சாதனையாளன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2026
பார்வையிட்டோர்: 75 
 
 

துன்பம், தொல்லை, துயரம், கஷ்டம், கண்ணீர், கவலை, வேதனை, சோதனை இவை அனைத்தையும் கடந்து ஜெயிக்கிற மனிதன் தான் சாதனையாளன்

சிறிய கிராமத்தில் ஒரு சிறிய பள்ளிக்கூடம் இருந்தது அந்த பள்ளிக்கூடத்தில் உள்ள தமிழ் வாத்தியார் பாடத்தை வகுப்பறையில் எடுப்பதை விட அதிகமாக மரங்கள் அருகில் மைதானங்களில் தான் பிள்ளைகளுக்கு பாடம் எடுப்பார். ஏனெனில் கருத்துக்கள் புரியும்படி எடுப்பார் இப்படியே போய்க் கொண்டிருந்தது ஒரு நாள் வாத்தியார் பிள்ளைகள் அனைவரையும் ஒரு ஆற்றங்கரை ஓரமாக வரச் சொன்னார் அன்றைக்கு ஒரு அரசு விடுமுறையாக இருந்தது பிள்ளைகள் அனைவரும் வாத்தி இன்றைக்கு புது விதமாக பாடம் எடுக்க போகிறார் என்று எண்ணி ஆர்வத்துடனும் ஆவலுடனும் வந்தார்கள். வாத்தியார் அந்தப் பிள்ளைகளிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு இப்பொழுது அனைத்தையும் கடந்து ஜெயிக்கிற மனிதன் தான் சாதனையாளன் என்று இதைப்பற்றி ஓர் சிறிய எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம் என்று சொன்னார் பிள்ளைகள் சரி என்றார்கள்.

வாத்தியார் சிறிது நேரம் அமைதியாக இருந்தார் அப்பொழுது ஓர் சத்தம் வந்தது என்னவென்று பார்த்தால் ஒரு படகு ஆற்றில் மிக வேகமாக வருகிறது வாத்தியார் அதை பார்த்தும் பாக்காதது மாதிரி பிள்ளைகளிடம் என்ன பார்த்தீர்கள் என்று கேட்டார் அதற்கு பிள்ளைகள் படகு ஒன்று ஆற்றில் போனது வாத்தியாரே என்று சொன்னார்கள். வாத்தியார் திரும்பத் திரும்ப என்ன பார்த்தீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தார் பிள்ளைகள் என்னாச்சு அவருக்கு வெயிலில் மூளை ஏதாவது குழம்பி விட்டதா என்று யோசிக்க தொடங்கினார்கள். அப்பொழுது வாத்தியார் வாழ்க்கைக்கு தேவையான ஒரு விஷயம் எதை பார்த்தீர்கள் என்று கேட்டார் அனைவரும் திருத்திரு என்று முழித்தார்கள் வாத்தியார் அதற்கு படகை சுற்றி தண்ணீர் இருந்ததினால் படகு மிகுந்தது, படகுக்குள் தண்ணீர் போனால் என்ன ஆகும் என்று கேட்டார் அதற்கு ஒரு மாணவன் படகு மூழ்கி உள்ளே போய்விடும் அத்தோடு அந்த படகு அவ்வளவு தான் என்றான்

அப்பொழுது வாத்தியார் நடந்து கொண்டே சொல்கிறார், அந்த படகு தண்ணீரை எல்லாம் ஏற்றுக் கொண்டால் அது மூழ்கி விடும் அதன் பிறகு அந்த படகு ஆற்றில் சுலபமாக பயணம் செய்ய முடியாது அதே மாதிரி தான் நம் வாழ்க்கையும் துன்பம், தொல்லை, துயரம், கஷ்டம், கண்ணீர், கவலை, வேதனை, சோதனை, எல்லாம் இருக்க, இவை எல்லாவற்றையும் எவன் ஒருவன் தன் தலைக்குள்ளே ஏற்றி மனச்சோருக்குள்ளே போகிறானோ அவனுடைய வாழ்க்கை என்ற பயணத்தில் பயணிக்க மிகவும் கஷ்டமாக இருக்கும் “இவை அனைத்தையும் கடந்து ஜெயிக்கிற மனிதன் தான் சாதனையாளன்” என்றார். குழந்தைகள் புரிந்தும் புரியாத மாதிரி தலையை ஆட்டிக் கொண்டே சென்றார்கள்.

– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *