வயசானால் அப்படித்தான்!
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 11,807
ஒரு முதியவர் டாக்டரிடம் சென்றார்.
“சொல்லுங்க பெரியவரே, என்ன பண்ணுது உங்களுக்கு?” என்றார் டாக்டர்.
“கண்ணு முன்னால பூச்சி பறக்கற மாதிரி இருக்கு, டாக்டர்!”
“அப்படியா! உங்களுக்கு என்ன, இப்போ 70, 75 வயசு இருக்குமா? அதான் காரணம்! வயசாவதன் அடை-யாளம்தான் இது!” என்றார் டாக்டர்.
“என்ன சாப்பிட்டாலும் ஜீரணமே ஆக மாட்டேங்குது டாக்டர்!”
“இதுகூட வயசாவதன் அடையாளம்-தான்!”
“முதுகு ரொம்ப வலிக்குது!”
“கரெக்ட்! வயசாகுதில்லியா, இந்த மாதிரி பிராப்ளமெல்லாம் வரத்தான் செய்யும்!”
“கை, காலெல்லாம் ரொம்பக் குடைச்-சலா இருக்கு, டாக்டர்!”
“சிம்பிள்! உங்க வயசுதான் இதுக்கும் காரணம்!”
முதியவர் கடுப்பாகிவிட்டார். “என்ன டாக்டர், எதைச் சொன்னாலும் வய-சாகுது, வயசாகுதுன்னே சொல்லிட்டிருக்-கீங்க. உங்களால என்னைக் குணப்-படுத்த முடியுமா, முடியாதா… சொல்-லுங்க! நான் வேற டாக்டர்கிட்டேயாவது காண்பிச்சுக்கறேன்!” என்று சீறினார்.
“சட்டுனு உணர்ச்சிவசப்பட்டு எமோஷன-லாயிடறீங்களே, இதுகூட வயசாவதன் அடையாளம்தான் பெரிய-வரே!” என்றார் டாக்டர் சிரித்துக்-கொண்டே.
– 26th செப்டம்பர் 2007