கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 11, 2025
பார்வையிட்டோர்: 123 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அப்பப்பா என்ன புழுக்கம்…” அதன் கடுமை… களை உள்ளே கிடந்துகொள்ளப் பொறுக்காமல் அலுத்து வெளியே முற்றத்தில் வந்து குந்தியிருந்தாள் திரேசா. காற்றுச் சிலுசிலுத்து வீசுகிறது. காற்று மேலில் பட்ட தும் கொஞ்சம் இதமாகத் தென்பட்டது. வியர்வையை முற்றாகத் தணிக்கும் போக்கில் தாவணியை நிலத்தில் எடுத்து விட்டாள். சேலை காற்றில் துடித்துப் படபடக் கிறது. அலைகளின் வருகையால் ஆற்றுப் படுக்கையில் ஏற்படுவது போன்ற துடிப்பில் வளைந்து நெளிகிறது தாவணி. மேல் ஊசிப்பூட்டைக் கழற்றி நெஞ்சுச் சட் டையை மேலும் தளர்த்தி விட்டாள். அதன் இடைவெளி யூடாக தனக்கட்டுகள் வெளியே சுதந்திரமாக எட்டிப் பார்க்கின்றன. மெழுகு தடவியது போல் இருக்கும் அதன் பரப்பில் பொட்டுப் பொட்டாக வியர்வை அரும் புகள் மினுமினுத்தன. அவற்றைக் கைவிரலால் வளித்து எறிகிறாள். 

காற்றின் ஆர்வாடலில் நெஞ்சின் புளுக்கம் தணி கிறது. காற்றின் சுகந்தத்தில் உடல் குளிவடைய; இனம் தெரியாத ஆவல் கொடியாகி அலைகிறது. 

“சே எனக்கு இப்படியெல்லாம் ஆசை இருக்கக் கூடாது. இப்படியும் ராச்சத உணர்சியா…? என் நினைப் பில் ஒன்றி விட்டதை நினைக்க வெட்கமாயும் அதே கணத்தில் துக்கமாகவும் வருகிறதே..வெளியில் இதமாக இருந்தாலும் உடலின் காங்கையின் கொடுமை அப் பப்பா எவ்வளவு அகோரம் அதன் ஒரு கூறில் கனன்று எரிகிறதே …” 

பார்வையில் எதையோ எவரிடமிருந்தோ எதிர் பார்த்து நிற்பதை உணர்த்துகிறது. ஒற்றையடிப் பாதை யின், மேலே மேய்கிறாள். அந்தப் பாதையின் ஏற்ற வற்றங்களுக்குத் தக கண்மலர்கள் குவிகின்றன. விரி கின்றன. பாம்புபோல் நெளியும் பாதையில் ஒரு அணுவும் அகலாமல் ஆராய்ச்சி… 

சேரிக் குடியிருப்பு … 

சித்திரை மாத நிலவு, அவள் உண்மை நிலையை நிர் மலமாக்கி வெளிப்படுத்த உதவுகிறது. நிலவின் கதிர் களில் தோய்ந்த இடம் அம்மண மாகி ஒளிருகிறது. தரையைத் தமது காலடிக்குள் மறைத்து விட்டதன் வெற்றிப் பெருமிதத்தில் மகிழ்ந்து நிற்கின்றன; புல்பூண்டு கள். அதன் முக்கால்பங்கும் ஆட்சி செலுத்தும் அறுகு பசுமையாகி தரை முழுவதையும் மறைத்தற்கு நான் தான் காரணம் என்ற ஆணவ முனைப்பில் பரவிப் படர்ந்து தளிர் இலைகளை நீட்டிப் பூரிக்கின்றன. காற்றுவீச்சில் புல் நுனி நாக்குகள் அசைகின்றன. 

பள்ள நிலத்தில் இரு நீர்த் தேக்கம்; அ தன் அட்ட திக்குகளும் சேறுதடித்து பொருக்காகி வெடித்து வலைவிரிப் பாக விரிந்திருக்கிறது. கோவணத்துடன் நின்று மலை போலக் குவித்துவிட்டிருக்கும் அழுகல் வெங்காயத்தை அலுக்குமட்டும் கிண்டிக் கிளறிக் களைத்து விடப்பட்டிருக் கும் குவியல்களின் அருவருக்கத்தக்க மொச்சை குப்பென மூக்கைத் துளையிடும் புதியவர்களுக்கு. 

அவளுக்கு அந்தச் சூழல் பழக்கப்பட்டவை. அத னைப் பற்றிக் கவலை அவளுக்கில்லை. எல்லாம் ஒரே நினை வில்… புல்தரையில் புரதட்டை செய்கிறாள். அவள் உட லின் வேட்கைக்கு இத்தனை தாகமா ? … காட்டுத்தீயாகி கனன்றெரியும் வேதனை..வலி..உச்சநிலையில் உயிர்த்து தவழ்கிறது. விலாப்புறத்தில் சுள் சுள் எனக் குத்துகிறது. குப்புற விழுகிறாள்..உழருகிறது உடல்.. நோய் முற்றி அவஸ்தைப்படுகிறாள் .. அவள் விபச்சாரி. அதை மறைக் கும் போக்கு அவளிடமில்லை. 

நோயைத் தீர்ப்பதற்கு அவளிடம் பணமில்லை. எல் லாம் அந்த உடல்தான் மூலதனம். இதுவரையும் அதன் ஆதாரம்… நோயில் தளர்ந்த உடல்… 

நினைப்போ…? 

கைகால்களை நீட்டிச் சோம்பல் முறிக்கிறாள். உடல் புழுவாகி வளைத்து துடிக்கிறது. விழிகளிலே கவலையின் தேக்கம். வறுமையின் கோரப் பிடியிலிருந்து தப்பிக் கொள்ள விளைந்து நோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் அவலம். இளமை இன்னமும் இருப்பதாக உணரமுடிய வில்லை. பட்டமரமாகி தளிர் ஒன்றேனுமின்றி காலப் போக்கில் விறகுடன் விறகாக ஒன்று கூட்டி அடுக்கி சுடுகாட்டில் பொசுக்கப்படும் நாளை எதிர்பார்க்கும் அவளை இதுவரை தாங்கிக் கொண்டிருக்கும் ஒன்றில்லா விட்டால்… 

அடிச்சுவடே இல்லாதொழிந்திருக்கும். 

இன்றைய பொழுது ஏதாவது கிடைத்தால் தான் உண்டு. சந்தர்ப்பத்தைப் பார்த்து ஏங்கி நிற்கிறாள். நோயின் சுமையைக் கூட குறைப்பதற்குக் கூட பணம் தற்சமயம் இல்லை. இன்றைய இரவு ஒளி உள்ளதாகி ஏதாவது கிடைக்காதா என்ற நிலை. இனிமேலும் முன் போல் தொழில் முறையில் அதிக கவனம் செலுத்த முடியாது. அவ்வளவுக்கு அவள் உடல் தன்வயமிழந்து விட்டது. இன்று எப்படியும் பல்லைக் கடித்துத் தாங்கிக் கொள்வது என்ற தீர்மானம். ஆனால் இதயம் பலனற்றுப் படபடக்கிறது. அவளை அறியாமலே ஒரு பயம்… அதன் வயமாகி துடிக்கும் அவலம். 

கண்களை உருட்டி உருட்டி விழிக்கிறாள். இதயம் மப்பும் மந்தாரமுமாகி மூடமிட்டிருந்தது. 

கண் இதழ்கள் அவலமாகத் துடிக்கின்றன, இத யத்தின் ஒருமூலையில் காற்றில் சுடராகி ஒளிரும் உணர்ச்சி 

அன்பு ஒன்றே ஒன்றை ஏந்தி நிற்கிறது… 

புஸ்பாவின் வாழ்வு…?

சிரித்து ஒளிசிந்தும் முகம் எப்பொழுது குளிர் பொருந்திய பால்நிலவாகி பிரகாசமாக நித்திய பொலிவுடன் திகழ வேண்டும். மலர் படுக்கையாகி இதமளிக்க வேண்டிய வாழ்வு… தன்னைப்போல் வேல் முள்ளாகி கசந்துவிடக் கூடாது, என்ற தணியாத ஆவல் உடலை உயிருடன் ஒட்டவைத்திருப்பதில் முக்கிய நோக்கம்… 

மனிதர் ஒவ்வொருவரின் அழிவில் தான் இன்னொரு வரின் இன்பம், உதயமாகின்றதா ? … தான் அழிந்து உதிரும் சருகாகி காடு வா என்பதும் வீடு போ என்பது மாக காலம் தள்ளும் அவள் நினைவில் “தங்கை எனது தங்கை; அவள். வாழ்வாவது ஒளி உள்ளதாகட் டும்; நான் எப்படிப் போனாலும் தேவையில்லை. நான் அழிந்து கொண்டிருப்பவள். என் உண்மை நிலை அவ ளுக்குத் தெரியவேண்டாம்” தனிமையில் அலட்டுகிறாள். உள்ளுணர்வு பேசுகிறது வெறுங் காற்றில் அவள் சொல்வது காற்றுக்கு மட்டுந்தான் கேட்கிறது. 

வெட்கம் கெட்டவள் விபச்சாரி .. தான் அதை மேற் கொள்வதில் கண்ணியமாக நடந்துகொள்வதாக நினைப்பு… நாலு சுவர்களிடையில் எதைச் செய்தாலும் யாரும் பார்க்காத மாத்திரத்தில் அது கண்ணியம்.. அவளைப் பொறுத்தவரை . . . 

நினைவுகள்… பிரள்வது போல பிரண்டு திரள்கிறது. இறக்கப் போகும் தறுவாயில் தான் உண்மை என்ற ஞானம் உதயமாகின்றதா… ? உலகம் ஒரு மாயைக்கூடு அந்தக் கூட்டில் இருந்து திறந்து விடப்பட்டால்.. பொய் யானவை என்பன மெய்கள்.. மெய்கள் எல்லாம் பொய் கள்.. அதை அவர்கள் உணர்ந்து விட்டால்… 

துன்பத்தைப் புதைத்து விடலாம்… இன்பம் என்பது எப்பொழுதும் நிலைத்து நிற்குமா..? என்றாவது துன்பம் என்ற சாக்கடையுள் ஆழ்ந்து அழிந்து விடத்தானே வேண்டும். மணமில்லாத மலர் மணத்தை வீசமுடியுமா..? 

உணர்ச்சி உண்டோ இல்லையோ உயிர் இருக்கிறது. இதயத்தில் அரும்பும் உணர்ச்சி அலைகள் அலைகரையின் தாளமாகி மெல்ல மெல்ல எழுந்து மறைகிறது. அத்த னையும் வெறும் நினைவு… கிளர்ந்து பொங்கி வெடிக்கும் உள்ளக் கிளர்ச்சி…. உதிர்ந்து சருகாகி அலர்ந்து மலர்ந்து மணம் வீசாமல்.. பூவின் மொட்டிலே கருகி உருத்தெரியாமல் அழிந்து விட்டால் நீரில் மூச்சு அடங் கித் தவிக்கும் ஒருவனைப் போல்.. திணறி உதறி ஒரு வழியில் அடங்கும் . . திரும்பத் தோன்றாமலா விடப்போ கிறது. முன்னையைவிட பலமடங்காகி மீ ண்டும் இலை உதிர்காலத்து விரியும் குருத்தாகி தளைக்கிறது 

உணர்வலைகள். உள்ளக் குமுறல் .. உடலில் உரு வாகி நீண்டு முள்ளாகி நாரிப்புறத்தைக் குடைகிறது. சோர்ந்த வாழைத் தண்டாகி உடல் ஸ்திரமின்றி சரிந்து கிடக்கிறது. இளமையில் இவை ஒன்றும் அவ்வளவு சிரம மாகப் படவில்லை. சலிக்காமல் கட்டியழுதாள். உணர்ச்சி பெருகி ஓடும் ஓடையாகி நின்றது. அப்போது … 

இப்பொழுது உயிர் உடலுடன் ஊசலாடினால் போதும். ஒண்டியாக இருந்தால் இதுவரை உடலையும் உயிரையும் ஆறோ… கடலோ அணைத்து மகிழ்ந்திருக்கும். கணவன் சுப்பன் சுடலைக்குப் போவதற்கு முன்பே போக இருந்த வள் இன்றும் இருக்கிறாள். 

உடலின் ஒரு கூறாகி தொங்கும் புஸ்பா … தனிமெரு கில் … இளமை முறுக்கில் பூரித்து நிற்கும் மொட்டு கலையழகு விம்ம இளமைப் பொலிவு… மெருகு தடவப்பட்டு மலர ஏற்ற பொழுதைத் தேடி நிற்கிறாள். இதய எழில் இப் போதுதான் எடுப்பாக மலர்ந்திருக்கிறது. பிஞ்சு நுங் கின் பிதுங்கி தோற்றத்தில் பூரித்து நிற்கும் மேல் உடல் கள்ளமற்ற உள்ளம் தென்னங் குருத்தாகி சிரிக் கிறது…. உடல் குலுங்கிறது….வாழ்வு…? 

“அக்கா என்னால் உனக்கு எவ்வளவு கஷ்டம். படிக் காமல் ஏதாவது வேலைக்கு மனுச் செய்யப் போகிறேன்… அதன் உண்மை நிலையை நானும் பழகி இருக்கத்தானே வேண்டும்’ 

“இப்ப என்ன அப்படி தலைக்கு மேலான சங்கடம். அதைத் தாங்க நான் இருக்கிறேன். துன்பச்சுமை எனக் குப் பழக்கப்பட்டவை. அதை என் பக்கம் விட்டுவிடு. இன்பம் எதுவானாலும் நீ அனுபவித்து ஆகவேண்டும். உன்னைப் பூவும் பொட்டுடனும் சிரித்த முகத்துடனும் பார்க்கவேண்டும் என்ற ஆசை படித்து பட்டம் பெற்று திகழ்வதைப் பார்த்து மகிழ ஆவலாய் இருக்கிறதடீ. எனது ஆசையை நிராசை ஆக்கிவிடாதே…” 

நீ மட்டும் ஓடாகிப் போகிறாய். நான் மட்டும் நொந்து போகக்கூடாது. உன்மீது கோபம் தான் வருகிறது.  இதுவரை என்னை வளர்த்துப் பட்ட கஷ்டங்கள் போதாதென்று இன்னும் உனக்குப் பாரமாய் இருப்பதா…?” போலிக் கோபத்துடன் முகத்தைச் சுழிக்கிறாள் புஸ்பா, 

“பரீட்சை என்றாயே படிப்பதை விட்டிட்டு”

“சரிக்கா உன் எண்ணப்படியே படிக்கிறேன் போதுமா?” 

“போ போ வீணாகக் காலத்தைத் தாழ்த்தாதுபடி …” புஸ்பா புறாப் போல் இறகடித்துப் பறந்து சென்ற அழகை இமை கொட்டாமல் பார்க்கிறாள். எத்தனை மணித்தியாலம் அப்படி அயர்ந்துவிட்டாளோ நினைவில்லை. காண்பது கனவில் என்பது மட்டும் அவளுக்குத் தெரியவில்லை. 

“ணோய் … ணோய் …” 

“ணோய் … ணோய்”

இளைஞனின்குரல் கிணற்றுள் ஒலிப்பது போல செவிப்பறை யில் அதிர்வை ஏற்படுத்த துடித்துப் பதைத்து எழுந்தாள். 

அவள் இருந்த நிலையை அவன் பார்த்துவிட்டிருப் பானே, என்பதை நினைக்க வெட்கமாக இருந்தது. ஆரம் பத்தில் கக்கத்தில் கட்டிக்கொண்டு விட்டவெட்கம் இப்பொழுது வரத்தான் வேண்டுமா? உடைகளைச் சரிப்படுத்திக் கொண்டு எழுந்து நின்றாள்… 

அவள் உதடுகள் இலேசாக விரிந்தன. அந்நிலா ஒளியில் அவள் சிரிக்கிறாளா…?சிரிப்பது போன்ற பாவனை.. 

வெட்கம் கெட்ட றோசா நிர்வாண நிலையில் நிற்ப தற்குத் தயங்குவதில்லை. அதுவும் உடைகளைப் போர்த்தாமலே ஆதவனின் அரவணைப்பை நாடித் துடிப்பது போல… 

அவளும்… அவளும் வெட்கமில்லாதவள். வெட்டிச் சிரிப்பில் பல்லைக் காட்டுகிறாள். 

“என்ன வேண்டும் தம்பி…” 

“இந்தா பத்து ரூபாவை…” 

திரேசாவின் கண்களில் பச்சை நோட்டு பல நாட்களுக் குப்பின் தென்படுகிறது. இதய வேதனையை மறந்த நிலையில்… அந்நோட்டைக் கண்களால் நாறல் மீனைப் பூனை பார்ப்பதுபோலக் கூறு குறிப்பாகப் பார்க்கிறாள். 

“அப்பா பத்து ரூபாய்” … ஆச்சரியம் நீள்கிறது. உடலின் பலத்தை ஒருங்கு கூட்டியாக வேண்டும்… அதற் காகத் தன்னைத் தயார்ப்படுத்துவதுபோல நெஞ்சுப் பாரத் தில் ஐந்து விரலைப் பதித்து மெதுவாகக் கீழ்நோக்கிக் கையை வழுக்கி விடுகிறாள். 

பத்து ரூபாவைக் கொடுக்கும் அவன் திருப்திப்படும் வகையில் தன்னை அலங்கரிக்க இத்தனை வேகமா…? உள்ளே சென்றவள்; பத்து நிமிடத்தில் வெளியே வருகிறாள். 

இவள்தானா…! அவள் இளைஞனுக்கு ஆச்சரியம் தாழவில்லை. நாகரிகத்தின் மாற்றுடையில் உணர்வைக் கிழறும் போக்கில் அங்கங்களை பங்கு பங்காக்கி வெளிப் உடலோடு ஒட்டிய உடை; படுத்தும் பிரயத்தனம் இயற்கை மணத்தை இழந்தவள் செயற்கை மணத்தின் துணையை நாடியதில் வியப்பில்லை. அப்பொழுது அதன் துணை தேவை….. 

“நான் றெடி…” திரேசாவின் வாயில் உதிர்ந்த வார்த்தை… வெட்கத்தைப் பார்த்தால்… பசியைக் கட்டுப் படுத்த முடியுமா…? சொன்னால் அடங்கிவிடக்கூடியதா? 

அதுவும் அடங்குவதாய்க் காணோம்… அதுவும் அதன் தொழில்பாடும்… உணவை மென்று விழுங்கும் வரை அந்தக் குடலுக்கு… இரைப்பைக்கு ஓய்வு; ஆனால் உடலுக்கு… அதன் கூறுக்கு அழிவு. அந்த உடலை அழியவிட திரேசாவுக்கு மனமில்லை. உடல் அழிந்தால் அதன் உடன் கூடிய உயிர்…! 

அது அழியுமுன் ஏதாவது உருப்படியானதை ஆக்க வேண்டும். அப்பொழுதுதானே தோன்றியதன் பலனை அடைய முடியும். புஸ்பாவின் வாழ்வு சீராக வேண்டும் என்பது எழுந்து தேயும் தணிக்க முடியாத அவா… தான் நாளை உயிருடன் இருந்தால்தான் அது ஆகும்… அது வரை கட்டுப்படுத்த இந்தப் பணம் போதுமா…? 

“எங்கே..?” 

இளைஞன் கேள்விக்கணை தொடுத்தான்… 

வருபவர்கள் இப்படியா கேட்பார்கள் .. வருவார்கள் பணத் தைக் கொடுத்துவிட்ட துணிவில் உடனடியாக தமது சொத்தாக்கி உணர்வைக் கட்டவிழ்த்துவிடத் துடிப்பார் கள். இவர் இதற்கு முற்றிலும் புதியவரா…? குழிவிழுந்த கண்களில் அதை விளங்க முடியாத திண்டாட்டம். நேரடி யாகச் சொல்ல முடியாமல் நெருடி உள் மனதில் அடக்கிக் கொண்டே மெளனமாக அவனையே வெறிக்கப் பார்க்கிறாள். 

இளைஞன் பதில் இல்லாததைக் கண்டு இடிபோலச் சிரிக்கிறான். அவன் சிரிப்பில் அர்த்தம் இருப்பதை அவள் உணரவில்லை… மேலும் அவளைக் கலவவரப்படுத்தாமல் தணிந்த குரலில்…….. 

“அக்கா” என அழைக்கிறான் ஏகாம்பரம். அவன்அழைப் பில் ஒருவித பாச உணர்வு தொனிக்கிறது. மனிதன் எப் படியெல்லாமோ வாழ்கிறான். திரேசா இப்படி வாழ்கிறாள். அதன் காரணம் அதை அறியத் துடிக்கும் இளைஞன். அவன்தான் ஏகாம்பரம். 

அவன் நண்பன் கோணேசன் கோணல் புத்திக்காரன். பெண்மையின் உண்மை நிலையை அறியாமல் அதை வலிந்து முகரும் ஆவல் கொண்டவன். அவன் சொன்ன விபரம் ஏகாம்பரத்தை இந்த நடு இரவில் கொண்டுவந்து நிறுத்தியதில் வியப்பில்லை… 

மனிதன் பிழை விடுவது என்னமோ உண்மை அந்த பிழையை ஒப்புக்கொண்டுவிட்டால்… அவன் மனிதன்.. வாழ்க்கைப் பாதையில் ஒருபடி இடறிவிட்டால் அந்த மனி தன் மறுபடியும் தாண்டாமல் அவனைப் பிடித்து நிறுத்தி விட்டால் மேலும் உருள வேண்டியதில்லையே… 

திரேசா முதல் முறை வாழ்வில் வழுக்கி விழுந்தவள்.. அவளைக் காப்பாற்ற ஒரு வரும் ம் கிடைக்கவில்லை. தொடர்ந்து பல படிகள் உருண்டுவிட்டாள். என்ன செய் வது எல்லாம் அந்தச் சூழல்… நாகரிகம்; அவள் அப்படி யாவதற்கு என்ன நியாயம்? அதை அறிந்து கொள்ளவே ஏகாம்பரம் முனைந்தான். 

“அக்கா நான் ஒரு எழுத்தாளன் எனக்கு உங்களை அதிக சிரமப்படுத்த விரும்பவில்லை. நீங்கள் இப்படி எத னால் கொண்டுவரப்பட்டீர்கள். அதைச் சொன்னால் போதும் அதற்காகத்தான் பத்து ரூபாவைத் தர நினைத்தேன்…” 

திரேசாவின் மனதில் ஆறுதல். தாழ்ந்த கண்களில் தனி நின்மதியின் சாயல்; அப்பாடா மனதுள் சொல்லி ஆறு கிறாள். இதுவரை இருந்த அவலத்தில் இருந்து மீண்ட நிலை… என்ன தோன்றியதோ திரேசா தனது வீட்டுக் கூரையை நிமிர்ந்து பார்க்கிறாள். தென்னோலைக் கிடுகு கள் கறையான் தின்று ஈக்காகித் தொங்குகிறது. அவ ளும் அதைப்போல் ஆகிவிட்டாள் என்பதைத் தெரிவிப் பதற்காக அப்படிப் பார்க்கிறாளோ…! 

தொண்டையைக் கனைத்து குரலைச் சரிப்படுத்து கிறாள். எதற்கு..? தனது சோக நிலையை ஏகாம்பரம்முன் கழற்றிவிடவேண்டிய இக்கட்டு நெருங்கிவிட்டது. 

சாரைப் பாம்புகள் தனது செட்டையைக் கழற்றி உடல் பாரத்தைக் குறைப்பதுபோல் அவளும் அதைச் சொல்லிவிட்டால் சுமை குறையும் என்ற எண்ணத்திலா? இதுவரை தனது வாழ்க்கையை நீர் உள்ள தடாகமாக எண்னியவள் இந்தக் கணத்தில் கானல் நீர்… கரை காணா மல் நீளும்போது நீரெங்கே…? அதை அவள் அறியவேண் டிய நிலை… உண்மை; உணர்ச்சிக்குள் அமிழ்த்தி அடிமை யாக இருந்தததை அறிந்து கொண்டு விட்டாளா…? 

திரேசாவின் உள்ளத்தில் எழுந்த கற்பனை செயலில் காட்ட துடித்து நிற்கிறாள்… அவள் அன்று கன்னி… அவன் நினைவுகளுள் அமுங்கி அழியவேண்டிய காலம். அவளது துர்அதிஷ்டமாக இருக்கும்போது அத்தனை சுகத் தையும் அவள் எப்படி அனுபவிக்க முடியும்? 

விதியின் பிடியில் அவள்… உழலவேண்டுமென்று நினைக்கவில்லை. எல்லாம் அவளைத் தொடரக் காத்திருக்க அவள் உள்ளம் பூத்துப் பொலிய… சுப்பனைக் காத்திருந்து கைப்பிடித்தாள். அவன் கரத்தைப் பற்றும்போது விதம் விதமான கற்பனைகள் காற்றில் புள்ளாகி இறகு அடிக்க… நினைவை எல்லாம் அதன் போக்கில் அலையவிட்டாள்… சுப்பன் மாநகரசபைத் தொழிலாளி. 

மனித மனத்திற்குத்தான் எத்தனை ஆசை. ஆசை கள் வெறும் நீர் வட்டங்களாகி அழிந்துவிட்டால்… மனம் புண்பட்டு வாழ்க்கை இதுதானா என்ற நிலையில் இருந்த பிடிப்பு இல்லாமல் அனுபவிக்கவேண்டிய சுகம் இல்லாமல் வாழ்வது சாத்தியமாகுமா? 

அவள் இன்பம் என்ற புது உலகில் நீந்துவதற்கு முடி யவில்லை. நீந்துவது போல் நடிக்கிறாள். வாழ்க்கையும் ஒரு நடிப்புத்தானா? சுப்பனுக்குக் கிடைக்கும் சம்பளத்தை முழுமையாக அவள் கையில் கொடுப்பதில்லை. சிலவேளை பத்தோ இருபதோ தேறும். அவளாக எதையும் கேட்ப தில்லை, அவன் கொடுத்தால் தான் உண்டு. 

முகத்தைக் கோணாமல் வாழ்க்கை வண்டியைச் சீராக இழுத்துச் செல்லும் நோக்கில் அவளும் அவனுக்கீடு கொடுக்கிறாள். தடையில்லாமல் இடையில் முறிவில்லா மல்; முடங்காமல் நடாத்த வேண்டும் என்ற பிரயத்தனம். வண்டியை இழுத்துச் செல்லும் மாடுகளில் சுப்பன் ஒரு பக்க நுக சுமைதாங்கி, திடுதிப்பென்று தோன்று மின்பம் கனவில் இருந்து விழிப்பதுபோல் மறைந்துவிடவேண்டிய துர் அதிஷ்டம் திரேசாவைச் சூழ்ந்திருக்கும்போது… நாம் என்ன செய்வது. 

சுப்பன் ஒடிந்து விழுந்ததினால் மாங்கலியம், பூ, பொட்டு, பொலிவும் அழிந்து போக நிராதரவாய் பட்ட மரமாய் விட்ட திரேசாவுக்கு வருமானம் என்பதில்லாமல் அவளும் தங்கையும் எப்படி உயிரைப் பிடித்துக் கொண்டு வாழ முடியும். பிழைப்பு ? ? 

வேலை தேடி நம்பிக்கையே இழந்தவளுக்கு மனக்கண் முன் தோன்றிய உழைப்பு இதைத் தவிர வேறில்லை… 

ஒரு வழிக்கு வந்துவிட்டாள். எங்கோ தேடுவா ஏற்று தெருமுனையில் வீசியெறிந்த வெத்து டின் அவளது பிச்சைப் பாத்திரம். கைகளில் ஏந்தியவாறு சந்து பொந்து கள் எல்லாம் துளாவி ஒவ்வொரு கடைப்படியும் ஏறி இறங்குகிறாள். “ஐயா தருமம்… தருமம் தாருங்கள் கோடி புண்ணியம் உங்களுக்கு, கோடி புண்ணியம் உண்டுங்க.” 

அன்று வெள்ளிக்கிமை வாழ்வில் சந்தோஷந்துடன் வரவேற்கும் நாள்… அவளுக்கு இந்தக் கிழமை நாள் வந்ததும் அவள் உடலில் புது உத்வேகம்… அவளை வளம் படுத்த பிச்சை எடுப்பதை நம்பியிருப்பதால் அப்படி ஒரு தனிப் பிடிப்பு .. வெள்ளிக்கிழமை ஒவ்வொரு நாளும் வரக் கூடாதா என்ற எண்ணம் அவளுக்கு எழுவது உண்டு. கொழும்பு மாநகரில் உள்ள வீதிகளெல்லாம் தண்ணிபட்ட பாடு அவளது குரல் மேலெழுந்து ஒலிப்பதற்கென்றே காத்திருக்கும் நாள். 

“ஐயா தருமம்… பிச்சை…” வெயில் என்பதும் மழை என்பதும் அவளுக்கில்லை. தொண்டை கிழிய, நா வறளக் கத்துகிறாள். ஒவ்வொரு சதம் விழும்போதும் அவள் முகம் மலரும். மனதில் எழும் இன்பக் கிழுகிழுப்பு அலைகள் முகந்தில் வந்து அதிரும்; முகம் பூரிப்பில் விரி கிறது. 

அவள் டப்பாவைத் துளாவிப் பார்க்கும்போது முகம் சுருங்குகிறது. பசியை எப்பொழுது நினைக்க ஆரம்பிக் கிறாளோ அப்பொழுது மறு நினைப்புகள் வருவதேயில்லை. எல்லாம் அந்தப் பசியின் வசமாகி அவள் இயங்க ஆரம்பிக்கிறாள். அனுதாபப்பட்ட சிலர் சில்லறை போடுகிறார்கள். 

அதுதான் ஊதியம். 

தாவணிச் சேலையைத் தலையில் போட்டுக் கொண்டு கால் தள்ளாட இடுப்பில் ஒரு கையை வைத்து அழுத்தி அமுக்கி நடக்கிறாள். பற்களைக் கடித்துக்கொள்கிறாள். உடல் வலுவிழந்து நகர மறுக்கிறது. இடை ஒடிந்து விடுமோ என்ற பயம்… பேமன் தளத்தில் இருந்து டப்பாவில் உள்ள சில்லறையைக் கணக்கிடுகிறாள். நான்கு மூன்று ரூபாவரை தேறியிருந்தது. இதை வைத் துக்கொண்டு உயிரைப் பிடிக்க முயற்சி… வருகிற வெள்ளி வரை எப்படி ஓட்டுவது… பெருமூச்சுடன் நிமிர்ந்து பார்க்கிறாள். 

கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து அலை அலையாக மக்கள் கூட்டம் வெளியேறுகிறது. சிலர் அவசரமாகி எங்கோ சென்றுவிடத் துடிக்கிறார் கள்… ரக்ஸியின் கதவுகள் பல தடவை திறக்கப்படும் சத்தம் அலையை விழுங்கிய பெருமிதத்தில் உறுமிக் கொண்டு புறப்படுகின்றன. 

ரக்ஸிகளினால் கட்டுப்படாத சனத்திரள் பஸ் ஸ்டாப்பில் வந்து கூடுகிறது. பல வண்ண மலர்கள் பூமியில் மலர்ந்து நிலமடந்தையை மெருகூட்டுவதுபோல பஸ் கோல்டிங் பிளேசில் பல நிற வண்ணங்களில் யாக்கெட் அணிந்து… முழங்கால்களை மூடமறந்த நிலையில் உட லுடன் ஒட்டிய உடையில் நடக்க முடியாமல் கால்கள் பின்னமிட அன்ன நடை நடக்க முயலும் சில அழகு சுந் தரிகள் குளிர் வண்ணக் கண்ணாடி அணிந்து பஸ்டாப்பில் வந்து நின்று கொண்டு… வரிசையில் வருபவர்களை முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்தவர்கள்போல் உதடுகளை மலர்த்த; பற்கள் முப்பத்திரண்டும் வெளிப்பட; அதைச் சுற்றிய உதடுகளில் செயற்கை வண்ணம் மட்டியின் உட்பிளவை நினைவுபடுத்த… நிற்கிறார்கள்… இல்லை அந்தரத்தில் அவர்கள் குறிக்கோளை நிறைவுபடுத்தத் துடிக்கிறார்கள். 

அவர்கள் வலைவிரிப்பில் விழுந்தவர்கள் கவர்ச்சிப் பொலிவைப் பார்த்து மயக்கத்தில் கிறுங்கி இயங்க மறுக் கும் சிந்தனை அலைகள் உணர்ச்கி ஒன்றே தன் வயமாக ஆட்சி புரிய அவர்கள் அருகில் அமர்ந்து ஸ்பரிச இன்பக் கிழுகிழுப்பில் இதயத்தைப் பறி கொடுக்க; உணர்வுகள் உரச… எழும் போலி .. நாதம் எழுந்து இனம் தெரியாத பிடிப்பில் உழல்பவர்களும் பஸ் வரவை நாடி ஓடி ஏறுகிறார்கள். 

இதுகள் குடுத்து வைச்சதுகள்… நாமள் தரித்திரப் பிறவிகள். எங்களைப் போல் வாழ்பவர் எப்படி வாழ்வது..! 

அந்தக் கணத்தில் அவள் மனப்போக்கும் ஒத்து துகிறதா..? 

‘ஏன் நான்கூட இப்படி மாறிவிட்டால் என்ன? மற்றவர் களுக்காக அவர்கள் என்னை குறைபட்டுக்கொள்வார்கள் என்பதற்காக… நான் இப்படிக் கஷ்டப்பட்டுக் கண்ட மிச்சம்’ என்னைக் காண்பவர்களில் சிலர் ஒருவிதமாகப் பார்க்கிறார்களே. அப்படி யென்றால் நான் அழகா…! எனக்கு உரிய மூல ஆதாரம் என்னிடமே இருக்கும்போது.. அவர்களைப் போல் உடுத்துக் கொண்டுவிட்டால் குறைந் தவளாகிவிட முடியாது. 

சீ.. இந்த மனிதர்களை எப்படிக் கேட்பது. கேட்ப வர்கள் எல்லாருக்கும் தருமம் கொடுக்க அவர்கள் அவ் வளவு தருமவான்களா…? சிலர் முகத்தில் காறித் துப்பு வதை நினைக்க… சீ… இது என்ன பிழைப்பு என்றிருக் கிறது. சில நல்லவர்கள் இருக்கிறார்கள். பலர் தருமம் என்பதைவிட வேறு எதையோ என்னிடம் அடைய பிரயத் தனிக்கிறார்கள். பத்து ரூபாவைக் காட்டி இரவைக்கு வாறியா என்னும் பேர்வளிகள்… இப்படிப் பலரகம். 

எதிரே இருக்கும் ஆனந்தபவானில் ஒரு ரீ குடித்தால் ஒருபடியாக வீட்டுக்குப் போய்விடலாம் என்ற நினைப்பில் – தேநீரை முடறு முறித்துக் குடித்துவிட்டு நிமிர்கிறாள்… அவளுக்கு நடக்க முடிகிறது. 

வீடுவந்து சேர்ந்தாள்…! வந்ததும் வராததுமாக கணவன் முன் வேண்டிக் கொடுத்த புடவையைக் கட்டிக் கொண்டு… கண்ணாடியின் முன்போய் நிற்கிறாள். சரு கைப் புடவையின் மினுக்கத்துடன் போட்டி போட்டுக் கொள்ளும் அழகில்லை. வறுமையில் உடல் தொய்ந்து விட்டது… அதனால் சீலை அவளுக்கு மினுக்கத்தைக் கொடுக்க முயல்கிறது. 

‘மற்றவர்களுக்காக நான் எனது பசியை அடக்கிக் கொள்ள வேண்டுமா?’ பத்து ரூபாய் நோட்டுப் பேர்வழிகள் மனக்கண் முன்னே தோன்றி அவளது அந்தரத்து உதவு வதுபோல அடி மனத்தின் உணர்வுகளைக் கிண்டி விடுகிறார்கள். 

தனது அழகை அவளாலே நம்பமுடியவில்லை. கண்ணாடியைச் சற்று அப்படி இப்படி நெளித்து முகத்தையும் உடலையும் பார்க்கிறாள். இதயம் விம்மித் தணிகிறது. ஆசை அலையாகி ஆற்றுப் படுக்கையில் தாளம் இடுவது போன்ற நிலையாகி விழுகிறது. அவள் தன்னை மனம் போன போக்கில் விட்டுவிட்டாள். அவர்கள் விரித்த வலை யில்… அவள் மானத்தை மறந்துவிட்டாள். ஏகபோக சுதந்திரம். நோட்டுக் கற்றைகள் காலடியில் வந்து குவிந்தன. அன்று… வாடியமைத்தாள். 

இன்று அவள் வாடிக் கருகிய மலர். தான் விபச் சாரி என்று ஒளிவு மறைவின்றிச் சொல்கிறாள். 

இதைக் கேட்ட எழுத்தாளர் ஏகாம்பரம் மனிதனின் போக்கை நினைத்தாரோ என்னவோ பெருமூச்சு ஒன்றை உதிர்த்தி காரணத்தை அறித்த நிறைவோடு வெளியேறுகிறார். 

திரேசாவின் கையில் பத்து ரூபாய் நோட்டு இருக்கிறது. அதைப் பார்த்ததும் கண்களிலிருந்து நான்கு மூன்று துளி கண்ணீர் அதன் மேல் விழுகிறது. அந்த நோட்டிலிருந்த உயிரற்ற மனித உருவம் அந்த இளைஞனாக மாறி கேலி செய்கிறதுபோன்ற பிரமை… 

‘சீ நீயும் ஒரு பெண்ணா…!’ இதுவரை மானத்தை விற் றுப் பெற்ற லாபம்…? பணம் இன்று வரும் நாளை போய் விடும். மானம் போனால் திரும்பிவர முடியுமா…! மானம் என்பது இறங்குதுறையில்லாத தீவு அதனிடத்திருந்து வெகுதூரம் வந்துவிட்டால் திரும்பிப் போகவே முடியாது. மானம் என்பது பெண்களால் போற்றப்படவேண்டிய ஒன்று. மானத்தை இழந்து மடியில் நெருப்பை அல்லவா கட்டிக் கொண்டு அலைகிறாய். 

நான் கொடுத்த பணத்தைக் கொண்டு உனது நோயைப் போக்கிக்கொள். இதுவரை நீ பெற்ற பணம் களங்கமானது. இது அப்படியல்ல… இனிமேலாவது மனப் போக்கைக் கட்டுப்படுத்து. உன் மானம் போன விடயம் உன்னுடன் இருக்கட்டும். உன் தங்கை இதை அறிய வேண்டாம். கட்டுப்படுத்தி வாழ முடியுமல்லவா? அடுத்த கணம் அந்த நோட்டைத் தூள் தூளாகக் கிழித்து நிலத் தில் வீசுகிறாள். அந்தத் துண்டுகள் அவளைப் பார்த்துச் சிரிக்கிறது. 

பயங்கரமான ஒலி … ஹா… ஹா… திரேசா வியர் வையில் நனைந்து மிதக்கிறாள். உடல் கிடுகிடுத்து நடுங்கு கிறது. உண்மை என்ற ஒரு பிடி சாம்பலுள்… மானம் என்ற புதுவிதை முளைத்தால்போல் இருந்தது. 

மானத்தை விட்டு வெகு தூரம் வந்துவிட்டவள் உணர முடிந்தது… இழந்த மானம்… திரும்பி வருமா…?

– தாலி சிரித்தது (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 1965, தேனருவி பிரசுராலயா, வெள்ளவத்தை, இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *