அடக்கம்




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒருவன் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டாலும், மிகவாகப் பேசிக்கொண்டாலும், தன்னைப் பற்றியவரை யில் தானே உயர்ந்தவன் எனறு பிறரிடம் காட்டிக்கொண் டாலும், அது பிறபால் ஏளனஞ் செய்யப்படுவதற்கு இடங்கொடுக்கும் என்பது ஒருதலை.

நமக்குள்ளே நாம் பணிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்; அவ்வாறே பிறராற் காணப்படவும் வேண்டும். பிறர் நம்மைப் பற்றிப் புகழ்ந்து பேசும்போது நாம் அவர் தம் உடன்பாட்டைத் தாழ்மையோடு பெற்றுக் கொள்ள வேண்டும். அடக்கத்தினாலேயே ஒருவனுக் கிருக்கும் நற்குணங்கள் உயர்ந்து அழகு காட்டுகின்றன.
ஆனாலோ மிகச் சிறந்த குணங்களும் தற்பெருமை யினால் இழிவுபடுவதற்கே உரியசாகும். அறிவும், தகுதி யும், உயர் நிலையும் உடையனா பிராத ஒருவன் அவை தனக் கிருப்பனபோல நடிததுக் காட்டுவானாபின், அவன் இன் னும் இழிவுபடுவானென்பது சொல்லாமலே அமையும். இத்தகைய நடிப்புக்கள் யாவராலும் எளிதில் அறியப்படு கின்றன.
அறிவு முதலிய நற்குணங்கள் ஒருவனுக்கு இல்லாதிருத்தல் அவ்வளவு இழிவுக்கு இடந்தராது; ஆனால் அவை இன்மையை உண்மைபோல ஆரவாரிப்பதே அவ னுக்குப் பேரிழிவு தரும்.
ஒருவன் தனது கொள்கையே சிறந்தது, பிறருடை வது தாழ்வானது என்றெண்ணுந் தன்மையை அடக்க வேண்டும். பிறர்தம் சரியான கொள்கைகள் நமக்கு நெறிமுரணாகக் கணப்படலாம்; அதுபோலவே நம்கொள்கைகள் பிறர்க்கு அவ்வாறாகவே காணப்படலாம். பல்லாயிரங் கோடி மக்களுள் ஒவ்வொருவனும் தனிப் பட்டவனே. அதனால் ஒவ்வொருவனும் தன்தன் கொள் கையே சிறந்ததென்று மதிக்கின்றான். ஆனால் எவனும் அறிந்திருக்க வேண்டிய தொன்றுண்டு: அஃதாவது, நாம் தவறு செய்யக்கூடும் என்பதை அறிதலும் அதன்படி நடப்பதுமே.
1. மயிலென நடித்த அண்டங்காக்கை
‘எனக்கு மயிலிறகுப் போர்வை யிருந்தாற் போதுமே, நான் மயில்போலவே ஓர் அழகான பறவை யாய்விடுவேனே’ என்று எண்ணியெண்ணி மனப்பால் குடித்துக்கொண்டு மகிழ்ந்திருந்தது ஓர் அண்டங்காக்கை. இம்மகிழ்ச்சியாற் செருக்கடைந்து பூரித்துப் போய் அது சில நாட்களிலேயே அழகிய மயிற்றோகை இறகுகளை வேண்டிய மட்டும் சேர்த்து அவைகளினால் ஒரு போர்வை செய்து கொண்டது. பிறகு அது தன்னினமாகிய காக்கைகளை வெறுத்து அவைகளுடன் கலக்காமலே அப்போர்வையோடு தனித்து நடித்துக் காட்டித் திரிந்துகொண்டிருந்தது அதன் பிறகு அது மயில்களுடன் சேர்ந்து வாழ முயன்றது. மயில்கள் அதனுடைய பகட்டுப் பிலுக்கு நடை யைப் பார்த்தவுடனே அஃதொரு போலி மயிலெனக் கண்டு கொண்டன. கண்டவுடனே மயில்கள் அதன் மேற் சினங்கொண்டு வெறுத்து அதன் போர்வையைப் பிடுங்கிப் போட்டுவிட்டு அதனைத் தம்மிடத்தினின்றும் துரத்திவிட்டன. அதன் இனமாகிய காக்கைகளும் முன்னடந்ததை நினைந்து’ துரத்தப்பட்டு வந்த அந்த அண்டங்காக்கையைத் தங்களிடமும் அண்டவிடவில்லை.
2. கலைஞன் நியூட்டன்
உலகம் புகழும் கல்விப் புலமை வல்லமைப்பேறு பெற்ற பெருமக்களெல்லோரும் ஏனையோரைவிட அடக்க முடையவர்க ளாகவே இருந்திருக்கின்றார்கள். அத்தகையோருள் நம் நியூட்ட னும் ஒருவரே. அவர் இவ் அடக்கம் என்னும் உயர் குணத்திற் சிறந்தவராகவே வாழ்ந்து வந்தார்.
நியூட்டன் பள்ளிச் சிறுவனாயிருந்த போதே தன் கையினா லேயே புதுமையான சிறுசிறு பொருள்கள் செய்து யாவரையும் திகைக்கச் செய்வார். அவர்தம் வீட்டுக் கருகில் காற்றாடிப் பொறி யொன்று வைக்கப்பட்டு இயங்கிக்கொண்டிருந்தது. அவர் அங்கே. அடிக்கடி போய் அப்பொறியின் ஒவ்வொரு பகுதியையும் நுணுகி ஆராய்ந்து பார்ப்பார். இவ்வாறாக அவர் அப்பொறி எவ்வாறு சுழலுகின்றது என்பதை விரைவில் நன்கறிந்துகொண்டார். உடனே அவர் தம் கருவிகளைக் கொண்டு அப்பெரிய பொறியைப் போலவே ஒரு சிறு காற்றாடிப் பொறியைத் தாமே செய்து விட்டார். அஃது ஒரு வியப்புத்தரும் வேலைப்பாடமைந்ததாகவுங் காணப்பட்டது. அதனை அவர் வீட்டுக் கூரைமுகட்டின்மேல் வைத்து அது காற்றோட்டத்தினால் இயக்கப்படுகின்றதா வென்றும் பார்ப்பார்.
நியூட்டன் அப்பொறியை ஓர் எலியினால் இயக்கச் சூழ்ச்சி செய்தார்; அது வியப்பினும் வியப்பே! அஃது எவ்வொறெனின்: அப்பொறியின் உட்குழல் உருளை ஒன்றிற்குள் அவர் ஒர் எலியை விட, அது முன்னு+கு ஏறிவர முயல, அதனால் அவ்வுருளை சுழல அப்பொறியும் இயங்கினது.
அறியாப் பிள்ளையா யிருந்து அருஞ்செயல்களை யாற்றி வந்த நியூட்டன் பள்ளிச்சிறுவனாகிக் கலாசாலையில் நுழைந்து கல்வி பயிலலாயினார். அப்போது அவர் ஐம்முதற் பொருள் (ஐம்பூதம்) களைப் பற்றியும், அண்டகோளங்களைப்பற்றியும் அறிய அவாக்கொண்டிருந்தார். கலாசாலை விடுமுறை நேரங்களில் பூமியின் மேலுள்ள இயர்கை நிகழ்ச்சிகளைப் பற்றியும், வானின் கண்ணுள்ள கோளங்களைப் பற்றியும், அவற்றின் இயக்கங்களைப் பற்றியும் அவர் எண்ணியெண்ணிப் பார்த்துக்கொண்டே யிருப்பார்.
ஒருநாள் நியூட்டன் வீட்டுத் தோட்டத்தில் உட்கார்ந்து சுற்று முற்றும் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது மரத்திலிருந்து ஓர் இலந்தைப்பழம் கீழே விழுந்ததைக் கண்டார். கண்டதும் அதைக் குறித்து எண்ணலானார். இப்பழம் ஏன் கீழே விழ வேண்டும்; இது பழத்தின் ஆற்றலினாலேயா? அல்லது பூமி யின் வல்லமையினாலேயா? என்பதைப்பற்றி நீள நினைத்துப்பார்த்துக் கடைசியாக, பூமிக்கே தன்னிடம் இழுத்துக்கொள்ளும் இவ் வாற்றல் உண்டு; இஃது இயற்கை நெறிமுறைகளில் ஒன்று எ கண்டறிந்து முடிவுகட்டினார். அதனாலேயே அதனமேலுள்ள கட்டுப்படாத எப்பொருளும் அதனிடத்திலேயே தங்கியிருந்து விடுகின்றது; இக்காரணத்தால் பொருள்களுக்கு ‘எடை’ என்ப தொன்று ஏற்பட்டிருக்கிறது என்றும் கண்டுகொண்டார்.
மேலும், இன்னொரு மூல காரணத்தையும் அவர் கண்டறிந் தார். அஃதாவது, உலகத்திலுள்ள எப்பொருளாயினும் தன் பருமன், தொலைவு இவற்றின் விகிதப்படி மற்றெப்பொருளையும் தன்னிடமாக இழுத்துக்கொள்ள முயல்கின்றது இவ்விதிப் படியே சந்திரன் பூமியினாலும், எனைக் கோள்கள் சூரியனாலும் இழுக்கப்படுகின்றன இவ் இழுப்பாற்றலினாலேயே கோள்க ளெல்லாம் முறை மாறாமல் தங்கியிருக்கின்றன என்பதாம்.
நியூட்டனால் புலப்படுத்தப்பட்ட இவ்விதிகள் உலகங் கண்ட றிந்த முதன்மைப் பொருள்களுடன் சேர்த்தெண்ணப்படுவனவாகும். ஆராய்ச்சி யறிவுடைய பெருமக்களெல்லோரும் நியூட்டனின் இவ் அரிய செயலுக்காக அவரை எக்காலத்திலும் போற்றிப் புகழ்வர் என்பது ஒருதலை.
சூரியனொளியில் வெவ்வேறு வகையான ஏழு நிறங்கள் கலந்தி ருப்பதை முதன்முதல் கண்டறிந்து தெரிவிசதவர் இவரே. மேலும் அவர் முன்னறியப்படா தனவான எண்ணற்ற, புதுமையும் வியப்பும் தரத்தக்க எத்தனையோ பொருள்+ளைக் கண்டுபிடித்து உலகத்தாரின் கண்களைத் திறக்கவைத்திருக்கின்றார்.
இத்தகைய பெரியோராகிய நியூட்டன் அமைதித் தன்மையும் தணிவுக் குணமுமுடையவராகவே வாழ்ந்துவந்தார். அவருடைய வாழ்நாட்களில் அவர் சீற்றங்கொண்டிருந்த செவ்வியே இல்லை.
அவருடைய வரலாற்று நூலின்கண் அவர்தம் சிறந்த வாழ்க் கைக் குறிப்பொன்று காணப்படுகின்றது. அஃதாவது, வயிரமணி என்னும் பெயரிட்டு அவர் ஒரு நாயை வளர்த்துவந்தார். அவர் அவ்வப்போது மனத்தால் உழைத்துக் கண்டறிந்த பொருள் களின் குறிப்புக்கள் எழுப்பட்ட தாள்கள் எப்போதும் அவருடைய நாற்காலிப் பலகையின் பேரிலேயே சிதறிச் செறிந்துகிடக்கும். அவர் ஒருநாள் மாலை வெளியே போயிருந்தபோது, அந்நாய் அப் பலகையின்மேல் குதிக்க, ஆங்கிருந்த விளக்கு தலைகீழாகத் தள்ளப்படவே தாள்கள் எல்லாம் தீப்பிடித்து நீறுபட்டுப்போய் விட்டன. இவ்வாறாக அவர் பல்லாண்டு உழைத்த உழைப்புப் பாழாய்ப்போய்விட்டதை வீட்டுக்கு வந்ததும் கண்டபோது, அவர் அந்நாய்க்கு எவ்வித ஊறுபாடுஞ் செய்யாமல் அதனை அமைதியோடு பார்த்தபடியே “வயிரமணியே! நீ செய்த குறும் பினால் வந்த கேட்டின் அளவை நீ அறிந்தாயில்லையே!” என்று சொன்னதோடு நின்றுவிட்டார்.
நியூட்டன் கல்வியிலும் அறிவிலும் சிறந்தவராக இருந்தபோதி லும் கல்விச்செருக்கும் தற்பெருமையும் அவரிடமில்லை: அமை தியும் தாழ்மையு முடையவராகவே இருந்தார். அவர் எல்லோ ரிடத்திலும் வேறுபாடு இல்லாமல் அன்புடன் இருந்துவந்தார்.
நம் நியூட்டன் பெருந்தகையார் உயர்தரக் கல்வி வல்லார் களில் ஒருவராக இருந்தபோதிலும், அவர் தமது உயிர்விடுந் தறுவாயில் யான் கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு!” என்றனராம்.
3. போலி மாணாக்கன்
கலாசாலைத் தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் ஒருநாள் புகைவண்டி யிற் பயணஞ் செய்துகொண்டிருந்தார், அவ் வண்டியில் இருந்தவர்களில் எவருக்கும் அவர் இன்னாரென்று தெரியாது. அவர் எங்கே சென்றாலும் தம் சட்டைப் பைகளிலும் கைப் பையிலும் சிறந்த நூல்களை உடன்கொண்டுபோவார். அவ்வண்டியில் இருந்த கலாசாலை மாணாக்கன் ஒருவன் ஆங்கே சில பெண்டிர்களுடன் வேடிக்கையாகப் பேசிக்கொண்டு வந்தான். இடைநடுவே ஒரு மேற்கோள் எடுத்துச்சொல்லி, அஃது ‘ஒளவையார் வாக்கு’ என் றான். அப்போது அரைத்தூக்கமாகத் தூங்கிக்கொண்டிருந்த அவ்வாசிரியர் திடீரென விழித்துக் கண்களைத் துடைத்து கொண்டு அம்மாணாக்கனை ஏறிட்டுப் பார்த்து, “அப்பா! நீ இ போது எடுத்துச்சொன்ன அவ்வாக்கியம் ஔவையார் நூல்களில் எவ்விடத்தும் யான் கண்டேனில்லையே!” என்றியம்பினார். அதற்கு அக்கற்றுக்குட்டி அவரைப் பார்த்து, “பெரியீர், தாங்கள் பள்ளிக்கூடம் விட்டுப் பல்லாண்டுகளாய்விட்டன; இளமையிற் கற்றது முதுமையில் நினைவிலிருக்குமோ! யான் மொழிக்குமொழி அப்படியே சொன்னேன்,” என்று பெருமிதத்தோடு பகர்ந்தான். அப்போது அவர் ஔவையார் கையடக்கப்படி யொன்றைத் தம் சட்டைப்பையிலிருந்தெடுத்து, அவன் கையிற்கொடுத்து, “அப்பா! இதன்கண் ஒளவையார் பாடல்களெல்லாம் காணப்படும்; நீ காட்டிய மேற்கோள் இதனில் இருந்தால் எனக்கு அன்பு கூர்ந்து அறிவி, பார்ப்போம்,” என்றனர். அம்மாணவன் அதன் ஏடுகளைத் திருப்பித்திருப்பிப் பார்ப்பவன்போல் நடித்து, ஆசிரி யரைப் பார்த்து, “ஐயா, இப்போது நினைவுக்கு வருகின்றது; அதனை யான் நாலடியாரிற் பார்த்திருக்கின்றேன்,” என்றான். ஆசிரியர், “அப்படி ஒருவேளை இருக்கலாம், இஃதோ, என்னிடம் நாலடியார்ப்படியும் ஒன்றிருக்கின்றது, என்று அதனையும் எடுத்து அவன் கையில கொடுத்து, ”அவ்வாக்கியத்தை இதன் கண் கண்டு எனக்குக் காண்பிப்பாயாகில் யான் உனக்கு நிரம்ப வும் கடமைப்பட்டவனாவேன்,’ என்று கூறினார். அப் போலிச் சிட்டன் முன்போல் ஒன்றும் சொல்லாமல் திறுதிறு என்று விழிக் கலானான். அப்போது அப்பெண்மகளிர் எல்லோரும், அகப்பட் டுக்கொண்டான் தும்மட்டிக்காய்ப் பட்டன்,’ என்று உள்ளுக் குள்ளே கிளுகிளுத்துக் கொண்டிருந்தனர்.
பிறகு அம்மாணாக்கன் ஆசிரியரைக் கிட்டி, “பெரியீர்! என் னைச் சற்று மன்னித்துக்கொள்ள வேண்டும்; என்ன மந்த புத்தி எனக்கு! மறந்தேபோய்விட்டேன்; இப்போதுதான் நினைவுக்கு வருகின்றது ; அதனைக் கட்டாயமாகவே திருக்குறளிற்றான் கண்டிருக்கின்றேன்” என்று சொல்ல, அவ் விடாக்கண்டராகிய ஆசிரியர் தன் கைப்பையிலிருந்து திருக்குறள் நூற்படி யொன் றினையெடுத்து அவன் முகத்துக்குநேரே நீட்ட முயன்றார். அப்போது கலைமாணாக்கன் மனங்கலங்கிப்போய், ”ஐயா, சற்றுப் பொறுங்கள், எனக்கு உடம்பு ஒருமாதிரியாக விருக்கின்றது,’ என்று சொல்லிச் சிறிதுநேரம் பேசாமலிருந்து, அடுத்த புகை வண்டி நிலையத்தில் அரவந்தெரியாமல் மறைந்துபோய்விட்டான்.
க. கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
உ. இழிவிற்குமுன் இறுமாப்பு.
௩. பெருமையாளருடன் பங்கெடுத்துக்கொள்வதை விட, வறுமையாளருடன் வணக்கம் பெறு.
-பழமொழிகள்.
௪. நான் அமைதியும் தாழ்மையு முள்ளவன்.
கு. என்னிடத்தில் உங்கள் உயிருக்கு ஓய்வுண்டு. அறியாக் குழந்தைபோல ஆணவமற்றிரு.
எ. உம்பர் உலகில் உயர்நிலை காண்பாய். -இயேசுநாதர்.
அ. அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். – வள்ளுவர்.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |