சுயசிந்தனை

0
கதையாசிரியர்: ம.பா.கார்த்திகேயன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
முதல் வெளியீடு: 2026
இணைய வெளியீடு: November 26, 2026
பார்வைகள்: 23
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

உன்னுடைய கற்பனை சக்தி, கிரியேட்டிவிட்டி எல்லாம் போயிடுச்சு, எப்ப பார்த்தாலும் நீ மொபைல்ல ரீல்ஸ், ஷார்ட்ஸ் எல்லாம் அதிகமா பார்க்கறதுனால தான் உன்னுடைய சுய சிந்தனையே போயிடுச்சே என்று தன் மகள் சவிதாவை சத்தமாக திட்டிக் கொண்டியிருந்தார்கள் அவருடைய அம்மா.

உனக்கு எப்ப பாத்தாலும் எதாவது என்னை திட்டிகிட்டேயிருக்கனும், உனக்கு போர் அடிச்சா போதும் உடனே என்கிட்ட வந்துடுவ என்னைய கறிச்சி கொட்டுவ போமாம்மா போய் வேற வேலையிருந்தா பாரு என்றாள் சவிதா.

உக்கும் எனக்கு அப்டியோ போர் அடிக்குது பாரு, எனக்கு எவ்ளோ வேலையிருக்கு தெரியுமா போடி, எல்லாம் உன்ன பத்தி யோசிக்க பேசுறன் பாரு என்று சவிதாவின் அம்மா சொல்லிவிட்டு தன் வேலையை பார்க்க சென்றார்கள்.

மொபைலில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டுயிருந்த சவிதாவின் மூளைக்கு ஏதோ ஒன்று தோன்ற, அவள் மனசு அவளிடம் பேசியது. அம்மா சொல்றா மாதிரி இப்பவெல்லாம் நாம எதுவுமே கிரியேட்டிவா எதுவுமே பண்றதில்லை தான். உண்மையை தான அவங்க சொல்லிவிட்டு போறாங்க. நாம மொபைலுக்கு அடிக்ட் ஆகிட்டோமா!என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.

சவிதா கல்லூரியில் இறுதியாண்டு B.A. தமிழ் படித்துக் கொண்டுயிருக்கிறாள். முன்னெல்லாம் நேரம் கிடைக்கும் போது கவிதை எழுதுவது, கதை எழுதுவது, எதாவது புத்தகங்கள் படிப்பது என்று நேரத்தை கடந்து கொண்டுயிருப்பாள். அதையெல்லாம் விடுத்து மொபைலில் நேரத்தை வீணடிப்பதாக அவள் அம்மாவுக்கு தோன்றியதை தான் சொன்னார்கள் என்று அவள் யோசிக்க ஆரம்பித்தாள். அந்த நிமிடம் ஓர முடுவடுத்தாள் நாளை முதல் கல்லூரியில் இருந்து வந்ததும் ஒரு மணி நேரம் மட்டுமே மொபைலை பார்க்க வேண்டும். அதற்கு பிறகு புத்தகத்திலோ, ஏதாவது எழுதுவதிலோ கவனம் செலுத்துவோம் என்று.

மறுநாள் விடிந்தது கல்லூரிக்கு சென்றாள் நட்புகளுடன் அரட்டை, என்று கழிந்த அந்த நாளின் சாயங்கால வேளையில் பேருந்து நிலையத்தில் கிருஷ் சவிதாவை பார்த்தான். அவளருகில் சென்றான்.

Hai சவிதா எப்படியிருக்க? காலேஜ் எப்படி போகுது? என்றான்.

சவிதாக்கு ஒரே ஆச்சர்யம். +2 படிக்கும் போது பள்ளியில் கடைசி நாள் தனக்கு Propose பண்ண கிருஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு அவருடன் நேராய் வந்து பேசியது மேலும் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக அவனை நிராகரித்ததும் அவளுக்கு ஞாபகம் வந்தது.

Hai கிருஷ், நான் நல்லாயிருக்கேன்டா, நீ எப்படியிருக்க? எந்த காலேஜ் என்ன படிக்கிற என்ற கேட்டாள் சவிதா.

நான் OK, இன்ஜினியரிஸ் படிக்கிறேன். எவ்ளோ ஈசியா என்னை நிராகரிச்சுட்டு போயிட்ட இல்ல நீ, ஆனா என்னால உன்னை மறக்க முடியல. எனக்குள்ள ஒரு வாரமாமே உன்னைய பத்தியே யோசிட்டயிருந்தேன். இன்னிக்கு எப்படியும் உன்னை பார்த்துடனும், உன் கிட்ட பேசிடனும்னு முடிவெடுத்து வந்து பேசிட்டுயிருக்கேன். பழைய மாதிரி love எல்லாம் கிடையாது. ஆனாலும் உன் ஞாபகம் என்னை விடல. நாம ஏன் நல்லா நண்பர்களா இருக்க கூடாது.

எல்லாம் இப்படிதான்டா ஆரம்பிக்கும் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்டா. நீ உன் வேலையை பாரு என்றாள் சவிதா.

OK சவிதா. உன் இஷ்டம், நான உன்னை ரொம்ப மிஸ் பண்ணனுவேன், மேலும் இத்தனை நாளா உண்னை Disturb பண்ணல.

உன்னை உன் நட்பை நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன். உன் அறிவுத்திறனை உன் கவிதை எழுதுற அந்த அற்புதமான கலையை நான் பள்ளிக் கூடத்துலயிருந்தே ரொம்ப ரசித்து ரசித்து அதுல லயித்து போயிருக்கிறேன். உன் எழுதுக்களை எவ்ளோ ரசிக்கிறேன் தெறியுமா பள்ளியிலே நடக்கிறே அத்தனை தமிழ்ல எந்த போட்டியிலும் நீ தான் வெற்றி பெறுவ. எனக்கு ஏனோ நானே வெற்றி பற்றது போல சந்தோஷபடுவேன் சவிதா. Please என்னைய புரிஞ்சுக்கோ வேற எதுவும் உன்கிட்ட நான் எதிர்பார்க்கல.

கிருஷ் சொல்ல சொல்ல சவிதாக்கு மனதில் நம்மளை, நம்ம எழுத்துக்களை ஒருத்தன் இவ்ளோ நேசிக்கிறானே என்று சற்று மனசு இளகியது.

OK கிருஷ், நீ வேற எதுவும் எதிர்பார்க்கலனா என் கவிதை, கதைகளை மட்டும் தான் ரசிக்கிறேனா நாம friend ஆ இருக்கலாம் என்றாள் சவிதா.

கிருஷ்க்கு உலகமே தன் காலடியில் உள்ளது போல் மகிழ்ந்தான்.

இருவரும் தன் மொபைல் நம்பரை பரிமாறிக் கொண்டார்கள்.

சுவிதா வீட்டுக்கு வந்ததும் தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு இரவு உறங்கபோகும் சமயம் கிருஷ் சொன்னதெல்லாம் ஞாபகம் வற, ஒரு கவிதையை எழுதி மொபைலில் கிருஷ்க்கு அனுப்பினாள். ஆதற்கு என்ன பதில் வருமோ என்று மிகவும் எதிர்பார்த்தது அவள் மனது. அடிக்கடி மொபைலை எடுத்து பார்த்துக்கொண்டே இருந்தாள்.

இரண்டு புளுடிக் வந்ததும் அவன் ஏதோ டைப் பெய்கிறான், பதில் அனுப்புகிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டுயிருந்தாள்.

மிகவும் அருமை, இயற்கையை உன்னால் மட்டும் தான் இப்படியெல்லாம் ரசிக்க முடியும் சவிதா. Super என்று பதில் அனுப்பினான் கிருஷ்.

சுவிதா மிகவும் சந்தோஷ பட்டாள். தினமும் இவள் கவிதைகள் அனுப்புவதும் அவன் பதில் அனுப்புவதும், அவன் பதிலுக்கு இவளும், இவள் பதிலுக்கு அவனும் கட்டுண்டார்கள்.

பொதுவான கவிதைகள் மறந்து இப்போ இருவரும் காதல் கவிதைகளில் லயித்தார்கள். தன் சுயத்தை மறந்து இருவரும் ஏதேதோ முகநூலிலும், மொபைலுலும் குறுஞ்செய்திலும் பறிமாறிக் கொண்டார்கள். ஒரு கால கட்டத்தில் பரிமாற்றம் இரவுகளில் நேரங் கடந்தும் சென்று குறுஞ்செய்திகளின் கொண்டுயிருந்தது.

பாறையில் தலையில் முட்டிக் கொண்டால், தனக்கு தானே ரத்தம் வரும், பாறைக்கு வருமா? ஏன்ற ஒரு தத்துவார்த்த நெறியோடு சவிதாவின் அம்மா பலமுறை கத்தியும், திட்டியும் பார்த்து சலித்து போய்விட்டார்கள் சவிதாவின் செயல்களை கண்டு.

சவிதாவுக்கும் சரி, கிருஷ்க்கும் சரி எதுவுமே பெரியவர்கள் சொல்வது காதில் விழவேயில்லை, மாறாக அவர்கள் எல்லாம் பைத்தியகாரர்கள், அந்த காலத்து மனிதர்கள், பத்தாம் பசலிகள் என்று தன் வீட்டு பெரியவர்களை பரிகாசம் செய்து கொண்டு அலட்சியப்படுத்தினார்கள். இருவருக்கும் மொபைல் தன் உடலில் ஒரு அங்கமாகவே ஆகியது. வயிற்றுக்கு சோறு போட கூட மறந்தாலும் மறப்பார்கள் ஆனால் மொபைலுக்கு சார்ஜ் போட மற்க்க மாட்டார்கள்.

எங்கும் மொபைல், எதிலும் மொபைல், எல்லாம் மொபைல் தான் என்றும் தங்கள் வாழ்வியலே மொபைல் தான் என்றும் இருவருக்கும் மாறியது. இன்று வழக்கம் போல் இருவரும் கல்லூரி முடித்துவிட்டு மாலையில் அந்த பூங்காவில் உட்கார்ந்து தங்களை மறந்து ஏதேதோ பேசிக் கொண்டுயிருந்தார்கள். காதல் என்று ஒன்று அர்த்தமற்ற வார்த்தைகளை, பேச்சுகளை அங்கு விதைத்துக் கொண்டுயிருந்தார்கள்.

அந்நேரம் அங்கே சவிதா, கிருஷ்விடம் டேய் கிருஷ் அங்க பாரு நம்ம தமிழ் ஐயா உள்ளே வர்றார் பாரு. இத்தனை நாளா அவர நாம பாக்கல, இன்னிக்கி இங்க வர்றார் பாரு, வாடா போயிரலாம், அவர் பார்த்துட போறாரு நம்மள. என்று சொன்னாள் சவிதா.

சீ, இவரெல்லாம் ஒரு ஆளா, இவருக்கெல்லாம் பயப்பட கூடாது சவிதா, நாம போக வேண்டாம் என்றான் கிருஷ்.

ஆனால் இவர்கள் இப்படியே பேசிக்கொண்டுயிருக்க அந்த தமிழ் ஐயா, நேராய் இவர்களிடமே வந்தார்.

வந்தவர் சவிதாவிடம்,

சவிதா எப்படியம்மா இருக்க?

காலைல உங்கம்மாவ வீட்டுக்கு வந்து பார்த்தேன். உன்ன பத்தி கேட்டேன். அவங்க உன்னைய பத்தி நிறைய சொன்னாங்க. இவங்க தான் நீங்க இரண்டுபேரும் மாலைல இந்த பூங்காவுல சந்திச்சி பேசுறீங்க. அங்க போனா அவளை பார்க்கலாம் சார். ஆவ முன்ன மாதிரியில்ல, எதுவும் எழுதறது இல்ல, சுயத்தையே இழந்துட்டா. நீங்க கொஞ்சம் Advise பண்ணங்க என்று சொன்னாங்க. என்று அவர் சொல்ல சொல்ல……..

சவிதா கடுப்பாகினாள்.

சுார் உங்களுக்கு என்ன வேணும்? என்னை ஏன் தேடி வீட்டுக்கு போனீங்க. இந்த Advise எல்லாம் வேணாம் சார் என்றாள்.

ஊடனே கிருஷ் தலையிட்டு, சார் உங்களுக்கு மேனரஸ் இல்லையா சார்? நாங்ககாதலர்கள் எங்களை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க. நீங்க போகலாம் சார் என்று கத்தினான்.

கிருஷ், கொஞ்சம் இரு, சார் எதுக்கு என்னை தேடிட்டு வீட்டுக்கு போனிங்க சொல்லுங்க என்றாள் சவிதா.

அது ஒன்றும் இல்ல சவிதா, நீ கவிதை, கதைகள் எல்லாம் எழுதியிருக்க. நீ எழுதன ஒரு கவிதையும், ஒரு கதையும் என் மனசுக்கு ரொம்ப பிடிச்சுபோய் அதை பல பேர்கிட்ட சொல்லியிருக்கேன். உன் சுயசிந்தனை எவ்வளவு

அர்தானது தெரியுமா? உனக்கு ஒன்று சொல்றேன். இப்ப Chat G.B மற்றும் AI எல்லாம் பெரிசா வளர்ந்துகிட்டு வந்தாலும் அதுவால மாற்றம் செய்ய முடியாதது எது தெரியுமா நம்மளுடைய சுயசிந்தனை. ஆத இழக்க கூடாது சவிதா. உன்னை போல ஒரு சிறந்த மாணவி எனக்கு வேணும் நிறைய புத்தகத்திலிருந்து reference எடுக்கனும் அதான் உன்னை தேடி வந்தேன். ஆனா நீ இப்ப இருக்கற நிலைமையில ஒரு சுயசிந்தனையும் உனக்கு இல்லை, உன்னுடைய creativity எல்லாம் போய் இந்த காதலுக்கு அடிமையாயிட்டன்னு தெரியுது. உன்னை எதிர்பார்க்கிறது எல்லாம் வீண் தான், என்னை மன்னிச்சுடுங்க, உங்களை இனி நான் தொந்தரவு பண்ண மாட்டேன். நீங்க தொடர்ந்து பேசுங்க என்று சொல்லிட்டு விருட்டென்று கிளம்பி போய்விட்டார் அந்த தமிழ் ஐயா.

சவிதா அவர் சென்ற திசையையே பார்த்துக்கொண்டுயிருந்தாள்.

அப்போது கிருஷ், அவள் தோளை தன் தையால் தட்டி, ஏய் சவிதா அந்த ஆள் கிடக்கிறான், பெரிய தமிழ் ஆசானுன்று நினைப்பு அந்த ஆளுக்கு. இந்த காலத்துலே கவிதை, கதைன்னு சும்மா ரீல் விடுறான். இந்த மாதிரி ஆளை நம்ப கூடாது. இந்த தமிழ், கவிதை, கதையெல்லாம் சோறு போடாது. சும்மா டைம் வேஸ்ட். அந்த ஆள் கிடக்கான் என்று அவளை மெதுவாய் கட்டியனைத்தான், ஏனோ தெரியவில்லை சவிதாவுக்கு அந்த நிமிடம் கிருஷ் முதன் முதலில் அந்த பேருந்து நிலையத்தில் பேசியது ஞாபகம் வந்தது. சற்று அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு.

சாரி, கிருஷ் நாளைக்கு பார்க்கலாம், கொஞ்சம் மூட்அவுட், என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் சவிதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *