கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
இணைய வெளியீடு: November 10, 2026
முதற்பதிப்பு: 1924
பார்வைகள்: 151 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(1924ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாரம் 16-18 | அதிகாரம் 19-21 | அதிகாரம் 22-24

பத்தொன்பதாம் அதிகாரம்

வில்லிமங்கலம் கொள்ளைக்கேஸ் விசாரணை வாயிதாச் சமீபித்து விட்டது தீவர்த்திக்கொள்ளையில் தடுப்பாரொருவருமில்லாமலும் வீடெங்குந்தங்கமயமாய்க் குவிந்துகிடக்க ஒரு சல்லிக்காசும் போகாமலிருப்பதைக் குறித்து சூப்ரெண்டெண்டுத்துரை சந்தேகித்து இது ஒரு ஆச்சரிமான கொள்ளைக்கேஸ் இதை நுட்பமாய்க்கண்டு பிடிக்கவேண்டுமென்று மிக்க அநுபவசாலியான போலீஸ் இனிஸ்பெக்டர் பிரகாசம் பிள்ளையை அக்கேஸில் வேலைசெய்யும்படி திட்டஞ்செய்திருந்தார். பிரகாசம் பிள்ளை நிதானமான ஒரு பெரிய குடியிற்பிறந்தவர் கேஸ்களின் உண்மையைக் கண்டுபிடிப்பதில் மஹாசமர்த்தர் இவரது அஹோராத்திர முயற்சியின் பேரில் 13 பேர்வழிகள் பிடிபட்டுத் திருவாரூர் சப்பேஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை தொடங்கப்பட்டது. வாதிபக்கம் 1 – தியாகராஜ செட்டியார் 2 – தெய்வசிகாமணி பிள்ளை 3-வில்லிமங்கலம் கிராமமுன்சீப் 4 – மேற்படியூர்த்தலையாரி 5 – அமுர்தலிங்கம் 6 – மங்களாம்பாள் 7 – சாமி நாதக்கவிராயர் 8 – ஜெகவீர பொம்முநாயக்கன், 9 – சிறைமீட்டான் இவர்கள் சாக்ஷியாக விசாரிக்கப்பட்டார்கள். 1-முதல் 5-வரை சாக்ஷிகள் கொள்ளை நடந்த காலம் நடந்த மாதிரி நடத்திய பேர்வழிகள் இவைகளைக் குறித்துத் தங்களுக்குத் தெரிந்தவரை தெளிவாய்ச் சொன்னார்கள். 7.8.9. சாக்ஷிகள் விராலியலைப் பக்கத்தில் 6-வது சாக்ஷியைத் (மங்களாம்பாளை) திருடிக்கொண்டு போகும் போது கண்டுபிடித்ததையும் அப்போது அவளிருந்த நிலைமையையும் விவரமாயெழுதி வைத்தார்கள் 6-வது சாக்ஷி மங்களாம்பாள் மடுகக் குணங்கள் நான்கும் காவல்புரியா நிற்ப, நின்று பின் வருமாறு வாக்குமூலம் எழுதி வைத்தாள். கோர்ட்டு முன்பாக நிற்கிற குற்றவாளிகளில் மூன்று பேரை எனக்கு நன்றாகத் தெரியும், இவர்களில் ஒருவன் விராலிமலைப்பறம்புக்கு வண்டி செலுத்திக்கொண்டு போனவன் மற்றிருவரும் வண்டிக்குப் பின்னால் ஓடிவந்தவர்கள், 4-முதல் ஒன்பது வரை, 5 குற்றவாளிகளைத் தீவர்த்தி வெளிச்சத்தில் பார்த்த ஞாபகமிருக்கிறது. மற்றவர்களைப் பற்றித் திட்டமாகச் சொல்ல முடியவில்லை. கொள்ளைக் கூட்டத்தார்கள் சுமார் 35 அல்லது 40 பேர்களிருக்கும். திட்டிவாசலில் நுழைந்து வரும் போதே ஆணுடைதரித்துத் தான் வந்தேன்.பெண் உடைபோடு வெளிப்பட்டால் அவமானம் நேர்ந்து விடுமோ என்னவோ வென்னும் அச்சத்தினாலேயே அவ்வாறு வந்தேன். என்னைத் தூக்கிக் கொண்டு போகும் போது இவர்களிற் சிலர் 2-வது சாக்ஷியைக் குறித்து நிந்தித்துப் பேசிக் கொண்ட சாரத்தினால் என்னை 2-வது சாக்ஷியாக நினைத்துத் தூக்கிக் கொண்டு போனார்கள் என்றுறுதியாய்ச் சொல்லுகிறேன். விராலிமலைப் பக்கத்தில் 7,8,9 – சாக்ஷிகளாலும், அவர்களைச் சேர்ந்தவர்களாலும் மீட்கப் பட்டேன். குற்றவாளிகளது ஊரும் பேரும் தெரியாது கொள்ளை நடந்த தேதிக்கு முன் ஒரு நாளுங் குற்றவாளிகளி லொருவனையும் பார்த்ததில்லை. 

வாதிபக்கத்து சாக்ஷியங்களெல்லாம் விசாரித்து முடிந்தவுடன் கோர்ட்டார் குற்றவாளிகளை உங்கள் பேரில் ஏற்பட்டிருக்கும் இக்குற்றத்திற்கு என்ன சமாதானஞ் சொல்லுகிறீர்கள் என்றார். 

கண்ணுச்சாமி, இருளன் என்ற இரண்டு பேர்கள் ஒரு மாஸத்துக்கு முன் எங்களிடம் வந்து நாகப்பட்டணம் தாலுகா, ஆக்டிங் மாஜிஸ்திரேட்டு தெய்வசிகாமணி பிள்ளையை எப்படியாவது கொன்று விட்டால் 3000ரூபா தருவதாகவும், உத்தியோக முறையில் கள்ளர்களைக் கொடூர சித்தத்துடன் சிக்ஷக்ஷித்ததினால் அத்திருடரைச் சேர்ந்தவர்களால் கொலை நடந்ததாகப் பஹிரங்கமாய்த் தெரியும்படி செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள். நாங்கள் ஒப்புக்கொண்டு சமையம் பார்த்திருந்தோம். வில்லிமங்கலத்தில் நடக்கிற ருதுராந்தி முகூர்த்தத்திற்குத் தெய்வசிகாமணி பிள்ளை போகிறது தெரிந்து அன்றிரவே கூட்டங் கூடி விசேஷ வீட்டைத் தீவட்டிக் கொள்ளையிடுவதாகப் போக்குக் காட்டித் திட்டிவாசலால் வந்த ஆணுடைதரித்திருந்த மங்களத்தம்பாளைத் தெய்வசிகாமணி பிள்ளை யென்றெண்ணித் தூக்கிக் கொண்டு போனோம். கொள்ளையிடுகிற வீட்டில் ஒரு துரும்புங் கூடத் தொடப்படாதென்பது எங்கள் முதலாளி (பணங் கொடுத்தவன்) உத்திரவு, எதினாலென்றால் பொருள பேக்ஷையை முன்னிட்டுக் குறிப்பிட்ட காரியத்தைத் தவிரவிட்டு விடுவார்கள் என்பது அவர் நோக்கம். மற்ற விவரங்களெல்லாம் வாதிபக்கம் சொன்னது போலவே உள்ளதைச் சொல்லி விட்டால் குற்றத்தை மன்னித்து விடுவதாக உத்திரவான பிரகாரம் என்னை மன்னிக்க வேண்டும். இந்த விஷயங்களுக்கெல்லாம் பண உதவி செய்வர் பாப்பையாபுரம் மிராசுதாரும் புத்தூர் பூமிநாதபிள்ளையும் என்று எங்கள் துப்பன் கண்ணுச்சாமி சொன்னான் என்று குற்றவாளிகளி லொருவன் கூறினான். 

குற்றவாளிகளைத் தஞ்சாவூர் செஷனல் கோர்ட்டுக்குக் கமிட் பண்ணியும் பிடிபடாத குற்றவாளிகளுக்கு வாரண்டும் பிறப்பித்தார். கோர்ட்டு கலைந்தவுடன் நாகபட்டினம் போய்ச் சேர்ந்து தங்கச்சாமி செய்திருக்கும் சதியாலோசனையைக் குறித்து வெகு நேரம் வரை ஆத்திரத்தோடும் பேசிக் கொண்டிருந்தார்கள், செட்டியார் முதலியோர்கள் – இனிஸ்பெக்டர் கவிராயரையும் செட்டியாரையும் தனித்துக் கூப்பிட்டு 2, 3-நாளைக்கு முன் தங்கச்சாமிபிள்ளை இவ்வூருக்கு வந்து விட்டுப் போனதாகக் கேள்விப்பட்டேன். இனிமேல் இந்தக் கோர்ட்டார் அவனைக் சமிட் பண்ணவே மாட்டார். என்னுடைய இந்தக் கண்ணிக்குத் தப்பித்து விட்டான் ஆகிலும் பார்க்கிறேனென்று சொல்லிக் கொண்டு போய்விட்டார். 

இருபதாம் அதிகாரம்

தெய்வசிகாமணிபிள்ளை மூன்றுதின ரஜாவில் வில்லிமங்கலம் ருதுசாந்தி முகூர்த்தத்திற்குப் போயிருந்தாரன்றோ, அச்சமயம் கொள்ளை நடந்து விட்டபடியால் அது காரணமாக மறுபடியும் ஒரு மாஸம் லீவு வேண்டுமென்று மேலதிகாரியை எழுதிக் கேட்டிருந்தார். அதற்கு, “பதிலியாக வேலைபார்க்கும் நீர் அடிக்கடி ரஜாக் கேட்பதைப் பார்க்கும் போது உத்தியோகம் பார்க்க மிகவும் பிரியமில்லாதவரென்று தோன்றுகிறது. உம்முடைய சர்வீஸ் கவர்ன்மெண்டுக்குத் தேவையில்லை என்ற உத்திரவு வந்தது. அதைப் பார்த்தவுடனே யெல்லாருக்கும் கவலை யுண்டாகிவிட்டது. சர்வீஸ் தேவையில்லை யென்றால் இனி மேல் ஒரு கவர்ன்மெண்ட் வேலைக்கும் லாயக்கில்லை யென்றேற் படுமோ வென்றர். செட்டியார் சர்க்கார் வேலை பார்த்துத்தான் எங்கள் மிராசுப்பிள்ளை பிளைக்கணுமோ என்றான் ஜெகவீர பொம்மு, இந்த உத்திரவுக்கு மேல் அப்பீல் செய்யவும் இடமில்லை போலிருக்கிறதே யென்றார் கவிராயர், கல்கத்தாவிலிருந்து நாளையத் தினம் கப்பலுக்குக் கல்யாணசுந்தரம் வருகிறதாக தந்தி வந்திருக்கிறது. அவன் வந்த பிற்பாடு யோசித்துக் கொள்ளலா மென்றான் தெய்வசிகாமணி. 

மறுநாட் பகல் 2-மணிக்கு நாகபட்டினம் டிவிஷனல் கலெக்டரும் ஒரு பாரிஸ்டரும் ஒரு இரண்டு குதிரைச் சார்ட்டிலிருந்து செட்டியார் வீட்டு முன் வந்திறங்கித் தெய்வசிகாமணி பிள்ளை யிருக்கிறாரா வென்று விசாரித்தார்கள். செட்டியார் அவர்களை வரவேற்றழைத்து வந்து ஆசனங் கொடுத்துபசரித்தார். இதற்குள் தெய்வசிகாமணியும் வந்து கலெக்டர் துரையை உபசரித்து விட்டுப் பாரிஸ்டர் பக்கமாகத் திரும்பினான். அண்ணா என்னைத் தெரியவில்லையா வென்று, நமஸ்கரித்துக் கொண்டே தெய்வசிகாமணி கையைப் பிடித்தார் பாரிஸ்டர், கொஞ்சந் திகைத்துக் கல்யாணசுந்தரம் என்று இரண்டு கையாலும் இறுகத்தழுவினான். தெய்வசிகாமணி இரண்டு பேர் கண்களிலும் தண்ணீர்ததும்பிற்று. கவிராயருள்படப் பாப்பையாபுரத்துப் பெரிய மனிதர்கள் கூடத்தில் வந்து கூடியிருந்தார்கள். 

கலெக்டர் துரை செட்டியாரைப் பார்த்து பாரிஸ்டர் கல்யாணசுந்தரமவர்கள் சீமை தேசத்திற்கு வந்திருந்த போது மூன்று வருஷம் நாங்கள் ஒன்றாகவே வசித்தோம். கடைசியாக நான் இந்தியாவுக்கு வரும் போது இவர் ஐரோப்பாக் கண்ட முழுவதும் நான் சுற்றிப்பார்க்கப் பிரியப்பட்டுப் போய் விட்டார். இவ்வூருக்குக் கலெக்டராக வந்த இரண்டு வருஷ காலமாக இவருடைய லட்டர் வந்து கொண்டு மிருந்தது. இரண்டு மாஸத்திற்கு முன் ஸ்வீடனிலிருந்து வந்த கடிதத்தில் தெய்வசிகாமணி பிள்ளையைப் பற்றிக் கேட்டிருந்தது. எனக்குத் தெரிந்தவர்களை விசாரித்து இவரைப் பற்றி யெழுதியிருந்தேன். என்னையும் இவரையும் பார்ப்பதற்காகவே கல்கத்தாவிலிருந்து இன்று கப்பலுக்கு வந்தார் என்றார். சீமைக்குப் போகும் போது ஒரு லெட்டருங் கொடாமற் போய்விட்டாயே யென்றான் தெய்வசிகாமணி. 

அண்ணா, நான் மணிமங்கலத்திலிருந்து கல்கத்தா போய்ச் சேர்ந்த 4,5 – மாஸங்கள் லட்டர் வந்து கொண்டிருந்தது. பிற்பாடு நான் எழுதிய கடிதங்களில் ஒன்றுக்கும் மறுமொழியைக் காணேன். எழுதிய லட்டர்களெல்லாம் திரும்பி வந்து கொண்டிருந்தன. எனக்கு விஷயம் ஒன்றும் புலப்படவில்லை. வெகுநாட் கழித்து நமது அச்சுதன் பேருக்கு வீரராகவபுரத்திற்கு எழுதினேன். அவன் ஐயா அவர்கள் வியாதியினிமித்தம் உத்தியோகத்தை விட்டுத் திருநெல்வேலிக்குப் போய் விட்டதாயும் மனஸ்தாபத்தினால் வீட்டைவிட்டு வெளியேறித் தாங்கள் போனவிடந் தெரியவில்லை யென்றும் எழுதி யிருந்தான். நம்முடைய குடும்பக் இவ்வாறு சிதறுண்டு போகக் காலம் வந்து விட்டதேயென்ற பெருங்கவலை யோடிருந்தேன். அவ்வருஷம் பி.ஏ, பரீக்ஷை முடிந்தவுடன் இங்கிலண்டுக்குப் புறப்பட்டுப் போய் 5-வருஷம் அங்கு சஞ்சரித்தேன். சென்ற வருஷத்து வக்கத்தில் பாரிஸ்டர்ச்சன்னது கிடைத்தது. அதன் மீது இந்தியாவுக்குத் திரும்ப எண்ணங் கொண்டு ஐயா அவர்களுக்கு அச்சுதன் கொடுத்த விலாசப்படி ஒரு லெட்டர் எழுதினேன். கடவுள் செயலால் வியாதி குணமாய் விட்டதென்றும், தாங்கள் நாகபட்டினத்தி லிருப்பதாயும் பதில் வந்தது. அக்கடைசிக் கடிதமே என்னை இந்தியாவுக்குத் திருப்பியது என்றான் கல்யாணசுந்தரம். கூடியிருந்தவர்கள் எல்லாம் இவர் தெய்வசிகாமணியைக் காப்பாற்றி வந்த தாசில்தாருடைய மகனாயிருக்கக் கூடுமென்று எண்ணினார்கள். சந்தர்ப்பம் வாய்க்கும் போது பார்க்கிறேனென்று சொல்லிக் கொண்டு கலெகட்டர் போய் விட்டார். அன்றிரவெல்லாம் கல்யாணசுந்தரத்தின் கதையைத் தெய்வசிகாமணி, செட்டியார், கவிராயர் முதலானவர்களுக்குச் சொல்லிப் பேசிக்கொண்டிருந்தான். முடிவில் சர்வீஸ் தேவை யில்லை யென்ற உத்திரவைப் பாரிஸ்டரிடம் காட்டினார்கள்.சரி இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை: எட்டு நாளையில் உத்தியோகத்தைப் பெற்றுக் கொள்ளலாம். கூடிய சீக்கிரம் சென்னை போய்த் திரும்ப வேண்டியதுண்டு என்றார். அவர் மறுதினமே செட்டியார், கவிராயர், தெய்வசிகாமணி, பாரிஸ்டர் நால்வரும் பட்டணம் போய்ச் சேர்ந்து சில நாள் வரையிருந்து உரிய உத்தியோகஸ்தர்கள் மூலமாய் சர்வீஸ் தேவையில்லை யென்ற உத்திரவை மாற்றிக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். 

இருபத்தொன்றாம் அதிகாரம்

ஒருநாட் காலை 7-மணிக்கு ஜெகவீர பொம்மு நாயக்கனும் சிறைமீட்டானும் பாப்பையாபுரத்துப் பிரஜைகளைப் பாடாப்படுத்துகிறார்கள். இன்று மாலை மூன்று மணிக்கெல்லாம் தெய்வசிகாமணி பிள்ளை வந்துவிடுவார். நதிக்குடிச்சத்திரத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஊரல்லாம் அலங்காரம் பண்ணுங்கள், சர்வ தேவாலயங்களுக்கும் அபிசேக ஆராதனை நடத்துங்கள், எல்லா வகுப்பு மேளகாரரும் தயாராயிருங்கள், கிராம ஊழியக்காரர்க ளெல்லாரும் பெரிய மிராசுப்பிள்ளை வீட்டுவாசலில் கூடியிருங்கள், ஊரில் ஒருவரும் ஒரு வேலைக்கும் போகக்கூடாது, என்று தெருத்தெருவாகத் தமுக்கடித்துப் பிரசுரம் பண்ணினார்கள். பதினான்கு வருஷமாக வனவாசம் போய்த் திரும்பிய ராமச்சந்திரன் விஷயத்தில் அயோத்யா நகரம் எவ்வாறு இருந்ததோ அவ்வண்ணம் ஆராயகிழ்வடைந்திருந்தது பாப்பையாபுரம். சரியாய் 3-மணிக்குச் செண்பகாடவி (ஒருதோப்பு)க்கு நேராக வண்டிகள் வந்தன. எதிர் கொண்டு போய் ஜனங்கள். சூழ்ந்து கொண்டனர். ஈசுரன் கோவில் மேளம் ஒரு பக்கம், பள்ளர் மேளம் ஒரு பக்கம், மற்ற வாத்தியங்கள் ஒரு பக்கம் கடலொலி போல் முளங்கின. வண்டிக்கு முன் இருபக்கத்திலும் பள்ளிகளிடுங்குரவைச் சத்தம் காதுகள் செவிடுபடும்படி முழங்கின. வஸ்தாதுகள் சிலம்பத்தடி வீச்சுகளைப் பார்க்கக்கண் கூசுகிறது. ஊரைநெருங்கி வரவர ஜனக்கும்புகளதிகரித்து நெருங்கின படியால் வண்டி செல்ல மார்க்கமில்லாமல் நின்றுவிட்டது. எல்லாரும் வண்டியை விட்டிறங்கி மெதுவாய் நடந்து வீரகஞ்சவிநாயகர், மஹாபலேசுரர், செண்பக வல்லியம்மன், சேஷாசலப் பெருமாள் திருவாலயங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் பண்ணிப் பிரஸாதம் பெற்றுக் கொண்டு வடக்குமாட வீதி வழியாய் வீட்டை நோக்கிச் சென்றார்கள். சோமசுந்தரம் பிள்ளை, மீனாக்ஷியம்மாள் முதலானவர்கள், பரீக்ஷை எழுதிவிட்டு ரிஷல்ட்டுக்காகத் தபால்காரனை எதிர்பார்த்து நிற்கும் மெட்ரிக்குலேஷன் மாணாக்கர்களைப் போல ஆனந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். கவிராயர் கையைப் பிடித்துக் கொண்டு தெய்வசிகாமணி தலைவாசற் படியை மிதித்தான். கெட்டி மேளம் முழங்கிற்று ஹாலில் நின்று கொண்டிருந்த சோமசுந்தரம்பிள்ளையைக் கவிராயர் வணக்கி இதோ நமது தெய்வசிகாமணி யென்று கை சுட்டிக் காட்டினார். புத்திரன் முகத்தைப் பார்த்தவுடனே நெடுங்காலம் அடங்கிக் கிடந்த புத்ரவாத்ஸல்யமும், துக்கமும், குழந்தையைக் கண்டுவிட்டோ மென்னும் ஆநந்தமும் ஏகசாலத்தில் ஒன்றிறொன்று முந்துதற்குப் போர் செய்து கிளம்பி நெஞ்சடைக்கச் செல்வனைச் சேர்த்திருகக் கட்டிஸ்தம்பித்து நின்றார். சோமசுந்தரம்பிள்ளை மீனாக்ஷியம்மாள் ஓடிவந்து என்னுயிரே, என்னுயிரே – என் பிள்ளைக்கலி தீர்த்த பேரரசே உன்னைப் பிரிந்து நான் உயிர்வாழ்ந்திருந்தேனே. என் கண்மணீ, என்று கதறினாள். உறவின் முறையாரெல்லாம், குய்யோ முறையோ வென்று அலறினார்கள். இவ்வாறு கொஞ்ச நேரத்திற்குள் வீடெங்கும் அழுகைமயமாய் விட்டது. கவிராயர் அவர்களை யெல்லாம் அதட்டி இதென்ன மூடத்தனம். சந்தோஷிப்பதற்குப்பதில் துக்கமா கொண்டாடுகிறது. எல்லாரும் பிரமானந்தமாயிருங்கள். வந்தவர்களுக்குத் தாம்பூலங் கொடுங்கள், சமையல் சீக்கிரமாகட்டும், என்று கெம்பீரமான உத்திரவு பண்ணினார். சந்தடியெல்லாம் சட்டென்றடங்கிற்று, சோமசுந்தரம்பிள்ளை இன்னும் மூர்ச்சை தெளியாது பித்துப் பிடித்தவர் போலிருக்கிறார், அந்நேரம் வெளியிலிருந்து ஜெகவீர பொம்மு அவசரமாக வந்து கவிராயரைப் பார்த்து ஐயா, யாரோ ஒரு பெரிய வேலைக்கார மனுஷாளைப் போலே தெரியுது, வெளியில் நின்று தங்களை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். வண்டி வாசலில் நிற்கிற தென்றான். கவிராயர் சரேலென்று வெளியே எழுந்து போய் வண்டியிலிருந் திறங்கி நின்ற தாசில் நெல்லையப்ப பிள்ளையைக் கண்டதும் ஐயா வாருங்கள்! வாருங்கள்! பரம சந்தோஷம்! பரம சந்தோஷம்! என்றழைத்துக் கொண்டு வீட்டுக்குட் போனார். தாசில்தாரைக் கண்டவுடன், தெய்வசிகாமணியும், கல்யாணசுந்தரமும் தாய்ப் பசுவைக் கண்ட கன்றுகள் போலே விரைவிலோடி. அவர் பாதத்தண்டை விழுந்து நமஸ்கரித்தார்கள். ஜோடிக்கடுக்கனிலழுத்திய உபயமாணிக்கம் போன்ற இரண்டு குழந்தைகளையும் வாரியெடுத்து சிரஞ்சீவியாய் வாழக்கடவீர்கள் என்றிருவரையும் இருபுயத்தோடும் சேர்த்து அணைத்துக் கண்ணீர் மல்கினார். தெளிவெய்திய சோமசுந்தரம்பிள்ளை தியாகராஜசெட்டியாரையும், தாசில்தாரையும், கவிராயராற் றெரிந்துகொண்டு அவர்களை உபசரித்து “ஐயா, தாங்களிருவரும் செய்த பேருதவிக்கு நானும் என் பிள்ளையும் மூவேழு தலைமுறையும் ஊழியம் பண்ணினாலும் கைம்மாறாக மாட்டாது. ஐயா, என் பிள்ளையென்று தவறிச் சொல்லி விட்டேன், மன்னிக்க வேண்டும். என் குழந்தை திருச்செந்தூரில் பல வருஷங்களுக்கு முன்னமேயே இறந்து போய் விட்டது. இவன் உங்கள் குழந்தை” என்றார். ”அவன் யாருக்குக் குழந்தையா யிருந்தாலுமிருக்கட்டும் இத்தனை இடையூறுகளுக்குந் தப்பி உயிரோடிருந்ததே நமது பாக்கியமென்றார்” தாசில்தார். இருந்தவர்களெல்லாம் ஆஹா வென்று சந்தோஷமுற்றார்கள். தாசில்தார் கவிராயரை நோக்கி ‘அண்ணாச்சி கல்யாணசுந்தரமும் வந்திருக்கிறானென்று தந்தியில் நீங்கள் சொல்லவில்லையே என்றார். கவிராயர் அந்தச் சந்தோஷத்தை நீங்கள் மட்டுந் தனியாக அனுபவித்துக் கொள்ளும்படிவிட்டு விட எனக்குப் பிரியமில்லை என்றார். கவிராயரது சாதுரிய வார்த்தையைக் கேட்டு  எல்லாரு மெச்சினார்கள். கல்யாணசுந்தரத்தின் பிரஸ்தாபம் வந்தவுடனே அவர் யாரென்று விசாரிக்கவும், அவன் தேக சௌந்தரியத்தைக் கண்டு பலர் வியப்படையவும் தொடங்கினார்கள். சோமசுந்தரம் பிள்ளை கல்யாணசுந்தரத்தைத் தன் சமீபத்தி லுட்கார்த்தி வைத்து முதுகு தைவந்து கொண்டிருந்தார். இதற்குள் வெளியில் நின்றிருந்த ஜனங்களெல்லாம் வீட்டுள் நிறைந்தார்கள் அத்தனை பேருக்குந் தாம்பூலம் பரிமாறலாயிற்று. வண்டியைக் காடிகானாவில் நிறுத்தி விட்டு அப்போது தான் வந்து நுழைந்த மாசிலாமணி, தெய்வசிகாமணியையும், கல்யாணசுந்தரத்தையும் கண்டு வணங்கிக் கண்ணீர் வடித்தான். அன்பே வடிவமான அவ்விரு வரும் அவனைத்தழுவி “மாசிலாமணீ கவலைப்படாதே. எல்லா ஆபத்திற்கும் தப்பிப் பிழைத்துக் கொண்டோம். இனியெங்கும் போய்விட மாட்டோம் பயப்படாதே. அழாதே யென்றமர்த்தினார்கள். பெண்கள் கூட்டத்தோடு அப்போது தான் வந்து சேர்ந்த காந்திமதியம்மாள் குழந்தைகளைக் கண்டதும் என் கண்மணிகளே உங்களுக்கு இந்த வயதுக்குள்ளே இத்தனை துன்பங்களும் வரலாமா என்று பிரலாபித்தாள். மிராசுப்பிள்ளை வீட்டுப் பெண்கள் காந்திமதியம்மாளைத் தேற்றி மரியாதை செய்து மனைக்குள் அழைத்துச் சென்றார்கள். சாப்பாடு தயாரானவுடன் ஊர்ஜனங்களுள்படச்சர்வ ஜனங்களும் போஜனஞ் செய்விக்கப்பட்டார்கள். தாம்பூலந் தரித்துக் கொண்டு சந்தோஷமாய் வீற்றிருக்கும் சமயங்கண்டு கவிராயர் தாசில்தார் முகத்தைப் பார்த்தார். அவர் ஒச்சன் மருளாடி யென்ற கள்வர்களிடத்திலிருந்து தெய்வசிகாமணியை மாசிலாமணியாலெடுப் பித்துக் கொண்டு வந்து வளர்த்ததையும், அவன் படிக்கும் பருவத்தில், சகபாடியாகக் கல்யாணசுந்தரத்தைச் சேர்த்து வைத்ததையும், அவன் கல்க்கத்தாவுக்குப் படிக்கப் போன வரலாற்றையும், கவிராயர் வந்து கண்டு பேசி விட்டுக் காசியாத்திரை போனதையும்,தாம் உத்தியோகத்தை வர்ஜிதம் பண்ணியதையும், வேணுவனலிங்கம் பிள்ளையால் தெய்வசிகாமணி கதவிடுக்கிற் பட்ட கஷ்டத்தையும், பின்பு அவன் வரலாற்றின் சாலனங்களைக் கொடுத்த னுப்பியதையும், சொல்லிப் பின்னடந் தவைகளைத் தெய்வசிகாமணியைச் சொல்லும்படி தாசில்தார் தூண்டினார். எல்லாரும் நிஸப்தமாயிருந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். பெண்கள் கூட்டம் சமையலறைத் தட்டி மறைவில் அமர்ந்திருந்தது. தெய்வசிகாமணி மெல்ல வாயைத் திறந்து பேச ஆரம்பித்தான். ஜனங்களெல்லாம் எட்டி யெட்டிப் பார்க்கலானார்கள். திருநெல்வேலிச்சத்திரத்தில் தங்கியிருந்து தன் பூர்வ சாஸனங்களைக் குறித்துக் கலவரப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் தோழமை கிடைத்ததையும், அவர் மூலமாக இராமநாதபுரம் சத்திரத்தில் கண்ணுச்சாமியைக் கண்டு நாகபட்டினம் போய்ச் சேர்ந்து நெட்டால் தேசத்திற்குச் செல்லுங் கப்பலிற் பட்ட அவஸ்த்தையையும், தியாகராஜ செட்டியாரால் மீட்டப்பட்டு வந்து படித்துப் பரீக்ஷையிற்றேறி உத்தியோகத்தி லமர்ந்ததையும், காசிக்குப் போன கவிராயர் வந்து சந்தித்ததையும், வில்லிமங்கலம் கொள்ளைக் கேஸின் விவரத்தையும், உத்தியோக பங்கம் நேர்ந்து கல்யாணசுந்தரத்தி னுதவியால் மீண்டடைந்ததையும் தெளிவாய்க்கல்லு முருகக்கழறினான். கதவிடுக்கிலும், கப்பலிலும் தெய்வகிகாமணி கஷ்டப்பட்டதைச் சொல்லிவரும் போது அவ்விஷயம் அப்போது தான் நடக்கிறதாக எண்ணி மீனாக்ஷியம்மாள் தன்னை யறியாமல் துடிதுடித்தாள். இந்தப் பரிகாபத்தை ஒரு கதையிலுங் கேட்ட தில்லை யென்றார்கள். ஜனங்கள், அன்றிரவு ஒருவரும் நித்திரைக்குப் போகவே இல்லை. கல்யாண சுந்தரம் இங்கிலாந்துக்குப் போய் வந்த விவரத்தைத் தாசில்தார் கேட்டுக் கொண்டிருந்தார். 

– தொடரும்…

– தெய்வசிகாமணி (ஒரு நவீனகம்), முதற் பதிப்பு: 1924, லெக்ஷிமி விலாசம் பிரஸ், சாத்தூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *