ஆகாயமும் பூமியும்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2025
பார்வையிட்டோர்: 786 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆகாயம் பூமியை எப்போதும் துச்சமாக மதிப்பது வழக்கம். அருணோதயத்தின் செம்மையைக் காண்பித்து, “இது காதலின் நிறம். உன்னிடம் இது எங்கிருந்து இருக்கப்போகிறது?” என்று அது பூமி யைக் கேட்கும். 

பலவித நிறங்கள் கலந்த சாயங்கால மேகத்தைக் காண்பித்து, “இதோ பார், என் விளையாட்டுப் பொம்மைகள். உன்னிடம் இப்படிப்பட்ட பொம்மை கள் இருக்கின்றனவா?” என்று கேட்கும். 

இரவில் பிரகாசிக்கும் நக்ஷத்திரங்களைப் பற்றியோ அதற்கு மகா கர்வம். “ உன் பூக்கள் ன்று மலர்ந்து நாளைக்கு வாடிப்போகின்றன வே! இதோ பார் என் பூக்களை! இவை யுகக்கணக்காக மலர்ந்தவாறே இருக்கின்றன” என்று அது பூமியைப் பரிகாசம் செய்யும். 

பூமி சாது. ஆகாயம் என்பது வெறும் தோற்றம் என்று அதற்குத் தெரியாது. தென்படுவதுபோலத் தான் ஆகாயம் உண்மையில் இருக்கிறது என்பது அதன் நினைப்பு. தன்னிடமிருந்து நீரைக் கொள்ளை யடித்து ஆகாயம் மேகங்களை உண்டாக்குவதையும், அவற்றைக்கொண்டு விளையாட்டுப் பொம்மைகள் ஆக்குவதையும், இந்தக் கடன் வாங்கிய நீரைத் திருப் பிக் கொடுக்கும்போது அது நன்றிகெட்டு வசை மொழிகளைக் கடகடவென்று முழக்கி, மின்னலாகிய சாட்டையை வீசுவதையும் பூமி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஆகாயம் தண்ணீர் கொடுத்துத்தன. உபகாரம் செய்ததாகவே அது நினைத்தது. 

சோம்பேறியும், சுகாநுபவியும்,நன்றி கெட்டது மான ஆகாயத்தைக் கண்டு நக்ஷத்திரங்களுக்கெல் லாம் கோபம் வந்தது. அவை கோபத்தோடு, “நிற நிறமான மேக உடைகளையும், அருணனாகிய கள்ளை யும் தவிர்த்து இந்த ஆகாயத்துக்கு வேறு ஒன்றுமே தெரிவதில்லை. அந்தப் பூமியும் இருக்கிறது, பாருங் கள்! வயிற்றில் நெருப்புப் பற்றிக்கொண்டு எரிந்தால் கூட ஆகாயத்துக்கு வேண்டிய மட்டும் தண்ணீர் கொடுக்கிறது. தன் இருதயத்தில் அடிபட்டால்கூடத் தன் முதுகிலுள்ள பிராணிகளை அன்னையைப்போல அன்போடு பராமரிக்கிறது. நீங்கள் அதனிடம் ஓர் இனிய பேச்சுப் பேசுங்கள். உடனே அது பதிலுக்கு நூறு இனிய சொற்களை உங்களிடம் பேசுகிறது. அப்படிப்பட்ட பூமியை விட்டு இந்த ஆகாயத்தில் ஒட்டிக்கொண்டு இருப்பதால் பிரயோஜனம் என்ன? வாருங்கள்,போவோம். இந்த ஆகாயத்தில் நக்ஷத்தி ரங்களாக இருப்பதைவிட, பூமியில் போய்க் கற்க ளாக இருப்பது எவ்வளவோ மேலானது” என்றன. 

ஒருநக்ஷத்திரம் அறுந்தது. ஓர் உற்கை விழுந்தது. +

மற்றொரு நக்ஷத்திரம் அறுந்தது. மற்றோர் உற்கை விழுந்தது. 

பரபரவென்று நக்ஷத்திரங்கள் கீழே விழலாயின. பொடி சூர்ணமாகும்பொழுதுகூட அவை சிரித்துக் கொண்டே இருந்தன. நக்ஷத்திரங்கள் யாவும் விழுந்துவிடவே, ஆகாயத்தின் சௌந்தரியம் அழிந் தது. அதற்குப் பைத்தியம் பிடித்தது. அந்தப் பைத்திய வேகத்தில் அதுவும் கீழே குதித்தது. 

ஆகாயம் இடிந்து விழுந்தது! 

அது இடிந்து விழுந்ததனால் யாருக்கும் ஒரு நஷ்ட மும் உண்டாகவில்லை. அதற்கு மாறாக, பூமிக்கும் ஸ்வர்க்கத்துக்கும் இடையே மறைத்துக்கொண்டு இருந்த திரை இல்லாதொழிந்தது. 

இந்தப் புரட்சியைச் செய்தது எது?

அந்த முதல் எரி நக்ஷத்திரம்! 

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *