கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 2, 2025
பார்வையிட்டோர்: 1,240 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நித்தியா. எடி நித்தியா! எங்கேயடி போய்விடாய்?” என அழைத்த படியே வாசல் பக்கம் வந்த கமலா கிழக்குப்புற வேலியருகில் மல்லிகைப்பந்தலின் கீழ் நித்தியாவைக் கண்ணுற்றாள். இரட்டைப் பின்னல். கழுத்து வழியாக மாலையாக முன் தொங்க நித்தியா குனிந்த நிலையில் மல்லிகை மலர்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவள் குனியும் வேகத்தில் அவள் கட்டியிருந்த அரைப்பாவாடை குடைபரப்பி மேலெழ, உள்ளாடை எட்டிப்பார்க்கிறது. பெருந்தொடைகள் இரண்டும் வாழைத்தண்டாய் மின்னுகின்றன. அவள் இன்னும் மலர்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள். 

“இஞ்சை வாடி!” ஆத்திரத்துடன் கூச்சலிட்டாள் கமலா. “உதென்ன கோலம்-உதென்ன உடுப்பு, நீ இன்னும் சின்னப் பிள்ளையோ? உனக்கு இன்னும் தான் புத்தியில்லையோ?” என்று கடிந்து கொண்டாள். 

நித்தியாவுக்கு ஆச்சரியாமாக இருந்தது. அம்மா என்ன சொல்லுகிறாள்! 

இப்பொழுதெல்லாம் நித்தியாவைக் கண்காணிப்பதிலும், கட்டிக் காப்பதிலும் மிகவும் கண்டிப்பாக இருந்தாள் கமலா. கல்லூரிக்குப் போவது போகட்டும். மற்றப்படி நித்தியாவைக் கண்டபடி வெளியில் அனுப்புவதைக் குறைத்துக் கொண்டாள். 

ரியூஷன் என்று சொல்லிக் கொண்டு அதிகாலை வேளைகளிலும், மாலை வேளைகளிலும் பாதையின் குறுக்கே பயங்காட்டி நிற்கும் இராணுவ சென்றிகளினூடே வளர்ந்த பெண்களை அனுப்புவதில் ஏற்படக் கூடிய விபரீத விளைவுகளைக் கண்டும், கேட்டும் அனுபவித்தவள் தானே. 

இதன் பிரதி பலிப்பாகவே கணவன் காசிப்பிள்ளையிடம் சொல்லி, வீட்டிலேயே வந்து பாடம் சொல்லிக் கொடுக்கும் பொருட்டு ஒரு ‘ரியூஷன் மாஸ்டரையும் அமர்த்தியாகிவிட்டது. தினமும் இரண்டு மணி நேரம் மூன்று பாடங்கள் படிப்பு, மாதம் முன்னூறு ரூபா சம்பளம். பரவாய் இல்லையே! 

முதல் நாள், நரைத்த தலையும், கரைந்த உடம்புமாய் ஒரு நடுத்தர வயதுக்காரரை ஆசிரியராய் எதிர்பார்த்தவளுக்கு ‘ஹாப்பி தலைமுடியும், கிருதா மீசையும், இறுகப் பற்றிய ‘டெனிம்’ ஜீன்சுமாய் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய ஆனந்தனைக் கண்ட கமலாவின் முகம் பேயறைந்தது போலாயிற்று. 

“என்ன தோற்றமே சரியில்லையே!” என்று அங்கலாய்த்தாள் கமலா. 

“வெளித்தோற்றத்திலே என்னடி இருக்கு? புள்ள குணமானவன். நல்ல கெட்டிக்காரனாம். முப்பது வயதுக்குள்ளேயே இந்த இளமானி, முதுமானி எல்லாம் படித்து முடித்துப் பெயரும் எடுத்திருக்கிறானாம். இவர் தான் நல்ல மாஸ்டராம்” என்று காசிப்பிள்ளை கண்டிப்பாகச் சொன்னதும் மாற்றம் உரைக்கவில்லை அவள். 

ஆனந்தன் பார்வைக்கு அழகாகத் தான் இருந்தான். முக வசீகரமும், விடையாட்டுப் பேச்சுமாய் யாரையும் எளிதில் கவரக்கூடியவன் தான். விரைவிலேயே நல்ல பிள்ளை என்ற பெயரைக் கமலாவிடமிருந்து தட்டடிக் கொண்டான். 

நித்தியா இப்பொழுதெல்லாம் எங்கும் போவதில்லை. கல்லூரி விட்டு, வீடு வந்ததும் வீட்டிலேயே தங்கி இருந்தாள். அவளை அறியாமலேயே அவளில் ஒரு குதூகலம். அன்று மாஸ்டருக்கு ஒப்பிக்க வேண்டிய பாடங்களை மனனம் செய்வதும், தனக்கு ஏற்படும் சந்தேகங்களை மாஸ்டரிடம் விளக்கம் கேட்பதற்காக,ஏற்படும் சந்தேகங்களை குறிப்பெடுப்பதுமாய்….. தொலைக்காட்சி பார்ப்பதிலோ, றேடியோ கேட்பதில் கூட அக்கறை காட்டுவதில்லை. 

இன்னும் ரியூஷன் மாஸ்டர் வர எவ்வளவோ நேரம் இருக்கிறது. நித்தியா அழகுப் பதுமையாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டுவந்து முற்றத்தில் மல்லிகைப் பந்தலின் கீழ் நிற்கிறாள். 

மாலை நேரத்தில் மந்த மாருதமும், முற்றத்த மல்லிகையின் நறுமணமும் அவளுக்கு ஒரு கிளுகிளுப்பை உண்டாக்குகின்றன. மாமரக்கிளையில் கதை பேசும் ஜோடிப்புறாக்களை பிரமை பிடித்தவள் போலப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். புளிய மரத்தின் கிளை வழியே ஓடி. மாமரத்தில் தாவி ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டோடிப் பின்னி விழும் அணிற் பிள்ளைகளின் விளையாட்டில் ஏதோ ஒரு அர்த்தம் காணமுயன்றாள் அவள். ஏதோ புரிகின்ற மாதிரியும். அதே வேளையில் ஒன்றுமே புரியாத மாதிரியும் ஒரே மயக்கமாய் ஒரே தயக்கமாய்…… 

“நித்தியா” 

கம்பீரமான அந்தக் குரல்வந்த திக்கை நோக்கித் திரும்பியவள் திகைப்பூண்டில் மிதந்தவளானாள். அவள் வதனம் அந்தி வானத்தின் செம்மை குழைக்கிறது. 

“மாஸ்டர்” 

மெல்ல உதட்டோடு முனகியவள் துள்ளி ஓடிப் போய் படிப்பறையின் கதவைத் திறந்து விட்டாள். மின்சார விளக்கின் ‘சுவிட்சை’ அமுக்கினாள். நான் ‘றெடி;என்பது போல் மாஸ்டரை உற்றுப் பார்த்தபடி ஒய்யாரமாய் நின்றாள். 

மாஸ்டர் வைத்த கண் வாங்காது அவளை விழுங்கி விடுகறாற் போல் பார்த்துக் கொண்டிருந்தார். ஜீவகளை ததும்பம் இளம் பருவகால கவிதையைப் போல் அவள் நின்று கொண்டிருந்தாள். ஒளி வீசும் விழிகளின் வசீகரமும் மதர்ந்து நிற்கும் மேனியின் மதமதப்பும் அவனை எங்கெங்கோ கொண்டு சென்றன. அவளின் கூந்தலில் சூடியிருந்த மல்லிகையின் நறுமணமும், முகத்தில் பூசியிருந்த ‘வூடோ பவுடரின் சுகந்தமும் அவனது நாசியைத் துளைத்து கிளுகிளுப்பை உண்டாக்குகிறது. 

“நித்தியா! உன்னைப் பார்க்கிற போது முத்தொளாயிரத்தில் ஒரு கவிதை தான் நினைவுக்கு வருகிறது.” 

“மாஸ்டர்! இதெல்லாம் எங்களின்ர பாடத்திட்டத்திற்குள் வருகுதோ” அப்பாவி போல் வினவினாள் நித்தியா. 

மாஸ்டருக்கு ‘சப்’பென்றாகியது. அலுத்துக்கொண்டே தோள்களை மெலிதாய்க் குலுக்கியவர். தமிழ் மொழி சட்டதிட்டத்திற்கு அமையாதது, எங்களின் மொழி நயம் நித்தியா! எங்கும் நிறைந்த இனிய தமிழ் மொழி. தேவன் தந்த தெய்வ மொழி. தேடத் தேடத் தெவிட்டாத தேறல்..; 

‘போதும். போதும் உங்கள் புகழாராம்’. அது சரி அது என்ன கவிதை? 

ஆள்காட்டி விரலை நாடியில் வைத்து தலையைச் சற்றே சரித்த வண்ணம் நிற்கும் பாங்கு! 

மாஸ்டர் அடக்கமான இராகத்துடன் பாடத்தொடங்கினார். 

புன்னாகச் சோலை புனற்றெங்கு சூழ் மாந்தை
நன்னாக நின்றவரு நன்னாடன்-என்னாகல்
கங்குலொரு நாட் கனவினுட்டை வந்தான். 
என் கொல் இவரறிந்த வாறு. 

“மாஸ்டர் இதை விளங்கப்படுத்துங்கோ! நல்ல பாட்டாக இருக்கு பிளீஸ்..” நித்தியா பரபரத்தாள். 

மாஸ்டருக்கு நல்ல வாய்ப்பாகப் போய் விட்டது. “கங்குலொருநாட் கனவினுட்டை வந்தான், அதாவது ஒரு நாள் இரவில் கனவில் வந்து என்னுடைய உடம்பைக் கையால் தடவினான்….” என்ற தலைவி எண்ணி ஏங்கினாற் போல் நீ நின்றிருந்த காட்சி. 

மாஸ்டர் திரும்பவும் விளக்கிக் கொண்டே போகிறார் விளக்கிக் கொண்டே…. 

விளக்கிக் கொண்டே போகையில் மாஸ்டரின் கை விரல்கள் அவளின் கையை மெதுவாக வருடி….வருடி வெகுலாவகமாக கை வழி சென்று, மெய் வழி முன்னேறிக் கொண்டிருந்தது. அவனுடைய கைவிரல்கள் ஸ்பரிசத்தில் அவள் கிறங்கிப் போனாள். அவனுடைய தழுவலில் அவள். மின்சாரம் பாய்வதைப் போல் ஒரு இனமறியாத புல்லரிப்பு உடலெங்கும் வியாபிக்கிறது. 

இப்பொழுது அவள் தன் கைகளை அவனுடைய கழுத்தில் மாலையாக போட்டிருக்கிறாள். அவளின் செங்காந்தள் விரல்கள் அவனுடைய தோலள்பட்டையை நெருடுகின்றன. அந்த இதமான அணைப்பில் ஒரு கோடி தாமரை அவள் இடையை வளைத்துச் சிறைப்படுத்தினாற் போல் ஓர் இன்ப வேதனை. எப்பொழுதும் இப்படியே இருந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும், மனம் அசை போடுகிறது. 

அப்போது! 

குசினி அறைப்பக்கம் கதவு திறக்கப்படும் ஓசை. ‘அம்மா வருகிறாளா?; ‘சடக்’கென இருவரும் விலகிக் கொண்டனர். நித்தியா ஏதோ எழுதுவது போல பாவனை செய்து கொண்டாள். நல்ல வேளை! கமலா அந்தப் பக்கம் வரவேயில்லை. இருவரின் இதயத்திலும் படபடப்பு. ஒருவர் முகத்தை ஒருவர் நோக்க ஒருவருக்கும் திராணியில்லை. 

“நித்தியா! இன்றைக்குப் பாடம் போதும். மீண்டும் நாளை பார்க்கலாம்” என்ற மாஸ்டரின் குரலில் ஏன் அந்தக் கரகரப்பு? எங்கோ பார்த்த படி கூறிய மாஸ்டர் அவசர அவசரமாக வெளியேறிவிட்டார். 

அதன் பின் இரு தினங்களாக மாஸ்டர் வருகிறார். ஏனோ தானோவென்று ஏதோ பாடம் நடக்கிறது. போகிறார்.. முன்பிருந்த கலகலப்பு நித்தியாவிடம் இல்லை. அவள் வதனத்தில் ஏதோ ஒரு ஏக்கத்தின் தாக்கம். ஆவலின் தூவல், உணர்ச்சிகளின் கிளர்ச்சி….. 

இப்பொழுதெல்லாம் நித்தியா இரவில் திடீரென விழிக்கிறாள். அந்த மாஸ்டருடன் நிகழ்ந்த சம்பவத்தை நெஞ்சம் இரை மீட்ட படி. அன்றும் அப்படித்தான். நித்தியா எவ்வளவு முயற்சித்தும் நித்திரை வர மறுக்கிறது. உடலெங்கும் ஒரு இன்ப லாகிரி ஊடறுத்துப் பிழிகிறது. யாரோ தொட்டது போன்ற பிரமையிற் திரும்பிப் பார்க்கிறாள். யாருமேயில்லை. மாஸ்டரின் அந்தக் குறும்புப் பார்வையுடன் கூடிய முகம் கண்ணுக்குள் நிற்கிறது. கூடவே சேகரின் கவர்ச்சியான அரும்பு மீசையுடன் கூடிய அந்த இனிய முகமும் கண்ணா மூச்சி காட்டுகிறது. 

சேகர்! அவனது மாமன் மகன். சிறு வயது முதல் ஒன்றாக விளையாடிக் களித்த பால்ய தோழன். வளர்ந்த பின்னும் விகல்பமில்லாது பழகிக் கொண்டிருந்த நாளில் ஒரு நாள். 

‘டேய் சேகர்! அந்த அல்ஜிப்ரா புத்தகத்தை கொண்டு வந்து தாடா; என்று சொல்லி அனுப்பிய போது, ‘டீ நித்தியா’ அவன் இன்னும் சின்னப் பிள்ளையில்லையடி. அவனை அடா, பிடா, என்று மரியாதையில்லாமல் கூப்பிடாதே. எதற்கெடுத்தாலும் கன்னாபின்னா என்று சிரித்துக் தொலைக்காதே.

பெண் பிள்ளை ஒரு அடக்கம் வேண்டாம். அவனோட கண்டபடி கதைக்கப் போகாதே; என்று தாய் கமலா கண்டித்தது நினைவுக்கு வருகிறது. 

சேகர் சின்னப்பிள்ளை இல்லைத்தான். அவன் முன்பிலும் பார்க்க நன்றாக வளர்ந்திருந்தான். முகத்தில் மீசை கூட அரும்பு கட்டியிருக்கிறது. குரலில் கூட ஒரு மாற்றம். பார்யிைல் ஒரு விக்ஷமம். ஆமாம் அவன் சின்னப் பிள்ளை இல்லைத்தான். அப்போ நான்…. 

அவள் கண்ணாடியை எடுத்து தன் உருவத்தை நோட்டம் விட்டாள். ஆ…அவள் கூட…. 

கண் புருவங்களில் இன்னும் கருமை படர்ந்திருக்கிறது. மார்பிலும் குரும்பைப் பரிமாணத்தில் இரு மிதப்புக்கள். கன்னங்கள் முன்பிலும் பார்க்க சிவப்பேறி இருக்கின்றன. மூக்கின் நுனியில் ஒரு சில பருக்கைகள். உடலும் சற்று ஒரு சுற்று பருத்து விட்டாற் போல. ஒரு மாதத்திற்கு முன்புதான் பார்த்துப் பார்த்து தைத்துப் போட்ட சட்டையையும் பிதுக்கிய படி உடல் மதாளித்து.. தன் தோற்ற வனப்பைப் பார்க்க அவளுக்கு நாணம் குவிகிறாற் போல்…. 

மேல் சட்டைக்கும் அரைப் பாவாடைக்கும் இடை தெரியும் இடைவெளியை மறைக்கும் பொருட்டு மேல் சட்டையைக் கீழ் இழுத்து விடுகிறாள். 

மன உளைச்சலும், உடல் உளைச்சலும் உலுக்கி எடுக்க கட்டிலில் எத்தனை நேரம் படுத்திருந்தாளோ.. நிமிர்ந்து படுத்திருந்தவள் எப்பொழுது புரண்டாளோ.. அவளுக்கே தெரியாது. இப்பொழுது அவள் குப்புறப் படுத்திருக்கிறாள். அவளின் கைகளுக்கிடையில் தலையணை சிறைப்பட்டுச் சிதைகிறது. முழங்காலுக்குக் கீழே கால்கள் இரண்டும் மேலெழுந்து ஒன்று மாற்றி ஒன்று மெத்தையில் தாளம் போடுகின்றது. இவளுக்கு என்ன தான் வந்து விட்டது? 

சுவர் மணிக்கூடு ஒரு தடவை அடித்து ஓய்கிறது. பன்னிரண்டரை மணியோ, ஒரு மணியோ, ஒன்றரையாகக் கூட இருக்கலாம். அவளுக்கு நித்திரை வரவேயில்லை. வயிற்றில் ஏதோ பிடுங்கித் தின்னுகிறாற் போல் குத்து. 

இடுப்பிரண்டிலும் ஏதோ கொக்கி போட்டு இழுக்கிறாற் போல் வலியெடுக்கிறது. அடித்துப் போட்டாற் போல் அசதி. 

மாஸ்டர்…. சேகர்… சேகர்…. மாஸ்டர்…. மாறி மாறி இருவரின் முகங்களும் கண்ணமூச்சி காட்டுகின்றன. உடலெங்கும் ஒர் இன்பப் பிரவாகம் எடுத்து ஓடுவதாய் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு. கூடவே உட்பாவாடை ஈரமாகி ஒரு ‘அரியண்ட` உணர்வில் தாயை எழுப்புகிறாள். 

தாயின் முகத்தைக் கூட பார்க்க கூச்சப்பட்டவளாய் முகத்தை மூடியவாறு விம்புகிறாள். 

‘எடி இதுக்கேன் அழுகிறாய்? நீ பக்குவப்பட்டு விட்டாய். நீ இனிச் சின்னப்பாப்பா இல்லை. பெரிய பிள்ளை நீ போய் கட்டிலில் இரு வாறன்.: என்ற படி நல்ல காரியத்தைக் கணவனுக்குக் கூற வெளியில் ஓடுகிறாள். 

நித்தியா நாணி தலை கோணியவாறு தலை முழுகி, பட்டுடுத்தி, பூச்சூடி, புது மணப் பெண் போல் சர்வலங்கார பூஜிதையாக கையில் தாம்பூலத்துடன் பெரியோரிடம் ஆசி பெறும் காட்சியை மனதில் நினைத்துப் பார்க்கிறாள். 

முற்றத்து மல்லிகை மொட்டெல்லாம் மலர்ந்து ‘கம்’ மென்று மூக்கைத் துளைக்கிறது. 

– ஞானம், 2007.

– என்னுயிர் நீ தானே! (சிறுகதைத் தொகுதி), முதலாம் பதிப்பு: மார்கழி 2018, கவிதா நிலையம், தும்பளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *