வேலை வேண்டும்!




(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சீலன் முகட்டை வெறித்துப் பார்த்தபடி கட்டிலிலே ‘வொறி’யோடு மல்லாக்கக் கிடந்தான்.
அப்போது அக்காவின் மகள் பிரவீனா மெல்ல ஓடிவந்து. ‘மாமா! இரண்டும் இரண்டும் எத்தின?’ என்கிறாள்.
‘நான்ரு’ என்றான் சீலன்.

‘அப்படியென்றால் மூன்நும் ஒன்றும் எத்தின?’ என்றாள் மீண்டும்.
‘நான்கு’
‘என்ன மாமா நீங்க சரியான மொக்கு, இரண்டும் இரண்டும் நான்கு என்கிறீர்கள். மூன்றும் ஒன்றும் நான்கு என்கிறீர்கள். இது தான் உங்களுக்கு வேல கிடைக்கல்ல’ என்று கூறிக்கொண்டு தன் பிஞ்சுப் பாதங்களை மெல்ல வைத்து வைத்து ஓடுகிறாள்.
அவள் ஓடி மறைவதற்கிடையில் அம்மாவின் குரல் செவிப்பறையைத் தாக்குகிறது. ‘வேல வெட்டி ஒன்றைத் தேடிக்கொள்ளுவம் எண்டில்லாய் வெயில் படமட்டும் படுக்கிறான்’
அந்த இடியோசையைக் கேட்டவாறு அரக்க முடியாத அரக் உடலை அரக்கியவண்ணம் உன்ளே நுழைந்தாள் பக்கத்து வீட்டு கனகம்.
அவள் உள்ளே நுழைந்ததுதான் தாமதம் வெங்கலக் கடைக்குள் யானை புகுந்ததுபோல் ‘பாக்கியம், இவன் தம்பி கீலன் வேலி ஒண்டுமில்வாம இப்படியே இருக்கிறதானா? தை பிறந்தால் வழி பிறக்கும் எண்டு சொன்னா, ஆனா தையும் பிறந்து மாசியுமாப் போயித்து’
‘நான்தான் என்ன செய்ய?’
‘அதுசரி பாக்கியம், இவன் தம்பி என்ன ராசி? இவனுக்குக் காலந்தான் சரியில்லப்போல கிடக்குது. எதுக்கும் ஒருதரம் மறையன் சாத்திரியிட்ட சாத்திரம் கேட்டுப் பார்த்தால் என்ன’
‘ஓங் கனகம். இவன் தம்பி கன்னி ராசியில் புறந்தவன். அவனுக்கு அட்டமத்துச் சனிதான் பிடிச்சிருக்குப் போலகிடக்கு நாளைக்கு வெள்ளிக்கிழமைதானே! ஒருதரம் கேட்டுப் பாரன்’
மீண்டும் மறுநாட் காலை தரிசனம் கொடுத்தாள் கனகம்.
கனகத்தைக் கண்ட பாக்கியம் ஆவல் ததும்ப ஓடி வந்தாள். ஆனால் சீலன் மட்டும் அதே முகடு. அதே முழிப்பு வெறித்துப் பார்த்தபடி கிடந்தான்.
‘என்னவாம் கனகம்?’
‘அத ஏன் கேப்பான் பாக்கியம்? இவர்ச் பொடியனில ஒரு பிழையும் சொல்லிப் பிரயோசனமில்ல. எல்லாம் அளன்ர கால சனியன் தான்! அவன்ர ராசிப்படி அவனுக்கு அட்டமத்துச் சனியன் பிடிச்சிருக்காம். அந்த அட்டமத்துச் சனியனுக்கு ஆளையே தட்டிட்டுப் போற சக்தி இருக்காம். அதாலதான் ஆளைத் தட்டிறதுக்குப் பதிலா வேலையைத் தட்டிக்கொண்டு போகுதாம். அதுசரி பாக்கியம் இப்ப தம்பிக்கு எத்தின வயது?’
‘ஏன் கனகம் வயதைக் கேக்கிறா? இந்த….போன காத்தி கையோடதான் இருபத்தெட்டு முடிஞ்சது’ என்று பெருமூச்சு விட்டடாள் பாக்கியம்.
அதை அவதானித்த கனகம் மீண்டும் ஆரம்பித்தாள். ‘என்ன பாக்கியம் அப்படிப் பெருமூச்சு விடுகிறா? ஓண்டுக்கும் யோசியாத. இவன் தம்பிக்குப் பிடித்திருக்கிற அட்டமத்துச் சனியன் நாசமத்துப் போறதிற்கு ஒரு வழியிருக்காம்.’
‘அது என்ன வழி கனகம்?’ இடைமறித்தாள் பாக்கியம்.

‘இல்ல, இவன் தம்பிட பேரில ஒவ்வொரு சனிக்கிழமையும் மாமாங்கப் பிள்ளையார் கோயில்ல நாலு தேங்கா உடைச்சி சனீஸ்வரனுக்கு அர்ச்சனையும் போட்டு வாறதோட தம்பிக்கு ஒரு கல்யாணம் முடிச்சு வைச்சால் எல்லாம் சரியாம் போயிடும். அவனுக்கு இருக்கிற சனியனக் கலைக்கலி ஓரு கலியாணந்தான் முக்கியம்’.
‘கலியாணமா? இவனுக்கா? இந்த வேல வெட்டி இல்லாதவனுக்கா? நல்லாச் சொன்னாதான். போக வழியில்லையாம். தவில் போல மாலாப்பாம்’ என்றாள் பாக்கியம் விரக்தியாக.
‘சும்மா விசர்க்கதைய விட்டுப்போட்டு விசயத்திற்கு வா’ என்றாள் கனகம்.
‘சரி சரி எதுக்கும் தம்பிய ஒருதரம் கேட்டுப் பாப்பம்’ என்று கூறிக்கொண்டு ‘தம்பி! தம்பி இஞ்ச கொஞ்சம் வந்துத்துப் போவன்’ என்று குரல் கொடுத்தாள் பாக்கியம்.
தெள்ளுத் தெறிப்பதுபோலத் துள்ளிவிழுந்த சீலன் ‘என்னம்மா என்ன விசயம்?’ என்று நின்றான்.
சாத்திரியார் சொன்ன எல்லாத்தையும் கூறினாள் பாக்கியம்.
இதைக்கேட்ட சீலன் அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தவண்ணம் “அம்மா, ஒவ்வொரு கிழமையும் கோயிலில் உடைக்கிற தேங்காய்க் காசும் அருச்சனைக் காசும் இருந்தால் ஒரு கிழமைச் சாப்பாட்டையே சமாளித்திரலாம். அதுமட்டுமில்லாம எனக்கொரு கல்யாணம்! அம்மா! கல்யாணமெண்டா யாரோ பெத்த ஒருத்திக்கு யாரோ ஒருத்தன் சோறு போடுறதுதான் கல்யாணம்! ஆனா எனக்கே நீங்க சோறு போடுறீங்க, அப்படியெண்டா’ என்று கூறிப் பெருமூச்சை விட்டான்.
ஒருபடியாகக் கல்யாணமும் நடந்தேறியது.
மீண்டும் ஒருவருடத்தின் பின்…
‘அம்மா! அம்மா! கல்யாணம் முடிச்சா வேலை கிடைக்கும் என்று சொன்னீங்க, ஆனா கலியாணம் முடிஞ்சி ஒரு வருசமாகியும் போயிற்று. ஒருவேலையும் கிடைக்கிறதாக இல்ல. எனக்கு பொம்புளையும் தேவையில்லை ஒண்டும் தேவையில்லை’ என்று கத்தினான்.
அதற்குத் தாய் ‘என்ன செய்யலாம் தம்பி? அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்கிற மாதிரி, மண்ணானாலும் மனைவி, பொல்லானாலும் பொண்டாட்டி என நினைத்து நடக்கணும்’ என்று கூறினாள்.
அந்த நேரம் பார்த்தாற்போல் அவ்விடம் வந்து சேர்ந்தாள் கனகம்.
வந்ததும் வராததுமாக ‘பாக்கியம் நான் இன்றைக்குச் சாத்திரியிட்டப் போய் தம்பிட வேலையைப்பற்றி ஒரு சாத்திரம் கேட்டுப் பார்த்தளான். அவர் சொல்லுறார் தம்பிட ராசியும் பெஞ்சாதி விட ராசியும் ஒண்டாம். அதனாலதானாம் தம்பிக்கு இன்னும் வேல கிடைக்கல்லியாம். இவன் தம்பிக்கு ஒரு பிள்ள பிறந்தால்தானாம் புள்ளட ராசிக்கு வேல கிடைக்குமாம்’ என்று எடுத்துரைத்தாள்.
இதைக்கேட்ட சீலன் ஆத்திரம் பொங்கத் தாயைப் பார்த்து, ‘இப்ப நீங்க ரெண்டு பேருக்குச் சோறு போடுறது காணாதாக்கும் இனி மூண்டு பேருக்குப் போடப் போறாவு’ என்று கூறினான்.
பிள்ளை ஒன்று பிறந்து மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. அப்படியிருந்தும் சீலனுக்கு வேலை ஒன்றுமே இன்னும் கிடைக்கவில்லை.
வேலை கிடைக்காததனால ஆத்திரமடைந்த பாக்கியம் தானே சாத்திரியிடம் செல்வதென முடிவெடுத்துக்கொண்டு சாத்திரியிடம் சென்றாள்.
சாத்திரி பாக்கியத்தின் கைரேகையைப் பார்த்துவிட்டு ‘உங்க மகனுக்குப் பிறந்தது ஆண்குழந்தையாகப் பிறந்திருந்தால் நிச்சயம் வேலை கிடைச்சிருக்கும். ஆனா பிறந்தது பொம்புளப்புள்ள எண்ட படியா அவளுடைய ராசிதான் வேல கிடைக்காக அலக்கழிக்குது. தம்பிக்கு நல்லபடியா வேல கிடைக்கணுமெண்டா… இரண்டாவது புள்ள பிறந்தே ஆகணும்’ என்றார்.
சாத்திரி சொன்னவற்றையெல்லாம் மகனிடம் ஒப்புவித்தாள் பாக்கியம்.
அதன் பிரகாரம் சீவனுக்கு இரண்டாவது பெண் குழந்தையும் பிறந்தது. இரண்டாவது பெண்குழந்தையும் பிறந்து மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனாலும் சீலனுக்கு வேலை ஒன்றும் கிடைக்கவில்லை.
எனவே மீண்டும் பாக்கியம் சாத்திரியை நாடினாள்.
சாத்திரியோ மீண்டும் அதே பல்லவி. ‘இரண்டாம்கால் பொம்புள்ளப்புள்ள குடும்பத்திற்கே நாசம். அதனால வேலை கிடைக்கிற பலனேயில்ல. அதனால மூன்றாவது பிள்ளை பெத்தால் தான் வேலை கிடைக்கும்’ என்று கூறினார்.
இநன் அடிப்படையில் மூன்றாங்கால், நாலாங்கால், ஐந்தாங்கால்வரை தொடர்ந்தன.
இதுவரை சீலனுக்கு வேலையில்லையே என்று தவித்துக்கொண்டிருந்த சீலனுக்கு இனி ஐந்து பெண்களுக்கும் வீடு கட்டி, சீதனமும் சேர்க்கவேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.
இதனால் ஆத்திரமடைந்த சீவன் சாத்திரியிடம் போவதற்காக சேட்டைப் போட்டான். அப்பொழுது கிணற்றடித் துலாவிலிருந்து கொண்டு ஒரு காகம் கரைந்துகொண்டிருந்தது.
காகம் கரைவதைக் கண்ட சீலனின் பொண்டாட்டி ‘இஞ்சாருங்கப்பா! துலாவில இருந்த காகம் கரைகிறதப் பார்த்தா ஏதோ நல்ல செய்தி வரப்போற மாதிரித் தெரியுது’ என்றாள்.
அப்பொழுது வாசலில் தபால்காரனின் மணியோசையும் கேட்டது.
வாசலுக்கு ஓடிச்சென்று கடிதத்தை வாங்கி உடைத்துப் பார்த்தான்.
அது ஒரு வேலை நியமனக் கடிதமாக இருந்தது. அவனுக்கே சந்தேகமாக இருந்தது. மீண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தான். அதில் மூத்த மகளுக்கு வேலை கிடைத்திருப்பதாக இருந்தது.
இதைக் கண்ட சீலன் அழுவதா? சிரிப்பதா? என்று தெரியாமல் திகைத்து நின்றான்.
– ஓ. கே.குணநாதன் நகைச்சுவை கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1993, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு