அறிவுரை மறுத்தழிந்த மீன்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 1,253 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு பொய்கையில் இரண்டு மீன்களும் ஒரு தவளையும் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்ந்தன. ஒரு நாள் வலைஞன் ஒருவன் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த தவளை வந்து, ‘நாளை வலைஞன் வந்து மீன்களைப் பிடிப்பதாகச் சொல் கிறான். நரம் இப்பொழுதே வேறொரு பொய் கைக்குப் போய் விடுவது நல்லது’ என்று கூறியது, 

அதற்கு ஒரு மீன் ‘நான் மிக விரைவாகச் செல்லக் கூடியவன். ஆகையால் இப்பொழுதே வேறிடம் போக வேண்டியதில்லை’ என்று கூறியது. மற்றொரு மீன். ‘ஒருவன் தான் இருக்குமிடத்தை விட்டுப் போவதே தவறு’ என்று கூறியது. 

தவளையோ ‘நான் போகிறேன்’ என்று சொல்லி விட்டுப் போய்விட்டது, 

மறுநாள் வலைஞன் வந்து மீன்களை யெல்லாம் பிடித்துக் கொண்டு போனான், செத்துப் பிணமாகிப் போன அந்த இரு மீன்களையும் பார்த்து. தவளை தன் மனைவியிடம், ‘என்ன அறிவு சொல்லியும் கேட்காததால் இவற்றிற்கு வந்த முடிவைப் பார்’ என்று சொல்லி மிகவும் வருந்தியது. 

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 5 – ஆராயாத செயல் தவிர்த்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா.நாச்சியப்பன் நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *