தமிழ்க்களஞ்சியம் – தெ.பொ.மீனாட்சிசுந்தரன்‌

 

இருபதாம்‌ நூற்றாண்டுத்‌ தமிழிலக்கிய வரலாறு – 308ம் பக்கம்

வானொலி நாடகம் முழுக்க முழுக்க நூற்றுக்கு நூறு செவிவழி நாடகமாகக் கண்ணை மூடிக்கொண்டு கேட்பதாகவும் அமைந்து விட்டது. பாத்திரங்களின் வேறுபாடோ, ஒரு காட்சி தோன்றி மற்றொரு காட்சி தோன்றும் வேறுபாடோ இங்கே தோன்றுவது அருமை. பாத்திரங்களின் பெயரைப் பழகும் வரை அடிக்கடி விளிப்பதும், இசையின் துணையால் காட்சிகள் மாறுவதைக் காட்டுவதும் காண்கிறோம். நாடகப் பாத்திரங்களின் முகம் நமக்குத்தோன்றுவதில்லை. நடிப்புக்களும் செயல்களும் தோன்றுவதில்லை. இடம் பெயர்தலும் தோன்றுவதில்லை. இவை அத்தனையையும் பேச்சும் குரலொலி மாற்றமுமே காட்டுதல் வேண்டும். பின்னணிக் காட்சிகளும் இங்கு இல்லை, இயற்கை வருணனைகளைப் போதிய அளவு கூறவும் பொழுதில்லை. இத்தனை நெருக்கடிகளுக்குள்ளே தனிக்கலையாக வானொலி நாடகம் வளர்ந்துவருகிறது. ஒருசிலபோது வெற்றியும் காண்கிறது. ஒரு சிலரே நாடக மேடைக் கலையிலும் வானொலி நாடகக் கலையிலும் ஒருங்கே சிறந்து, நடிப்பவர்கள்.

வானொலியில் சிறுகதைகளும் கூறிவருகிறார்கள், சிறுகதையைப் படிப்பது வேறு; கேட்பது வேறு. பழங்காலத்தில் பாட்டிமார் கதை கூறிவந்தார்கள். ஆனால், அதுவோ பல நாளுக்குத் தொடர்ந்துபோகும். நேருக்கு நேர் பேசும் அந்தப் பழங்குறிப்புக்கள் வானொலியில் விளங்கினாலும், உணர்ச்சிகள் குரல் வழியே ததும்பினாலும் மிகச் சுருங்கிய பொழுதே வானொலியிற் கிடைக்குமாதலின் இதன் இயல்புகளைத் தனிக் கலையாகக்கொண்டே ஆராய்ந்து விளக்க வேண்டும். அவ்வாறு செய்தும் வருகின்றனர்.

சிறுகதை என்பது பத்தொன்பதாவது நூற்றாண்டில் அமெரிக்காவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி விட்டதொரு கலை. கதை சிறிய அளவில் வருவது மட்டுமன்று இங்குள்ள சிறப்பு. அது மேல்வாரியான நோக்கம். கதையும் இல்லாமற் போகலாம். குறிப்பிட்டதொரு செய்தியை அல்லது நிகழ்ச்சியை அல்லது மனநிலையை அல்லது மனமாற்றத்தை விளக்கக் கூடியதொன்றாக அது அமைகிறது. தொடக்கமும், வளர்ச்சியும், முடிவும் மனச்சோர்வைத் தாராமல் கவர்ச்சியாக அமைவதோடு, சூழ்நிலை விளக்கமும் முன் நிகழ்ந்த செய்திகளின் விளக்கமும் செறிந்து நாடக நிகழ்ச்சி போல் வேண்டுமளவில் வேண்டுமிடத்தே வர அமைவதனையும் காண்கிறோம். இவை நாவல்களோ, நாடகமோ, கட்டுரையோ, உபதேசமோ, கதைச்சுருக்கமோ ஆகாது விளங்குதல் வேண்டும். வ.வெ.சு.ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் இத்தகைய சிறப்போடு எழுந்த முதல் தமிழ்ச் சிறுகதை எனலாம். பல மேனாட்டுச் சிறுகதைகளும் இத்தியப் பிறமொழிச் சிறுகதைகளும் தமிழில் வந்தன. அவற்றில் தமிழொடு தமிழாக அமைந்தவை சில. மொழி பெயர்ப்பென்றே விளங்குபலை சில. புராணக் கதைகளைப் புதிய கோணங்களிற் கண்டு ஒரு சில நிகழ்ச்சிகளைப் புதுவனவாக விளக்குவன சில. அகலிகையின் கதை இவ்வாறு பல நோக்கங்களில் வெளிவருவதைக் காணலாம் சிறுகதையாளர் பற்பல குழுக்களாகப் பிரிந்து நிற்கின்றனர். கிழமைத் தாள்களிலெல்லாம் சிறுகதைகள் பல வந்துகொண்டே இருக்கின்றன. விரைந்தோடும் உலகத்திற்கேற்ற இலக்கியமாகச் சிறுகதை அமைகிறது. பவ தமிழ்க் கதைகள் ஆங்கிலத்திலும் இந்தியநாட்டுப் பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்பாகி மக்கள் உள்ளத்தைக் கவரக் காண்கிறோம். கு.ப.ரா, புதுமைப்பித்தன் முதலியோர் கதைகளிலும், பின்வத்தோர் கதைகளிலும் ஒருசில என்றும் தின்று விளங்குவன ஆகும். துப்பறியும் கதைகள், மனோதத்துவத்தை விளக்கும் கதைகள், குறிப்பிட்ட சிற்றூரின் நிலையினையும் சூழ்நிலையையும், சமுதாயத்தினையும் விளக்கும் கதைகள், வரலாற்றுக் கதைகள் என்று பலவகையாகக் கதைகள் வெளிவரக் காண்கிறோம்.

சிறுகதையிலும் நாவவே பழையதாகும். மேலே கூறிய கதை வகைகளெல்லாம் தமிழ் நாவலிலும் உண்டு. இவற்றிற் பல தொடர்கதையாகப் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. சிறுகதை வருவதற்கு முன், தாவலே மக்கள் மனத்தைக் கவர்ந்தது. முதலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய பிரநாப முதலியார் சரித்திரமும் கமலாம்பாள் சரித்திரமும் நாவலுக்குத் தமிழில் தலைசிறந்த இடத்தைத் தேடிக்கொடுத்தன பின்னர் வங்காளம் முதலிய மொழிகளிலுள்ள ஆனந்தமடம் போன்றவை மொழிபெயர்ப்பாக வந்தன. மொழிபெயர்ப்பல்லாதவற்றில் மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் குறிப்பிடத்தக்கது. ரௌல்ட்ஸ் (G W.M.Reynolds) என்பவர் நாவல்களும் பிறவும் தமிழ்நாட்டில் பழகி இருந்த காலத்தில் அவற்றை மொழிபெயர்த்து ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்கள் எழுதியவை மக்களிடையே புழக்கத்தில் இருந்தன. இவை சிறந்ததொரு மனநிலையை உண்டுபண்ணாமையால் இறந்தன ஆனால், மறைமலையடிகள் இத்தகைய கதைகளில் ஒன்றைக் குமுதவல்லி அல்லது நாசுநாட்டரசி என்ற தலைப்போடு தமிழ்ச்சுவையோடு தமிழாக மாற்றி எழுதியுள்ளார் துப்பறியும் நாவல்கள் ரங்கராஜு முதலியோரால் எழுதப்பெற்று வழக்கத்தில் இருந்தன. தமிழின் அழகினைவிடத் துப்பறியும் கதையின் போக்காலேயே அவை வாழ்ந்தன அண்மையில் மறைந்த தேவன் என்பவர் தம்முடைய கதைகளில் துப்பறியும் சாம்புவைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்துவைத்தார். காதலே நிரம்பி வரும் கதைகள் ஒருபுறமாகக் காதலின் போராட்டத்தையும், கற்பின் போராட்டத்தையும் ஒரு சிறிது நெறி பிறழ்ந்த வழி உள்ளத்தெமும் மனப் போராட்டங்களையும் சித்திரித்துக்காட்டும் நாவல்களும் வெளிவருகின்றன. சமுதாயச் கும் நிலையை விளக்குவனவும், மூடநம்பிக்கையை விளக்கிச் சிரிப்பனவுமாகச் சில சீர்திருத்தக் கதைகள் சிலபோது கற்போர் மனம் சிறிது புண்படுத்துவன ஆகவும் வெளிவருகின்றன. சிறந்த இலக்கிய நடையில் எழுதுகின்ற தமிழறிஞர்களும் இதில் ஈடுபடுகின்றார்கள். சிலர் வெற்றியும் பெற்றுள்ளார்கள். இங்கோர் இடர்ப்பாடு எழக் காண்கிறோம். தங்கருத்துக்களைக் கதையோடு கதையாக மாற்றிவிடாமல் தனியே எடுத்து நிகழ்த்தும் சொற்பொழிவுகள் போலவும் கொள்கை விளக்கங்கள் போலவும் அவற்றை நுழைய விடும்போது கதையின் கவர்ச்சி குறைந்தே வருவது இயல்பு, மேனாட்டு நாவல்களை மொழிபெயர்ப்பதும், தழுவி எழுதுவதும் வழக்கமாகிவிட்டன. கொச்சை மொழியில் பாத்திரங்கள் பேசுவது மட்டுமன்றி, நாவலையுமே அம்மொழியில் எழுதுகின்ற வழக்கம் மெல்லக் குறைந்து கொண்டு வருகின்றது. ஒரு சிலரே அன்றி எல்லோரும் படிக்க வரும்பொழுது எல்லோர்க்கும் வினங்கும் பொது நடையில் அமையும் செந்தமிழில் எழுதவேண்டுவது இன்றியமையாததாகிறது. கலைச்சுவையே ததும்ப எழுதும் நடையும், நகைச்சுவை ததும்பும் நடையும் ஒரு சிலவற்றின் போக்காய் முடிய வேறு சிலவோ அனைவர்க்கும் ஒத்த பொது நடையில் உயர்த்து நின்று, அந்த அந்த இடத்திற்கும் பாத்திரத்திற்கும் ஏற்ப மாறி மாறி வரவும் காண்கிறோம்.

வரலாற்றிளை விளக்கும் சூழ்நிலையில் புதுக்கதைகளை உருப்படுத்துகின்றவர்களையும் காண்கிறோம். பல்லவர் காலத்தையும் சோழர் காலத்தையும் விளக்கிக் கல்கி எழுதிய வரலாற்று நாவல்கள் மக்கள் மனத்தைக் கவர்ந்துவருகின்றன. தேசியப் போராட்டத்தைப் பத்தியும் பல கதைகள் எழுந்தன. பாவலரின் நாடகங்களைக் குறிப்பிட்டோம். இன்றுள்ளார் எழுதியவையும் உள்ளன. விடுதலைப் பேராட்டம் முழுவதினையும் இந்தியச் சூழ்நிலையோடு ஒன்றுபடுத்தி விளக்குகின்ற அலையோசை என்ற நாவலையும் கல்கி எழுதியுள்ளார். இது காந்தியுகத்தின் புரானமாகக் கொள்ளுதல் தரும். இங்குக் கூறியவை தொடர்கதையாக வெளிவந்தமையால் மிகமிகப் பெரிய வடிவில் தோன்றி நிற்கின்றன. விரைந்தோடும் உலகத்தினை இவை திகைக்கவே வைக்கின்றன. இன்றுள்ளார் இந்தியாவின் பல பகுதிகளின் பழைய வரலாற்றை விளக்கும் கதைகளையும் எழுதுகின்றார்கள்.

கட்டுரைகளே முதலில் பத்தரிகை உலகத்தில் வெளிவந்தன. பொருட்செல்வமாக நின்ற இவை சிறுகச் சிறுக மொழியழகும் சொல்நயமும் உள்ளங்கவரும் உணர்ச்சியும் பெற்று வளரலாயின. பல வரிகளாசு நீண்ட வாக்கியங்கள் திரு.வி.க வழியே ஆற்றல் மிக்க சிறு சொற்றொடர்களாயின சமயமும் இலக்கியமும் பற்றியனவாகக் கட்டுரைகள் இருந்த நிலை மாறி எல்லாத்துறையிலும் அவை பரவவாயின மேனாட்டுக் கருத்துக்களையும் புது முற்போக்குக்களையும் விளக்குமாற்றலும் இன்றைய தமிழ் பெற்று விளங்குவதற்கு இந்தக் கலைக்களஞ்சியமே சான்றாம் பொருளாதாரம். உளவியல், வரலாறு. விஞ்ஞானம், விஞ்ஞானச் செயன்முறை, தொழில்நுட்பவியல். இலக்கிய ஆராய்ச்சி, கணிதம் முதலிய பல துறைகளிலும் நூல்கள் வெளிவந்தாலும் விஞ்ஞானச் செயன்முறை, தொழில்நுட்பவியல். கணிதம். பொறியியல் முதலியவை தமிழில் இன்னும் வேர் கொள்ளவில்வை என்றே சொல்ல வேண்டும்.

விஞ்ஞானத்தினைத் தமிழில் விளக்க முடியுமா என்று அஞ்சிய காலம் உண்டு, விளக்க முடியுமா? என்ற கேள்வியே தலைப்பாக எழுத முடியும் என்று காட்டியவரும் உண்டு. திண்ணை ரசாயனம் முதலிய நூல்களில் திண்ணைப் பேச்சாகவும் இதனைப் பேச முடியும் என்று அவர் காட்டினார். இதனைப்பற்றி உலகம் புகழும் விஞ்ஞாளிகளில் ஒருவரிருவர் தமிழில் எழுத முன்வந்தனர். சிறுவர் மலரில் இருந்து ஆண்டுமலர் வரையில் விஞ்ஞானக் கட்டுரை விளக்கம் பற்பவப் படங்களுடன் வெளிவரத்தொடங்கின. இவற்றிற்கெனச் சில திங்கள் வெளியீடும் எழுந்து வளரும் காட்சியையும் காண்கிறோம். பலர் எழுதும் இத்துறையில் பலரும் மனங்கொள்ளத் தமிழொடு தமிழாய் விஞ்ஞானத்தை எழுதி மறைந்த இராசேச்சுவரி அம்மையாரைக் குறிப்பிட வேண்டும்.

வாழ்க்கை வரலாற்றை எழுதிய நூல்களில் சாமிநாத ஐயரின் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரிதம் குறிப்பிடத்தக்கதாகும். சுயசரிதம் எழுதும் போக்கும் வளர்ந்துள்ளது. இந்தவகையில் தலைசிறந்து வினங்குவது திரு விசு வின் வாழ்க்கைக் குறிப்பாகும். சாமிநாத ஐயரின் என் சரிதம் என்பதும் சிறந்ததே ஆம்.

அரசியல்துறை, பொருளாதாரத்துறை. இலக்கியத்துறை என்றவற்றில் காலஞ்சென்ற சண்முகஞ்செட்டியார் போன்றவர்கள் தமிழில் எழுதி வளர்த்தமையால் தமிழ் வளர்ந்தது எனலாம். இலக்கிய ஆராய்ச்சியில் மக்காலே போன்ற ஆங்கில ஆசிரியர்களைப் பின்பற்றிய மறைமலையடிகளின் போக்கு ஒன்று: இப்போது பின் வந்த இயக்கிய ஆராய்ச்சியாளர் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயும் ஆராய்ச்சி மற்றொன்று. இவற்றின் கண்ணோட்டத்தில் தமிழ் நூல்களிலேயே தமிழ் நூல்களை ஆராயும் அடிப்படைகளை தாடி அறியவேண்டும் என்ற முயற்சியும் உண்டு, தமிழ் நூல்களில் தாம் துய்த்ததனைத் துய்த்தபடி எழுதிக்காட்டி ஆராய்ச்சி நுட்பங்கனை வெளிப்படுத்திய டி.கே.சி. முதவியவரையும் மறத்தலாகாது. இலக்கியங்களில் அரசியல் உண்மைகளைக் காண்போர் இந்நாளில் பலர், கதையையே உண்மை எனக் கொண்டு காண்போரும் சிலர்.

தமிழ் நூல்களை ஆராய்ச்சிக் கண்கொண்டு காண்கின்ற முயற்சி சுந்தரம் பிள்ளையிடமிருந்து வளர்த்து, கனகசபைப்பிள்ளை, கோபிநாத ராவ், இராகவையங்கார். சுப்பிரமணியப் பிள்ளை, சனிவாசப் பிள்ளை , வையாப்புரி பிள்ளை முதலியவர்களிடம் மேலோங்கிவரக் காண்கிறோம். தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் முறையையும், முன்னுரை எழுதும் போக்கினையும் சாமிநாத ஐயரிடம் கண்டோம். வரலாற்று ஆராய்ச்சியும் இதனோடு தொடர்புடையது. இத்தகைய கட்டுரைகளாக அன்றி முழு நூலாகவும் பல வெளிவரக் காணக் கிறோம். திரு.வி.க.வின் முருகன் அல்லது அழகு, உள்ளொளி, காதலா சீர்திருத்தமா, இந்திய விடுதலை என்ற நூல்களைக் குறிப்பிடவேண்டும்.

இலக்கணக் கட்டுரைகளும் வெளிவந்தன. அரசஞ் சண்முகனார், திருமயிலை சண்முகம் பிள்ளை, சோமசுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், சுன்னாகம் குமாரசாமிப்பிள்ளை முதலியர்களைக் குறிப்பிடலாம். பழைய முறையின்படி பழைய நூல்களுக்கு உரைகளும் வெளியாயின. பழைய நூல்களின் தெளி பொருள் விளக்கமாக இந்த நாளைய மக்கள் விரும்பும் வகையில் பல நூல்கள் வெளிவந்தன. சென்ற நூற்றாண்டைய இராமசாமி நாயுடு இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலும் உரை எழுதினார். கோ.வடிவேலு செட்டியாரின் திருக்குறள் தெளிபொருள் விளக்கம் சிறந்ததொரு தமிழ்த் தொண்டாம், அவர் சமய நூல்களுக்கும் உரை கண்டுள்ளார். மறைமலையடிகளின் திருவாசக விரிவுரையும், பண்டிதமணியின் திருவாசகக் கதிர்மணி விளக்கமும், சாமிநாத ஐயரின் மணிமேகலை உரைக்குறிப்பும், குறுந்தொகை உரையும், பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் நற்றிணை உரையும். கோபால கிருஷ்ணமாசாரியாரின் சிறந்த படைப்பாம் கம்பராமாயண உரையும், சர் ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் சிலப்பதிகாரப் புகார்க் காண்ட உரையும் எந்த நாட்டிலும் பாராட்டினைப் பெறலாம்.

தமிழ், இன்றைய மேனாட்டார் கூறும் இலக்கியத் துறைகளில் எல்லாம் சிறந்து விளங்குவதோடு பிற இடத்தில் இல்லாத வகையில் புதிய தொரு தேசியப்பாடல்களை அணியாகக் கொண்டு, முன்னில்லாததோர் எளிமையையும், விளக்கத்தினையும், பேச்சு நடையோடு ஒத்த இனிய அழகினையும் இசை அமைதியாம் சந்தத்தினையும் பெற்று, முன் அருகி வழங்கிய நகைச்சுவையும் வளர்ந்துவர, எவற்றிலும் உணர்ச்சி ததும்பும் உயிர்த்துடிப்பும் பெற்று, எல்லாக் கருத்தினையும் வெளிப்படுத்தும் வழக்கத்தில் புகுந்து. பல துறைகளிலும் அல்வவற்றிற்கேற்ப நெதிழ்ந்து கொடுத்து இயைத்துவரும் புதியதோர் ஆற்றலையும் பெற்றுப் பயனற்றன கீழே ஆழ்ந்து போக, நிலையானவை மேலோங்கிவரச் சிறுவர் முதல் பவர்க்கும் இன்பம் தர முன்னேறிச் செல்கிறது.

– தெ.பொ.மீனாட்சிசுந்தரன்‌, முதற்பதிப்பு: டிசம்பர்‌ 2000, வெளியீடு க தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்‌ நினைவு அறக்கட்டளை. எழிலகம்‌, மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *