அமெரிக்காவுக்குப் போன சீன ராஜகுமாரன்
கதையாசிரியர்: சி.சுப்பிரமணிய பாரதி
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 2,261
சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவுக்குப் போயிருந்தானாம்.

அப்போது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருக்கையிலே அவள்,
”உங்களுடைய சீன தேசத்தில் கலியாணமாகும் வரை மணப்பெண் தனது புருஷன் முகத்தைப் பார்ப்பது வழக்கமில்லையாமே! மெய்தானா?” என்று கேட்டாள்.
அதற்கு ராஜகுமாரன்: ‘உங்கள் தேசத்தில் சில பெண்கள் கலியாணமான பிறகு தனது புருஷன் முகத்தைப் பார்ப்பதில்லையென்று கேள்விப்படுகிறேன். அது மெய்தானா?” என்றான்.
– கதைக் கொத்து (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு:1967, பாரதி பிரசுராலயம், சென்னை.
நன்றி: https://www.projectmadurai.org
| பிறப்பு சுப்பையா (எ) சுப்பிரமணியன் திசம்பர் 11, 1882 எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியா இறப்பு செப்டம்பர் 11, 1921(அகவை 38) சென்னை, இந்தியா இருப்பிடம் திருவல்லிக்கேணி தேசியம் இந்தியா மற்ற பெயர்கள் பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன் பணி செய்தியாளர் அறியப்படுவது கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி குறிப்பிடத்தக்க படைப்புகள் பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு மற்றும்…மேலும் படிக்க... |