வீண் வழிபாடு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 2,260 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஏனோதானோவென்று வேண்டுகிறதாலும், நோக்க மில்லாமல் ஜெபிக்கிறதாலும் வீண்வார்த்தைகளை அலப் புகிறதாலும் ஜெபங்கள் ஜெயமாகிறதில்லை. மாயக் காரரைப்போல் மாய்மால மன்றாட்டுகளை ஏறெடுக்கிற தாலும் பாடுபடாமல் படுசோம்பலாக ஆசீர்வாதங் களைஅள்ளிவாங்க நினைக்கிறதாலும் ஜெபங்கள் செயல் படுவதில்லை.

பூ உலகில் உள்ளதுபோன்று பரஉலகிலும் உயிரற்ற தபால் நிலையம் (D. L. O.) ஒன்று உண்டுபோலும்! நம் ஜெபம் ஒரு கடிதத்துக்குச் சமம். சரியான முகவரி எழுதப்படாத கடிதங்கள் ‘டெட் லெட்டர் போஸ்ட் ஆபீசுக்கு அனுப்பப்படுவதுபோல குறிக்கோளில்லாமல் செய்யப்படும் ஜெபங்களும் செயலற்றுக் கிடக்கும்.

பலர் மகா சோம்பலுள்ள பெரிய விசுவாசிகளாய் இருக்கிறார்கள்.

விழித்திருந்து ஜெபி; வினையாற்றிக்கொண்டே ஜெபி!

பாடுபட்டுக் கொண்டே ஜெபி; பாடிக்கொண்டே ஜெபி என்பதுதான் ஆண்டவர் நமக்கிட்ட கட்டளை.

ஒரு படகில் சாமான்களை ஏற்றிக்கொண்டு இருவர் தண்டுவலித்துச் சென்றனர். நடு ஆற்றில் காற்று அதிக மும்முரமாய் இருந்தது. படகு அமிழ்ந்து போகும் நிலை ஏற்பட்டது.

ஒருவன் மற்றவனிடம் சொன்னான்:

“கொஞ்சநேரம் தண்டுகளைக் கீழே போட்டுவிட்டு முழங்காலில் நின்று ஜெபிப்போம்” என்றான். உடனே மற்றவன் சொன்னான்.

“செயல்படாமல் ஜெபம் பண்ணுகிற சமயமல்ல இது; தண்டு வலித்துக்கொண்டே ஜெபம் பண்ணுவோம்” என்றான்.

ஆம். தண்டு வலித்துக்கொண்டும் – ஜெபித்துக் கொண்டும் அக்கரை போய்ச் சேர்ந்தார்கள்.

செய்பணியில் நாம் சித்திபெற ‘முயற்சியோடு ஜெபமும், ஜெபத்தோடு முயற்சியும் தேவை.’

“நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன்..” [ஏசாயா 1:15]

”நீங்கள் கடவுளிடம் வேண்டுதல் செய்யும் போது…. வீண் சொற்களைச் சொல்லி உளறிக்கொண்டிருக்க வேண்டாம். [மத்தேயு 6:7]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *