மீண்டும் எழுதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2026
பார்வையிட்டோர்: 74 
 
 

உடைந்த மனிதன் தன்னை மீண்டும் கட்டியெழுப்புவதை விட வலிமையானது எதுவும் இல்லை.

கண்ணன் என்ற ஒரு சின்ன பையன் இருந்தான் அவன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். அவன் விடுமுறை நாட்களில் தன் மாமா வீட்டிற்கு செல்வான் எதற்கு செல்வான் என்றால் தன் மாமி அவனுக்கு நிறைய கதைகளை சொல்லி அவனுக்கு ஊக்கத்தையும் ஆர்வத்தையும் உண்டாக்குவார்.

அதேபோல் இந்த விடுமுறைக்கும் கண்ணன் தன் மாமா வீட்டிற்கு சென்று இருந்தான். மாமி கண்ணனை பார்த்து என்ன நடந்தது ஏன் சோகமாக இருக்கிறாய் என்று கேட்டார் அதற்கு கண்ணன் எனக்கு படிப்பே ஏற மாட்டேங்குது என்னுடைய ஆசிரியர்கள் என்னை பார்த்து நீ உருப்படவே மாட்ட என்கிறார்கள் என் நண்பர்களும் என்னை பார்த்தும் பார்க்காதது போல செல்கிறார்கள் என்றான் அதற்கு மாமி இதற்காகவா உடைந்து போயிருக்கிறாய் என்று சொல்லி மாமியார் அவனைப் பார்த்து ஒரு விவசாயிக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள் அதில் மூத்தவனும் இளையவனும் நன்றாக படித்து படிப்பை முடித்து விட்டார்கள் கடைசி மகனுக்கு படிப்பு ஏறவில்லை இதை நினைத்து நினைத்து அவன் மிகவும் மனமடைந்து போனான் தன் தகப்பனுக்கு வயது சென்று உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டது தன் தகப்பன் கடைசி மகனுக்கு நான்கு மாட்டை வாங்கி கொடுத்துவிட்டு மற்ற இரண்டு மகன்களுக்கும் தன் சொத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு அவன் மரித்து விட்டான் இப்பொழுது கடைசி மகனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை மற்ற இரண்டு மகன்களும் சொத்தை எடுத்துக் கொண்டு வெளியூருக்கு சென்று விட்டார்கள். இப்பொழுது கடைசி மகனுக்கு இருக்கிற ஒரே சொத்து நான்கு மாடுகள் மட்டும் தான் அவன் ஒரு தீர்மானம் எடுத்தான். என்னை நானே தான் செதுக்கி கொள்ள வேண்டும் என்று, அந்த நான்கு மாட்டையும் வளர்க்கத் தொடங்கினான் அந்த மாடுகள் சாணம் அதிகமாக போட ஆரம்பித்தது, மாட்டுக்குத் தேவையில்லாதவகைகள் மனிதனுக்கு தேவை என்று எண்ணி அந்த சானத்தை எல்லாம் நிலத்தில் பரப்பி விட்டு சந்தைக்கு சென்று ஒரு மூட்டை மாங்கொட்டைகளை வாங்கி உழந்து தன் நிலத்தில் விதைத்தான் ஒரு சில வருடத்திற்கு பிறகு எல்லாம் மரம் ஆகிவிட்டது ஒரு பெரிய இடத்தை வாங்கி மாந்தோப்பை வைத்தான் இப்பொழுது அவன் ஒரு மிகப்பெரிய விற்பனையாளராக இருக்கிறான். அவன் வேற யாரும் இல்லை உன் மாமா தான் அவன் என்று மாமி சொன்னார். இப்போது கண்ணனுக்கு ஒரே ஆச்சரியம் மாமி கண்ணனை பார்த்து “உடைந்து மனிதன் தன்னை மீண்டும் கட்டி எழுப்புவதை விட வலிமையானது எதுவும் இல்லை” என்றாள்.

– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *