கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 5,839 
 
 

அந்தப் பிரபல ஜவுளிக் கடை முன் கூட்டத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் செக்யூரிட்டி தடுமாறிக் கொண்டிருந்தான்.

“ இன்னும் கொஞ்ச நேரம் கழித்து உள்ளே போங்க சார்!….” என்று ஜவுளி எடுக்க குடும்பத்தோடு வந்தவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தினான் செக்யூரிட்டி.

காரணம் உள்ளே கவர்ச்சி நடிகை எமி வில்சன், தன் தாயருடன் ஜவுளி எடுத்துக் கொண்டிருந்தார். அங்கு கைக்குட்டை இருந்த தளம் ரணகளமாகிக் கொண்டிருந்தது!

அந்த பிரமாண்டமான ஜவுளிக் கடையில் இருந்த அனைத்துக் கைக் குட்டைகளையும் எடுத்துப் பரப்பிக் கொண்டிருந்தார்கள் சேல்ஸ் மேன்கள்!

எமி வில்சன் கலர் கலராக வள வளப்பான பெரிய சைஸில் பல கைக் குட்டைகளை தேர்வு செய்து தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

“எமி! கைகுட்டைகள் மிக பெரிசாக இருக்கிறது…வைத்துக் கொள்ள சிரமமாக இருக்கும்!…”

“நீ கொஞ்ச நேரம் பேசாமல் இரு!..” என்று ஒரே பேச்சில் அம்மாவை அடக்கி விட்டாள் எமி.

வீட்டிற்குப் போனதும் தன் பிரத்தியேக டைலர் ராமுவை உடனே போன் போட்டு வரவழைத்தாள்.

“ராமு!….இந்த கைக் குட்டைகள் எல்லாம் வளவளப்பாக…. கலர் கலரா நல்ல வாசகங்களோடு இருக்கு!…அதில் நீ இரண்டைப் பயன் படுத்தி, உன் முழுத் திறமையும் காட்டி, எனக்குப் பொருத்தமான கவர்ச்சி டிரஸ் தைத்துக் கொண்டு வா!… முக்கியமான இடத்தை கொஞ்சம் மறைத்தால் கூட போதும்! …ஹிந்தியில் நெ.1. டைரக்டர் என் ஆல்பம் கேட்டிருக்கிறார்…அதனால் கவனமாக பார்த்துச் செய்!…”

“சரிங்க….!….மேடம்!…”

– மக்கள் குரல் பத்திரிகை 30-6-2018

துடுப்பதி ரகுநாதன் கடந்த 60 ஆண்டுகளில் கதை, கட்டுரை, நாவல்கள், தொடர்கதைகள் என 600-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கும் துடுப்பதி ரகுநாதன், 80 வயதைக் கடந்த நிலையில் இன்னும் சுறுசுறுப்பாய் எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் சாலை நேதாஜி நகரில் வசித்து வரும் துடுப்பதி ரகுநாதனை சந்தித்தோம். “பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி. பெற்றோர் செல்லப்பன்-செல்லம்மாள். ஜவுளி வியாபாரம். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, கோவையில் தங்கி கூட்டுறவில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *