பெரிய சக்தி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 3,167 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மெக்செய்னி என்ற பாதிரியார் மிகுந்த பக்திமான். ஸ்காட்லாந்து நாட்டவர். அவரது மரணத்திற்குப் பின் வந்த பிறிதோர். பாதிரியார் அந்தப் பக்திமானின் வீட்டையும் கோயிலையும் பார்க்க விரும்பினார்.

கோயில்கூட்டி அவரை அழைத்துச் சென்றார், முதலில் பக்திமானின் படிப்பறைக்குச் சென்றனர். பின்பு கோயில்கூட்டியார் பாதிரியாரை அங்கு உட் காரச் சொல்லி, ‘இப்பொழுது உங்கள் முழங்கைகளை மேசை மேல் வையுங்கள். இப்பொழுது கண்ணீர், சிந்துங்கள். இதுதான் எங்கள் பாதிரியார் பைபிள் படித்து தியானித்த முறை’ என்றார்.

பின்பு, கோயில் பிரசங்க பீடத்துக்கு அழைத்துக் கொண்டு போய் பிரசங்க பீடத்தில் நிற்கச் சொன்னார். ‘பைபிளைத் திறவுங்கள், முகத்தை அதன்மேல் வையுங்கள்; இப்பொழுது கண்ணீர் சிந்துங்கள். இதுதான் எங்கள் பாதிரியார் பிரசங்கித்த முறை’ என்றார்.

கண்ணீரோடு விதைத்த அந்த பக்திமானின் பிரசங்கம் வல்லமையுள்ளதாய் இருந்தது. ஆத்துமாக்களின் அறுவடையும் அதிகமாய் இருந்தது.

அணு சகாப்தம் இது, கடல் நீரில் ஒரு சொட்டுத் தண்ணீரை எடுத்து இரு இடி முழக்கங்களை உண்டு பண்ண முடியும் என்றும், ஒரு அவுன்ஸ் ரேடியத்தைக் கொண்டு ஒரு பேருந்தைப் பெட்ரோல் இல்லாமலே நாற்பது வருடங்கள் ஓட்ட முடியும் என்றும் தற்கால விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இவைகளையெல்லாம் விட வல்லமையுள்ள பிறி தோர் பெரிய சக்தி இருப்பதாக உலக விஞ்ஞானிகளுக் கெல்லாம் தலைசிறந்த ஒரு விஞ்ஞானி கூறுகிறார்,

அதுதான் ஜெபம்

ஜெபம் அணுவைவிட அதிக சக்தி வாய்ந்தது,- பரமாணுவை விட பலமடங்கு வல்லமையுள்ளது.

“அவள் போய் மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள்” [சாமுவேல் 1:10]

“நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள் ளதாய் இருக்கிறது”. [யாக்கோபு 5:11]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *