ஸ்க்ரைப்
கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி 
கதைப்பதிவு: October 12, 2026
பார்வையிட்டோர்: 259

“மிஸ்டர் ராஜேந்திரன்… ஸ்க்ரைப்..?”
“யெஸ் ஸார்…”
“முத்துலட்சுமி என்கிற மாணவி, கற்றல் குறைபாடு, முதுகுத்தண்டுவட பாதிப்பு, மேலும் சில காம்ப்ளிகேஷன்ஸ் உள்ள மாற்றுத்திறனாளி. ரொம்ப சென்சிடிவ்.தேர்வெழுத, அதிகப்படியா அலாட் பண்ணியிருக்கிற ஒருமணி நேரத்தையும் முழுமையா யூஸ் பண்ணிப்பா…!”-சொல்லியபடியே தேர்வறைக் கான பையைக் கொடுத்தார், தலைமைத் தேர்வுக் கண்காணிப்பாளர்.
தேர்வறைக்குள் வந்தார், ராஜேந்திரன். குப்புறப் படுத்திருந்த முத்துலட்சுமி முழங்கையை தலையணையில் முட்டுக் கொடுத்தபடி நிமிர்ந்தாள். முகமன் கூறினாள்.
விடைத்தாள் தயார்; வினாத்தாளும் வந்தது.
“சார்! நான் நல்லாவே பிரிபேர் பண்ணியிருக்கேன்… கேள்வியைப் படிச்சிச் சொல்லுங்க….நான் சிந்திச்சிப் பதில் சொல்றேன். நான் சொல்ற பதில் சரியானாலும் தவறானாலும் எடிட் பண்ணாம பேப்பர்ல எழுதிடுங்க…!” மிகமிகப் பொறுப்புணர்வோடு கேட்டுக்கொண்டாள், முத்துலட்சுமி.
பல்வகைக் குறைபாடுகளையும் மோதி மிதித்து அமுக்கி, அலட்சியப் படுத்திவிட்டுக் கம்பீரமாய் மேலெழுந்து நிற்கும் முத்துலட்சுமியின் உழைப்பு, உண்மை,, தன்னம்பிக்கை அனைத்தையும் வியந்தபடியே, நான்கு மணி நேரம் அவளுக்காகத் தேர்வு எழுதினார், ராஜேந்திரன்.
‘இந்த வயசுக்கு மேலே, ராவும் பகலுமா உட்கார்ந்து ‘டெட்’ க்குத் தயார் செய்து எழுதி, பாஸ் பண்ணி…இதெல்லாம் நடக்கற காரியமில்லே! ஆசிரியர் தொழிலுக்கு முழுக்குப் போட்டுட்டு, வேற வேலை பார்க்க வேண்டியதுதான்!”- என்ற முடிவிலிருந்தார், ராஜேந்திரன்.
ஆனால், வேலை முடிந்தபின் வீட்டுக்குப் போகாமல், பணி நிரந்தரத்திற்காக அரசு நிர்பந்திக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்காகத் தன்னம்பிக்கையோடு டி.இ.ஓ. அலுவலகம் நோக்கி நடந்தார்!
– போத்தீஸ் (புதுச்சேரி) ஜவுளி நிறுவனம் நடத்திய ‘தன்னம்பிக்கைக் கதைகள்’ போட்டியில் பரிசுபெற்ற கதை.
– அனிச்சம், ஜூன், 2026.
![]() |
இயற்பெயர்: வரதராஜன் அ. புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள், பேத்தி. பணி: ஓய்வு பெற்ற உதவித் தலைமை ஆசிரியர். கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல் சிறுகதை: சிற்றன்னை - குங்குமம், 24.03.1995 பரிசுகள்: 1999 கல்கி சிறுகதைப்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
இரண்டு கடவுள் வாழும் வீடு
செ.தமிழ்ராஜ்
October 12, 2026
மிகச்சிறிய மிருகங்கள்
நீ.பி.அருளானந்தம்
October 12, 2026
நவீன நல்லதங்காள்
இரா.கலைச்செல்வி
October 12, 2026
