மாமனார்
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 16,380
”என்ன மீனு சந்தோஷமா இருக்கே, ஏதாவது விசேஷமா ?- கணவன் ராஜேந்திரன் கேட்டான்.
”எங்க அப்பா கேரம் டோர்னமென்ட் விளையாட திருச்சி வந்திருக்காராம், முடிச்சுட்டு நம்ம வீட்டுக்குத்தான் வர்றாராம்”!
”வரட்டும்…வரட்டும்…உன் அப்பா டிஸ்டிரிக்ட் லெவல்ல பெரிய சாம்பினயன்தானே? என்கிட்ட மோதி ஜெயிக்கட்டும், நான் ஜெயிச்சா உனக்கு ஸ்பெஷல் பரிசு வாங்கித் தர்றேன்! என்றான்.
”நீங்களாச்சு…உங்க மாமனாராச்சு…”என சமையலறைக்குப் போனாள்.
மாமனாரும் வீடுவந்து சேர்ந்தார, உபசரித்து விருந்து முடிந்து சிறிது ஓய்வுக்குப்பின்….சவால் போட்டி ஆரம்பமானது, விளையாட்டு சூடுபிடித்தபோது சாம்பியன் மாமனார் கைவரிசையைக் காட்ட, ராஜேந்திரனும் சளைக்காமல் போட்டி போட்டான். கடைசியாய் சிவப்பு காயினை மாமானார் ஸ்ட்ரைக்கரால் தட்ட முயல, ஸ்ட்ரைக்கர் நேராக குழிக்குள் விழுந்து மைனஸ் ஆனது. ராஜேந்திரன் சுலபமாக ரெட்காயினைத் தட்டி, டசாம்பியனை தோற்கடித்தான். மறுநாள் ஊருக்குக் கிளம்பும் முன்பு…”எப்படிப்பா தோத்தீங்க?” என்று கேட்டாள் மீனு.”
”உனக்கு ஸ்பெஷல் பரிசும் வரணும், எனக்கு மாமனார் அந்தஸ்தும் குறையக்கூடாதும்மா, கண்டுக்காதே!” என்றார் அப்பா.
– 21-12-2015
பதிவிற்கு நன்றி