ஆபத்து நேரத்தில் உதவாத நண்பர்களுடன் பழகக் கூடாது
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 100

ராஜாவும் சோமுவும் விடுமுறை நாள் ஒன்றில், பகல் வேளையில் தங்கள் ஊரின் எல்லையில் மலைப் பகுதியில், பகலிலே இருளாக இருந்த அடர்ந்த வனத்துக்குள் சென்றனர்.
‘கொடிய விலங்குகள், பாம்புகள் எது எதிரே வந்தாலும் நான் அஞ்ச மாட்டேன்’ என்று ராஜா சோமுவிடம் சொன்னான்.
அடுத்த நொடி அங்கே ஒரு பெரிய கரடி அவர்கள் எதிரே வந்து நின்றது.
ராஜா நண்பனைப் பற்றி எதுவும் நினைக்காமல் அருகில் இருந்த மரமொன்றில் சடசடவென ஏறி உச்சிக் கிளையில் அமர்ந்து கொண்டான்.
செய்வது அறியாது இருந்த சோமு கீழே படுத்துக் கொண்டான். மூச்சு விடாமல் இருந்தான். அவன் அருகில் வந்த கரடி அவனை முகர்ந்து பார்த்து விட்டு காட்டுக்குள் சென்று விட்டது.
கரடி போனதும் மரத்தில் இருந்து இறங்கி வந்த ராஜா, சோமுவிடம் கேட்டான்,
‘கரடி உன்னிடம் ஏதோ பேசியதே என்ன’
‘அதுவா? தன்னலமாக இருக்கும் நண்பர்களைத் தவிரப்பதே நல்லது என்று கூறியது’ என்று சோமு கூறினான்.
நீதி – தன்னலமான நபர்களின் நட்பைத் தவிர்ப்பதே நல்லது.
(ஈசாப் கதைகளிலிருந்து)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
