தகாத ஜெபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 2,383 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பதினைந்து வயதுள்ள ஜேன் லண்டன் பட்டணத் திலுள்ள சேர் உயர் நிலைப்பள்ளியில் படித்துவந்தாள். ஆண்டுத் தேர்வில் துருக்கி தேசத்துக்குத் தலைநகர் எது வென்ற வினாவிற்கு ரோமாபுரி என்று விடை எழுதி விட்டாள். பரீட்சை முடிந்து வெளியே வந்தவுடன் தன் சிநேகிதிகள் மூலம் விடை தப்பிதம் என அறிந்தாள்.

துருக்கித் தலைநகர் கான்ஸ்டாண்டிநோபிள் என்பதற்குப் பதில் ரோமாபுரி என்று எழுதிவிட்டேனே என வருந்திக் கொண்டே வீடு போய் சேர்ந் தாள். உடனே முழங்காலில் நின்று ‘ஆண்டவரே, துருக்கி தேசத்துக்கு ரோமாபுரி பட்டணத்தையே தலைநகராகச் செயதுவிடும்’ என்று விடாப்பிடியாக ஜெபித்தாள்.

இப்படித் தகாத ஜெபம் செய்கிறவர்கள் பெரியவர்களிலும் பலர் உண்டு.

கடவுளுடைய வசனத்தை அசட்டை பண்ணுவதால் ஜெபம் கேட்கப்படுவதில்லை. கேட்கத்தகாத அநேக காரியங்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளாமல் கடவுள் மேல் பழியைப் போடுகிறோம்.

இயற்கைக்குரிய காரியங்கள் இயற்கைப் பிரமாணத்துக்கு உட்பட்டே நடக்க வேண்டும்.

ஆன்ம காரியங்களிலும் ஜெபத்துக்கு நிபந்தனை உண்டு. உலகப் பிரகாரம் வேலை செய்து பெற்றுக் கொள்ளக் கூடியவைகளை வேலை செய்யாமல் ஜெபம் செய்தே பெற்றுக் கொள்ளலாம் என்றெண்ணினால் தேவ நிந்தனையாகும்.

“நான் கூப்பிட்டபோது அவர்கள் எப்படிக் கேளாமற் போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேன்”. (சகரியா 7:13)

“நீங்கள் தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியால் பெற்றுக் கொள்ளாம லிருக்கிறீர்கள்”. (யாக்கோபு 4:3).

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *