அந்தப் பிரார்த்தனை!
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 57
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பட்டத்தரசி பரிமளவல்லியின் ஆணைப்படி பூங்குழலியை அவள் கிராமத்திலிருந்து பல்லக்கில் வைத்துச் சுமந்து ஓடிக் கொண்டிருந்தனர் ஏவலாளர்கள். இன்னும் நான்கு நாழிகைப் பொழுதில் அரண்மனையை அடைந்ததும் என்ன நடக்குமோ என்ற ஏக்கத்தில் பூங்குழலியின் முழு நிலா வதனம் வாடியிருந்தது. ஆனால் அந்த… அந்த ஞாபகங்கள் எத்தனை இனியவை? வாடிய முகத்தில் கனவின் மலர்ச்சி பரவிற்று.
அந்த நீர்த்துறையில் பூங்குழலி குடத்தில் நீர் மொண்டு கொண்டு படிக்கட்டில் ஏறிவந்த பொழுது பெண்ணே! தண்ணீர் தருகிறாயா?” என்ற குரல்கேட்டு அவள் நிமிர்ந்து பார்க்க… அங்கே அழகும் ஆண்மையும் பொலியும் ஓர் ஆடவன் குதிரையோடு நிற்கும் காட்சி ;……
அவள் வைத்த கண்ணை எடுக்கமுடியாமல் இடர்ப்பட்டுத் தடுமாறித் தலைகுனிய, ‘உன் பெயர் என்ன?’ என்று ஆர்வம் பொங்க அவன் வினவ, ‘பூங்குழலி” என்று நாணத்தை வென்று அவள் கூற, அவன் மெதுவாக ”நான் வீரப்பநாய்க்கன் இந்த நாட்டின் மன்னன்! என்னுடன் வேட்டைக்கு வந்த வீரர்கள் அதோ அந்தக் காட்டில் நிற்கிறார்கள். என்ன செய்யலாம் எனக்குப் பட்டத்தரசி வேறு இருக்கிறாளே என்று பார்க்கிறேன்” என்று வேதனைப்பட, அவள் தன்னைமறந்த ஏக்கத் தோடு அவனை ஏறிட்டுப்பார்த்துத் தலைகுனிய, ” பூங்குழலி ஒன்று செய்வோம். இந்தப்பிறவியில் நாங்கள் கொடுத்து வைக்கவில்லை. அடுத்தபிறவியில் என்றாலும் நாம் இணையப் பிரார்த்திப்போமா?” என்று அவன் வேண்ட, அவள் நீரில் வீங்கிய கண்களோடு ஆமென்று தலையசைக்க இருவரும் உ ள்ளடக்க பிரிந்தனர். அந்த உடன்படிக்கைக்கு, அதன் மான பிரார்த்தனைக்குத்தான் எத்தனை சக்தி. இருவரும் படித்துறை நிகழ்ச்சியை நினைந்து நினைந்து பிரார்த்திக்கப் பிரார்த்திக்க இப்பிறவியிலேயே ஒருவரை ஒருவர் பிரிந் திருக்கமுடியாத தவிப்பு ஏற்பட்டு வளர்ந்து…… ஈற்றில் வீரப்பநாய்க் ஒருநாள் பூங்குழலி அரண்மனைக்கே சென்று வீரப்பாநாய்க்கனின் முன் கண்ணீர் சிந்தி நிற்க, அதன்பின் நள்ளிரவில் பூங்குழலியின் கிராமத்தில் வீரப்பநாய்க்கன் குதிரையின் குளம்பொலி அடிக்கடி எழுந்துமறைய இதை மந்திரியர் மூலம் பட்டத்தரசி அறிந்து கொள்ள அதன் விளைவாகப் பூங்குழலி பல்லக்கில் அரண்மனையை நெருங்கிக் கொண்டிருந்தாள். தன்முன் நடுநடுங்கி நின்ற பூங்குழலியின் அழகில், தானே சொக்கிவிட்ட பொறாமையோடு பட்டத்தரசி பரிமளவல்லி பேசினாள். “அதோ இருக்கிறது நான் உனக்கு ஏற்பாடுசெய்த மாளிகை! உன்னைப் புறக்கணிக்கப்போய் எனக்குக் கணவனையும் நாட்டிற்கு மன்னனையும் இல்லாம லாக்க நான் விரும்பவில்லை”.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
இரண்டு கடவுள் வாழும் வீடு
செ.தமிழ்ராஜ்
October 12, 2026
மதுரை விடியல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 12, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 12, 2026