இறவா பெரு நிலை காண ஒரு இறையொளி நாயகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2025
பார்வையிட்டோர்: 118 
 
 

உச்ச கதியில் ஒரு நிழல் வாழ்க்கை நிழலும் நிஜமுமாய் வாழ்க்கையின் மாறுபட்ட கோணங்கள் வானம் எங்கேயோ துருவத்தில் நின்று கொண்டிருபதாய்பட்டது.

முகநூலில் கவிதை எழுதியே அவளின் உயிருப்பு சங்கதிகள் மஞ்சுவிற்கு அது வெறும் பொழுது போக்கல்ல வாழ்க்கையின் மாசுபடாத உயிர்த் தளத்திலேயே. அவள் இப்போது துரிதகதியில் பயணம் செய்ய நேர்ந்தது.

அவள் வாழ்க்கையின் இறுதிகட்டம். தலை நரைத்த, மூப்பு விழுந்த அனுபவக் கிழவியாக இருக்க நேர்ந்தாலும் அவள் மனசளவில் இளமையோடு இருக்கின்ற சாகாவரம் பெற்று வந்த ஓர் ஆதர்ஸ தேவதை போலவே இன்னும் இருப்பதற்கு ஒருமெய்யறிவு சாட்சியாகவே இப்போது அவளின் இருப்பு நிலை.

தமிழும் கலையுமாகவே அவள் விடுகிற ஒவ்வொரு மூச்சும் இருந்தது. இந்த வயதிலும் அவளால் இப்படி தமிழ் எழுத முடிகிறதென்றால், அவள் கடவுளாலே ஆசீர்வதிக்கப்படவள் என்று தானே அர்த்தம். நிழலையே தேடிக் கொண்டிருக்கிறவர்கள் கண்களுக்கு அவள் மட்டுமல்ல அவள் இப்படி இருப்பது கூட மறை பொருள் வேதம் தான்.

வேதமாவது பூதமாவது. யாரை பார்த்தாலும் பூத விகார மனசுடனேயே இருப்பது போலபடும். அந்த அளவுக்கு உலகமயமாகி விட்ட அவர்களின் உயிர் மங்கிய இருப்பு நிலை. இன்னும் கொடுமை என்னவென்றால் ஆன்மா என்று ஒன்று இருப்பதே அவர்கள் அறிவுக்குஎட்டாமல் போனது தான்.

மிகச் சிறு வயதிலேயே அப்பாவின் வாய் மொழியாக அவள் அறிய நேர்ந்த உண்மை மட்டுமல்ல. பெற நேர்ந்த ஞானமும் கூட இதுவாகவே இருந்தது.

அதன் விளைவு தான் இன்றைய நிலையும் கூட வாழ்க்கையில் எத்தனையோ உறவு முகங்களைக் கண்டு தேறிய அவளுக்கு இப் பிணைப்பிலிருந்து விடுபட அவளுள் சுயம் பிரகாசமாகவே எழுந்த ஒரு சோதி தரிசனம் இது. ஆம் அந்த மாமனிதரிடம் மகா புருஷனிடம் அவள் கொண்ட ஈடுபாடு அத்தகையது.

அவரை அவள் சந்தித்தது, ஒரு அரிய பொழுதில் தான் முகநூல் படிக்கும் போது பரிச்சயமில்லாத பல முகங்கள் யாரையும் அவள் கை நீட்டி அழைத்ததில்லை. அப்படி வருகிறவர்களையும், அவள் நோட்டம் பார்க்கும் போது அவர்கள் முகத்தில் உலகியல் மாசு படித்திருக்கிறதென்று தான் தேடுவார். அப்படி யாரையாவது கண்டால், அவரை அவள் தன் நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டாள். அவளுடைய ஆன்மீகம் சார்ந்த, பார்வை அத்தகையது. முகநூலே வைத்துக் கொள்ளக் கூடாது, என்று, சிலர் கூறுவார்கள் நடக்கிற சில தவறுகள் காரணமாகவே அவர்களின் இந்தக் கூற்றும். அதனாலேயே அவளின் நிதானம் தப்பாத இந்தப் பார்வை.

அதிகாலை எழுந்து விட்டால், அவளூக்கு இருப்புக் கொள்ளாது முகம் கழுவி விட்டு தேனீர் ஊற்றுவது அவள் முதல் வேலை. அதுவும் பசும் பால் தேனீர். நாட்டுப் பசு மாட்டுப் பாலின்றி பைக்கெட்டில் வரும் பால் தான் வேறு வழியில்லை. அவளின் சைவம் காக்கும் இறை தொண்டுக்கு இது போதும்.

அடுத்தபடியாக அவளூடைய அந்த கர்மயோக தவம் கணனி முன்னால், நீட்சியாகத் தொடரும் அதைத் திறந்தால் பொழுது போவதே தெரியாது.

கீ போர்டில் அவளுக்கு தமிழ் அடிக்க நன்றாக வரும். கவிதை எழுதுவது மட்டுமன்றி, கதையும் எழுதுவாள். அப்படி எழுத அவளுக்குக் கிடைத்த ஒரு தவச் சாலை இந்த இணயம் தான். அவளின் எழுத்துயுகத்திற்குக் கிடைத்த பெரும் வெற்றியே இது தான். பத்திரிகை உலகம் விட்டுப் போய் வெகு காலமாகிறது.

அவள் கண்முன்னால், காட்சி உலகமே தெரியாமல், ஒரு கண்விழிப்பு கடவுள் நிலையில் வாழ்வது போல உள்ளூலக விழிப்பு ஒன்றே, அவளின் அப்போதைய இருப்பாக இருக்கும்.

அன்று அப்படித்தான் அவள் முக நூலில் கவிதை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு புதிய முகம் வந்தது முகமென்ன அழைப்புத்தான்.

வணக்கம் அம்மா!

அழைத்தது ஒரு ஆண்குரல் தான் அவள் வியப்புற்று உள்ளோடிப் பார்க்கும் போதுதிரையில் தெய்வீகக் களையோடு, பளிங்கு வார்ப்புப் போல் அவர் முகம் தெரிந்தது.

அதிலென்ன சந்தேகம்? அவர் பளிங்கு, வார்ப்பு மட்டுமல்ல, பதியும் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. தலை முடி வளர்த்து நீண்டு தொங்கும் தாடியுடன் அவரைக் காணும் போது அவளுக்கு தேகம் புல்லரித்தது.
நம்பவே முடியவில்லை உலகமயமாகிவிட்ட சாக்கடை வீழும் கணங்கள் போய் அவள் காண நேர்ந்தது ஒரு கடவுள் உலகத்தை. அவரின் அருள் குரலில் மயங்கிப் போய் அவளும் வணக்கம் ஐயா என்றாள். பவ்வியமாக கூறவில்லை எழுதினாள்.

அதைப் பார்த்து விட்டு, அவர் எழுதினார்.

அம்மா! பரவாயில்லை என்னை நீங்கள் சுவாமி என்றே கூறலாம்.

ஆம் சுவாமி! அது தான் பார்க்கிறேனே. எனக்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கு காட்சி உலகமே விட்டுப் போன மாதிரி உணர்கிறன்.

அம்மா! மிகவும் சந்தோஷம் நான் கடவுள் நிலைக்கு வந்து வெகு காலமாச்சு.

அதெப்படி சுவாமி?

சொல்லுறேன் நான் மதுரைவாசி இல்லை சிவகாசியில் தான் நான் பிறந்தது. இப்ப தொழிலுக்காக மதுரை வந்திட்டேன். என் குடும்பமும் இங்க தான் இருக்கு, உங்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கும். இது என்ன இரட்டை வேடமா என்று நினைப்பீங்க. சின்ன வயதிலேயிருந்த பக்தி செய்வது என் இரத்திலேயே ஊறிப்போச்சு. அதனாலே இளைஞனாக இருக்கும் போது, துறவியாக போக விரும்பி இமயமலைக்கே போய் விட்டேன். அதுவும் ஒரு குருவின் கீழ் மூன்று வருடமாக தவம் செய்து நிஷ்டை கூடி நிர்விகல்ப சமாதி நிலையையே அடைந்து விட்டேன். இருந்தாலும் படிப்பையும் நான் விடேலை. தொடர்ந்து படிச்சு இப்ப ஒரு வக்கீலாய் இருக்கிறன். கல்யாணம் செய்யாமலே வாழ நினைச்ச என்னை எப்படியோ வற்புறுத்தி, குடும்பம் அதை செய்து வைச்சதாலை இப்ப நான் கிரகஸ்தன் தான். எனக்கு இரண்டு பையன்கள் கூட உண்டு. ஆனாலும் என் இருப்பு நிலை கடவுள் போன்றதே.

இதைக் கேட்டு விட்டு மெய்மறந்து போன அவளுக்கு பேசவரவில்லை. உலகாயுத சுழற்சி விட்டு போன மாதிரி, மனதுக்குள் ஒரு நிம்மதி வந்தது மட்டுமல்ல பெருமிதமும் கொண்டாள். அதையும் மீறி கேட்கத் தோன்றியது.

சுவாமி! உங்கடை பேர் என்ன?

சிவச்செல்வம்.

மிக்க நன்றி! பிறகு கதைக்கிறன்.

இலங்கையச் சேர்ந்த எனக்கு இன்று எனக்கு ஒரு புது உலகம் அதுவும் என் கடவுள் இருப்புக்கு ஒத்தாகவே சுயம் பிரகாசமான, இவர் தோன்றுதல், திடீரென்று ஏதோ நினைப்பு வந்து, கதவைத் திறந்து வானத்தை அண்ணாந்து பார்க்கையில் ஓரு அமானுஷ்ய ஒளி தெரிந்தது. தாடி வளர்த அந்தச் சாமியையே தரிசனம் கண்டது போல் திரும்பி வந்தவள், கணனியைத் தொட்டு தனக்கு இயல்பாகி விட்ட கவிதைமழையில் மூழ்கி இப்போது, அவள் காட்சி தேவதையாக வீற்றிருந்தாள், அவள் கண்கள் நிலை கொள்ளாமல் அலைந்த போது உயிரை வருடிக் கொண்டு அவர் தோன்றினார்.

அவள் வாழ்க்கையுகத்தின் கஷ்ட திசை போய் ஒளிமயமாகி உள் நின்று இயக்கும் பெரும் கடவுளாய் தேஞஸ் மிக்க அவரின் இருப்புக்கு முன்னால் அவளுக்கு எல்லாமே மறந்து போயின. அவரின் பக்கத்தைத் திறந்து எழுதத் தொடங்கிய அவளின் கை இன்னும் ஓயவில்லை.

அவரோடு நட்பு வட்டத்தில் இருப்பவர்க்கெல்லாம் இந்த உண்மை தெரியும்.

அவளின் கவிதை மழையால் அவரின் முகநூல் பக்கமே நிரம்பி வழிகிறது. பத்தாயிரத்தையும் தாண்டி விட்டது. இவற்றுக்கெல்லாம் அவர் லைக்கிடுவார் அதிப் பார்த்து விட்டு வேறுசிலரும் இடுவதுண்டு, அப்படி இட்டவர்களில் ஒருவராக அவரோடு தொழில் செய்யும் ஒருவரோடு அன்று அவள் முகநூல் வழியாகத் தொடர்பு கொள்ள நேர்ந்தது உண்மையில் அவரும் ஒரு வக்கீல் தான் அவர் தான் பேச்சைத் தொடங்கினார். முகநூல் வழியாக வர் குரல் கேட்டது. மெசென்ஞரில் அவர் முகம் தெரிந்தது.

வணக்கம் அம்மா!

வணக்கம் ஐயா!

எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் மீதும் உங்கள் இருப்பின் மீதும்.

கேளூங்கள்.

தமிழ் நன்றாக வருகுது உங்களுக்கு எனினும் நீங்கள் பாதை தவறிப்போவதாக எனக்கு ஒரு சின்ன மனவருத்தம்?

என்ன சொல்லுறியள்? என்னைப்பற்றியா?

ஆம்! நீங்கள் கவிதை எழுதுவது யாருக்காக.

அது கடவுளூக்காக மட்டுமே!

அதைக் கேட்டு விட்டு சற்று சினம் வந்தவர் போல் அவர் கேட்டார்.

அப்ப சிவச்செல்வனும் கடவுளா?

சந்தேகமில்லாமல், நான் அப்படித் தான் உணர்கிறன்.

அதைக் கேட்டு விட்டு அவர் சொன்னார்.

கவலைப்படாதேங்கோ அம்மா. நான் சும்மா ஜோக் விட்டேன், அவருக்கு நீங்கள் நிறையக் கவிதைகள் எழுதிக் குவிக்கிறீங்களே. அதுக்குத் தான் இப்படியொரு ஜோக் விட்டேன். அவர் பெரிய ஆளுதான்; சாமியாக மட்டுமல்ல மனிதனாகவும் அவர் தெய்வமாகவே நினைச்சுக் கும்பிடலாம்.

என்ன சொல்லுறியள்?

அவரின் ஒரு பக்கம் தான் உங்களுக்குத் தெரியும். அவர் காட்டிற்கு போய் செய்து மட்டும் பெரிய ஆளாய் வரேலை இன்னுமொரு முகமும் அவருக்கு இருக்கு. அதிலும் அவர் கடவுள் தான். என்ன சொல்ல வரேனெண்டால், அவர் கோட் சூட் போட்ட வெறும் வக்கீல் மட்டுமல்ல கடவுள் மாதிரி பெரிய கொடை வள்ளல். ஏழைகளிடம் வழக்கிற்காக காசு வாங்காமலே வழக்காடி வென்று கொடுக்கிற பெரும் கடவுள். மிக எளிமையான துறவு வாழ்க்கையிலும் கொடி கட்டிப் பறக்க நேர்ந்ததனால், தான் இதை அவரால் செய்ய முடிந்தது. இந்த அவரின் இன்னொரு முகத்தையும் அடையாளம் காட்டி நீங்கள் கவிதை எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கு.

நிச்சயம் செய்கிறேன் ஐயா!

அப்படி வேதத்தை சொல்ல மீண்டும் தான் புதிதாய் பிறந்திருப்பது, போல் உத்வேகம் கொண்டு அவள் எழுதத் தொடங்கி விட்ட அந்தக் கவிதை உலகமே கண் விழித்து சிறகு முளைத்து வானிலேயே பறக்க நேர்ந்தாலும் இந்த உலகம் விடியுமா என்று அவளுக்குத் தெரியவில்லை. அதன் விடிதல் யார் கையில் என்பது தான் பெரும் புதிராக அவளை உறுத்திற்று.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *