விருப்பம்




மாலைப்பொழுது காவியா அவசர அவசரமாக ஆப்பிஸ் வேலைகளை முடித்து விட்டு,தன்கைப்பையை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியில் வந்தாள்.மழை லேசாக தூறியது,குடையை விரித்தவள் வேகமாக பேருந்து நிலையத்திற்கு சென்று அவள் பேருந்து வரும்வரை காத்திருந்து,வந்ததில் ஏறிக்கொண்டாள் அவள்.கூட்டம் அதிகமாகவே இருந்தது,அவள் ஒரு ஓரத்தில் நின்றுக்கொண்டாள்,அவள் எண்ணோட்டம் வீட்டை சுற்றியிருந்தது
இரவு உணவு என்ன செய்யலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டாள்,மகன் தர்ஷன் பாடசாலாயிலிருந்து வந்து தன்னிடம் உள்ள சாவியில் கதவை திறந்து உடை மாற்றிக்கொண்டு,அவன் நண்பன் வீட்டுக்கு விளையாடப்போயிருப்பான். போகும்வழியில் அவனையும் அழைத்துக் கொண்டுப், பால் தீர்ந்துவிட்டது,அதையும் வாங்கிகொண்டு போகவேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போதே அவளின் இறங்கும் இடம் வந்து விட்டது பெல்லை அடித்து இறங்கிகொண்டாள் அவள்.
தற்போது மழை நின்றுவிட்டது,இது என்ன மழையோ என்று முனுமுனுத்தப்படியே,தர்ஷன் நண்பன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் காவியா,அங்கு விளையாடிக்கொண்டிருந்த தர்ஷனை அழைத்துக்கொண்டு,கடைக்குச்சென்றாள்.பால் உட்பட,தேவையான வேறு சில பொருட்களையும் வாங்கிகொண்டு,மகன் கையில் இருந்த சாக்லைட்டுக்கும் சேர்த்து பணத்தைக்கொடுத்து விட்டு, இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.போகும் வழியில்,தர்ஷன் அன்று பாடசாலையில் நடந்தவற்றையெல்லாம் ஒப்பித்துக்கொண்டே வந்தான்,அவளும் அவன் கூறுவதை அமைதியாக கேட்டுக்கொண்டே வந்தாள்,எட்டு வயது நிரம்பிய தர்ஷன் இன்னும் மழலை மாறாமல்,கதைக்கும் போது அவளுக்கு கேட்க்க இனிமையாக இருக்கும்.
வீட்டை அடைந்த இருவரும் சோபாவில் சிறிது நேரம் சாய்ந்தார்கள்,காவியா குளிப்பதற்காக எழுந்துக்கொண்டாள்,அவள் குளித்து வேறு உடையணிந்து விளக்கேற்றினாள்.சிறிது நேரத்தில் வேலை முடிந்து பாலா வந்தான்,தலை வலிப்பதாக கூறிக்கொண்டே சோபாவில் சாய்ந்த அவன் அப்படியே தூங்கிப்போனான்.காவியா சமையல் அறை நோக்கி நடந்தாள்,மகன் ஓம்வேர்க் செய்வதாக கூறி அறைக்குச் சென்று விட்டான்.எதுவும் தெரியாவிட்டால்,அம்மாவிடம் வந்து கேள் என்று காவியா குரல் கொடுத்தாள்.
சப்பாத்தி மாவை பிசைந்து வைத்து விட்டு உருலைகிழங்கு கூட்டு பன்னினாள்,காலையில் செய்த சாம்பார் மீதமாக இருந்தது,தர்ஷனுக்கு உருலைகிழங்கு என்றால் பிடிக்கும்,காலையில் சமைக்கும் காய்கறிகளையும் கழுவி நறுக்கி பையில்போட்டு வைத்தாள்.சப்பாத்தி தேய்க்க ஆரம்பிக்கும்போது,பாலா எழுந்து குளிக்கச்சென்றான் மூவரும் சுடசுட சாப்பிட்டு முடித்தார்கள்.
பாத்திரங்களை கழுவி அடுக்கிய காவியா சமையல் அறையை கூட்டி முடித்தாள்,பிறகு தொலைக்காட்ச்சி சிறிது நேரம் பார்த்து விட்டு,தர்ஷனை படுக்கவைத்து தானும் கட்டிலில் சாய்ந்தாள்,பாலா தாமதமாகவே வந்து படுத்தான்,அதற்கிடையில் அவள் தூங்கிப்போனாள்.இடையில் திடுக்கிட்டு கண்விழித்தாள்,ஏதோ கனவு அவள் தூக்கத்தை கெடுத்து விட்டது,பக்கத்தில் இருந்த போனை கையில் எடுத்து நேரத்தைப் பார்த்தாள்,ஒரு மணி நாற்பது நிமிடத்தைக்காட்டியது,மறுப்படியும் புரண்டுப் படுத்தாள் தூக்கம்வர மருத்தது.
அவளின் நினைவோட்டங்கள்,கடந்த காலத்தை நோக்கிப்பாய்ந்தது.காவியாவின் திருமணம் பெரியோர்களால் நிச்சியக்கப்பட்டு செய்து வைக்கப்பட்ட திருமணமே,
முன்பின் அறிமுகம் இல்லாத பாலாவுக்கு கழுத்தை நீட்டியவள்,உடனே தனிக்குடித்தினம் வேறு கொஞ்சம் திண்டாடித்தான் போனாள் அவள்.என்னதான் நாகரீக காலத்தில் வாழ்ந்து கொண்டு இருந்தாலும் சகஜமாகப் பேசிபழகமுடியவில்லை அவனிடம் அவளாள்,வெட்க்கம் கொஞ்சம் பயம்.
பாலாவும் அதிகமாகப் பேசிபழகமாட்டான்,இதனால் ஆரம்பத்திலேயே இருவருக்கும் இடைவெளியேற்ப்பட்டது.அதை இருவருமே சரிசெய்துக்கொள்ள முயற்சிக்கவில்லை,கணவன் மனைவி என்றாலும் இருவரும் ஒரு சில வார்த்தைகளுடன் பேச்சை முடித்துக்கொள்வார்கள். பாலா காவியாவை எதற்கும் வற்புருத்த மாட்டான், அதனால் தான் என்னவோ,தர்ஷன் இரண்டு வருடம் தாமதமாகவே பிறந்தான்
அவள் வீட்டில் இருக்கும் போதே,வேலைக்கு போக ஆரம்பித்தவள்.படித்தப்படிப்பு வீணாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள் அவள்.படித்தபடிப்புக்கு ஏற்றவாரு வேலையும் கிடைத்தது.திருமணத்திற்கு பிறகு,பல தடவைகள் வேலைக்கு போகாதே என்று பாலா கூறினான்.ஆனால் அவளோ அதை காதில் வாங்கவில்லை,அந்த கோபம் இன்னும் அவனுக்கு, தர்ஷன் பிறந்த சமயம்,அவளின் பெற்றோர்கள் அவள் இருந்த தெருவில் இருந்தார்கள்.அது அவளுக்கு வசதியாக இருந்தது,அவளின் விடுப்பு முடிந்து வேலைக்கு போக ஆரம்பித்தவுடன்,தர்ஷனை காலையில் அவள் அம்மா வீட்டில் விட்டு விட்டு,மாலை வேலை முடிந்து வரும்போது,அவனை அவளுடன் அழைத்து வந்துவிடுவாள்.
பாலா எந்த உதவியும் செய்து தரமாட்டான்.எதுவும் கேட்டால் வேலையை விடு என்பான்,அதனால் அவள் எந்த உதவியும் கேட்க்கமாட்டாள்,எவ்வளவு வேலை என்றாலும் அவள் தனியாகவே செய்து முடித்து விடுவாள்.ஓராண்டு முன்னதாகதான் அவளின் பெற்றோர்கள் இடம் மாறி சென்றார்கள். அவர்கள்அருகில் இருக்கும் மட்டும் காவியாவிற்கு உதவியாக இருந்தது,தற்போது அதுவும் கிடையாது.
எவ்வளவு கஷ்ட்டம் என்றாலும் அவள் வேலையை விட யோசித்தது இல்லை,அவள் வேலைக்கு போவதே சிறிது கலகலப்பாக இருப்பதற்கும் தான்,அதை இழக்க அவள் தயாராக இல்லை தற்போது,அவள் விருப்பபட்டு தேடிய வேலை இப்படி பலவற்றையும் சோசித்துக்கொண்டிருந்த அவள் அப்படியே தூங்கிப்போனாள்.ஐந்து மணிக்கு அலாரம் அடித்தது, காவியா எழுந்து,சுறுசுறுப்பாக அன்றைய வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டாள்.