்றுபோலவே என்றும் அவனை எங்குச் சென்றாலும் நடந்து போய்வரச்சொல்லி, வேறு சில பரிகாரங்களுஞ்செய்து சின்னாட்களிலேயே உற்ற நோயை முற்றும் போக்கினார். 

இதுபோலவே செரியாமை நோயடைந்திருந்த வேறொருவ னுக்கு இன்னொரு வைத்தியர் சொன்னதாவது: 

“அப்பா! ஒருநாளில் ஆறணாவே செலவுசெய்து உணவருந் திக்கொண்டு வா; அதனையும் உடலாலுழைத்துப் பெறுவாயாக, என்று அறிவுரை கூறி அனுப்பிவிட்டாராம். 

  1. ஒரு செட்டிச் சிறுவன் 

ஒரு நகரில் ஒரு செட்டிப் பையன் பேசும்படக் காட்சிச் நள்ளிரவில் வீட்டுக்கு வந்தான். அப்போதே  அவன் உடம்பு சிறிது குளிர்ச்சியடைந்திருந்தது. அவன் மறுநாள் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பானாயின் அக்குளிர்ச்சி மாறியிருக்கும். அப்படிச் செய்யாமல், அவன் காலையிலெழுந்து கடைக்குப்போய் வேலைபார்த்துக் கொண்டிருந்தான். அன்று மாலை அக் குளிர் நோய் சிறிது மிகுந்தது. அடுத்த நாளும் உடம்பைப் பார்த்துக் கொள்ளாமல் வேலைக்குச் சென்றான். அதற்கடுத்த நாள் அவனுக்குத் தொண்டை கட்டிக்கொண்டிருந்தும், அதனைப் பொருட்படுத்தாமலே, கொடுக்கல் வாங்கல் வேலையாக ஒரு காவதத் தொலைவிலிருந்த வேறொரு செட்டியாரிடம் போய்வந்தான். மறுநாள் அவனால் வாய்திறந்து பேசவே முடியாமற் போயிற்று. 

இவ்வாறாக ஒரு நண்பன் இச் செட்டிமகனைக் கடையிற் கண்டு, “என் ன, கம்பளிப்போர்வை! உடலும் நடுக்கலடுத்துக் கொண்டிருக்கின்றதே!” என்றுகேட்க, அவனுடன் பேசமுடியவே இல்லை செட்டிமகனார்க்கு. இதனைக் கண்ட நண்பன், “செட்டி யாரே! இப்போதே இல்லத்துக் கேகிவிடுங்கள்; உடனே ஒரு வைத்தியரை யழைத்து உங்கட்கு ஏதாவது மருந்து கொடுக்கச் சொல்லுங்கள்,” என்று சொல்லி அவனை ஒரு வண்டியிலேற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டான். 

வைத்தியர் பிள்ளையாண்டானுடைய நோயை நாடிப் பார்த்த போது, காற்றுக் குழாயும், காற்றுப் பைகளுக்குச் செல்லும் குழாய் களும் மருத்துவம் மீறிப் புண்பட்டுப்போயிருந்தன. வைத்தியர் ஆவனவெல்லாம் செய்தும் செட்டியார் குபேரச் செல்வத்தையும் குடும்பத்தையும் இங்குவைத்துக் கூடுவிட்டு அங்குப் போயினர். 

நல்ல பிள்ளையாண்டான்! பெரும்பேறடைய விருந்தவன்! சிறிது அறிவின்மையால் இளமையிலேயே உயிர்துறந்தான். 

க. ஒ! வாழ்த்துப்பெற்ற உடல் நலமே ! பொன் பண்டாரங்களுக்குமேல் நீ நிற்கின்றாய்! உயிரை உயர்த்து கின்றாய்! கல்வியறிவிற் கருத்தைச் செலுத்துகின்றாய்! நற்குணங்களை நல்கி இன்பம் நிறையச் செய்கின்றாய்! உன்னைப் பெற்றவன் எல்லாம் பெற்றவன்! உன்னைப் பெறாதவன் உன்னோடு ஒன்றையும் பெறாதவன்! -ஸ்டெர்னி 

உ. உடல் நலத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் வேண்டி யவை எவை? 

இச்சைகடிதல், வெளிக்காற்று, அளவுழைப்பு, சிறிது உன்னிப்பு. -ஸர் பிலிப் ஹிட்னி. 

கூ. தீயள வன்றித் தெரியான் பெரி துண்ணின் நோயள வின்றிப் படும். -திருவள்ளுவர். 

ச. போனக மென்பது தானுழந் துண்டல்.  -ஔவையார். 

ரு. உள்ளம் பெருங்கோவில் -திருமூலர். 

சு. மக்கள் உடலே ஆண்டவன் கோவில் -இயேசுநாதனார் 

எ. உழைப்பின்றேல் பிழைப்பில்லை -ஒரு பெரியார். 

அ. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ? -பட்டினத்தார். 

– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.

சேலை_சகதேவ_முதலியார் சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *