பதுங்குக் குழி (பங்கர்)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2023
பார்வையிட்டோர்: 1,821 
 
 

நவாலியூர் கிராமம் யாழ்குடாநாட்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து வலிகாமத்தில், ஆறு மைல் தூரத்தில் உள்ள ஊர். நவாலி என்றால் ஒரு காலத்தில் ஒன்பது செக்கு ஆலைகள் அங்கு இருந்ததினால் ஊரின் பெயர் வந்திருக்கலாம் என்பது ஊர்வாசிகள் கருத்து. சுமார் 2000 பேர் வசிக்கும் நவாலி கிராமம் வழிபாட்டுத் தலங்கள் இருந்தன. அதில் ஒன்று பரிசுத்த பீட்டர் ஆலயம். இந்த தேவாலயம் 1995 இல் அரசின் குண்டுவீசுக்கு உட்பாடு 150 பொது மக்கள் இறந்தனர்.

அதுவுமன்றி தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் பிறந்த இடம் அல்லவா! ஆகவே ஊரின் பெயர் சொன்ன உடனே அவர் ஞாபகம் தான் முன்னுக்கு வந்துவிடும்.


நவாலி ஊர்வாசி செல்வா என்ற செல்வசுந்தரம் , முதாலம் தர அரசாங்க லிகிதர். அவர் கொழும்பில் கச்சேரியில் 1983 ஆம் ஆண்டில் வேலை செய்து கொண்டிருந்தவர். யாழ்ப்பாணத்தில் இருந்தது. ஆடிவேல் திருவிழாவுக்கு அங்கு குடும்பத்தை அழைத்துச் சென்று, தனக்கு தெரிந்த நண்பரின் வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். சில நாட்களில். இனக் கலவரம் வெடித்து செல்வா என்ற .செல்வசுந்தரமும் அவருடைய ல ட்சுமி என்ற மனைவி ஜெயலட்சுமி மூன்று மகன்களும் உயிர்தப்பி , கப்பலில் சொந்த ஊரான நவாலி க்கு வந்துவிட்டார்கள். அதன் பின்னர் செல்வா கொழும்பு கச்சேரிக்கு வேலைக்குப் போகவில்லை. தன் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி பல காரணங்கள் காட்டி எழுதிப் போட்டு, மாவட்ட செயலகம் என்ற, யாழ்ப்பாண கச்சேரிக்கு மாறுதல் பெற்று, அங்கு வேலை செய்ய ஆ ரம்பித்தார்.

நவாலியில் இருந்த அவரின் சொந்த வீட்டுக்கு பின்னால் ஒரு தோட்டம் .அதில் பனை , தென்னை, மா, நாவல், பலா, மற்றும் சில மரங்களும் ஒரு கிணறும், இருந்தது. செல்வாவின் மனைவி ஜெயலட்சுமியின் தந்தை நாகலிங்கம் மலேசியாவுக்கு சென்று வேலை செய்து கொண்டு வந்த பணத்தில் கட்டிய வீட்டை , மகளுக்கு சீதனமாகக் கொடுத்தார் . லட்சுமி பவனம் அரை ஏக்கர் நிலத்தில் தேவாலயத்துக்கு அருகில் அமைந்த வீடு.

செல்வா என்ற செல்வசுந்தரத்தின் குடும்பத்தில் அவருடைய மனைவி ஜெயலட்சுமி மூன்று மகன்களும் மற்றது எண்பது வயதுடைய ஜெயலட்சுமியின் தாய் அன்னம்மாவும் வாழ்ந்து வந்தார்கள் . செல்வாவின் மூன்று மகள்களும் வீட்டில் இருந்து சிறு தூரத்தில் உள்ள மானிப்பாய் இந்துக் கல்லூரியில் படித்து வந்தார்கள். மூத்தவன் ராஜன் 18 வயது ஏ லேல் முதலாம் ஆண்டு. இரண்டாவது மகன் 16 வயது சீலன் பத்தாம் வகுப்பு . மூன்றாவது மகன், 14 வயது சாந்தன் எட்டாம் வகுப்பு. மூத்தவனுக்கு தான் படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற ஒரு எண்ணம். படிப்பில் கெட்டிக்காரன்.

இரண்டாவது மகன் சீலன், தான் படித்து எஞ்சினியர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். மூன்றாவது சாந்தனுக்கு இன்னும் ஒரு எண்ணமும் வரவில்லை. அவன் அம்மாவின் செல்லப்பிள்ளை

அன்று சனிக்கிழமை . செவ்வா தன் மூன்று மகன்களை கூப்பிட்டு சொன்னார்

“இப்போது ஈழத்து போர் அதி வேகமாக பரவுகிறது . எங்கள் ஊரில் குன்டு வீச்சு நடக்கலாம் எண்டு நான் அறிந்தேன் . எங்கட ஊரில் , விடுதலை புலிகள் இயக்கத்தின் சில முக்கிய தளபதிகள் வீடுகளில் தங்கி இருப்பதாக அரசுக்கு புலனாய்வு பிரிவு அறிக்கை கொடுத்துள்ளது. அதனால் எங்கள் ஊரில் உள்ள வீடுகளுக்கு குறி வைத்து குண்டு வீச்சு நடக்கலாம் என நான் வேலை செய்யும் இடத்தில் அறிந்தேன் .

ஆகவே எங்கள் குடும்பத்தின் பாதுகாக்க வசதியாக தங்கக் கூடிய பதுங்குக் குழி ஒன்றை தோண்ட முடிவு எடுத்து விட்டேன். இப்ப பங்கர் என்ற பதுங்குக் குழி யை வெட்ட ஆட்களை பிடிப்பது கஷ்டம். காரணம் பாதுகாப்பு கருதி பங்கர் பல வீடுகளில் வெட்டுகிறார்கள். சில வீடுகளில் பங்கர் வெட்டிய கந்தனையும் துரையனையும் ஒரு படியாக பங்கர் வெட்ட ஒழுங்கு செய்து இருக்கிறன். இருவருக்கும் தினக் கூலியும் பசல் உணவும் கொடுக்க வேண்டும். அவனுடன் நானும் நீங்கள் மூவரும் சேர்ந்து எங்கள் குடும்பம் இருக்ககூடிய பெரிய பங்கர் வெட்ட வேண்டும். கெதி யிலை வெட்டி முடிக்க வேண்டும் .

“அப்ப நானும் தம்பியும் கிரிக்கெட் விளையாட போக முடியாதா அப்பா ராஜன் கேட்டான்?”

“எங்கடை ஊரிலை, கெதியிலை கண்டபடி குண்டுவீச்சுக்கள் நடக்கப் போகுது. நீ இந்த நேரம் பார்த்து தம்பியோடு கிரிகெட் விளையாட போக வேண்டும் எண்டு விசர் கதை கதைக்கிறாய். அதெல்லாம் பங்கர் வெட்டி முடிச்ச பின் கிரிகெட் விளையாடலாம்“. செல்வா மகன்களுக்கு பங்கர் முதலில் முக்கியம் என்று எடுத்து சொன்னார் .

செல்வாவுக்கு தெரியும் விதானையார் வீடு, ஓவர்சியர் வீடு, கடை வைத்திருக்கும் முருகேசு வீடு, அப்போதிக்கரி வீடு ஆகியவர்களின் வீடுகளில் பங்கர் வெட்டியாகிவிட்டது. தன் வீட்டில் மட்டும் இன்னும் பங்கர் வெட்ட ஆரம்பிக்க வில்லை . செல்வாவுக்கு பயம் குண்டு வீசினால் தங்களுக்கு ஓடி ஒளிக்க இடம் இல்லை என்று.

“அப்பா எது நடக்க வேண்டுமோ அது அப்படி நடக்கும். இதுக்கெல்லாம் பயந்து கொண்டிருக்க முடியுமே” என்று சொன்னான் மூத்தவன் ராஜன்.

“அப்பா பங்கர் என்றால் என்ன அப்பா?” சாந்தன் கேட்டான்.

“நல்ல கேள்வி . முதலில் பங்கர பற்றி நீங்கள் மூவரும் தெரிந்து வைத்திருங்கள், கந்தனுக்கும் துரையனுக்கும் நான் பங்கர் எந்த வடிவில் வெட்ட வேண்டும் எண்டு நான் சொல்லுவன்”.

“பங்கர் வெட்டுவது அப்படி என்ன பெரிய கஷ்டமே அப்பா?” சீலன் கேட்டான்.

“பங்கர் வெட்டுவது என்பது கிட்டத்தட்ட நவராத்திரிக்கு கொலு வைப்பது போல. வீட்டுக்கு வீடு பல வடிவில் பங்கர் வெட்டுவார்கள். ஒரு “ட” எழுத்து வடிவில் அநேகமான பங்கர்கள் இருக்கும். விதானையர் வீட்டு பெரிய பங்கர் “ப” வடிவில் இருக்குது . அவருக்கு காசு இருக்கு அப்படி வெட்ட. சும்மா ஒன்றுமே இல்லாமல் “I” வடிவ பங்கர்களும் சிலர் வெட்டுவதுண்டு. யார் வீட்டில் ஆழமான பங்கர் என்பதில் தான் போட்டியே. எங்கள் ஊரில், கொஞ்சம் தோண்டினா கல்லு வர தொடங்கிவிடும் எண்டு முருகேசு சொன்னான் . இரண்டு அடிக்கு பிறகு பிக்கான் போட வேண்டும். நான்கடியில் ஆப்பு வைத்து வெட்டவேண்டும் என்று அறிந்தேன். பங்கரில் ஒரு ஆள் ஒருவர் குனியாமல் நிற்க வேண்டும். அப்ப அதுக்கு சுமார் ஆழத்தில் உள்ளே போக படிகள் வைத்து வெட்ட வேண்டும். நீளம் ஐம்பது அடி இருந்தால் நல்லம் .

நாங்களும் ப வடிவில் தான் பங்கர் வெட்ட வேண்டும் . உங்கள் அம்மா காசு கொஞ்சம் சீட்டு பிடித்து சேமித்து வைத்திருக்கிறா. அந்தக் காசை நாங்கள் பாவிக்கலாம் கொஞ்சம் விசாலமான பங்கராக வெட் டுவம் . அப்ப தான் குனியாமல் நிமிர்ந்து பங்கரில் நடக்க முடியும் எங்கடை அன்னம்மா கிழவி கஷ்டப்படக்கூடாது . அவ புருசன் கட்டிய வீடு. அதை நீங்கள் மறக்கக்கூடாது“ என்றார் செல்வம்.

“சரி உங்களுக்கு சீதனமாக என் அப்பாவும் அம்மாவும் தந்த இந்தப் பெரிய காணியில் முதலில் எந்த இடத்தில பங்கர் வெட்வது எண்டு தீர்மானித்து விட்டீர்களா“ லட்சுமி கேட்டாள்.

“அதுதான் நேற்று பின் காணி முழுவதும் சுற்றிப் பார்த்தனான்.

தென்னை மரங்கள் பனை மரங்கள். மாமரங்கள், நெல்லிமரம், பலா மரம் ஒன்றும் பாதிக்கப்படக்கூடாது. அதுகிட்ட பங்கர் வெட்ட கூடாது.

கக்கூசுக்கு கிட்ட வெட்டக்கூடாது. பிறகு அந்த அழுக்கு நீர் கசிந்து பங்கருக்குள் வந்துவிடும். கிணற்றுக்கு பக்கத்தில் வெட்டக்கூடாது ஏனென்றால் தண்ணி பங்கரக்குள் வந்திடும்”.

கேட்டுக் கொண்டிருந் மூத்தவன் ராஜன் கேட்டான் “அப்பா கடைசிலை எங்கை தோண்டுவது என்று தீர்மானத்தீர்கள்“

“கடைசியாக நான் கண்டுபிடித்த இடம், நீயும் உன் தம்பிமாரும் குழி தண்டு விளையாடும் பகுதி தான்“அவர்களை பார்க்காமல் செல்வா சொன்னார் .

“உங்களுக்கு அப்பா எப்பவும் நாங்கள் விளையாடும் இடம் தான் குறிக்கோள்” சீலன் சொன்னான்.

“அதெல்லாம் நீங்கள் போய் பள்ளிக்கூட மைதானத்தில் விளையாடலாம். இப்ப இந்த பகுதிதான் நல்ல இடம். அங்கதான் பங்கர் வெட்ட வேண்டும் எண்டு கந்தனுக்கும் , துரைக்கும் சொல்லி விட்டேன். நீங்களும் அவனுக்கு வெட்ட உதவியக் இருக்க வேண்டும்”.

அவரின் மனைவி ஜெயலட்சுமி கேட்டாள் “இஞ்சாருங்கோ எத்தனை நாள் இதை தோண்டி முடிக்க எடுக்கும்?”

“விதானையார் விசுவர் எனக்கு சொன்னார் மூன்று கூலிகள் வேலை செய்து முடிக்க அவருக்கு இரண்டு கிழமைகளுக்குமேல் எடுத்தது எண்டு. எங்களுக்கு இதை முடிக்க கிட்டத்தட்ட மூன்று கிழமைகளுக்கு மேல் எடுக்கும் என்றுதான் நினைக்கிறேன்”

“எப்ப வேலை துவங்க போறியல்?”

“நாளைக்கே வேலையை துவங்கி விடுவோம் . நான் மூன்று கிழமை களுக்கு லீவு எடுத்தருக்கிறன். நான் என் அதிகாரிக்கு காரணம் சொன்னேன். அவர் அனுமதி கொடுதிட்டார். அவரும் லீவு எடுத்து அவர் வீட்டில் பங்கர் வெட்டினவராம். அதன் அவசியம் அவருக்கு தெரியும்.. நானும் ராஜனும் மேல் பார்வை பார்க்க வேண்டும் . நாளை விடிய எட்டு மணிக்கு தொடங்க பஞ்சாங்கம் பார்த்து நேரம் குறித்து விட்டேன் . நாளைக்கு. அட்டமி நவமி இல்லை“.

“அது சரி நீங்கள் யாழ்ப்பணம் கச்சேரிக்கு மாறி வந்த பிறகு எப்போதாவது லீவு எடுத்த நீங்களே. அப்போ உங்க லீவ் எல்லாம் மிச்சம் கணக்கில் இருக்குதுதானே தானே”, என்றாள் லட்சுமி.

செல்வாவுக்கு தெரியும் தன் மனைவி லட்சுமி, தனக்கு எவ்வளவு நாட்கள் லீவு இருக்கிறது என்று தெரிந்து வைத்திருக்கிறாள் என்று.

“சரி இந்த வெலை முடியுமட்டும் கந்தனுக்கும், துரைக்கும் மத்தியானச் சாப்பாடு கொடும்”.

“கொடுக்கிறான் ஆனால் , அவங்கள் இரண்டு பேருக்கும் நாங்கள் பாவிக்கும் மூக்கு பேனியில் கோப்பி தண்ணி கொடுக்க முடியாது.

அங்கே தொங்குது ஒரு தட்டு, அதிலை தான் அவங்கள் சாப்பிட வேண்டும். இதெல்லாம் உங்களுக்குத் தெரியும் தானே“ லட்சுமி தன் நிபந்தனைகளை சொன்னாள்.

“சாதி பாக்கிற உம்மை பற்றி எனக்கு தெரியும் . நீர் சமைத்துக் கொடுத்ததை அவங்கள் சாப்பிட்டு போகட்டும். இருவருக்கும் எவ்வளவு தினக் கூலி காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி கொடுக்க வேண்டும் எண்டு பேசி விட்டேன்“.

“அப்ப அதுக்கு காசு இருக்கே?”

“நீர் சீட்டு பிடித்து அலுமாரியில் வச்சு இருக்கிற காசு தான் “.

“என்ன சொல்லுறியள்? அதையும் கண்டு போட்டியலே “

“லட்சுமி! இது எங்கள் குடும்பத்தின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம், உன் அம்மாவுக்கு 85 வயது. அந்தக் கிழவி இன்னும் கொஞ்ச காலம் வாழ வேண்டுமென்றால், இந்த பங்கர் தான் துணை போகும்”

“சரி சரி சீட்டு காசு முழுதையும் எடுத்து பங்கர் வெட்ட செலவழியுங்கள். குண்டு வீசினால் என் அம்மா முதலிலை போய் அந்த பங்கரில் வசதியாக இருக்க வேண்டும்”.


அடுத்த நாள் காலை ஞாயிற்றுக்கிழமை சரியாக எட்டு மணிக்கு கந்தனும், ரையனும் பங்கர் வெட்ட தேவையான உபகரணங்களுடன் வந்தார்கள் .

அன்று அட்டமி நவமி இல்லை .செல்வா பஞ்சாங்கத்தில் நாள் நேரம, எல்லாம் பார்த்து வைத்திருந்தார் .

“எங்கை ஐயா பங்கர் வெட்டுவது“ கந்தன் கேட்டான்

தான் அடியாளம் இட்ட இடத்தை இருவரையும் கூட்டி சென்று செல்வா காட்டினார் .

சரியாக எட்டு பத்துக்கு கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைத்து, முதல் மண்வெட்டியால் அடையாளம் போட்ட இடத்தில் முதல் மண்வெட்டியால் கொத்தி தொடங்கிவைத்தார். லட்சுமி தேவாரம் சொன்னாள். கந்தனும் . துரையும், செல்வாவின் அவருடைய மூன்று மகன்களும் தொடர்ந்து தோண்ட தொடங்கினார்கள்; முதல் இரண்டு மணித்தியாலம் வேலை மும்முரமாக நடந்தது. வியர்வை கூட அவர்களுக்கு தெரியவில்லை எல்லோருக்கும் மூக்குப்பேணியில் கோப்பி கொண்டு வந்தாள் லட்சுமி. கந்தனுக்கும், துரைக்கம் , தென்னம் சிரட்டையில் கோப்பியை ஊற்றினாள்.

அவர்கள் குடித்து விட்டு சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு திரும்பவும் தோண்ட தொடங்கினார்கள்.

லட்சுமி அவர்கள் வேலை செய்வதை பார்த்துவிட்டு சொன்னாள் “இஞ்சாருங்கோ எங்கள் கடைக்குட்டி சாந்தன். அவனிடம் அதிகம் வேலை வாங்க வேண்டாம், பிறகு அவன் சுகமில்லை என்று படுத்துவிடுவான்” என்று எச்சரித்தாள்

லட்சுமியின் செல்லகுட்டி சாந்தன் நிமிர்ந்து பார்த்து நன்றி தெரிவிக்கும் ஒரு சிரிப்பு சிரித்தான்.


மூன்று கிழமைகள் கழித்து பங்கர் வெட்டி ஆகிவிட்டது. செல்வாவின் குடும்பம் அந்த பங்கருக்குள் வசதியாக இருக்கலாம். ஆனால் படுக்கும் வசதிகள் இல்லை. அதிக நேரம் அந்த பங்கருக்குள் தொடர்ந்து இருக்கவும் முடியாது, கற்றோட்டாம் இல்லை. மல சலதுக்கு வெளியே உள்ள கக்கூஸ் என்ற கழிப்பறைக்கு தான் போகவேண்டும். சமைத்து சாப்பிட முடியாது தற்காலிக பாதுகாப்பன் இடம்.

பங்கர் வெட்டி, குற்றி அடுக்கி, அதற்கு மேல் உரப்பையில் குரு மணல் நிரப்பியாச்சு. குருமணல் என்று சொல்வது கடற்கரை மணல். ஷெல் விழுந்தால் சரக்கென்று இறங்கி சிக்கிப்போய் நிற்கும். வெடிக்காது. சும்மா களிமண் போட்டு நிரப்பினா, கட்டி பட்டுப்போய், ஷெல் மூடையில் விழுந்த உடனேயே வெடித்துவிடும். இதெல்லாம் யாழ்ப்பாணத்தில் பங்கர் வெட்டிவர்களின் கண்டுபிடிப்புகள்.

லட்சுமி காலையில் சாமிக்கு பூ ஆய்ந்து வைக்கும்போது, அவள் பங்கருக்குள்ளும் இறங்கி இரண்டு பூக்கள் வைத்து கும்பிடுவாள். அவ மிச்சாம் பிடிச்சு சேர்த்த சீட்டு காசில் வெட்டிய பங்கர்.

“கோயிலில் இருக்கும் கடவுள்களை விட பங்கருக்குள் இருக்கும் கடவுள்களை தனியாக கவனிக்கவேண்டும். இல்லாவிடில் எங்களை, கடவுள்கள் கைவிட்டு விடுவார்கள்” என்று லட்சுமி தாயுக்கு சொன்னாள்.

பங்கரில் அதேபோல இன்னொரு பொந்து வைத்து, அங்கே மெழுகுதிரி, நெருப்புப்பெட்டி(தீப்பெட்டி) வைத்தாகி விட்டது . ஹெலிகாப்டர் மேலே சுற்றினால், பங்கரின் வாசலை ஓலையால், அல்லது ஒரு தகரத்தால் உள்ளே இருந்து மூடவேண்டும். இல்லாவிட்டால் கண்டுபிடித்து சுட தொடங்கிவிடுவான். மூடிவிட்டால் உள்ளே கும்மிருட்டு, வெளிச்சம் வேண்டும். அதுக்கு தான் இந்த மெழுகுதிரி. ஆத்திர அவசரத்துக்கு பங்கருக்கு ஓடும்போது எவனாவது தீப்பெட்டி எடுத்துக்கொண்டு ஒடுவானா?

“குண்டு போடும்போது யார் முதலில் பங்கருக்குள் போவது என்பதை அப்பாவும், அம்மாவும் பேசி தீர்மானிக்க வேண்டும். எதுக்கும் ஆச்சிக்கு முதல் இடம். கடை குட்டி கடைசியில்”. இதெலாம் ராஜன் பங்கர் வெட்டி முடிந்த பின் சொன்னவை.


அன்றைக்கு காலையே ஏழு மணிபோல இரண்டு பொம்மர்கள் வந்து ஐந்தாறு தடவை ரவுண்ட் அடித்துவிட்டு போனது.

“பொம்மர் சுற்றும் போக்கை பார்த்தே அம்மா சொல்லிவிட்டா இது நோட்டம் பார்க்க வந்திருக்கு. குண்டு போடாது எண்டு“ சீலன் சொன்னான்.

“அண்ணா அவங்கள் எங்கள் வீட்டிலை குண்டு போட மாட்டாங்கள். எங்கள் வீட்டில் விடுதலை புலிகளின் தலைபதிகள் இல்லை“. சாந்தநின் பதில்

எல்லோரும் தங்கள் வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள்.

பொம்மார் வந்தால் மூன்று பேரன்களும் என் அம்மாவை கவனத்தோடு தூக்கிக்கொண்டு பங்கருக்குள் விட அவளுக்கு அவளுக்கு உதவி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது ஏனென்றால், அவள் தனக்கு கிடைக்கும்பென்சனில் இருந்து ஒவ்வொரு மாதமும் மூன்று பேரப் பிள்ளைகளுக்கு காசு கொடுப்பாள், அதனாலே அவர்கள் அவளுக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று லட்சுமிக்கு நன்றாக தெரியும்.

பொம்மர் வரும் சத்தம் கேட்டது எல்லோரும் உடனே தங்களைப் பாதுகாத்துக் பங்கரை நோக்கி ஓடினார்கள். முதலில் பங்கருக்குள் போனது அன்னம்மா அதன் பின் லட்சுமி அதற்குப் பின் வரிசையில் சாந்தன்,சீலன். ராஜன் கடைசியில் செல்வா. சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள், பொம்மர் சத்தம் கேட்கவில்லை அந்த நேரம் பார்த்து ராஜன் சொன்னான்.

“அம்மா எனக்கு வயிற்றை கலக்குது மலம் கழித்து போட்டு வாறன்”

“உதுக்கு தான் நான் சொன்னான், கண்டதை சாப்பிடாதே எண்டு. சரி கெதியிலை போய் இருந்திட்டு வா“, எச்சரித்து அனுப்பினாள்.

ராஜன் பங்கருக்கு வெளியே சென்று ஒரு சில நிமிடங்களில் பொம்மர் வரும் சத்தம் கேட்டது அதைத் தொடர்ந்து கிட்டடியில் குண்டு விழும் சத்தம் கேட்டது.

ராஜன் மலம் கழித்து இன்னும் வரவில்லை என்று கண்டதும் லட்சுமி பதட்டத்துடன் சொன்னாள் “இன்னும் மூத்தவன் ராஜன் இன்னும் பங்கருக்குள் வரவில்லை. கிட்ட குண்டு போடுற சத்தம் கேக்குது“.

செல்வா சொன்னார், “அவன் மலம் கழிக்க அவசரமாய் போனவன் குறைந்தது 10 நிமிடம் ஆகும் திரும்பி வர, நீர் பதட்டப் படாதையும்“.

அவர் சொல்லி வாய் மூட முன் பங்கர் அதிர்ந்தது. ஒரு குண்டு சரியாக பங்கரை குறிவைத்து அதுக்குள் விழுந்தது. பங்ருக்குள் இருந்தவர்களின் ஓலம் கேட்டது. பங்கருக்குள் இருந்து புகை வெளியே வந்தது வெடித்துச் சிதறியது.

பங்கரில் இருந்து தூரத்திலிருந்த கழிப்பறையில் மலம் கழித்துக் கொண்டிருந்த ராஜனுக்கு குண்டு அருகில் விழுந்த சத்தம் கேட்டு அதிர்ந்து போனான். கால் சட்டையை அவசரமமாக மாட்டிக் கழிப்பறையில் இருந்து வெளியே வந்து பங்கர் இருந்த இடத்தை பார்த்தான், அதில் இருந்து புகைப்படலம் வெளியே வந்து கொண்டிருந்தது.

“ஐயோ கடவுளே குண்டு பங்கருக்குள் விழுந்துவிட்டது அம்மா அப்பா தம்பிமார் ஆச்சி எல்லோரும் சிதறி போச்சினம்“ கதறி ராஜன் அழுதான்.

அவனுடைய சத்தத்தை கேட்பதற்கு அருகில் உடனே ஒருவருமில்லை. ஒரு சில வினாடிகளில் பங்கருக்குள் விழுந்த குண்டு ஐந்து உயர்களை பழி வாங்கி விட்டது. பொம்மர் குறி தவறி பங்கருக்குள் குண்டை போட்டு விட்டு போய்விட்டது. சில நேரம் ரஞ்சன் செய்வது தெரியாமல் அழுது கொண்டிருந்தான். செல்வசுந்தராம் வீடடு வளவில் குண்டு விழுந்த பெரிய சத்தம் கேட்டு அயல் சனங்கள் ஒடிவந்தார்கள். அதில் விதானையார் விசுவரும் ஒருவர். அவர் வீடு செல்வா வீட்டுக்கு பக்கத்து வீடு அவரோடு ஓவர்சியர் நாடராசர் கூடவே வந்தார். நான்கு வீடு தள்ளி வசித்த ராஜனின் மாமன் மகேசனின் குடும்பம் சேர்ந்து வந்தார்கள். செல்வா வீ ட்டு வளவு பங்கரில் இருந்து புகை வருவதையும் , ராஜன் பங்கரை சுட்டிக் காட்டி அம்மா, அப்பா … என்று கூவி ஓ வென்று அழுவதைக் கண்டு அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து விட்டது. ராஜனை தவிர்த்து, செல்வசுந்தரம் குடும்பம் அந்த பங்கருக்குள் குண்டு விழுந்து சமாதி ஆகி விட்டார்கள் என்று தெரிய வந்தது. அங்கு வந்த பெண்கள் ஒப்பாரி வைத்தார்கள் ராஜனின் மாமா மகேசன் குடும்பம் அதிர்ந்து போய் நின்றது. விதானையார் ராஜானிடம் கேட்டார் ”தம்பி நீ குண்டு பங்கருக்குள் விழும் போது எங்கை இருந்தாய்?”.

ராஜன் கழிப்பறையை சுட்டிக் காட்டினான்.

அவருக்கு ராஜன் மட்டும் உயிர் எப்படி தப்பியது என்று புரிந்தது. பெடியனுக்கு ஆயுள் கெட்டி என்றது அவர் மனம்.

சில நிமடங்களில் பலர் கூடிவிடானர். செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்கள்

விதானையார் விசுவர் சொன்னார் “நடந்தது நடந்து விட்டது அந்த குடும்பத்தில் ராஜன் ஒருவன் உயிர் தப்பி விட்டான். இவனுக்கு நல்ல விதி . ஏதோ சில நிமிடங்களில் கஷ்டப்படாமல் செல்வ சுந்தரத்தின் குடும்பம் போய்விட்டது, அந்தப் பங்கர் கட்டியது இவர்கள் சாவதுக்கு தான் போல தெரிகிறது“.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த அங்கு இருந்த ஒரு கிழவி சொன்னாள் “நல்ல நாள் நட்சத்திரம் பார்க்காமல் இவர்கள் அந்த அந்த பங்கரை கிண்டி இருக்கிறார்கள் போல தெரிகிறது”.

“ஏய் கிழவி இந்த நேரம் நாள் நட்சத்திரம் பேசாதே, அடுத்து நடக்க வேண்டிய காரியத்தை பார்ப்போம்.” என்று ஓவர்சியர் சொன்னார் .

ஒவ்வொருவராக முதலில் பங்கருக்குள் போய் பார்த்தார்கள் செல்வசுந்தரத்தின் குடும்பம், சிதைந்து போய் பங்கருக்குள் கிடந்தன. பங்கருக்குள் ஒரே இரத்தம். சில உடல்கள் தலை வேறு உடல் வேறாக இருந்தது. ஊருக்கு நல்லதை செய்த இவர்களுக்கு மரணம் இப்படியா ஏன் வரவேண்டும் என்று நின்றவர்கள் பேசிக்கொண்டனர் .

செய்தி அறிந்த கந்தனும் துரையனும் வந்தார்கள், தாங்கள் வெட்டிய பங்கரின் நிலமையை பார்த்தார்கள். அவர்களுக்கு அழுகை வந்தது .

உடல்களை பார்க்க முடியாத முருகேசு வெளியே கதறி அழுது கொண்டு ஓடினார்.

விதானை விசுவர் பொலீசுக்கு அறிவித்தார். சிதைந்த உடல்களை பங்கரில் இருந்து வெளியே எடுத்து வரிசையில் கிடத்தி துணியால் முடினார்கள். கந்தனும், துரையும் முழு மூச்சாய் முன்னின்று உதவினார்கள். சில பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர் . திருவாசகம் ஒருவர் சொன்னார் ..

சப் இன்ஸ்பெக்டரும் இரு போலீஸ் காரர்களும், நீதவானும் ஒரு மணி நேரததில் வந்தனர் சிதைந்த உடல்களை பார்த்தார்கள். பங்கரை போய் பார்த்தார்கள். வெடித்த குண்டுகளை பொறுக்கி எடுத்தார்கள். குறிப்பு எடுத்தனர். அரை மணி நேரம் விசாரணை நடந்தது. ராஜனிடம் சில கேள்விகள் கேட்டனர். ராஜன், குண்டு பங்கருக்குள் விழும் போது தான் கழிப்பறையில் இருந்ததை அவன் அழுதபடியே விபரம் சொன்னான். உடல்களை தாமதிக்காமல் தகனம் செய்யும்படி நீதவானும் பொலீஸ் விதானைக்கு சொன்னது.

பத்திரிகை நிருபர்கள சிலர் வந்தனர். படங்கள் எடுத்தனர். குண்டு வெடிப்பு நடந்தது காலை ஏழு மணிக்கு. அன்று மாலை ஆறு மணிக்கு ஐந்து சிதைந்த உடல்களும் ஊர் சுடலையில் தீயுடன் சங்கமம் ஆயின.

அவர்கள் எல்லோருக்கும் கொள்ளி வைத்தது உயிர் தப்பிய ராஜன். உடல்களுக்கு தீ மூட்டிய ராஜனை அவனின் மாமன் மகேசனும் அவரின் மகனும் மகளும் சுடலையில் இருந்து தங்கள் வீட்டக்கு கூட்டி சென்றனர். ராஜன் தொடர்ந்து மௌனமாக விரக்தியுடன் இருந்தான் .


அந்த சம்பவம் நடந்த பின் மாமன் வீட்டில் இருந்த ராஜன்.

தொடர்ந்து அழுதபடியே இருந்தான். சாப்பிட மறுத்து விட்டான். ராஜனின் மாமன் மகேசனுக்கும் அவர் மனைவிக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்களின் மகன் மோகன் மகள் செல்வியும் ராஜனுடன் நெருங்கி பழகியவர்கள். அவர்கள் அவனுக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் அவன் அழுகையை நிறுத்தவில்லை. பேயறைந்தது போல் ராஜன் சில நாட்கள் இருந்தான்.


நாட்கள் சென்றான. சர்வதேச அழுதத்தால், குண்டு வீச்சு நின்றது ஆனால் போர் தொடர்நது .

ராஜனால் மேலும் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அவன் மனநிலை பாதிக்கப்பட்டான்.

பங்கருக்குள் குண்டு வெடிப்பு நடந்து மாதங்கள் உருண்டோடிவிட்டன .இந்த மாதங்களில் ராஜனுடைய நடத்தையில் பல வித்தியாசங்கள் காணப்பட்டது. அவன் தன் மாமன் வீட்டில் வாழ்ந்து வந்தான். லட்சுமி பவனம் பூட்டி கிடந்தது. வழக்கத்தில் ராஜன் மாமனின் மகனுடனும் மகளுடனும் நெருங்கிப் பழகி சிரித்துப் பேசுவான். ஆனால் குடும்பத்தில் எல்லோரும் இறந்தபின் அவன் நடத்தையில் பெரும் மாற்றத்தை அவர்கள் கண்டார்கள். அவர்களுக்குப் புரிந்தது அவனுடைய நிலை. அந்த சம்பவத்தின் பின், விரக்தியில், படிப்பதை நிறுத்தி விட்டான். அவர்களும் அவனை படிக்கும் படி வற்புறுத்தவிலை. சில நாட்கள் ஒருவருக்கும் சொல்லாமல் வெளியே சென்று பல மணி நேரத்தின் பின் வீட்டுக்கு வருவான், அவர்களும் அவனிடம் எங்கே போகிறாய் ஏன் தாமதித்து வருகிறாய் என்று கேட்பதற்கு விருப்பம் இல்லை, ஏனென்றால் அவர்கள் நினைத்தார்கள். அவன் தனிமையை நாடி போய் சற்று உலாவி விட்டு வருகிறான் என்று. இது தொடர்ந்து நடக்கத் தொடங்கியது

ஒரு நாள் திடீரென்று வெளிதே சென்ற ராஜன் இரவாகியும் திரும்பி வரவில்லை.

மகேசன் குடும்பத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, விதானையர் விசுவர் , ஓவர்டசியர் நடராசர் ஆகியோருடன் கூடிப் பேசினார்கள்.

“காலை ஒன்பது மணிக்கு வெளியே போன ராஜன் இரவு ஏழுமணி அகைவிட்டது இன்னும் வரவில்லை வழக்கத்தில் சில மணி நேரத்தில் வீடு திரும்பிவிடுவான்“ என்று சொன்னார் மகேசன்.

“இது எவ்வளவு காலம் நடக்கிறது”? என்று கேட்டார் விசுவர்

“என் மைத்துனர் குடும்பம் இறந்த சில வாரங்களின் பின் அவனுடைய போக்கு மாறிவிட்டது “ மகேசன் சொன்னார் .

“அப்படியா இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் என்று ஒருவேளை தாமதித்து வருவான்“ ஓவர்சியர் நடராசர் சொன்னார் .

“மாலை ஆறு மணி ஆகிவிட்டது அவன் வெளியே சென்று கிட்டத்தட்ட ஒன்பது மணித்தியாலங்கள் ஆகிவிட்டது போலீசுக்கு போய் முறையிடலாம் “ என்றார் மகேசன்.

“கொஞ்சம் பொறும் அவன் ராஜன் வருவான்” என்று விசுவர் சொல்லும் போது, வீட்டின் முன் கதவு தட்டும் சத்தம் கேட்து.

யார் என்று பார்க்கும் போது அவர்களுக்கு தெரிந்த ராஜனின் நெருங்கிய நண்பன் கணேஷ் நின்றான் ,

“என்ன கணேஷ் இந்த நேரத்தில் வந்து இருக்கிறாய்?” என்று கேட்டார் மகேசன்.

“ஒன்றுமில்லை மாமா இந்த கடிதத்தை ராஜன், உங்களிடம் கொடுக்கச் சொல்லி பகல் ஒரு மணி அளவில் தந்தவன், நான் அதை மறந்துவிட்டேன். பின் என் நினைவு வந்தது அதான் கொண்டு வந்தேன்”

“அப்படியா எங்கே தா அந்த கடிதத்தை “

கணேஷ் ராஜன் கொடுத்த கடிதத்தை கொடுத்தான்

மகேசன் அதை கவரில் இருந்து எடுத்து எல்லோரும் கேட்கும் படி பிரித்து வாசித்தார்.

அன்புள்ள மாமா குடும்பம் மற்றும் இந்த கிராமத்தில் எனக்கு என் பெற்றோர் இறந்த பின் ஆதரித்த எல்லோருக்கும் இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்

என் அப்பா அம்மா சகோதரங்கள் ஆட்சியின் திடீர் மரணம் என்னை வெகுவாகப் பாதித்துவிட்டது, இப்படி ஒரு குற்றமற்ற குடும்பத்தை குண்டு போட்டு அழித்து விட்டதே இந்த அரசு.

நான் தப்பியது கடவுள் புண்ணியம். ஏதோ நான் ஒரு கடமையை செய்யவேண்டும் என்றுதான் என் உயிரை கடவுள் காப்பாற்றி இருக்கிறார். இத்தனை நாட்களாக இருந்து யோசித்தேன் .

எனக்கு அதற்கு பதில் கிடைத்தது. எந்த அரசு குற்றமற்ற மக்களை கொன்று குவிகிறதோ அந்த அரசுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று என் மனம் சொன்னது.

என் நாட்கள் சிந்தித்த பின் ஒரு முடிவுக்கு வந்தேன். அந்த முடிவுதான் தான் விடுதலை புலிகள் இயக்கத்தில் சேர்ந்து அவர்களுடைய விமானப்படையில் நானும் ஒரு விமான ஓட்டியாக இயங்குவது என்று.

எப்படி அவர்கள் எங்கள் குடும்பத்தை குண்டு போட்டு கொண்டார்களோ அதேபோன்று எங்கள் தலைவரின் கட்டளையின் விமான ஓட்டியாக சென்று அவர்களின் விமானப்படையை குண்டு போட்டு அழிக்க வேண்டியது தான் என்னுடைய நோக்கம்.

இந்த முயற்சியில் நான் இறந்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆகவே இது தான் என்னுடைய முடிவு இது. உங்கள் எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சியான முடிவாக இருக்கும்.

நான் அப்படி விமானம் போட்டியாக மாறினாலும் பொதுமக்களை போய்க்கொண்டு போட்டுக்கொள்ள மாட்டேன், ஆனால் அரசின் விமானங்களை அழிப்பது என்று என்பதுதான் என்னுடைய திட்டம்.

என் அப்பா, அம்மா, ஆச்சி, தம்பிகளின் இறுதிச் சடங்கை சிறப்பாக நட்தியதுக்கு எனது நன்றிகள். எங்கள் லட்சுமி ட்பவனம் வீதடை அனாதைப் பிள்ளைகளை இல்லமாக மகேசன் மாமா மாற்றுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன் ”.

இப்படிக்கு

உங்களது

செல்வசுந்தரம் ராஜன்

அந்தக் கடிதத்தை வாசித்து காட்டியவுடன் எல்லாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்

மோகனும் செல்வியும் சொன்னார்கள், “அப்பா! ராஜனுடைய முடிவு, இது நல்ல முடிவு”.

அங்கிருந்தவர்கள் ஒருவரும் பதில் சொல்லவில்லை. மௌனமாக இருந்தார்கள்.

(உண்மையும் புனைவும் கலந்தது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *