இரண்டு நெருப்புகள்

அனைவரும் அருகில் ஆனந்த வேடிக்கையில் மிதந்து கொண்டிருந்த நேரத்தில், அவன், இயந்திரமாக மாறிய காலம். இருள் வானத்தில் நிலவு ஒளியில்… மின்பறவை. கண்டதும்.
“ஐ ஸ்பாட்டெட் ட்ரோன்”
“குட் வொர்க் எஃப் 14” என்று காதில் ப்ளூடூத் ரிசீவர் கூறியது.
நடந்தான்… வெல்சன் லோகோ சந்திப்பு வரவேற்று, சமையல் ஊழியர்கள், கம்பனி ஊழியர்களோடு உலாவி வந்தவன், அவன் வாழ்நாளில் காணாத ஒரு ஒழுங்கமைப்பு, ஒரு அழகு, ஒரு அழகிய ஆடம்பர மேடை, ஒரு ஐந்து நிமிட பார்வையை ஈர்த்துக்கொண்டது. அதோ ஒரு மனித சிலை! தனியாக கண்களை கவர்கிறது. “நிழல்களின் ஒளி” என்ற வாசகம் பிரம்மாண்ட திரையில் அசைந்துக்கொண்டிருந்தது.
படிகளை ஏறி இரண்டாவது மாடியை அடைந்தான். மேலே அமைதி குடியிருந்தது. ஜனங்களின் சப்தங்கள் மிக தொலைதூர ஒலிகளாக கேட்கிறது. பின்னால் படிகளை ஏறி யாரோ வருகிறாள்! ஒரு பெண்ணின் காலணி ஹீல்ஸ் சத்தமும், நறுமண வாசனையும் நெருங்கியது.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்!”
அவன் நின்றான். மிஷன் ஸ்பெஷல் எடிசன் இயந்திரத்தின் பார்வை அவள் பக்கம் பார்க்க…
“மிஸ்டர் அரவிந்த் மேனன்!”
“எஸ்”
“ஐ எம் மாயா ராமச்சந்திரன், குரு பீ.ஏ. சாரி சார்…”
ஆங்கிலத்தில் உருவாகும் வார்த்தைகளின் கோர்வைகளுக்கு முன்னே குறுக்கிட்டு…
“அரவிந்த் மேனன் ன்னு எப்படி தெரியும்?”
“சார், மீட்டிங் ரூம் அப்பாயின்ட்மென்ட் அவருக்கு மட்டும் தான் இருக்கு. இந்த டைம், எனிவே வி வான்ட்டூ டு அசிஸ்ட் யூ சார்”
வார்த்தைகளில் பதற்றமும் கனிவும் மரியாதையும்.
அவள் மீட்டிங் அறை நெருங்கும் வரையில் அவனோடு வந்தாள். கதவை திறந்து விட உள்ளே சென்றான். அவள் வேகமாக விடைபெறுவது, அவள் பாதணி சத்தம் சொல்லியது. குளிரூட்டியின் குளுமையோடு வாசனையும் அதோடு… ஒரு சோகமும் தனிமையும் உணர முடிகிறது. வெண்மை நிறத்தில் தங்க நிற அழங்கரிப்புகளுடன் இருக்கைகளும் மேஜையும் ஆடம்பரத்தின் அர்த்தம் சொல்லியது. ஆள் உயர கண்ணாடி ஜன்னல்கள் சூரியன் விடைபெறும் மாலை வெளிச்சூழலின் அழகை ஓவியமாக்கியிருந்தது. சுற்றிலும் இன்டீரியர்களின் அழகும் ஒழுக்கமும் எந்திரத்தின் பார்வையை கூட கவர்ந்தது. பார்வையில் சிக்கியது ஒரு கதவு. உள்ளே இருந்து வரும் ஒருவருக்காக ஒரே இடத்தில் அசையாமல் காத்திருந்தான்.
காதின் பொருத்திக்கு “ஐ யம் இன் ஸ்பாட்”
அது “குட் வொர்க், கீப் போஸ்டிங்” என்றது.
வந்தார், குருபரன். நரைகள் ஆக்கிரமித்த மயிர்கள், மிடுக்கான தோற்றம், சோர்வடைந்த முகம் சிரிப்பை உருவாக்கி அவனை வரவேற்றது.
“உட்காருங்க மிஸ்டர் அரவிந்த்”
மெதுவாக சென்று உட்கார்ந்தான். வார்த்தைகள் எதுவும் ஆரம்பமாகவில்லை.
உள்ளே மறைந்திருக்கும் புத்தக ஒழுக்கத்தை சில நொடிகளில் ஒழுங்குப்படுத்திவிட்டு, அறை கண்ணாடியில் ஒரு நொடி முகம் காட்டிவிட்டு, கண்ணாடி கண்களோடு அவர் அமர்வதற்கு நெருங்கி வரும் போது,
“பி.எஸ், சி.எஸ்.ஆர் கன்சல்டன்சி உங்க லாஜிஸ்டிக்ஸ் ஓட ஒப்பந்தம் வைக்குறதுக்கு… ரொம்ப பெரும படுறாங்க”
“ஓகே…”
குருவின் முகமும் வார்த்தை ஒலியும் சில மன குழப்பங்களை புதைத்து வைத்திருந்தது. அவர் அரவிந்த் மேனன் எனும் அவனை ஒரு நொடியில் தன் கண்ணாடி பார்வையில் ஸ்கேன் செய்தார்.
“உங்க டொனேஷன்க்கு ரொம்ப நன்றி” என்ற சிரிப்பு உதிர்ந்த வார்த்தையோடு உட்கார்ந்தார்.
“ஜி எஸ் எம் ஜாமர். செக்யூரிட்டி சிஸ்டம் ஹேக் ட்” என்று ப்ளூடூத் ரிசீவர் மந்திரம் அவன் காதில் ஓதப்பட்டது.
குரு”எல்லாம் ஓகே ல”
“ஹா! ஒன்னும் இல்ல… இந்த சுவர் சவுண்ட் ப்ரூஃப் தானே”
“ஆமா”
மேஜை அடியிலிருந்த கையிலிருந்து “வெல்றோட்” என்கிற துப்பாக்கியை ஏடுத்து மேஜையில் வைத்தான். கருப்பு உறை கவச கைகள் அதை விடைபெறாமல் இருகப்பற்றியிருந்தது.
“பயப்படாம, அசையாம இருந்தா இரத்த கர படாமா இருக்கு”
குருவின் முகம் உறைந்தது, நெஞ்சம் அவ்வளவாக இளைக்கவில்லை. மரண பயம் பீடிக்கவில்லை. கண்களை மூடி மனம் சில கனம்ஆசுவாசமாகியது.
“சரி”
அரங்கேயே அதிற வைக்கும் அலாரம் அந்த மரண அமைதியை கொன்றது. அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் சிவப்பு நிறத்தில் அபாயம் சொல்லும் விளக்கு ஒளிகள் இருவரின் முகத்தில் சிவப்பு நிற ஒளிக்கோடுகளை சுற்றி சுற்றி ஓட்டியது.
இதய துடிப்பது வேகமானது. துப்பாக்கி அவன் கையோடு சேர்ந்து வேகமாக எழுந்தது. அவன் எழுந்தவுடன் அவரும் காந்தம் போல் எழுந்தார்.
“இது என் வேல கெடயாது, செக்யூரிட்டி மல்ஃபுங்ஷன். உங்க ஆளுங்க எத்தன பேர் இருக்காங்க”
“ரெண்டு பேர்”
“இந்த டூர் லாக் ஆகிருக்கு அவ்லோதான். அவ்வொலோ ஈஸி யா செக்யூரிட்டி சிஸ்டம் ல நுழைய முடியாது. உங்க ஆளுகளுக்கு சொல்லிரு” குரு, அவன் காதை சுட்டிக்காட்டிகொண்டே
பயம் கவ்விய முகத்தில், ஆத்திரத்தை உருவாக்கி கொண்டான். பதட்டத்தோடு ஆங்கிலத்தில் சில வார்த்தைகளை ரிசீவருக்கு கூறிக்கொண்டிருந்தான். முடிந்தவுடன்…
“அங்க பாரு”
என்று அவர் காட்டிய இடத்தில் அந்த அறை கதவின் திறப்பு பகுதியை சிவப்பு நிறத்தில் ஒளிரும் புள்ளிகள் சுற்றியிருந்தது.
“அன் லாக் ஆக மூணு மணி நேரம் ஆகும். அப்பரம் நீ வெளிய போகலாம், தேவ இல்லாம எதையும் கிராக் பண்ண வேணாம்னு சொல்லு ரெண்டு ஹவர் இருவது ஹவர் ஆகிரும்”
அந்த சூழல் அவனை பதட்டத்தில் பற்ற வைத்தது.
“இந்த ரெட் லைட், சவுண்ட் இத இல்லா ம ஆக்க முடியுமா”
அவர் தலையசைப்பில் சரி, என்று மேலே தூக்கிய கைய இறக்கி அங்கிருந்து விலகினார். புத்தகங்கள் அடுக்கிய மூலையில் சில கனம் கைகள் டிஜிட்டல் திரையில் விளையாடிய பிறகு, அறை அமைதியாக மாறிக்கொண்டது.
“உன்ன மாதிரி, திருட்டு, கொள்ள அடிக்கிற பொருக்கிங்க வந்தா ட்ராப் ஆகுற மாதிரி உருவானது, இந்த செக்யூரிட்டி”
வார்த்தை அவன் முகத்தை கோப தனலாக்கியது
“உட்காரு” என்றான்.
அவனும் அமர்ந்தான். அவனின் பதட்டம் கொஞ்சமாக கரைந்தது. அவரின் ராஜ்ஜியம், அவரின் அறை, அவரின் கட்டுப்பாடு, அனைத்திற்கும் அவன் கையில் தாங்கியிருக்கும் துப்பாக்கி தான் ஒரு கவசம், ஒரு கடிவாளம்.
“எதுக்கு?”
“ரெண்டு மணி நேரம் இருக்க முடியாது. சீக்கிரம் அன் லாக் பண்ணு”
“சிஸ்டம் மல்புங்ஷன் ஒன்னும் பண்ண முடியாது”
குரு பேச்சில் நிதானமும், அச்சமும் காணாமல் இருந்தது,
“இந்த ஜன்னல் உடச்சி கீழ…”
“புல்லட் ப்ரூஃப்”
துப்பாக்கியை மேஜையில் வைத்தான். குருவிற்கு ஒரு கனம் ஒன்றும் புரியவில்லை. அவன் அணிந்த கோட் உள்ளே இருந்து, ஒட்டும் டேப் ஒன்றை எடுத்து, சர்ர்… என்று இழுத்துக்கொண்டு, அவர் அருகே நெருங்கும் போது…
“இல்ல அவசிய இல்ல, என்ன வேணும்னு சொல்லு?”
“உன்ன கொல பண்ணதான் என்ன அனுப்பியிருகாங்க.”
அவரின் முகம் இப்போதுதான் மரண பயம் கொண்டது. எதோ ஒரு கருணை கலந்த கண்ணீர் பொங்கிய முகத்துடன் வாழ்க்கை சலித்து போன சிரிப்பு உதிர்ந்தது.
“யாரு?” குரல் மாறிப்போனது.
உணர்வற்ற எந்திரம் தான் அவன். டேப்பை உள்ளே சொருகினான். துப்பாக்கியை சரிபார்த்துக்கொண்டான். காதின் பொருத்திக்கு மீண்டும் ஆங்கில வார்த்தைகளில் மந்திரங்கள்.
அவர் அமைதியில் மூழ்கி இருந்தார்.
எப்ஃ பதினான்கு மனித எந்திரத்தின் கட்டுப்பாடு மெதுவாக உருவானது அந்த அறையில். வெளியே நிலவரமாற்றம் இல்லை என்று அவன் ஆட்கள்கள் மூலம் தெரிந்தது. சூரியன் அடங்கி, கரு மேகங்கள் வந்தது. சூழ்நிலை இருள் மயம். மரண பயணத்திற்காக தயாராகி கொண்ட ஒரு சிலை தான் அவனுக்கு அவர்.
சிறிது நேரம், அறை அமைதியோடு கடந்துவிட்டது. குருவும் அவனும் எதிரே அமர்ந்து நேரத்திற்கு இரையாகிருந்தார்கள்.
“இந்த துப்பாக்கி உண்ணொடதா? நிசப்தம் அந்தமானது.
அவன் கண்கள் புரியாமல் விழித்தன, மேஜையில் இருந்த துப்பாக்கி கையில் வந்தது.
இது வேர்ல்ட் வார் டூ வெல்ட்ரோட் உன்னோட ஏஜென்சி ட்ரைனிங் எப்படி இருக்கும், மூலைய கழட்டி கம்யூட்டர் வசிருவாங்களா?
“ஆமா”
அந்த சிலை அவனுக்கு மரணத்தை ஏற்கும் மர்மமானது. கண்கள் அவர் மேல் பாய்வதை தடை போட முடியவில்லை. இருள் மேகங்களில் அவர் பார்வை பதிந்திருந்தது.
“என் கிட்ட இருந்துச்சி, நா இத தங்கம்னு சொல்லுவோம். கோட் வேர்ட், டைகர் னு எனக்கு ஒரு கோட் இருக்குல்ல, நீ பேசும் போது கவனிச்சே”
அவன் முகம் அமைதியை தான் பேசியது.
“அது பழைய ரிவோல்வர், இந்த மாதிரி எல்லாம் என்னால அந்த டைம் வாங்க முடியல” என்ற வார்த்தைகளோடு மேகங்களிருந்த முகம் அவன் துப்பாக்கியையும் அவனையும் பார்த்தது.
“எதுக்கு?”
“உன்ன மாதிரி தான்…, அத விடு, உன்ன மாதிரி ஆளுங்களுக்கு புரியாது கூலிக்கு கொல பண்றவனுங்க, ஜஸ்ட் மெஷின்ஸ், பி.எஸ் ஆட்டிவைகுற பப்பெட்ஸ்”
எதிர் வினையில்லாத அவனை பார்க்காமல் மீண்டும் ஜன்னலை அவர் பார்வை துளைத்தது.
கையில் இருந்த துப்பாக்கியை மீண்டும் மேஜையில் வைத்தான்.
“ஆமா பப்பட்ஸ் தான். ஏ சொல்ல மாட்டா அப்டி இருந்த நாங்க, மெஷின் தான். கம்ப்யூட்டருக்கு இருக்குற மரியாத கூட இருக்காது, அதுதான் தலையில வச்சுட்டாங்க போல இந்த கொல பண்ற மெஷின்க்கு. இது என்னோடது இல்ல”
துப்பாக்கியை பார்த்தான்.
“பிளாக் ஷேடோ ஏஜென்சியோடது. நானும் தான். உன்ன மாதிரி ஆளுங்களுக்கு எங்கள மாதிரி ஆளுங்களோட வாழ்க்கை புரியாது”
“எல்லாரும் ஒரே மாதிரி இல்ல, ஒரே மாதிரி சூழ்நிலையும் இல்ல”
வானம்தான் பார்வையில் இருந்தது.
“அந்த சூழ்நிலைய உருவாகுறதே அதிகார வர்க்கம் தான். சாதாரண ஒரு ஆள், என் வீடு எப்படி இருக்கு தெரியுமா? இந்த சுவர் முழுக்க ஓவியம் இருக்கும். சூழ்நில, இனி ரத்ததுல தான் ஓவியம் வரையனும். இந்த மாதிரி. திறமையோட பிறக்குறதுலாம் சாபம் மா ஆகிட்டாங்க. இங்க மனுசங்களா இல்ல, எல்லா மிருகங்க. அதிகாரம், போட்டி, பணம் பணம் பணம்னு. இந்த மாதிரி மிருகங்கள கருவருத்து, அந்த சாபத்து விடுதல ல இருந்து அடுத்த தலைமுற பொறக்கட்டும். எங்கள மாதி இல்லாம. கலை எல்லாம் அழிஞ்சிபோச்சி, எல்லாம் கமர்ஷியல் தான். மனுசனுக்கு ஒரு மரியாதையே இல்லாத சமுகத்த உருவாக்கிட்டு. மரியாதையா! இதோ, மெஷின்ங்குற! எமோஷனல் இல்லங்கிற! அது தான் சேர்ந்தே, பிளாக் ஷேடோ, எனக்கு இது தான் நியாயமான வேலையா தோணுது. எப்பிடி? அதிகார மிருகத்துக்கு தீனிய காட்டி பசிய தீக்குறது, என்ன மாதிரி சிந்திக்கிற மனுஷனோட கடம தானே! அது பாவமா இருந்தா! இந்த கையோடு போகட்டும். உழைப்புக்கு மிஞ்சிய ஊதியம்!, இப்ப வரும்! மதிப்பு மரியாத, பணம் எல்லாம் எல்லாம், பணம் தான் எல்லாம்.”
“புரட்சியாளனா நீ!, ஒன்ன மாதிரி… இல்ல நீ என்ன சொன்னாலும் பாவம் செய்றது ஞாயமா மாறிடாது”
“பாவம்னா அது என்ன பண்ணிரும். எங்க இருக்கு அந்த பாவம், பாக்க முடியலயே. நீங்க செய்ற பாவம்தா நானா!… இப்படிதா இருக்கும் போல!”
“உன்ன மாதிரி ஆளுங்க எதாவது ஒரு காரணம் வச்சிகிட்டு படிப்படியா மேல வந்திருபிங்க, திருந்துறது முடியாத காரியம் தான்.”
“நா மாருனா எனக்கு யாரு காசு தருவா, பாவம் செய்யாத வேலைக்கு யாரு மதிப்பு தருவா? என் பாவம் என்னுடைய போயிரும்.”
அவன் வார்த்தைகள் அடங்கும் போது, புதைத்து வைத்துள்ள வலிகளின் கண்ணீர்த்துளிகளை துடைத்துக்கொண்டான். அவன் நிலை அவரின் பார்வையை குழப்பத்திற்கு மாற்றியது.
“உன்ன சுத்தி நெருப்பதான் பத்த வச்சிருக்க, எண்ணைகும் அணையாத…”
இருள்களை துடைத்து விட்டிருந்தது வெண்மை மேகங்கள். பி.எஸ் குழுமங்கள் நேரத்தின் கைதிகளாக, நிலவரங்கள் மட்டும் பகிரப்பட்டு கொண்டிருந்தது. இருவரும் மூலையில் அமைதியோடு கலந்து இருந்தார்கள்.
பின்…
“விதிய அவுனுகளே எழுதுன மாதிரி அப்படி இருப்ப்பான்னுங்க எல்லாரும். எல்லா டைகரும். ஆனா சாவுனா பயப்படாத ஆலயே இப்பதான் பாக்குறேன். இந்த டூர் லாக் டைம் அ குறைக்க வழி இல்லையா?”
அவர் கண்கள் புரியாமல் விழித்தன. துப்பாக்கி கையில் சுழற்றிக்கொண்டு, கால்கள் மேஜை மேல் இருந்தது.
அமைதியில் இருந்து அவரின் வார்த்தைகள் உருவானது.
“உன்ன மாதிரி தான் நானும், இப்படி இல்ல அது. அதுதான் நா செஞ்ச முட்டாள்தனம். இல்ல அப்படி இல்ல. அது…, ஒரு துப்பாக்கியை எடுத்ததுதான் நா செஞ்ச முட்டாள் தனம். இரத்த கர இன்னும் படியாம இருக்கு.”
கைகள் இரண்டில் எதோ கற்பனை குருதியை குற்ற உணர்வில் துடைத்துக்கொண்டிருந்தார்.
அவரின் பார்வை சக்திகள் வாங்கிய மேகங்கள் அவரை கடந்த கால கதைக்கு கொண்டு சென்று… ஒரு கதை உருவெடுத்தது.
பன்னிரெண்டு பருவத்தில் தான் முதன் முதலாக அந்த மேஜையில் இருக்கும் கதிரையில் அமர்ந்தேன். முகத்திற்கு நேராக உணவுகள் வாசனையோடு இருந்தும். “ருத் எப்ப வருவா” என்றுதான் கேட்டேன். அவர்கள் அமைதி முகத்திற்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. உடைகள் கிழிந்து, கந்தல் என்று கூறியும் வாங்கித்தரவில்லை. அரண்மனையில் என் அறை… ஒரு மூலையில் உறங்கும் போது, ஒவ்வொரு நாளும் சூரியன் வராவிட்டால், அவன் கதிர்கள் முகத்தில் படராவிட்டால் நான் அந்நாட்களில் விடியலை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. மழைக்காலங்களில் என்னை நீர்த்துளிகள் அனைத்துக்கொள்ளும், இயற்கையில் தான் உணர்வு உள்ளதா என்று வியந்தேன். அவனுக்காகத்தான் பாடசாலை செல்வேன். வயதுகள் ஏறியது, அதன் பின் வீட்டிற்குள் அவர்கள் என்னை சேர்க்கவில்லை. அவர்கள் மனிதர்களா? ருத்ரனோடு விளையாடிய பியானோ அதே உடைந்த நிலையில்
இருந்தது தான் அவர்கள் மாளிகையில் கடைசியாக பார்த்தது. “ருத்”தை இழந்துவிட்டேன். ஆயிரம் புதிய முகங்கள், பிடிக்கவில்லை. எதுவும். அறையும் வாழ்கையும். மாளிகையில் வாழ்ந்த நினைவுகளை மீட்டிக்கொண்டு கடந்து வந்துவிட்டேன். வயதுகளோடு. சமூகம், பொருளாதாரம், உணவு, வாழ்க்கை எனும் தொடர்களில், உலகம் பெரிதாக மாறி நிறைய கற்றுக்கொடுத்தது.
குடும்பம் இன்றி தனித்து இயங்கும் ஏழைக்கு விதித்தது ஒரு அறை. என் சுமையாக அனுபவங்களும், அமைதியை உடைக்க வானொலியும், கடந்தகால நிழலின் வடிவமாக பியானோ இருக்கும். இப்போதெல்லாம் மீட்டுவது குறைவு. டாக்டர் சொல்லித்தான் இறைவன் அளந்த படியை, உணவில் பின்பற்றினேன். என்னை பார்த்தவுடன் நண்பர்கள் முகம் எதோ ஒரு கருணை மாற்றம். செயலும் கூட. மருந்துகள் அதிகமானது, செலவும் ஆரோக்கிய மாற்றமும். உடல்நிலையும் இதயம் துடிக்கபோகும் இறுதி சப்தமும் தான் அனைத்திற்கும் காரணம். காலம் என்னை கடந்த காலத்தை தேட சொல்லியது.
“ஒரு பக்கம் தர்மம் இருந்தது, இன்னொரு பக்கம் அதர்மம். இடையில் வந்தோம் நாங்க. எங்க பரம்பரை, எல்லாத்தையும் முடிச்சி வச்சாங்க.”
“மாஃபியா ஃபேமிலி!”
“இல்ல அப்படி இல்ல, இந்த நகரத்தில செல்வாக்கு உள்ள குடும்பம்ன்னு சொல்லலாம், இது நூறு வருஷ வரலாறு, காலம் எப்படி அழிசிருச்சினு பாரு, துரோகம். அந்த துரோகத்துல இருந்து நா மட்டும் தான் மிச்சம்”
ஒரு பரம்பரை வீட்டை தானம் செய்தது இல்லாமல் உழைக்கும் பணத்திலிருந்து என்மேல் துரோகத் தீ படராமல் காத்த ராமர் குடும்பத்திற்கு பொருளாதாரம், பெயர் தெரியாமல் எழுதப்பட்டிருக்கும். வள்ளுவம் டிரஸ்ட் ஷெல்டர், அடிமட்ட ஏழைகள் என பொருளாதார உதவிக்காகவே என் விதியை நானே எழுதிக்கொண்டேன். எனக்காக எதுவும் யோசித்தது இல்லை, ஆசைகள் அழிந்துவிட்டது. விதி விளையாடுவதற்காக உயிரை தாங்கிகொண்டிருந்தேன். தங்கம் மட்டும் வந்தது அவனுக்காக. காலம் கீறிய கிருக்கள்களால், அவன் மீது வதந்திகள் கூடி என் பார்வை வக்ரமானது. சூழ்நிலையும் கூட. டாக்டர் மனோ இப்போதெல்லாம் பார்க்கும் பார்வை கடைசி அத்தியாயம் என்ன? என்று இருக்கும், பதில் அவன் தோன்றியது தான், ருத்ரன். நீதி மன்ற வழக்கு தொடரு என்று யார் கூறியும், எதையும் வேண்டாம் என்றேன். கிடைத்த நண்பர்களுடன் பரதேசிகளாக அலைந்து
தேடிய, கைவிடப்பட்ட பரம்பரை சொத்தை கூட விற்று, ஒரு கோபத்திற்காக உருவானது, தங்கம் என் கையில். விதி என் ஆதங்கத்தை ஒரு அரக்கனாக மாற்றி விளையாட ஆரம்பித்தது.
“அந்த காலம் நா இங்கேதான் வேலை பார்த்தேன், பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி! இந்த இதே எடத்துல. அப்ப இது ஆபீஸ். மேனேஜ் போஸ்ட் வரைக்கும். அவன் இந்த கம்பனி சி. இ. ஓ. அதுக்கு முன்னாடி வேற யாரோ, நீ என்ன எப்படி பாத்தயோ, அதே மாதிரிதான் நா அவன பார்த்தேன். அதே கோவம். இருபத்தி ஒன்று வருசத்துக்கு அப்ரம், சும்மா வீரன் மாதிர… என்னால பக்கத்துல நெருங்க முடியல”
கண்ணீர் சிந்த தொடங்கிய வார்த்தையோடு எழுந்தார். அவனும் எழுந்தான்.
“மருந்து எடுக்கணும்”
தலை குனிந்து மெதுவாக சென்றது, பரிதாப பார்வை உருவானது அவனுக்கு. வசதி அறைக்குள் சென்று மறைந்தார். சில நொடிகள் கடந்து தோன்றினார்.
“ஒரு தாழ்வு மனப்பான்மை தோன்றியது, நா பேசிருக்கணும். எல்லாருமே என்ன சேர்த்து எமாத்திடாங்க, அவனுக்கு இழக்குறதுக்கு எதும் இல்ல, கடைசியாக அவனோட நா பேச கூட இல்ல, வதந்திகளும், மனித நேயத்தை அளிக்கிற ஆயுதம் தான் வெல்சன் ஓட சாபம்.”
என்ன பார்க்கும் போது அவன் பார்வையும், நிலையும் அனைத்தையும் சொல்லிவிட்டது. வார்த்தைகள் இல்லை, பேச்சுக்கள் இல்லை, அவன் நிலமையை உணர்கிறேன். இன்று வரையும், குடும்பத்தையும் இழந்தான். தன் மனைவி குழந்தைகளையும் விபத்தில் இழந்து சில வருடங்கள் கடந்த வீரன், எனக்காக உயிரை விட்டுவிடுவார் போல் நிற்கிறான். அவனிடம் இருந்து வந்த செய்திகள் அவனை நேரில் பார்த்தபோது தான் ஓங்கி அறைந்தது. அன்று என்னுள் உருவான நெருப்பு என்னை சுற்றி எரிந்துகொண்டது, இதெல்லாம் பார்க்க முடியாமல்.
அவரிடம் தோன்றிய கதை மாலை மங்கிய நேரத்தில் மேகங்களோடு மறைந்தது.
அவன் கதவை பார்த்து, “நேரம் சரியாடிச்சி”
“நா கடைசியாக பேசினேன்”
கண்ணீரோடும் அழுகையோடும் வார்த்தைகள் பொங்கியது.
“ரொம்ப மோசமா, கேவலமா, உன்னோட மொத்த கோபம் எப்படி இருக்கும் அந்த மாதிரி. அவன் ரொம்ப சோகமா இருந்து… ரொம்ப, மதிக்கவே இல்ல. கடைசியா குரல் கூட கேக்கல நா, என் கையெல்லாம் ரத்தம்! கடைசியா, ஈகோ நெருப்பு எரிஞ்சிகிட்டு இருந்துச்சு, இத்தன வருடமும் என்ன நரகத்துல அடைச்சு வச்சிருக்கான். என்ன பண்ணாலும் போக மாட்டிங்குது”
அந்த அறையை விட்டு விடைப்பெற்றுக்கூட அவரின் இறுதி வார்த்தைகள், எதோ இனம் புரியாத, தன் வாழ்நாளில் உணராத புதிரில் சிக்கிவிட்டது.
மேடை, ஒரு சிலை, அது அவர் நண்பர் ருத்ரன்! அருகே அந்த பெண்! அரங்கம் எதிரொலிக்க மேடையில் பேசிக்கொண்டிருந்தாள். ஒலிபெருக்கி வார்த்தைகள் காதில் நுழைய விரும்பவில்லை. அவள் பெயர் ஞாபகம் வந்தது. மாயா ராமச்சந்திரன்! மேடைக்கு செல்லும் அருகே, குருவின் “நிழல்களின் ஒளி” கடந்த 10 வருட நிகழ்ச்சி ஞாபகங்களின் புகைப்படங்கள் பார்வையில் சிக்கியது. இளம் வயது ருத்ரன், அலங்கார கோப்புக்குள் “ஃபர்ஸ்ட் லெப்டினன்ட். பிறப்பு, இறப்பு” மற்றும் சில வார்த்தைகளோடு என மரியாதைகளை தாங்கிகொண்டிருந்தார். முதல் வருட விழா, அது விழா அல்ல, ஒரு கூட்டம், பத்து ஆண்டுகளுக்கு பத்து புகைப்பட கோப்புகளோடு நினைவுகளை சொல்லிக்கொண்டிருந்தது. முதல் வருட நினைவில் மண்டியிட்டு ஏன் அழுகிறார்!சற்று முன் அழுதாரே.
“அழுதாரா”
மழலை குரல். திரும்பி பார்க்க, மகள், “தமிழ்.” மழலை முகம் கண்களில் ஏக்கத்தோடு இருந்தது.
சிரிப்பை உதறிவிட்டு மண்டியிட்டு அவள் உயரத்திற்கு உருவானான்.
“அது… அதுனால…, இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்.”
“உங்க கைல…”
அவன் இரண்டு கைகளும் குருதியால் சொட்ட நனைந்து சிவப்பு கைகளாக இருந்தது. அதை பற்றி தன் கன்னங்களில் வைத்துக்கொண்டாள். குழந்தை கண்கள் பொங்கியது.
“அந்த நெருப்ப எப்பிடி பத்த வச்சிங்க”
“அவரிடம் கேட்டேன், ஒரு சந்தேகதுல, உங்க உண்மையான பேர் என்னனு”
“குருக்கு இருக்குற கண்டிஷன்க்கு அவர் இறந்து பத்து வருஷம் ஆகிருக்கணும், யாரோட கதையாக சொல்றிங்க நீங்க?”
“ஆமா நா இறந்து பத்து வருஷம் ஆயிருச்சு”
அவர் இறுதி வார்த்தைப்பின். துப்பாக்கி குண்டு அவர் இதயத்தை துளைத்தது.
தரையில் தடுமாறி விழுந்து துடித்துக்கொண்டிருந்த அவரைப்பிடித்து இருக்கையில் அமர வைத்தான். உயிர் பிரிந்தது. ஒரு கனம் கூட திரும்ப மனம் இல்லாமல் கதவை திறந்து, வெளியேறினான்.
“என் பெயரும் ருத்ரன்னு சொல்லியிருக்கலாம், கடைசியா…”
“தமிழ்” மாயை நிரைவான போது கண்களின் கண்ணீரோடு, அவனது ஆத்மா வெளியேறியது போல் முகம் சவமானது. “வள்ளுவம் டிரஸ்ட்” சமூகம், குழந்தைகளோடு உலாவுவது தூர பார்வையில் உணர்ந்துக்கொண்டான். மேடை திரையின் பிரகாசம் தெளியவைத்தது – மரணமும் அவருடையது அல்ல, உயிரும் அவருடையது அல்ல, துளைப்பட்ட இதயமும் அவருடையது அல்ல என்று.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: November 2, 2025
பார்வையிட்டோர்: 183