அசடு
கதையாசிரியர்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 119
(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருநாள், என் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ளும் யூலியா வசிலீவ்னாவை என் அலுவலக அறைக்கு வரும்படி அழைத்தேன். எங்களுக் குள் கலந்து பேசி கணக்குத் தீர்க்க வேண்டியிருந்தது.
“வா. உட்கார் யூலியா. நமக்குள் இருக்கும் கணக்கை நேர் செய்து விடுவோம். உனக்கு நிச் சயம் பணம் தேவைப்படும். எனக்குத் தெரியும், பணம் கேட்க நீ நிறைய சம்பிரதாயம் வைத்திருப் பாய். எனவே, எப்போதும் உன் கூலியை நீயாகக் கேட்கமாட்டாய். சரி. போகட்டும். மாதம் முப்பது ரூபிள் என்பது நமக்குள் பேசி முடித்துக் கொண்ட சம்பளம்”.
“நாற்பது”.
“இல்லை .முப்பதுதான் .நான் எழுதிவைத்தி ருக்கிறேன். நான் எப்பொழுதுமே என் பிள்ளை களைக் கவனித்துக்கொள்பவர்களுக்கு முப்பது தான் கொடுப்பது வழக்கம். நீ இங்கு வந்து தங்கி இரண்டு மாதமாகிறது”.
“இரண்டு மாதம் ஐந்து நாள்”.
“சரியாக இரண்டு மாதம் . அப்படித்தான் நான் எழுதி வைத்திருக்கிறேன். அப்படியானால், உனக்கு அறுபது ரூபிள்கள் சேர வேண்டியிருக்கிறது. அதில் ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகளைக் கழித்துவிடு. ஞாயிற்றுக்கிழமைகளில், கோல்யாவுக்கு நீ பாடம் சொல்லித்தருவதில்லை. அவளுடன் வெறுமனே நடைபயிற்சிக்கு மட்டுமே போய் வருவாய். பிறகு தேவாலயத்துக்கான மூன்று விடுமுறை நாட்கள்…”
யூலியா வசிலீவ்னாவின் முகம் சிவந்துவிட் டது. பதற்றத்தில் தான் அணிந்திருந்த உடையின் மடிப்புகளை இழுப்பதும் விடுவதுமாக இருந்தாள். ஆனால், ஒரு வார்த்தையும் அவள் வாயிலிருந்து வரவில்லை.
“மூன்று விடுமுறை நாட்கள். எனவே, பன் னிரண்டு ரூபிள்கள் கிடையாது. கோல்யாவுக்கு நான்கு நாட்கள் உடல் நலம் சரியில்லாமல் இருந் ததால் பாடம் எதுவும் படிக்கவில்லை. வார்யாவை மட்டுமே நீ கவனித்துக் கொண்டாய். உனக்கு மூன்று நாட்கள் பல் வலி இருந்தது. அதனால், பகல் உணவு முடிந்ததும் என் மனைவி உன்னை அனுப்பிவிட்டாள். பன்னிரண்டும் ஏழும் பத்தொன் பது ஆகிறது. அப்படியென்றால், மீதி நாற்பத்து ஒன்று ரூபிள்கள். சரியா?”
யூலியா வசிலீவ்னாவின் இடது கண் சிவந்து கண்ணீர் ததும்பியது. முகவாய் நடுங்கியது. பதற் றத்தில் இருமல் வந்தது. மூக்கைச் சிந்தி னாள். ஆனால், ஒரு வார்த்தையும் வாயிலிருந்து வெளியே வரவில்லை.
“புத்தாண்டு தினத்தன்று ஒரு டீ கப், சாசரை உடைத்துவிட்டாய். அதற்கு இரண்டு ரூபிள்கள் கழித்தாக வேண்டும். அந்த கப் இன்னும் அதிக மதிப்புடையது. அது எங்கள் குடும்ப பாரம்பரி யப் பொருள். சரி, போனால் போகட்டும். அடுத் ததாக நீ பொறுப்பாகக் கவனிக்காமல் விட்ட தால் கோல்யா மரத்தில் ஏறி தன் கோட்டைக் கிழித்துக்கொண்டான். பத்து ரூபிள்கள் தீர்ந்தது. அதேபோல், உன் அஜாக்கிரதையால் வார்யாவின் ஷூவை வேலைக்காரி திருடிவிட்டாள். எல்லாவற் றின் மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டியது உன் கடமை. கை நீட்டிச் சம்பளம் வாங்குகிறாய். எனவே, மேலும் ஐந்து ரூபிள்கள் கழிக்க வேண் டும். ஜனவரி 10 ஆம் தேதி, என்னிடமிருந்து பத்து ரூபிள்கள் கடனாக வாங்கினாய்”.
“இல்லையே” என்று யூலியா வசிலீவ்னா முணு முணுத்தாள்.
“நான் எழுதி வைத்திருக்கிறேன்”.
“அப்படியானால் சரி….”
“நாற்பத்தி ஒன்றில் முப்பத்து ஏழு போக, மீதம் பதிநான்கு”.
வேலைக்காரப் பெண்ணின் இரண்டு கண்க ளிலும் கண்ணீர். மேலும், வியர்வை மூக்கின்மீது வழிந்தோடியது. பாவம் அப்பெண்.
“நான் ஒருமுறைதான் கடன் வாங்கினேன்” என நடுக்கமான குரலில் சொன்னாள். மேலும் அவள், “உங்கள் மனைவியிடமிருந்து மூன்று ரூபிள்கள் கடன் வாங்கினேன். அவ்வளவுதான். அதற்குமேல் எதுவும் வாங்கவில்லை”, என்றாள்.
“அப்படியா. அதை நான் குறித்து வைக்க வில்லையே”. பதிநான்கில் மூன்று போனால் பதி னொன்று. இதோ உன் பணம். மூன்று…. மூன்று…. மூன்று…. ஒன்று. இன்னும் ஒரு ஒன்று…. இவை எல் லாம் உனக்குத்தான்” என்று சொல்லி, பதினோரு ரூபிள்களை அவளிடம் கொடுத்தேன். அவற்றை எடுத்துக்கொண்டவள், தன் பாக்கட்டுக்குள் நடுங் கும் கைகளால் வைத்துக்கொண்டாள்.
“நன்றி” என மெல்லிய குரலில் சொன்னாள்.
துணுக்குற்று எழுந்த நான், அறையைச் சுற்றி வேகமாக நடக்க ஆரம்பித்தேன். எனக்குக் கடும் கோபம் ஏற்பட்டது.
“எதற்காக நன்றி சொல்கிறாய்?” என்று கேட்டேன்.
“பணத்துக்காக….”.
“ஆனால், நான் உன்னை ஏமாற்றி இருக்கிறேனே .உனக்குத் தெரியாமல் உன் பணத்தைத் திருடிவிட்டேன்! உன்னிடமிருந்து அபகரித்துவிட்டேன்! எதற்காக நன்றி சொல்கிறாய்?”
“நான் வேலை செய்த மற்ற இடங்களில் எனக்குப் பணம் எதுவும் கொடுக்கவில்லையே”.
“சம்பளம் எதுவும் தரவில்லையா? அதில் ஆச் சரியம் ஒன்றுமில்லை. சும்மா உன்னிடம் வேடிக் கையாக நடந்துகொண்டேன். உனக்கு ஒரு கடு மையான பாடம் சொல்லிக்கொடுத்தேன். உனக் குச் சேர வேண்டிய எண்பது ரூபிள்களையும் உனக்குத் தரப்போகிறேன். இதோ இந்த உறை யில் தயாராக இருக்கிறது. ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். ஒரு பெண்

“சம்பளம் எதுவும் தரவில்லையா? அதில் ஆச் சரியம் ஒன்றுமில்லை. சும்மா உன்னிடம் வேடிக் கையாக நடந்துகொண்டேன். உனக்கு ஒரு கடு மையான பாடம் சொல்லிக்கொடுத்தேன். உனக் குச் சேர வேண்டிய எண்பது ரூபிள்களையும் உனக்குத் தரப்போகிறேன். இதோ இந்த உறை யில் தயாராக இருக்கிறது. ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். ஒரு பெண் எப்படி இவ்வளவு அசடாக இருக்க முடியும்? நீ ஏன் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை? ஏன் எதுவும் பேசவில்லை? கோபப் படாமல் இந்த உலகில் வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறாயா? இந்த அளவு அசடாக இருப்பது என்பது சாத்தியமா? “
அவள் கூச்சத்தோடு சிரித்தபோது, “அது சாத்தியம்” என்பது முகத்தில் எழுதியிருந்தது.
நான் கற்றுத் தந்த இத்தகைய கடுமையான பாடத்துக்காக அவளிடம் மன்னிப்புக் கேட்டேன். எண்பது ரூபிள்களையும் அவளுக்குக் கொடுத் தபோது மிகவும் ஆச்சரியமடைந்தாள். மிகவும் அடக்கமாக நன்றி கூறிவிட்டு அவள் வெளியே செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த நான், “இந்த உலகில் அடக்கி ஆள்வது சுலபம்” என்று நினைத் துக் கொண்டேன்.
இக்கதை 1883 ஆம் ஆண்டு வெளியானது.
எப்படி இவ்வளவு அசடாக இருக்க முடியும்? நீ ஏன் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை? ஏன் எதுவும் பேசவில்லை? கோபப் படாமல் இந்த உலகில் வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறாயா? இந்த அளவு அசடாக இருப்பது என்பது சாத்தியமா? “
அவள் கூச்சத்தோடு சிரித்தபோது, “அது சாத்தியம்” என்பது முகத்தில் எழுதியிருந்தது.
நான் கற்றுத் தந்த இத்தகைய கடுமையான பாடத்துக்காக அவளிடம் மன்னிப்புக் கேட்டேன். எண்பது ரூபிள்களையும் அவளுக்குக் கொடுத் தபோது மிகவும் ஆச்சரியமடைந்தாள். மிகவும் அடக்கமாக நன்றி கூறிவிட்டு அவள் வெளியே செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த நான், “இந்த உலகில் அடக்கி ஆள்வது சுலபம்” என்று நினைத் துக் கொண்டேன்.
– இக்கதை 1883 ஆம் ஆண்டு வெளியானது.
– ஆன்டன் செக்காவ் ஆகச்சிறந்த கதைகள், தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், முதற் பதிப்பு: 2019, தடாகம் பதிப்பகம், சென்னை.