நீங்க டாக்டர்தானே?!
டாக்டர் நரேன் அன்று ஒரு சிக்கலான ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது. அது முடிவதற்கு விடியற்காலை 3 மணி ஆகிவிட்டது.
வீடு திரும்பியவர், தன்னிடமிருந்த சாவியால் வாயிற்கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனார். அசந்து தூங்கும் மனைவியை எழுப்ப விரும்பாமல், இருட்டிலேயே படுக்கை அறைக்குள் போய் பேன்ட், கோட்டைக் கழற்றிப் போட்டுவிட்டு லுங்கிக்கு மாறினார்.
கட்டிலில் படுத்தார். சில நிமிடங்கள் கழிந்திருக்கும். பக்கத்தில் படுத்திருந்த அவர் மனைவிக்கு லேசாக விழிப்பு வந்துவிட்டது. கையைத் துழாவி அவரைத் தட்டி, ”என்னங்க… எனக்கு ஒரே தலைவலியா இருக்கு. இன்னிக்கு பால் பாக்கெட் போடற பொண்ணு வர மாட்டேன்னு நேத்திக்கே சொல்லிட்டா. கீழே நாலஞ்சு பில்டிங் தள்ளி, பால் பூத் ஒண்ணு இருக்கு. போய் ஒரு லிட்டர் பால் வாங்கிட்டு வாங்களேன், ப்ளீஸ்!” என்றாள்.
டாக்டர் எழுந்தார். இருட்டிலேயே துழாவி, தான் கழற்றிப்போட்ட பேன்ட், சட்டையை எடுத்து உடுத்திக்கொண்டு, கிளம்பிப் போனார்.
பால் வழங்கியவன் அவரை வியப்போடு பார்த்து, ”சார்..! நீங்க டாக்டர் நரேன்தானே?!” என்றான். ”ஆமாம்ப்பா! அதுக்கு ஏன் ஆச்சர்யப்படறே? நானே பால் வாங்க வந்திருக்கேன்னா?” என்றார் டாக்டர்.
”அது இல்லே சார், ஒரு டாக்டரான நீங்க ஏன் போலீஸ் டிரெஸ்ல வந்திருக்கீங்க?” என்றான் அவன்.
– 28th மே 2008