கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: February 21, 2025
பார்வையிட்டோர்: 9,076 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிருஷ்ண தேவராயர் காலம். விஜய நகர ராஜ்யத்தில் படா என்று ஊர், (கர்நாடகத்தில் தார்வார் மாவட்டம்) வீரப்பா என்பவர் அந்த ஊரின் கிராம அதிகாரி. இடைக் குலத்தைச் சேர்ந்தவர். அவர் மனைவி பாசம்மா.

சுகமாக வாழ்த்து வந்த இவர்கள் வாழ்க்கையில் ஒரு குறை. அவர்களுக்குக் குழந்தை இல்லை.

இதற்காகத் திருப்பதிக்கு யாத்திரை சென்றார்கள். ஏழுமலையானைத் தரிசித்தார்கள். பூஜை முதலியவைகளை முறைப்படி முடித்தார்கள். தங்களுக்குப் புத்திர பேறு அருளுமாறு இறைவனை வேண்டினார்கள்.

ஊருக்குத் திரும்பியதும் பாச்சம்மா கருத்தரித்தாள்.

உரிய காலத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

திம்மப்பா என்று அவனுக்குப் பெயர் வைத்தார்கள்.

பையன் விளையாட்டுப் புத்தியோடு வளர்ந்தான். நீச்சலடிப்பது, மல்யுத்தம் போடுவது, ஊரில் எல்லா அட்டகாச விளையாட்டுக்களிலும் ஈடுபடுவது திம்மப்பனின் வழக்கம்.

படிப்பு அதிகம் ஓடவில்லை. ஏதோ படிக்க வேண்டுமே என்பதற்காக கற்றுக் கொண்டான்.

திம்மப்பா வளர்ந்து வரும் காலத்தில் முதலில் தந்தை இறந்தார். அதை அடுத்து தாயும் பரமபதம் அடைந்தாள்.

தந்தையின் வரி வசூலிக்கும் ஊழியம் திம்மப்பாவிடம் வந்தது.

எந்த விதக் கவலை யில்லாமலும் தன் கடமைகளைச் செய்து, சகாக்களோடு அரட்டை அடித்துப் பொழுதைப் போக்கி வந்தான் திம்மப்பா.

ஒரு நாள் திம்மப்பாலின் வயலில் கிணறு வெட்ட வேண்டி வந்தது.

ஆட்களோடு குழி தோண்ட ஆரம்பித்தான்.

திம்மப்பா கடப்பாறையை ஓங்கி அடித்த போது கணங் என்று சப்தம் கேட்டது.

தோண்டிப் பார்த்தால் பெரிய பானை ஒன்று கிடைத்தது.

ஆவலோடு உள்ளே பார்க்க அவ்வளவும் பொன் நாணயங்கள்.

திம்மப்பாவுக்கு மகிழ்ச்சி தாங்களில்லை. வீட்டுக்குக் கொண்டு போய்ப் பத்திரப் படுத்தினான்.

எனினும் விஷயம் ஊருக்குத் தெரிந்து விட்டது.

பொன் குவியலுக்கு அதிபதி ஆகிவிட்டதால் அவரை ‘கனக நாயக்கன்’ என்று அழைத்தார்கள்.

கனக நாயக்கன் தனக்குக் கிடைத்த பொருளைக் கொண்டு ஒரு கோயிலைக் கட்ட விரும்பினான்.

ஊரில் ஓர் இடிந்த கோயில் இருந்தது.

அதில் ஆதி கேசவர் சிலை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது.

பக்கத்தில் ககிநேளே என்ற கிராமம் இருந்தது. அந்த ஊரில் ஆதிகேசவருக்குப் பெரிய கோயில் ஒன்று கட்ட ஆரம்பித்தான்.

ஆலயம் அழகாக அமைந்தது.

கனசு நாயக்கள் ஒரு கோயிலைக் கட்டினானே தவிர கடவுள் மீது பக்தி கிக்தி எதுவும் கிடையாது. பணம் கிடைத்ததால் ஒரு புண்ணிய காரியம் செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் கோயிலைக் கட்டினான்.

மற்றபடிக்கு மீண்டும் தன் ஒழுங்கற்ற வாழ்க்கையையே வாழ ஆரம்பித்தான்.

ஒரு நாள் இரவு,

கனக நாயகன் தூங்கிக்கொண்டிருக்கும் போது ஒரு கனவு வந்தது.

கறுப்பான உருவம் ஒன்று அவன் கண் முன் தோன்றியது.

“‘கனகா?!” என்று அது அழைத்தது.

கனக நாயகன் திடுக்கிட்டான்.

”கனகா! என்னுடைய தாசன் (வேலைக்காரன்) ஆக இருப்பாயா?” என்று கேட்டது உருவம்.

“ஊஹூம்'” என்று மறுத்துப் பேசினான் கனக நாயகன்.

கண் விழித்தபோது ஆதிகேசவக் கடவுள் தான் அவ்விதம் வந்து அவனிடம் கேட்டதாகப் புரிந்து கொண்டான்.

“ஊஹும்! அதெல்லாம் மாட்டேன்”’ என்று உறுதியோடு மனத்தில் கூறிக்கொண்டான் அவன்.

அதன் பிறகு பலமுறை அதே கனவு வந்தது. ஒவ்வொரு முறையும் ஆதிகேசவர் அவன் முன்னால் கறுத்த உருவத்தோடு தோன்றி, ”என்னுடைய தாசன் ஆவாயா” என்று கேட்க, அவனும் தீர்மானத்தோடு “முடியாது” என்று கூறிவிட்டான்.

ஒரு சமயம் நாட்டில் ஒரு யுத்தம் நடந்தது. அதில் மல்லனான கனக நாயகனும் சேர வேண்டி வந்தது.

யுத்த கனத்துக்கு வீராவேசமாகச் சென்றான் அவன்.

சண்டை மும்முரமாக நடந்தது.

கனக நாயகள் குதிரை மீது ஏறிப் போரிட்டான்.

சண்டை நடந்து கொண்டிருக்கும்போது யாரோ ஒருவன் கனக நாயகனது முதுகில் குத்திவிட்டான்.

பெருத்த வலியோடு கனகன் குதிரை மீதிருந்து சரிந்து விழுந்தான்.

அந்தக் கணமே நினைவை இழந்தான்.

துரதிர்ஷ்ட வசமாக களகநாயகள் சேர்ந்திருந்த கட்சி தோல்வியுற்றது. செத்தவர்கள் போக எஞ்சியவர்கள் ஓட்டம் பிடித்தார்கள். கனகநாயகன் களத்தில் விடு பட்டான்.

கனகன் சாகவில்லை.

வெகு நேரம் கழித்து அவனுக்கு நினைவு வந்தது.

வந்த கணத்திலேயே வலது காயத்தின் வலியும் சுரீர் என்று முதுகில் உரைத்தது.

காந்தல் தாங்காமல் முனகியவாறு அவன் தத்தளித்தான்.

அப்போது “கனகா!” என்று குரல் கேட்டது.

மெள்ளத் திரும்பினான்.

அந்தக் கறுப்பு உருவம் அவன் முன்னால் நின்றது.

“கனகா, எனக்குத் தாசன் ஆவாயா?” என்று கேட்டது.

கனகனுக்குக் கோபம் ஏறி வந்தது.

“ஏய்! உனக்கு வேறே வேலை இல்லை? இந்த நேரத்திலே வந்து கேட்கிறியே! நான் சாகக் கிடக்கிறேன்! போய்யா!” என்றான் அவன்.

உருவம் அதைரியம் அடையவில்லை. “கனகா! உன்னைச் சாவிலிருந்து காப்பாற்றிவன் நான்தான். இப்போது நீ என்னுடைய தாசன் ஆகலாம்.”

“ஏய்யா? என்னை போட்டு இளவு எடுக்கிறியே! வேறு யாராவது கிடைக்கலியா, உனக்கு?'” என்றான் கனகன்.

“முன்னால் நீ எனக்கு தாசனா சேவை பண்ணியிருக்கே! இப்பவும் பண்ணப் போறே!” என்றது உருவம்.

கனகனுக்குக் கோபம் மீறியது.

“ஏய், என்னை மரணத்திலேர்ந்து காப்பாத்தினேன்னு சொன்னே! இப்போ முதுகிலே வலி பிராணன் போறது! அதுக்கு உன்னாலே என்ன செய்ய முடியும்?” என்றான்.

“சரி, உன்னைக் குணமாக்கி பழையபடி அழகும் ஆரோக்கியமும் தந்தால் நீ எனக்கு தாசன் ஆவாயா?” என்று கேட்டது உருவம்.

“ஆகட்டும்” என்றான் கனகன்.

உருவம் அவனை லேசாகத் தொட்டது.

அந்தக் கனக நாயகனது வலியும் காயமும் மறைந்து முன்னால் இருந்த ஆரோக்கியமான உருவம் உண்டாகியது.

உடம்பு இலகுவாயும். ஒளி பொருந்தியதாகவும் மாறிற்று.

ஆச்சரிய பட்டு அவன் அந்த உருவத்தைப் பார்க்க, அதைக் காணவில்லை. திடீரென்று மாயமாகி விட்டது.

கனகநாயகனின் கண்களில் நீர் வழிந்தது. “ஆதிகேசவா! இத்தனையும் உன் லீலையா?” என்று கூறினான் அவன்.

ஊரை நோக்கிச் சென்றான். உடம்பில் பக்தி திடீரென்று பரவி அவன் மெய்யைச் சிலிர்க்க வைத்தது.

நேராகக் கோவிலை நோக்கிச் சென்றான். அப்போது நடு நிசி.

கோயிலின் சன்னிதி பூட்டிக் கிடந்தது.

கனகன் இதயத்தில் பக்தி கொத்தளித்தது. உடனே சன்னிதியை நோக்கி அவன் பாட ஆரம்பிக்க, அற்புதமாக கீதம் ஒன்று தானாக உற்பத்தியானது.

பாகிலனு தேகேது ஸேவேயனு
கோடு ஹரியே,
கூகிதரு த்வனி கேளவில்லவே
நரஹரியே!

“கதவைத் திறந்து உமது சேவையை எனக்கு அளியுங்கள்”

“ஹரியே! எனது வேட்கையான குரலை நீங்கள் கேட்கவில்லையோ?”

அவர் பாடி முடியும்போது சன்னதிக் கதவுகள் மணியோசைகளோடு தாமாகப் பிளந்தன.

உள்ளே ஆதிகேசவர் முன்னால் தானாக தீபாராதனை நடந்தது.

ககை நாயகனால் உணர்ச்சிகளைத் தாங்க முடியவில்லை. பக்தி ஒரு காட்டாறு போல் பாய்ந்து வந்து அவனை மூழ்கடித்தது.

உள்ளே பார்த்தான்.

அங்கே சங்கு சக்கரம் தாங்கிய கேசவர் புன்னகையோடு நின்று கொண்டிருந்தார்,

கனகனின் கண்களிலிருந்து -ஆனந்தக் கண்ணீர் உருகியது.

அப்போது ஆதிகேசவர் அவனைப் பார்த்து “கனகா! எனக்கு நீ தாசன் ஆவாயா?” என்று அதே கேள்வியைக் கேட்டார்.

“நிச்சயம் சுவாமி! அடியேன் தங்களது தாசன்தான். என்னுடைய மாயைகள் ஒழிந்தன, என் மன இருள் அகன்றது. என் பெருமையும் அகந்தையும் மறைந்தன. இனி உனக்குச் சேவை செய்வதுதான் என் ஒரே வேலை!” என்றான் கனகன்.

அதைக் கேட்ட ஆதிகேசவர் புன்னகை செய்து,

“கனகா! எனக்குத் தாசன் ஆவது அவ்வளவு எளிதன்று, நீ உன் உடைமைகளை யெல்லாம் துறக்க வேண்டி யிருக்கும்” என்றார்.

உடனே கனகர் மெய் சிலிர்த்தது. நமது திருநாவால் பாடல் ஒன்று பாடினார்.

தோரேது ஜீவிஸபஹுதே, ஹரி, நின்னசரண
பரிது மாதேகின்னு அரிது ஹே…வேணய்யா!

”ஹரி! உமது பாத கமலங்களை மறந்து யாராவது வாழ முடியுமோ? இது வெறும் வார்த்தைகள் அல்ல. அறிந்து உணர்ந்து தான் இதை நான் சொல்கிறேன்.”

ஆதிகேசவருக்கு கனகர் மீது மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது. அவரைத் தமது தாசராக ஏற்றுக் கொண்டார்.

அன்றிலிருந்து கனக நாயகருக்கு ககை தாசர் என்ற பெயர் வழங்கலாயிற்று.

ஆதிகேசவர் கனகரை நோக்கி, ”கனகா! நீ சுவாமி வியாச ராயரிடம் போய் அவரைக் குருவாக ஏற்றுக்கொள்!” என்று கூறினார்.

கனகதாசர் உடனே வியாசரைத் தேடிச் சென்றார்.

அவர் சென்றபோது வியாச ராவர் அருகில் அவரது கீர்த்தி பெற்ற சீடர்களான புரந்தர தாசரும் வாதிராஜரும் இருந்தார்கள்.

கனகநாசர் விதிர் விதிர்த்து, “குரு தேவா” என்று கைகூப்பினர்,

“யார் அங்கே?” என்றார் வியாச ராயர்,

“நான்தான், தங்கள் அடிமை!” என்றார் கனகதாசர்.

”ஓகோ! தங்கப் பொக்கிஷம் கண்டெடுத்த கனக நாயகனா!”

”இல்லை சுவாமி! அடியேன் வெறும் கனகன், மாடு மேய்ப்பவன்”

”ஏன் வந்திருக்கிறாய்?”

”ஆதிகேசவர் என்னைத் தங்களிடம் அனுப்பினார், மந்திரோபதேசம் பெறுவதற்காக.”

”மாடு மேய்ப்பவனுக்கு என்ன மந்திரம் வேண்டிக் கிடக்கிறது? எருமைதான் மந்திரம்”.

“நன்றி குருவே!”

கனகதாசர் அந்த ஆசிரமத்திலேயே தங்கிக்கொண்டு “எருமை! எருமை!” என்று தீவிரமாக ஜபிக்க ஆரம்பித்தார்,

பக்திப் பெருக்கோடு அவர் தவம்செய்தார். ஒரு பெரிய எருமை அவர் முன்னால் தோன்றியது.

அதை அழைத்துக் கொண்டு குரு முன்னால் வந்தார். குரு தமது சீடனின் மகிமையை அறிந்தார்.

உடனே அவர் அந்த எருமையை நோக்கி ஒரு பாறை ஒன்றை நகர்த்தும்படி பணித்தார், அந்தப் பாறை ஒரு நீர் ஓட்டத்தைத் தடுத்துக் கொண்டு நின்றது.

எருமை அந்தப் பாறையை நகர்த்த நீர் ஓட்டம் எளிதாக விரைந்தது.

(இந்த நிகழ்ச்சி நடந்த இடம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மதனப்பள்ளி தாலுகாவில் இருக்கிறது. இன்றும் அதற்கு ‘கனக துபு’ என்று பெயர் வழங்குகிறது.)

இதன் பின்னர் வியாச ராயர் கனகதாசரைத் தமது ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார்.

அவருக்கு மந்திர உபதேசம் செய்து தீட்சை வழங்கினார்.

கனகதாசர் பின்னர் இந்தியா முழுதும் பக்தியைப் பிரசாரம் செய்து திரிந்தார்.

தமது தீங்குரலில் நூற்றுக் கணக்கான பாடல்களை இயற்றி நாட்டு மக்களை பக்தி மயமாக மாற்றினார். இந்த மகான் வாழ்ந்த காலம் 16ஆம் நூற்றாண்டு.

– மங்கையர் மலர், அக்டோபர் 1981.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *