முற்றுகை




(1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சரசு வேலைக்குப் புறப்பட்டாள்.
சேலைக்கு மேலாக இறுகக்கட்டிய படங்குச் சாக்கு கன மாய் உறுதியாய் இருந்தது. நான்காக மடித்திருந்த எட்டு எடுத்து முழ வேட்டியைத் தலையில் போட்டுக் கூடையை கயிற்றை உச்சந் தலையில் மாட்டிக்கொண்டபோது, இவை யாவும் வேண்டாத மேலதிக பாரங்கள் என்று மனம் மெல் லப் பொறுமி முணுமுணுத்தது.

லயத்திலிருந்து ரோடு வரைக்கும் இறங்கும் இருபது சில்லிட்டு கருங்கல் படிக்கட்டுகளும் ஐஸ் துண்டங்களாக வேர்த்திருந்தன.
ஏற்கனவே மலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சில அவள் வயதுப் பெண்கள் நின்று “சுருக்காவா” என்ற னர். கூட்டத்தில் சங்கமம் ஆனதும் ஒருத்தியின் கோடிச் சேலை சட்டென சரசுவின் கண்களில் பட்டது.
“கோடியா?”
அவள் சிரித்தாள்.
“நல்லா இருக்குதடி” விரல்கள் வாஞ்சையோடு சேலை யைத் தடவின. “அதுக்குள்ளே மலைக்குக் கட்டி நாசம் பண் ண்ணுமா?”
“ஒரு நாளைக்குத்தானே?”
“எப்ப வாங்கினே?”
“நா எங்கே வாங்கிறது? அண்ணன் வாங்கிட்டு வந்திருக்குது”
“டேயப்பா! கொழும்புக்காரக வந்திருக்காகளோ?” எல்லோரும் சிரித்தனர்.
அந்த தோட்டத்திற்கு நேர் எதிரே இருந்த இன்னொரு தோட்டத்துத் தேயிலை மலைகளின் உச்சியில் வெயில் விழுந்து மங்கியிருந்தது.
அது கீழிறங்கி பெரிய பள்ளம் போலிருக்கும் – இப்போது பனிப்புகார் மூடியிருக்கும் – நாட்டுக்கும் தங்கள் தோட்டத் துக்கும் வர இன்னும் அரைமணி நேரமாவது ஆகும்.
ரோடிலிருந்து குறுக்குப்பாதை வழியாக இறங்கத் துவங் கினர். நெருக்கமான தேயிலைச் செடிகளின் பக்கவாதுகள் உரசுப்பட்டு ஆடி பனி முத்துக்களால் கால்கலை நனைத்த போது சர்வாங்கமும் புல்லரித்து எரிச்சலாக வந்தது.
“இன்னைக்கு எந்த மலை?”
“பதினெட்டு”
“ஐயோ சவக்காரம் கொண்டார மறந்துட்டேன். அட்டை புடுங்கித் திங்கப்போகுது”
“பயப்படாதே! நான் கொண்டாந்திருக்கேன்”
மலையில் கங்கா ணி கத்திக்கொண்டு நிறை போட்டுக் கொண்டிருந்தான். வீட்டிலேயே அலங்காரத்தை முடித்துக் கொண்டவர்கள் வந்ததும் நிறை பிடித்தனர். மற்றவர்கள் படங்கை உதறிக்கொண்டிருந்தார்கள்.
“சரசு சவர்க்காரத்தையும், புகையிலையையும் சேர்த்து காலில் தேய்த்துக்கொண்டு நிறைக்கு ஏறினாள். கோடிச்சேலை கட்டியிருந்த தெய்வானை பக்கத்து நிறை பிடித்தாள்.
அவர்களுக்குப் பேசுவதற்கு நிறைய விசயங்கள் இருந் தன. தெய்வானையின் அண்ணன் கொழும்பிலிருந்து வந்திருக் கின்றான். அவனுக்குத்தான் சரசுவைக் கேட்டிருக்கிறார்கள். அப்புறம் என்ன?
கொஞ்சநேரம் ‘பொலியோபொலி’ சத்தமாக இருந்தது. அந்தப் பக்கமாக “லோ லோ” என்று கத்திக்கொண்டுவந்த கங்காணியை நிறுத்தி, “பொலி சொல்லுங்க கங்காணி யாரே” என்றனர் இருவரும். அவர் பொலி சொன்னால் கூடை வழியுமாம்! அவர் வாய் அவ்வளவு ராசியாம்!
ஐஸ்…
மிகவும் பொருத்தத்தோடு பொலிசொன்னார் கங்காணி.
இரண்டு மூன்று மரம் கொழுந்து எடுத்த பிறகு தெய் வானை ரகசியம்போல் “அப்பா ராத்திரி அண்ணனுக்கிட்டே சொல்லிருச்சு” என்றாள்.
“என்னென்னு?”
“இப்படி ஒன்னைக் கேட்டிருக்கின்னு”
“ம்” கனமான பொருள் ஒன்று நெஞ்சுக்குள் விழுந்த மாதிரி கனத்தது மனம்.
‘அண்ணணனுக்கு இன்னம் கொஞ்சம் சொணங்கிச் செய் யணும்னு நெனைப்பு போலே இருக்கு. ஆனா அம்மா ஒடம்பு இருக்கிற நெலமையிலே சொணங்க முடியாது அப்படீன்னு அப்பா சொல்லிடுச்கி’
அங்கு ஒரு யந்திரம் பழுதாகி விட்டது. ஆகவே இவள் தேவைப்படுகிறாள்… அதுவும் அவசரமாக.
இந்த சின்ன வட்டத்துக்குள் அந்த வாழ்க்கையின் ‘மகத் துவம்’ அடங்கிவிட்டது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
அவளுக்கு முன்னால் பத்து யார் தூரத்தில் இருந்த முருங்கை மரக் கிளையில் ஒரு வாலாட்டிக் குருவி “கிறீச் கிறீச்” என்று குரல் கொடுத்தது. ஒவ்வொரு குரலுக்கும் வால் பணிந்து, பணிந்து உயர்ந்ததை. அழைப்பாகக் கொண்டோ, என்னவோ இன்னொரு குருவியும் விர்ரென்று பறந்துவந்து அமர்ந்தது. இரண்டும் ஜோடியாக மாறி, மாறி கத்தின. பின்னர் பறந்தன.
வெய்யில் விழத் துவங்கியது. அவர்களுக்கு முன்னால் நீண்டு ஏறுமுகமாக ஓடிய மழை ஒரு இடத்தில் தேங்கிக் ‘குப்’பென்று திரைபோல் எழும்பி உயர்ந்திருந்தது. நீர்க்க சியும் கற்பாறைகளையும் அதனுள் கருமையையும், கண்டமா கக் கொண்டிருந்த அந்த மலையின் உச்சியில் நீலகண்டனின் உச்சிப் பிறைபோல் வெய்யில் மரங்களின் பின்னால் மினு மினுத்தது.
மாலையில் சரசுவின் வீட்டிற்கு அந்தக் கொழும்புப் பையன் வந்திருந்தான். அவன் வந்த நேரம் சரசுவையும் அவள் அண்ணன் பழனியையும் தவிர வேறொருவரும் இல்லை.
“வா ஓய்” என்று வரவேற்றான் பழனி. இருவரும் திண் ணையில் அமர்ந்தார்கள். உள்ளே சரசு அடுப்பை பற்றவைத் தாள் தேனீர் ஊற்ற.
“எப்படி இருக்கு கொழும்பு?” என்றான் பழனி.
‘இருக்கு”
“எங்கே வேலை செய்யிறே?”
“ஒரு இரும்புக் கடையிலே”
“என்ன வேலை?”
“நாட்டாமை வேலைதான்”
நாட்டாமை என்ற சொல் பழனிக்குப் புதிது. ஆகவே ‘என்ன ஆமை” என்று கேட்டுவிட்டுச் சிரித்தான்.
அடுத்த வீட்டில் இருக்கும் வடிவேல் கங்காணி அந்தப் பக்கமாகப் போனவர் நின்று பார்த்துவிட்டு “போடு சக்கை” எப்படீ வந்தே? என்று கேட்டுக்கொண்டே வந்து திண்ணை யில் அமர்ந்தார். அவருக்கு எப்பவும் எதிரேதெரியும் அனைவ ருமே சக்தி சொரூபங்கள்தான்!
‘கொழும்புக்குப் போனதும் சிலு சிலுன்னு ஆளே மாறிட்டியே’ என்று பெருமைப்பட்டுக்கொண்டதை உள்ளே சரசுவும் அனுபவித்துச் சிரித்தாள். தற்செயலாக அங்குமிங்கு மாகப் போகும்போது லேசாகக் கவனித்ததில் அவளும் அப் படித்தான் எண்ணினாள்.
‘என்ன வேலை என்ன சம்பளம்’ என்று கங்காணி கிண் டிக்கொண்டிருந்தார். கடைசியாகச் சொன்னார் “இஞ்ச பாரு! இப்படி கொழும்பு கண்டின்னு போனா நஷ்டம் நமக் குத்தான் பாத்துக்க. ஒரு நாளைக்கு அஞ்சு ரூபா சம்பளங் கிறே, ஆனா வீடு இல்லே. இங்கே மூணு ரூபா, ஆனா வீடு இருக்கு. கணக்கு எல்லாம் ஒண்ணுதான். ஆனா அங்கே நீ அநாதை, இங்கே அப்படி இல்லை. ஒனக்கு ஒண்ணுன்னா தட் டிக்கேக்க ஒரு பட்டாளமே ஓம்பின்னாலே வரும்டீ…’
கொழும்புப் பையன் சிந்தனையிலாழ்ந்தான். கொழும்பு நகரின் ராஜபாட்டைகள் போன்ற ரோடுகள், பெரிய பெரிய கட்டிடங்கள். எப்பிடியாவது நாலு காசு தேடமுடிகின்ற வாய்ப்பு, இத்தனைக்கும் மேலாக அறிவை எந்நேரமும் சுறு சுறுப்பாக முடுக்கிக்கொண்டிருக்கும் சுற்றாடல் இவை அனைத் தும் அவனுக்குப் பிடித்திருந்தன. ஆனால் மனதில் எதிர்கா லம் என்பது கேள்விக்குறியாக வளைந்து நின்றது.
கங்காணி தொடர்ந்தார். ‘ஒனக்கு கல்யாணம் கூடுது போலிருக்கே…’
‘ஆமா’.
“தேள்வை முடிஞ்ச பொறகு ‘இதை’ எங்கே வைக்கப் போறே. இங்கேயா இல்லாட்டி கொழும்புக்குக் கூட்டிக் கிட்டு போகப்போறியா?”
சரசு செவியைக் கூர்மையாக்கிக்கொண்டு கவனித்தாள்.
“இனிமேதான் யோசிக்கணும்”
“ஒங்க அப்பாரு என்ன சொல்றாரு?”
“அவரு இங்கேயே வரச்சொல்றாரு”
“அதாண்டீ ஞாயம்! ‘செட்’டுப் பயலுகளாகச் சேர்ந் துக்கிட்டு தேன் எடுக்கப் போவிகளே அந்த பம்பரைக் கூட்டை பார்க்க இல்லையா? ஒரு ஈயிக்கி ஒண்ணுன்னாலும் எல்லாம் சேர்ந்து என்னமா துடிச்சிப் போகுது! என்னமா வெரட்டி அடிக்குது! நாமளும் அப்படித்தான் இருக்கணும்”
“இங்கேதான் வேலை கிடைக்க மாட்டேங்குது, பேரு பதிய மாட்டேங்கிறான்”
“நாம சண்டை போடுறது பத்தல்லே” மூவரும் சிரித்தனர்.
சரசு மூவருக்கும் தேநீரைக் கொண்டு வந்து தன் அண் உற்சாக ணனிடம் கொடுத்தாள். வடிவேல் கங்காணியார் மாக “ஆத்தாடி புதுப்பொண்ணு வருதுடா புதுப்பொண்ணு வருதுடா” என்று கிண்டல்செய்தார்.
அந்தக் கொழும்புப் பையன் புன்சிரிப்போடு தலையைக் குனிந்து கொண்டான்.
– ஒரு கூடைக் கொழுந்து, முதற் பதிப்பு: ஏப்ரல் 1980, வைகறை பப்பிளிகேஷன்ஸ், இலங்கை.