கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2026
பார்வையிட்டோர்: 1,676 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராகவனுக்கு மிக அவசரமாக 180 ரூபாய் பணம் தேவையாக இருந்தது. மிக மிக அவசரம்! இதோ நாளைக்கே ஊரிலிருந்து தம்பியிடமிருந்து மணி ஆர்டர் வந்துவிடும். இன்று சாயங்காலம் எடுத்து நாளைக் காலை திருப்பி விடலாம். இதில் என்ன, முன்னே போட்டு பின்னே புரட்டுகிற சமாசாரம்.

இந்த நம்பிக்கையில் ஆபிஸ் பணம் ருபாய் நற்றெண்பதை எடுத்து அந்த நில நிறப் புடவையை வாங்கிவிட்டான்.பளபளக்கும் அதன் அழகில் மயங்கி அவன் மனைவி மோகனமாய்ச் சிரித்தபோது நுற்றெண்பது என்ன ஆரத்து எண்ணுறு ருபாய் கூடக் கையாடலாமே என்று தோன்றியது.

மாலை இருவரும் சினிமாவுக்குப் போனபோது எதிரே வந்த ஸர்தார்ஜியைப் பார்த்ததும் சுரீர் என்றது ராகவனுக்கு. ஸர்தார்ஜி..குருநானக்.. குருநானக்கின் பிறந்த தினம்.. நாளைக்குத் தபால் ஆபிஸ் விடுமுறை.

நாளைக்கு மணி ஆர்டர் வராது. ஆபிசில் கையாடிய பணத்தைத் திருப்பி வைக்க முடியாது. ஐயையோ!

சினிமாவில் மனம் எப்படிச் செல்லும் ராகவனுக்கு? எதிரே விசாலமான திரையில் அவனை வேலையை விட்டு நிக்கிவிட்டதையும் சிறையிலே அடைப்பதையும் படமாகக் காட்டுவது போலிருந்தது! நகத்தைக் கடித்துக்கொண்டான்.

மனைவி “ஏன் ஒரு மாதிரியாக இருக்ககிறீர்கள்” என்றாள், ராகவன் பதில் பேசவில்லை. இடைவேளயின் போது குளிர்பானம் குடித்ததும் சற்று அமைதி ஏற்பட்டது. சாதாரணமாக ஆபிசில் இருபதாம் தேதிக்குப் பிறகு திடீர்ச் செலவுகள் வருவது கிடையாது. மானேஜர் பணம் எதும் கேட்கமாட்டார். இன்றைக்குத் தேதி இருபத்திரண்டு. முதல் தேதி வரை எப்படியும் சமாளித்து விடலாம். ராகவனுக்கு கொஞ்சம் தைரியம் ஏற்பட்டது.

முதல் தேதியன்றுதான் சம்பளம் கொடுக்குமுன் மேனேஜர் போனமாதக் கண்ககைச் சரி பார்ப்பார் ஆனால் அதற்குள் மணி ஆர்டர் வந்துவிடும் இதோ நாளை மறுநாள் வந்துவிடும்! பயப்படாதே நிச்சயமாக பயப்படாதே என்று சொல்லிக் கொண்டான். ரகவனின் துரதிரஷ்டம் மறுதினமோ அதற்கு மறுதினமோ மணிஆர்டர் வரவில்லை. மூன்றாவது தினம் கடிதம்தான் வந்தது. “அண்ணா இந்தத் தடவை நீ என்னை மன்னித்துத்தான் ஆகவேண்டும் உனக்காக அனுப்பப் பணம் வைத்திருந்தது உண்மை. ஆனால் அதற்குள் அம்மாவுக்கு கடும் ஜூரம் வந்து அந்த மைஸின் இந்த மைஸின் என்று மருந்துக்கும் டாக்டருக்கும் செலவாகிவிட்டது, அம்மா பிழைத்தது உன் பணத்தால் தான். மன்னித்துக் கொள், மனனித்துக்கொள்”

ராகவன் பதறினான்.

மன்னிப்பு யாருக்கடா வேண்டும்? பாவி, பணம் வேண்டும் பணம். இல்லாவிட்டால் வேலை போய்விடும். சிறை வாசம் கூட நேருமே. இப்போது என்ன செய்வேன் முதல் தேதி மேனேஜர் கணக்குப் பார்க்கும் போது உதைக்குமே இருப்பது ஆறு நாள் வேண்டியது நுற்றெண்பது ரூபாய். டென்ஸிங் எவரெஸ்ட்சிகரத்தை எட்டிப் பிடிக்கக் கிளம்பியதுபோல் ராகவன் ரூபாய் புரட்டக் கிளம்பினான். நான்கு முக்கியமான நபர்களைக் கடன் கேட்க எண்ணினான். அதில் இரண்டுபேர் இவன் போன சமயம் வீட்டில் இல்லை.மூன்றாமவன் ரூபாய் என்றதும் பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டதுபோல் இடி இடி யென்று சிரித்து விட்டு இல்லை என்பதற்கு அத்தாட்சியாகத் தான் குடிக்கும் சிகரெட் ‘ப்ராண்டை’க்காட்டினான் (அந்த வகை சிகரெட், மட்டத்திலும் மட்டமாம்!). நான்காவது நண்பன் இவன் கேட்க வாயெடுப்பதற்குள் தானே கேட்டுவிட்டான் ராகவனை. அலுததுப்போய் வீட்டுக்கு வந்ததில் அந்த எண்ணம் உதயமாயிற்று. மனைவியின் சங்கிலியைக் கேட்டோ அல்லது திருடியோ எடுத்துச் சென்று விற்றால்? சே! புடவையை வாங்கிக் கொடுத்து விட்டு சங்கிலியைப் பறிப்பதாவது! முட்டாள்தனம். வேறு என்ன செய்வது?

தன் அறையில் வந்து உட்கார்ந்து செய்தித்தாளைப் புரட்டினான், உடனே துள்ளினான்.

அந்த இடத்தில்,

அந்த வினாடியில்,

அவனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

செய்தித் தாளின் நடுப்பக்ததில் அவன் பார்த்த செய்தி!

ஆசிரியருக்கு கடிதங்களில் இரண்டாவது கடிதம் தான் அவனைத் துள்ளவைத்தது. அந்தக் கடிதத்தில் –

“ஐயா

நமது நாட்டின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான ஜஸ்வந்த் கடந்த மாதம் 13ம் தேதி தன் 53 வது வயதில் மாரடைப்பால் காலமானது யாவரும் அறிந்ததே ஜஸ்வந்த் ஒரு முதல் தர சித்திரக்காரர். அவர் சித்திரங்களில் உஎள்ள உண்மைத் தன்மை எவரையும் கவரும் ஜஸ்வந்த் தன் இளமைப் பருவத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்தினார் . அப்போது அவர் தமது ஓவியங்கள் பலவற்றை மிகவும் குறைந்த விலைக்கு விற்றிருக்கிறார். அப்படி அவர் விற்றவை இதற்போது யார் யாரிடம் இருக்கிறது என்று கண்டு பிடிக்க முயன்றோம் தோல்வி அடைந்தோம் அவற்றை எல்லாம் சேகரித்து ஒரு ‘ஜஸ்வந்த் நினைவு மலர்’ வெளியிட வேண்டும் என்பதே எங்கள் ஆசை. உங்கள் வாசகர்கள் யாரேனும ஜஸ்வந்தின் ஓவியங்கள் வைத்திருந்து அதை அவர்கள் விற்கத் தயாராக இருந்தால் நாங்கள் மிக மகிழ்சசியுடன் ஏற்றுக் கொள்வோம். நன்கொடையாக வழங்கினாலும் சரி அல்லது விலை கேட்டாலும் வாங்கிக் கொள்கிறோம்.

பி.ஜானகிராம்”.

கடிதத்தைப் படித்ததும் ராகவன் கூடத்துக்கு ஓடினான். ஆம் அவன் எப்பொழுதோ பத்து ரூபாய்க்கு வாங்கின ஜஸவந்தின் படம் ஒன்று அங்கே மாட்டப் பட்டிருந்நதது. அதைக் கழற்றி ஒரு செய்திததாளால் மூடிச் சுற்றிக்கொண்டான். மாடி வீட்டிற்கு ஓடினான். அங்கே டெலிபோன் டைரக்டரி இருந்தது. அதிலிருந்து ஜஸவந்த் கழகத்தின் விலாசத்தை தெரிந்துகொண்டு உடனே புறப்பட்டான்.

நூங்கம் பாக்கத்தில் அந்த வீட்டின் கதவைத்தட்டும் போது ராகவனுக்கு கை நடுங்கியது பதற்றத்தால். திறந்தவர் ஒரு கண்ணாடி போட்ட வயதானர். பிரித்துக் காட்டிய சித்திரத்தில் அந்த மனிதர் ஆழ்ந்துவிட்டார். அவர் கண்களில்நீர் தளும்பியது. செக் புஸ்தகத்தை எடுத்து “எவ்வளவு வேண்டும்” என்று கேட்டார்.

“இருநுறு ரூபாய்” என்றான் ராகவன்.

செக் எழுதிக கொடுத்து விட்டு “மிக்க நன்றி இந்த சித்திரத்தை நான் மாதக்கணக்காகத் தேடிக்கொண்டிருகிறேன்” எனறார் ஜானகிராம். செக்கை பையில் போட்டுக் கொண்டு தப்பினேன் என்று சுதந்தரமாக மூச்சுவிட்டான் ராகவன். பாங்கில் மாற்றிப் பணத்தை எடுத்த இடத்தில் திருப்பினான்.

இனி இந்த மாதிரி வேலையில் இறங்குவதில்லை என்று பளார்பளார் என்று கன்னத்தில் போட்டுக் கொண்டான். சில மாதங்களுக்குப்பிறகு ஜஸ்வந்த் ஞாபகார்த்த மலரின் ஒரு பிரதி ராகவனுக்கு வந்தது. அதில் அவன் விற்ற சித்திரம் அழகாக அச்சடிக்கப் பட்டிருந்தது.

அந்த சித்திரத்தில் –

அறையில் மங்கலான வெளிச்சம். அதன் நடுவில் ஒரு கட்டில் அந்தக் கட்டிலில் அவள் படுத்திருக்கிறாள். படுத்திருக்கிறாள் என்று சொல்வது தப்பு. மார்பில் கத்தியால் குத்தப் பட்டுத் துவண்டு கிடக்கிறாள். அவள் அணிந்திருக்கும் நீல நிறப் புடவை கலைந்திருக்கிகறது அருகில் அவள் கணவன் குனிந்த தலையுடன் வாயைக் கைக்குட்டையால் மூடிக்கொண்டு சோக உருவமாக நிற்கிறான். போலிஸ் இன்ஸபெக்டர் கையிலுள்ள நோட்டுப் புத்தகத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார். போலிஸ் புகைப்படக் காரர் தன் உதவியாளருடன் எதிர்ச்சுவரில் பதிந்திருக்கும் விரல் அடையாளங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். இடது ஓரத்தில் சாய்வாக ஜஸ்வந்த் என்று கையெழுத்து காணப்படுகிறது.

ஆசிரியர் குறிப்பு:

நான் இதுவரை 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளேன். பல வாசகர்கள் என்னிடம் எனது முதல் வெளியிடப்பட்ட கதை எது என்று கேட்கிறார்கள். அது ‘சிவாஜி’ என்ற பத்திரிகையில் வந்தது, அந்த வருடம் 1953, அப்போது எனக்கு 18 வயது. என்னிடம் ஒரு பிரதி இல்லை, அதன் உள்ளடக்கமும் எனக்கு நினைவில் இல்லை. பின்னர் ஒரு நீண்ட இடைவெளி இருந்தது, நான் பட்டம் பெற்றேன், வேலை கிடைத்தது, டெல்லிக்கு அனுப்பப்பட்டேன், அந்த உலகியல் தேடல்களின் போது, ​​நான் எழுதவே இல்லை. டெல்லியில் ஒரு நாள் ஒரு நண்பர் அவர் எழுதிய ஒரு சிறுகதையை எனக்குக் காட்டினார். அது மோசமாக இருந்தது. நான் அதை அவருக்காக மீண்டும் எழுதினேன். அவர் அதை அவரது பெயரில் அனுப்பினார், அது ‘குமுதம்’ இல் வெளியிடப்பட்டது, எனக்கு முதல் முறையாக சில திறமைகள் இருப்பதை உணர்ந்தேன். நான் என்னுடைய சிலவற்றை எழுதி ‘குமுதம்’க்கு அனுப்பினேன். சில நிராகரிக்கப்பட்டன, கடைசியில் முதல் கதை வெளியிடப்பட்டது. அது ஆகஸ்ட் 23, 1962 ‘குமுதம்’ இதழ். பூமியை அதிர வைக்கும் எதுவும் நடக்கவில்லை. இது ஒரு சாதாரண கதை, நல்ல எழுத்தாளர்கள் எப்போதும் அருந்ததி ராயைப் போல ஆரவாரத்துடன் வர வேண்டியதில்லை என்பதைக் காட்ட இங்கே கொடுக்கப்பட்டுள்ளது! ஒருவேளை இந்தக் கதையை அதன் ஆரம்பகால குறிகாட்டிகளான சிறு வாக்கியங்கள் போன்றவற்றிற்காக பகுப்பாய்வு செய்யலாம். புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் வழக்கமான வழக்கத்திலிருந்து சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை. அதிகாரப்பூர்வமாக இது எனது முதல் வெளியிடப்பட்ட கதை.

– ஆகஸ்ட் 23, 1962 ‘குமுதம்’ இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *